Saturday, 31 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

  ஒன்றைநினைத்து ஓன்றுக்காய்

காத்திருந்து ஓன்றால் இழந்தது

ஒன்றுமில்லாமல்  போவதை விட

ஓன்றை தொலைத்து தன்றாய்

வாழ்பவர்களே. சிறந்தவர்கள்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கால்களில் அலைமோத 

கடல் நீர் உப்பிற்குள் 

கண்ணீர் துளி விழுகின்றது 

உப்பாய் !! 

அலைமேல் நினைவாய் 

அலைமோதும்   நினைவிற்க்குள்

கடனாக கேட்ட ஆசைகளை

அலையேடு

 போட்டேன் 

மீண்டும்  மீட்டிட  கைகள் 

இல்லை  என்பதால் !!

என்னைப்போல்

பூவாகிக்கருகிய ஆசைகளை

கைபிடித்து நடக்கா 

கைவிட்டு  கைபட்ட 

காயங்கள் நிலையாக

 நின்றே சொன்னதால்

மெளனமாய் திரும்பியது

 மனசு!

ஊமையான விழியின்  

ஓவியமாய் போன ஆசையை

கற்பனைகளிடமிருந்து கடனாய்

வாங்கியதை கற்பனையிடமே

கொடுத்திட்டே  அமதியாய்

செல்லுது மனசு !

அதன் பின்னே நானும்  

அமைதியாய்  செல்கின்றேன்

வாழ்க்கையின் கைபிடிதூரம்

மரணம் காத்திருக்க கைவிட்ட

மனசைப்போல் !

என்னைக்கையெடுத்து

 கைபிடித்து நடந்திடாமல்

ஊனமாய் போன ஆசைகளில் 

தடுக்கிவிலுத்திடமால்

விலகியே போகின்றேன் 

மனசைப்போல் !

விதியிடமும். மதியிடமும்

மன்னிப்பை கேட்டுக்கொண்டு

நிழலின்றிய பாலைவனம்

நியமென  சொல்லியமனசை 

 நம்பி

என் மனசைபோல் 

நானும் போகின்றேன்

தன்னம் தனிமையை 

நேசித்தபடி!

இவ்வுலகின் விந்தையில்

சிக்கி தவிக்காமல் 

விலகியே செல்கின்ற

என் மனசைபோல் நானும் 

செல்கின்றேன் ஊனமாய் !!!




Wednesday, 28 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அழிவுகள் இழப்புக்கள்

சொல்லி ச்சொல்லி ஒரு

கூட்டம் தன்னை வாழவைக்கு 

பெண்னே உன்னை கைதியாக்கி

இழப்பை ஆயுதமாக்கி

தன்னை முன்னேற்றுது  ஒரு 

கூட்டம்

விடியல் தேடுவதாய்

 விடுதலை பேசிப்பேசி  

விமர்சணத்தால்

உன்னை அடிமையாக்கி 

தன்னை  முன்னேற்று ஓரு

கூட்டம் 

உன்னைவிட உயர்ந்தவர்

இல்லையென்பதால்   உன்னை

வைத்தே நாடகமாடி  தன்னை

முன்னேற்று ஓரு கூட்டம்

தமிழ்தேசம் தமிழ்பற்று

பேசி பேசி  மண்ணில்  வென்ற

மரணத்தை  ஆயுதமாக்கி 

 ஆடம்பரத்தை  சொந்தமாக்கி

ஆடம்பர வாழ்க்கை  தேவைக்காய்

அங்கே. இங்கே  நல்லவர் போல் 

பாசாங்கு  காட்டுது ஓரு கூட்டம்

தன் குடும்பம் தன் வாழ்க்கை

உயர்வடைய அழிவுமில்லை  

இழப்புமில்லை  தினமுமில்லையென

யார்யாரிடமே பெருமைபேசி

நடிக்குது ஓரு கூட்டம்

தேசபற்றாய் இருப்பதாய்  இவர்களை

போல்  இருபதை விட

நம்மிக்கையின் விதையாய்

எழுந்திடு  உன் பின்னேயும்

வருமே கூட்டம்!!

விடுதலை  தேடிய  இழப்பின்

மண்ணில் ஒரு விருட்சமாய்

எழுந்திடு  வெட்டிட வாளும் வாலும்

வரும்  கண்ணீர் துளிகள்  

இல்லை வாழ்க்கை அடைபட்ட

இடத்திலேயே 

எழுந்திடும் திறமையே  வெற்றி

அந்தவெற்றியேடும் வருமே 

ஒரு கூட்டம்

உயிர் பயந்தேடி

  உன்னை கேலிபேசும்

மனிதனுக்கில்லை  வலிகள் 

உன்னை அழவைத்துக்கொண்டே 

 உயரும்மனிதனிடம் 

இல்லை உண்ர்வு 

உன் பயணத்தை உன் விருப்படி

அமைத்திடுக  

அழிவின் பின்னே

உயர்ந்த பல சரித்திரம்  

கண்முன்னே

புதிய வரலாறு படைத்திடுக!!

கூட்டமும் கைதட்டி கூட்டாமாகும்

உன்னோடு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தனிமைக்கைள் 


ஒரு தனிமை  

தனிமையேடு வாட

கனவிற்க்குள் 

ஒரு  கனவு

மழையானது பூத்திட!!


குட்டிக்குட்டிச் சாரல்

 நம் உணர்வேடு கலந்த

ஒன்றை இழந்த பின்னர்

அந்த உணர்வின்  அழகை

எந்த  உண்ர்வும் நமக்குள்

எழுதிட  முடியாது 

Tuesday, 27 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நம்மை சுற்றி நமக்காய்

நிறைந்த இதயங்கள்

நம்மேடு இருப்பதாய்  

பெருமைபேசியி்ருப்போம்

அப்படியாயென !!!

 ஒரு ஓற்றை 

சந்தர்ப்பம் 

நமது  பெருமையை

உடைத்தெறிந்து விட்டு

போய்விடுகின்றது!

எப்பவும் !  ஓரு பிச்சுவிரல்

ஓன்றே உண்மையாய் 

இருப்பதாய் உணர்த்தி 

சொல்கின்றது !

மாய்யை சூழ்ந்த 

காலத்திடம் மாயவலைக்குள் 
நாம் !!!


Monday, 26 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வேடிக்கை பார்த்தவிழிகள்

வலியேடு அலைநோக்கியே

ஏங்குகின்றது  வந்த 

அழிவே அறிய விழிகளாய்!

தன்னையிழுக்கும் அலைமோத

இரு கரம் தேடியே

உறவிழந்து உடல் நடுங்க

அலைமேதும் நீரைப்போல் 

தன் மரணத்தின் நெடியின்

அச்சத்தில்  ஓரு கரம் பிடித்து

உயிர்சுமக்க தேடியவழிமுடியே

அலையிழுக்க அலையேடு

அலையாய்  தவிக்கின்றது

உடல்களேடு உடலாய் 

உடல்போவதை பார்த்த விழிகளாய்
!!!




Sunday, 25 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தம்



கனவினை  தாமே

செதுக்கிடுக !!!!

மற்றவர் கைகளில்

உளியினை

கொடுத்திடாது இருந்திடுக!!!

உளியினை பிடிக்கும் கரம்

எப்பவும் நம்மை வென்றிடும் 

கரமாகவே கண்டிடுக!!

இல்லையெனில்!நம்மை போல்

கனவு தடுமாறும் 

தன் கனவைவெல்ல தானே

சிந்தித்திக்க!

தன் கனவேடு

மற்றவரையும் பயணிக்க 

செய்க

தன் கனவிற்குள் யாரும் 

நிரந்தரமுமில்லையென

உணர்விற்கு சொல்க!

கட்டிப்போட்டு கதைபடிக்க 

கனவு தேவையுமில்லயென

சிந்தித்து செயல் புரிக!

காலத்தின்மாற்றதேடு 

தன் கனவையும்

சோர்ந்தே மாற்றிக்கொள்க!

கனவிற்க்கும் வயதிற்க்கும்

தொடர்வுகள் இல்லையென்று

விம்பத்தை உடைதெறிக!

கனவேடு

ஆசைகளை கலந்திடாமல்

கையெடுக்க !

மற்றவர் வார்த்தைகளையும்

கொஞ்சம் செவியெடுக்க!

தேவையானதை அறிவிற்குள்

அடக்கியே  சிந்திக்க!

தேவையற்றதை செவிவழிவிடுக!

தன்கனவினை மற்றவர் விரும்பிடும்

வித்தைகளை  கையெடுக்க !

ஓடும்வேகத்தை 

ரசனையேடு  கைபிடிக்க!

 உன் ஆசைகாய்  கனவை 

கட்டிபிடித்தே   காயத்தை 

கூட்டாதே !

ஆசைக்கு  வெளியே 

கனவை வென்றிட 

ஆசைக்கு    கனவை செதுக்கிடுக 

மாற்றதின் குடையை வானவில்லாக்க

கனவு வண்ணங்களாகும் 

இதயங்களேடு!!!

இல்லையேல் கனவேடு போராட்டமே 

மாற்றதின் புள்ளியே

மனிதனின் வாழ்க்கையின் புள்ளி

சிந்தனையின் வரைவை உன்

கற்பனையில் செதுக்கு தானாய்

கனவு நிலைத்திடும் உன்னை சொல்லி

உன்னை நீயே கனவிற்காய்

யாரிடமும் கொடுக்காதே

பிச்சையிடும் கரங்களில் 

உன் கண்ணீர்துளியை விழுத்தாதே

உன் வலிகள்  உன்னையே

கேலியாய் பார்க்கும்

கனவை உருவாக்கிட தெரிந்தவனுக்கு

அறிவே சிறந்த ஜோதி!!!



என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்.....

 முமையில்   ஓரு ஓய்வுகாலம் 

வரமாய்  கிடைத்தால் மண்ணில்

மீண்டும் அப்பா அம்மா கைபிடித்து

நடந்திட  காத்திருக்கு

ஒரு பொற்காலமென

தானாய்  கைபிடித்த தனிமை

கண்ணீர் துடைத்து எழுந்திட

சொல்லு   என்னை!

காலத்தேடு  கற்றவை 

உன் பாதையில் பயம் தராது என்று

மீண்டும் நான் நானாய்

வாழ எழுந்திட சொல்லுது 

 கண்ணீர்துடைத்தே!!

மிருகங்களின் நட்பாகி

குருவிகளின் இசையாகி 

 நாகத்தேடு வம்பிழுந்து 

அச்சம்போல் நடித்து

எழுந்துபடமெடுக்க 

 அருகிருந்தே ரசித்து

மீன்பிடித்தே மீண்டும் 

நீரில் விட்டு

அல்லிபூக்க நிலாவைத்தேடி

கரையோரம்  காத்திருந்து

 நிலவேடு கதைபேசி  

கவிசொல்லி

பூக்களேடு சண்டைபோட்டு   

பூவிதழ் திறந்திட காத்திருந்து

போர்வை விலக்கி 

ஆதவன் ஓளிகண்டு  

பனிதுளியில் கால் நனைக்க 

 எழுந்திட சொல்லு தனிமை

கண்ணீர்துடைத்து

காட்டின் சொல்லப்பிள்ளையாய்

நடைபோட

அச்சமில்லை துன்பமில்லை

குறையேடு  வாழும் வாழ்க்கையில்லை

ஆடம்பரதேவையில்லை

 அழுகையைம் தேவையில்லை 

எழுந்து  வாவென  சொல்லு தனிமை

கண்ணீர்துடைத்து

தொலைத்த

பொம்மை தேடிய சிறுமியாய்

என் அழகான நாட்களை தேடியேட

தனிமை கூப்பிடுது  என்னை

 ஆசையாய்!!!!


 

Saturday, 24 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 செந்தமிழ் சிறைப்பறவை

சிவந்த வானம் போல் 

சிவந்த கண்கள் 

பார்த்தே  விலகின 

இருள்!!!





குட்டிக்குட்டிச் சாரல்

  ஓரு எழுகோலின் 

மெளனத்தில்

ஊமையான மொழியில் 

சிதறிய  ஒரு துளி 

என் கற்பனைச்சிதறலின்

உயிர்த்துடிப்பு!



Friday, 23 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்



தனிக்கூண்டுக்குள்
ஓற்றை
சிறகு தவம் புரிகின்றது
விட்டு போன கிளியை 
நினைத்து!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தாமரைகுளத்தண்ணீருக்குள்

வெண்தாமரையை மழை

நனைக்க 

நனைவதை

  வேடிக்கை பார்த்தவர்

தமரையை திட்டி 

செல்கின்றனர்

கண்ணீருக்கும் தண்ணீருக்கும்

அர்த்தம் புரியாமல்! பல பூக்களின்

வாழ்கையைம்  இற்றைவரை

அர்த்தமற்ற மரணமே!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நல்லவை கெட்டவை 

அறியாமலேயே  எல்லாம் 

நல்லவையாய் தெரிந்த நிமிடம்

நானும்  ஒர்  ஏமாளியே!!  

கெட்டவை

கண்டு  நல்லவையை எடுத்து

 கெட்டவை கற்பித்த பாடம் 

தந்த காயம்  தாங்கியே

தூரமானேன்!! 

 கெட்டவை தவிர்த்து

மனசும் எண்ணமும்  உறுதியாக

எனக்கான என்னை நானே

செதுக்கிக்கொண்டேன்!!  

தவறுகளிடம் இருந்து

தவறிப் பாதம். வைத்தாலும்

நிலைகொள்ள முடியாமல்

திரும்பு பாதம் என்னை தண்டிக்க!!

ஓழுக்கமில்ல வாழ்வில் 

சில நெடிமுடிந்தாலும் பலநெடி

மனசின்  கோவம் என்

உணர்வின் தவறினை  தண்டிக்கும் !!

அறிவுக்கும் உணர்வுக்கும்

நடக்கும் யுத்தில் உண்ர்வு தோற்றே

திரும்பிடும்   தானாய்!!

மொய்யான நட்புக்கூட

கூடி நடந்ததில்லை  என்னோடு

இற்றை வரை எழுதிய

கற்பனைகள்  என்

வறுமையை காத்திடவில்லை

இருக்கும் வரை புரியாநேசம்

இறந்தவர்  நிழல் முன் பேசும்

படையல் போன்றது!!

 இதனை புரியா

மனிதனின் பொய்களேடு நடந்திடா

மனசு ஊமையான மொழி

போல்கூண்டுக்குள்  நிழலானது!!

இதைபுரியா மனிதனே 

எனக்கு பகையானான்!!!!


Thursday, 22 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஏக்கங்களாய்  புதையும்

உள்ளத்தில் காயங்கள்

அதிகமே !ஆறுதல்

கிடைக்காமல் தவித்தாலும். 

கிடைத்ததை  பிரித்தாலும்  

கனவிலே கற்பனையிலே

நம்மை நாம் ஓழித்தாலும் 



ஏக்கத்தின் வலிகள் நம் 

தூக்கத்தை  பறித்தே  கண்ணீராய்

காத்திருக்கும்!!!!நம் உருவக்கண்ணாடி நம்மமை

மறைத்தாலும்

நினைவுக்கண்ணாடியின் 

விம்பத்தில் பூத்திருக்கும்

இவ்வுலக நிறைந்த மனிதன்

இருந்தும் நமக்கான ஏக்கமே

தனியாய  நம்மேடு வாழும்!!!


Wednesday, 21 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விழும்போது தாங்கிடவும் 

அழும்போது  புரிந்திடவும்

வாழ்க்கை யாரையாவது தேடி

கொண்டால் ஏமாற்றம்  கைவிட்டு

கைபிடிக்கும் நம்பிக்கையாகும்!!!


Tuesday, 20 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உறைபனிகாலத்து  பூப்போல்

உறைந்து  விட்ட.  என்

உணர்விடம்  தேடிபார்க்கின்றேன்

ஒரு  நிமிடம்  எனக்காக !!

ஒரு 

உணர்வு  பேசிடாதா என

தொலைத்தது என்னையே

என்பதால்  அழுகின்றது

உணர்வுகள் வழியின்றி!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கைவிளக்கு கையேந்திய

காலம் தொட்டு 

தெருவிளக்கு வழிகாட்டும்

காலம் வரை

புறாவிடம் தூது சொன்ன 

காலம் தொட்டு

கைபேசி தூதாகும் காலம்

வரை பெண்மையின்

உடலுக்கே அதிக

கூட்டம்!!!கவிநடை நடந்தாலும்

கதைநடைநடந்தாலும்

அழகான கற்பனையாய்

விற்பனையாகின்றது பெண்

உடல்கள்!!குறை நிறைந்த

உடலானாலும்  அழகான உடலானால்

அது கூட  தேவையின்  தேவையாகின்றது!!!



Monday, 19 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓடிக்கொண்டே இருக்கும்

வருடத்திற்க்குள் ஓடாமல்

நிக்கின்ற என் உயிரேசையே

உன்னைக்கேட்க்கின்றேன்  வரும் 

வருடத்தில் வருவதை தடுத்திட

என்னில்  இயலாமல் போன

என்னுள் உள்ளே 

 என்னால்

எதனிடமும்கேட்டிட இயலாது  

இயங்கிட சொல்லி

நீயாவது



ஒடிவிடு  என்னுளிருந்து!!

முடியாதவாழ்விற்குள்  விம்பமாய்

நிற்பதனை விட ஒவியமாய்

தொங்குவதே சிறப்பு!!!!

Sunday, 18 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓடிய பாதையில் 

ஒழிந்துகொண்ட நியத்தின் 

விடியலே என்  ஓயவு காலத்தின்

வெற்றி!! 

தேற்றும்போன நாட்களில்

தூரமா போன உறவுகளின்

நியமே 



என்.ஓய்வுகாலத்தின் மறதியில்

பூக்கும்  நியத்தின் பூத்தோட்டம்

என் இறந்த  காலத்தின்  கசப்பில்

தூக்கிப்போட்ட  நிமிடத்தின்

தூக்க தொலைத்த இரவுகளின்

விடியலே   எனக்காய்

நானே எழுதிக்கொண்ட

நியத்தின் நிழல் 

தொலைவாய் தொலைந்த 

போலிகளின் முகமே  எனக்காய்

போட்ட  தொலையாவேலியின் 

முற்கள்

அந்தனையும் பறித்தே நிற்கதியாய்

நின்ற நிமிடமே  என்  கருணையின்

முதல் பூ 

ஏமாற்றங்கள் எதிர்காற்றாய் முகம்

சிதைக்க

 எழுதிய கனவு கற்பனைக்குள்

தொலைய

 என்னில் மறா  புன்னகை சொன்னது

ஒன்றே  

உனக்கானதாய்  பூமியில்

ஓன்றுமில்லை  உன்னை சோர

விதியின் கையில் நியமும் இல்லையென்பதே

உண்மை!!!!



Friday, 16 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

  ஓன்றை மறைத்து

ஓன்றை ஏமாத்தி ஓன்றையெடுத்திட

தெரிந்தவருக்கே இன்றைய உலகு

Thursday, 15 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒன்றை வார்த்தை தேடி

ஓன்பது வார்த்தை  மறந்து

இன்றைவரை இயலாமல் 

தோற்றாலும் தேடியலையும்

இதயம்  அடையும் ஆனந்தமே

காதல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 முடங்கியே  கிடக்குது

மனசு

இயங்கிட மறுக்கின்றது. 

இதயம்

இயல்பதை தடுக்கு  

இயலாமை

இயன்றவரை  முடியாமல்  தேடுது

நிழலை  

இருந்ததும்  கிடைபதே தனிமை!!

 

Wednesday, 14 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

ஒன்றிலிருந்து ஒன்றை 

இயல்பாய்  பிரிப்பது 

இயலுமென்பதால்

பிரித்திட்டு  மெருமைகொள்ளும்

நம் வாழ்வில்

இணைப்பதுவும். காப்பதுவும்

முடியாமல் தோற்பதே

நம் அறிவு!!!

Sunday, 11 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 சிலநிமிடமெளனத்தின்வலி 

பல நிமிடத்து கண்ணீரின்

திரை 

நம்மை அறியாமல் நாம்

நமக்காய் செதுக்கும்.

 நிமிடத்தின் மெளனச்சிலையே 

நம் இதயக்
காயத்தின் மருந்து !!!

Friday, 9 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உள்ளம் பேசும் அழகில்

உதிக்கும். அழகான அன்பை

பேசும் இதயம்  தன்

உணர்வை 

தேடலில் தொலைப்பதே

காதல் தோல்வி

குட்டிக்குட்டிச் சாரல்

 நாம் ஏமாற்றபடும்

வாரை


ஆழமானது தான் உறவு

இதை 

புரியமலே ஏமாறுகின்றது

காதல்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 

இல்லாமல்

இருப்பதாய் காட்டும்

கண்ணாடி  இல்லையென்பதால்  

கண்ணாடி தன் முன்னே 

காட்டும்     முன்

இல்லையென்றாலும் இருப்பாய்

காட்டும்  கண்ணாடி. மனசு

முன் தோன்றாமலும்

காட்டும் வித்தையே 

உனக்குள்  உள்ள   காதல் !!!

Thursday, 8 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 கவிபிறக்க காணமல்

போன சந்தோஷம் போல்

கவலைபிறக்க

காணமல் போனது கவி!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தென்றலினோடு


தேன்விருந்து 

திசைகளோடு சிதறியேட

கண்களும்   இங்கே 

சுவையேடு விழிக்க 

கனவுகளும்  கொஞ்சம்

 கொஞ்சலோடு  கொஞ்சம்

சந்தோசத்தை  கொஞ்சநேரம் 

கடனாய் கொடுத்தது இவளுக்கு !!1



குட்டிக்குட்டிச் சாரல்

 நாம்!

வாழ்வை கற்றுகொள்ள 

ஒரு கற்பனையுலகின் 

கனவுக் காதல்

கைபிடிக்காமலே நீந்துகின்றது

தரைதொடா   வானில்

நியமில்லா நிழலென  

புரிந்திடமலே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

நம் கற்பனையுலகு 

 விழிக்கும் வரை

நம்மை வார்த்தைகளே 

பல நேரங்களில்

வாழவைக்கின்றது!!!

Wednesday, 7 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இருளே நீ விலகிட இருளானவள்

கேட்க்கின்றேன்  

ஒளியே நீ பரவிட 

தீபமாய் கேட்க்கின்றேன்

பகையே நீ இறைவன் ஆனதால்

திரியாய் நான்எரிந்தே

கேட்க்கின்றேன்



கருணையின் வடிமே என்

இல்லமானதால் 

 என் வாசலின்

ஒளியாய் கேட்க்கின்றேன்

உன் உள்ளத்தின் ஒளியாய்

என் பாவத்தின் கருணையாய்

உனக்குள் என்னை கேட்க்கின்றேன்

மீண்டும் தீயாக எழுந்திட என்

உள்ளத்தின்ஓளியே

ஒளியாகிட மீண்டும் வா

என்னேடு!!!

Tuesday, 6 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விளையாட்டாய் சிலசமயம்

பேசி கடந்திடும் நேரம்

நமக்கே அறியாமல் ஓரு  பாவம்

பழியாய் தொடரும் தூரம் நியமாகின்றது



Monday, 5 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னேடு பேசி உயிர்வரை

நினைத்து என்னேடு நடந்த

நிமிடம்  கண் இருந்தும்

குருடாய்  கண்ட  மேகம்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையென்றபொது

இருந்தவரை காணவில்லை வாழ்வில்

உண்டென  வாழ்ந்தபோது 

 உணர்வினைக்காணவில்லை

இரண்டும் வேண்டாமென்றபோது

உயிரினை காணவில்லை  எனக்குள்!! 

குட்டிக்குட்டிச் சாரல்

  ஓற்றையில நின்றாலும்

ஒன்று கூடி வாழ்ந்தாலும்

உள்ள மனசினை 

வைத்தே பூட்டிட இயலாது. 

நாமே நமக்கான நல்தும்  கெட்டதும்


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 என் மாமனுக்க என்ன ஆச்சி

மணித்துளிகள் வெறுத்தே 

வாடும் தனிக்கதையாச்சி

கையேடு கைபிடித்த 

கைகள்  எங்கே போச்சி

காலையும் மாலையும  

காணாமல் தேய்மிறையாய்

ஏங்கலாச்சி



கூடிய நட்பிற்கெல்லாம்

என்னென்ன ஆச்சி 

கூடுவிட்டு. போன கவிக்கூயில்

தேடலாச்சி!!! 

காடுதேடும் வயதாச்ச்சி

கைய்பிடி எங்கே 

தொலைந்த போச்சி

அறிவுப்பேச்சு  அடங்கிப்போக

 உணர்வு கூடிபேசிடாட மனசேன்

தேடிவாடும் கதையேன் வந்தாச்சி!!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 பிடித்தவை பிடிக்காமல் போவதும்

பிடிக்காதவை பிடித்தவையாக

மாறுவதும்  நமக்கான காலத்தின்

மாற்றம் ஆனால்  ஆண்மை

பெண்மையை



புடிக்கவில்லையென    

கூறுவதை  சரியென ஏற்கும் 

மனிதனுக்கு ஓரு

பெண்சொன்னால்  மட்டும்

மன்னிக்க முடியா தவறாகின்றதே

ஏன்?

எதையும்  புரியாமலே 

மரணம்  வரை கூடவே  போயென

விரட்டும்  வாழ்வை விட்டு

பெண்மை தன்னையே நம்பியே 

 தனியே வாழபோவதும்

நாமே. 

பெண்மைக்கு கற்றுகொடுத்ததே

கற்றுக்கொடுத்து கற்றுகொடுத்தே

தன்னைதொலைக்கும் 

பெண்மையை உருவாக்கியே

இன்னும் கற்பனையிலே தேடிக்கொண்டே

வாழுவதே வாழ்வாகின்றது!!!

Friday, 2 December 2022

குட்டிக்குட்டிக்கவிதை………

உணர்வுடையும் போது

 நல்ல இதயமும்.

மனதுடையும் போது

நல்லநட்ப்பும். 

நம்மிடம்  இல்லாத

போவதால்

தேற்க்கின்றது நம் பிறப்பு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நல்லவங்க நல்ல வாழ

நல்லநாளே இல்லையேயென

எண்ணச்சொல்லுகின்றது. எல்லா

நாளும் தரும்துன்பம்!!!

Thursday, 1 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வெற்றிக் கிண்ணத்திற்காய்

 நாடுகள் போராடும்  போது 

ஒரு இனமட்டும் நாடுகளை

வெற்றியடைத்துள்ளது  

இங்கே!!



வெற்றிடையும் நாட்டின் 

வெற்றிகிண்ணம்

ஒரு இனத்தின் 

வெற்றிக்கிண்ணமாய்

தேற்கடிக்கப்படுகின்றது!!!


Tuesday, 29 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வேண்டும்!!

 என்ற மனதை விட

எதுகும் வேண்டாம் 

எனதனிக்கும் 

மனதின் சுமையை

புரிந்தாலே !!!

வலியின் துடிப்பை

சொல்லமலே  துடைக்கவும் 

மனதிற்கு தோன்றும்

 நாம்!தூரத்து 

வெண்ணிலவாய்

தோன்றும்  போதே

அருகே இருக்கும்  


சிமினிவிளக்கின்

ஒளியின் இருள்

எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!


Sunday, 27 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை நமக்கே 

சொல்லிதர நம்மேடு நம்மை

புரியாமல் நடந்தவர்களே

நமக்கான  வழிகாட்டி!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தடைகளை உடைத்திடும்

உறுதியுண்டு 

தடைதாண்டியே

ஓடிடகால்களும் உண்டு

சுவர்களை உடைத்திட

வலிமையு உண்டு

சுவர்தாண்டியேடிட

தைரியமும் உண்டு

சூழ்ச்சிகளை முறியடித்திட

அறிவும் உண்டு

 சூழ்ச்சியால் வென்றிட  

விவேகமும் உண்டு

உண்டான உண்டெல்லாம்

உள்ளிருந்தும் இல்லாமல்

உடைத்தெறிகின்றது வலிகள்   

பெண்ணென

சுற்றியே  தாக்கிடும் அம்பின்

கூர்மையின் வலியே

ஆயுதம்ஏந்தினாலும்

தோற்றாடுகின்றது 

மண்ணில்

பெண்னென  பிறந்ததன்

முகவரி!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 இழப்பின்வலியால்

இழந்தஉணர்வால்

எழுந்த உரிமையின்

குரலில்கள் விழுந்த இருளின்

விடிவின் கண்ணீருக்குள்  எரியுது

தீபம்  இல்லையென்ற தாய்மையின்

ஊமையாய்!!! 


Thursday, 24 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 படைப்பின்

இருபால் உணர்வினை

படைத்தவன் செய்த பிழையே 

இதை  

தனக்குள் தோற்ற 

முப்பாட்டன்

அருகருகே வைத்திட பயந்தே

நம்மை நமக்காய்

தனித்தனியே வைத்தான் 

இதுவே சிறப்பென

வைத்தவர்  தவறென நம்மை

நாம்  வென்றிட  உடைத்தன்

பெறுமை 

உறுதியாய்நின்றவரும்

தோற்றே தோற்றவரும் சேர்ந்தே

தம்மை நாமே

கூடிபேசும்  நிலை!!


குட்டிக்குட்டிச் சாரல்

 என் கற்பனைகள் என்

கண்களிடம் தேற்றபோதே

என் கண்ணீர்கள் என் கனவுனை

தொலைத்தது  என் நம்பிக்கை

பொய்களிடம் தோற்றபோதே

என் அன்பிற்க்கு  இதயமற்று போனது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைவாய் போகும் 

மேகம் போல் தான் நம்மில்

மற்றவருக்கு ஏற்படும் உணர்வும்

காற்றடிக்கும் வரையே  நிலைத்திடும்


குட்டிக்குட்டிச் சாரல்

 தூரமாய் இருப்பவர்

 துயரத்தில் பங்கு கொள்வது 

போல் தான்


நம்மை மற்றவர் 

 புரித்துகொண்டதாய்

சொல்லிக்கொள்வதும் 

வார்த்தைகளும்


குட்டிக்குட்டிச் சாரல்

 என் பதைகளில்

  இலக்கு இல்லை! என்பதால் 

முடிப்பவன் என்னை

நிறுத்திட போவதில்லை

அவன் எழுதிய இலக்குவரை 

என் கால்கள்  


நடத்து கொண்டே

 இருக்கும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒன்றை புரியமாலே பலதாய்

மாற்றி விடும் நம் அறிவு நம்மை

புரியமலே மற்றவரை  விமர்சணம்

செய்கின்றது பலதாய்!!!

Sunday, 20 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 யாரேடும் யாரும்

இல்ல வாழ்வில் 

 விட்டிட முடியா

கைதொலைபேசி போல்

வாழ்க்கை தேவைக்கேற்ப 

உறவாகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்

தொலைத்தது போக 

மிஞ்சிய உயிரில் !!



எழுதிய  தோல்விகள்

தோண்டிய குழிக்குள் 

மேலும் பல உயிர்கள் 

விழுந்தும் குழிகள்

அப்படியே!!! 

குட்டிக்குட்டிச் சாரல்

 அப்பாடியென

நினைக்கும் நிமிடத்தில்

தேற்றுவிடுகின்றது பெருமூச்சு கூட

அடுத்த நிமிட தோல்வியில்!!!

Friday, 18 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னால்

 புதைக்கபட்ட வெற்றி 

என் தோல்விகளை

விட  சிறந்தவையல்ல  

என் தோல்விகளே

உண்மை முகம் கொடுத்தது 

மனிதர்களுக்கு  !!

குட்டிக்குட்டிச் சாரல்

 நம் தவறுகளை அங்கிகரிக்கும்

உறவே நமக்கு பிடித்த 

 உறவாகின்றது தவறென சுட்டிக்காட்டும்

உறவே வெறுக்கபடுகின்றது

நம்மை நேசிக்க நாமே

தவறாகின்றோம்!!!

Thursday, 17 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிடித்ததிற்க்கும் பிடிக்காததிற்க்கும்

இடையில் நடக்கும் யுத்தமே 

வாழ்க்கை!!

பிடித்ததை அடைய போராடும்

நமக்கு தெரிவதில்லை எது 

பிடிக்குமென!!!அதனால் தானோ 

பிடிக்காததை பிடித்தே  

பிடித்ததைஅடைகின்றோம் 

ஒன்றை இதயத்தின்

காயத்திலேயே  நம்

 சந்தோஷகோட்டையின்

ஆரம்பம்!1 புத்தியிருந்தும்  

உணர்வுகள் எழுதுவதே 

பிடித்தவையாகின்றது!!



Wednesday, 16 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓற்றை சொல் தேடி

உதிர்ந்த வார்த்தைகள் கோடி

கொண்ட ஆசை தேடி

தொலைத்த நாட்கள் அதிகம்

பிறந்த கனவை சொல்ல

பிறக்காமல் போன விடியல்கள்

ஊமையானது நியம். 

இருந்தும் நிழலேடு உரையாடல்

நாம் இருக்கும் கற்பனையில்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நினைவுகள் பேசும்

உணர்விற்க்குள் கொஞ்சம்

நியங்கள் கண்ணீர் சிந்தியிருந்தால்

துளிகளில் கூட ஓரு தாய்கனவு

பிறந்திருக்கும்

குட்டிக்குட்டிச் சாரல்

 காத்திருந்த சுந்திரம்

காத்திடா விடுதலை

காயமான உடல் காத்திடா

உணர்விற்குள் அனாதையானது

தாய்யின் தாகம் !!!

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டேடும் நினைவேடு விட்டேடா

நியாமானாய் மாமா 

கற்றேடும் வாழ்வேடு  கட்டுயணைக்கும்

உறவானாய் மாமா

இட்டுபேசும் பேச்சோடு

இட்டுநிறப்பிய ஆசை மாமா 

கொண்டி சிதறிய மல்லிகைக்கைள்

நான் கட்டி போட்ட மாலை மாமா



Tuesday, 15 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 அறிவுள்ள

புத்தகமென்றின் அழகிய

பக்கங்களை புரட்டியதில்

அழகான பக்கங்களாளது என்

பக்கங்கள்

Saturday, 12 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 எனக்குள் கலந்த என்

கற்பனையின் உயிரின் 

வடிவம் மாமா. நீ!!!

கடவுள் கூட படைத்திடா 

ஆண்மையின் சிகரம்  

மாமா  நீ!!!

உன்னோடு வாழும் கனவுகளிள்

அழகுகளில் பூத்த பூவின் 

புன்னகை  மாமா  நீ !!!

பூமிதனில் யாரும்

படைத்திடா கவியுலகின்

நாயகன் மாமா நீ!!!

தேடுபோதே தொலைக்கும்

காதலின் தொலையா வாழ்க்கையின்

இறுதி மூச்சின்  வெப்பத்தில்

தொட்டணைக்கும் முதுமைக்கும்

காதல்  கொள்ளும்  என் காதல்

மாமா நீ!!!!


Friday, 11 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 கைபிடித்த மழைகாலம்

கைதொட்டிடா வானவில்

கைகோர்த்திடா தனிமை

முதுமையையில்  சொன்னது

கற்பனையின் வெறுமையில்

கரைத்திட்ட நிமிடத்தின்

தனிமையின் கொடுமை!!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்..........,

என்  இலக்கணம் தொலைத்த

இலக்கியம்!  

இலக்கணப்பிழையாது 

என் இலக்கணப்பிழையான 

இலக்கணம்  இலக்கியமாக

வேண்டாம்!!

இருபவர் தொலைத்திடா

இலக்கணமாகிடவே  ஆசை!

என் இலக்கின் பாதையில்

விழுந்த பூவிற்கு  ஒரு  அழகிய

இலக்கணம் கிடைத்திட்டால்

என் வாழ்விற்க்குள் 

ஒரு மழைக்காலம்

கண்ணீர்  காலத்தை வென்றதை

கல்லறை பூ பெருமையாய் கூறும்!!!


குட்டிக்குட்டிச் சாரல்


 வயதை கடந்தும் 

கடந்திட முடியாமல் 

மனிதன் தன்னை தொலைப்பதே

 ஓன்றை உணர்வை

தனக்குள் ஜெந்திட முடியாமல்

தன்னைதொலைபதாலே


குட்டிக்குட்டிச் சாரல்

 விளையாட்டாய்

திரிந்த மனதை விளையாடி

பார்த்த இறைவனுக்கு மட்டுமே

புரிந்தது வலிகள்

 கொடுமையானதேயென

தேடிபார்த்தும்  கிடைக்காமல்

கல்லாய் நிக்கின்றான்

விடைதெரியாமல் !!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தேடிப்பா்த்தேன்

 மாமா

தேவைகள் புரியாமல் 

போனது

தேடாத்தேடலாய்நீ

வந்தாய் மாமா

 தேடல்களற்ற தேவை நாமேயாக

தேவைகள் புரிந்திடா

தேடல்கள் புரிந்திட

நம் வாழ்க்கை

அழகான மாமா!!!


Thursday, 10 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 உன்னேடு நினைவிருக்க

இருளேடு கனவு சிறைபட

என்னேட உயிர் விண்ணேட

போகா  கல்லறைக்குள் 

என்னை  உயிரோடே

பத்திரமாய்

அடைத்தே வைத்தே சென்றவன் 

தன்னேட கனவிற்காய் 

கண்ணேடு

பார்த்த  என்னேட உருவத்தை

 மண்மீது வரைகின்றாய்

ஏதோ கற்பனையில்

உனக்காய்  !என்னேட

ஆசையும் உன்னேட கற்பனையும்

ஓன்றை ஓன்று தோற்றே 

வீழ்ந்ததால் 

என் நிழல்   கண்டே அச்சம்

கொள்ளுது கற்பனை தோல்வியாய்!!!




விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நம்மை நாமே அழித்து

கற்பனைகைக்குள் 


நாமே   அடைத்து

வைத்த  விடுதலை !!

நம்மை  சிறைவைத்து  

விற்பனை சந்தையில்

உயர்ந்தே நிக்கிக்கின்றது

வரலாறின் சிறப்பாய்!!

பல கல்லறை 

பேசும் வலிகள்

கறைபட்டு  

உடைத்தெறிபட்டு 

சுயமற்ற உணர்வுகளாய் 

சுகங்களை 

 கடன் வேண்டி

கடமை பேசும் 

கடன்கார்கள்

கடனுக்கு 

விற்ற விடுதலையாய்   

கற்பனையின் சிகரத்தின்

உச்சத்தில் தினமும்  

தேடியலைகின்றது  

தமிழில்  

விடுதலையை!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இடைவிடா இடைவெளியின்

இடையே சிக்கிக்கொண்டது

நினைவு

இடையரும். கயவரும்

கடந்திடும் வனத்திற்க்குள் பெய்தேடும்

மழையை  போல்  தடையற்றே

என்னுடனே ஓடுதே 

உன் நினைவு

ஒரு வானம்பாடியின் இசைக்குள்

சிக்குண்ட ஓரு குரலாய்

ஒலிக்கின்றது உன் நினைவு

யாரேடும்  சோரா ஓற்றை குரல்

ஓசையை ப்போல்!!!



Wednesday, 9 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இருக்கும் நிமிடம்

இல்லெயென சொன்ன

வலிகளுக்கு மட்டும்

தெரிந்தது தொலைத்தையாவும்

எனக்கு 

கிடைக்கா நிமிடமென

கற்றிட வைத்த நிமிடம் கற்று தந்த

நிமிடத்திற்க்கு சொன்னது

நான்கற்றிட்ட  நிமிடத்தை

விட என் வாழ்க்கை கற்றுதந்த

நிமிடம்

எந்த புத்தகம் என்னாக்காய்

கற்று தந்திடாத பாடமென!!!


குட்டிக்குட்டிச் சாரல்

மாமான் சொந்தம்  

மரக்கிளிக்கு  இல்லையென

 மரிக்கொலுத்து 

சொன்ன நிமிடம்

கிளிக்கு  சொந்தமான

 மாமன்  நினைவுக்கு  மட்டுமே 

சொந்தமானான் 

சொன்னதை சொல்லும் 

கிளிக்கு சொல்ல மட்டும்

உரிமையான மாமன் 

தந்தது காதல் மட்டுமே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நமக்கு உரிமையான ஒன்றை

இழக்கும் நிமிடம் வலியே

அதுவே  நம்

சொந்தமில்லையென

பார்க்கும்

 நிமிடம்  உரிமையற்றே

விலகிவிடுகின்றது மனசு!!

Monday, 7 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிடித்தவை தூரமாய் போக 

பிடிவாதமாய் வந்தமர்ந்தது  

சாபம்



கிடைத்தது தூரமாய்போக  

தடையாக வந்தமர்ந்தது 

சாபம்

கண்டதை காணததை

சொல்லிகொண்டே

கற்றுதந்தே தொடர்ந்தே

கூட நடக்கின்றது

 சாபம் 

வாழ்க்கையென்னும் 

 தொலைதூரத்து நெடிப்பொழுது

சாபத்தை  மாற்றிடாதே

தவிக்கின்றது

கூடாவிதியால் !!!

Saturday, 5 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓய்வற்ற இயந்திர

வாழ்க்கைக்கு கொஞ்ச

நிழல் மட்டும் கிடைத்திட்டால்

போராட்டம் கூட அனுபவமாகும்!!

நியமற்ற உயிருக்கு கொஞ்சம்

அன்பு உண்மையானால்

கோழைக்கும் போராடும்

உறுதிவரும்!!!



Wednesday, 2 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கையேடு  ஒரு அழகான

வாழ்க்கை கைசோர்ந்ததை

கைவிட்ட பின்னர்  கூட

புரியமலேயே 

கையேடு  இருந்த தன்

விருப்பத்தை  கைவிட்டு

போய் 

தன்னை மாற்றிகொள்ளும்

மனிதனுக்கு  கூட 

ஒரு கைபிடிப்பு தேவைபடுகின்றது 

பல அனுபவங்கள

கண்முன்னே  இருந்தாலும்

இன்னொரு  வாழ்க்கை 

கொடுக்கும்  ஏமாற்றம் வரை !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இருப்பதால் நினைப்பதை

செய்திட ஆடம்பரத்தை

தேடியேடும் கால்களுக்கு

தெரிவதில்லை மற்றவரை

மதித்திட 

அள்ளி இறைப்பதால் பெருமை

கொள்ளும். கைகளுக்கு

தெரிவதில்லை மற்றவரின்

தேவைகள் 

இல்லையென  ஒன்றுமில்லையென

காட்டதுடிக்கும்  மனசுக்கு

தெரிவதில்லை  

இருப்பவரின் காத்திருப்பின்

நிமிடம்கரைந்தேடி 

வெறுப்பாகி கசப்பாகும்

வாழ்த்துக்கள்!!!! 




Wednesday, 26 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னேடு  விதைத்த 

உயிரில் விழுந்த துளியே



என்னேட மூச்சிக்குள்

எழுதபட்ட மரணம்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தண்டிக்க தெரிந்தால்

மன்னிக்கவும் கற்றுக்கொள்

போட்ட விதைகள்

உயிர்கொண்ட வேரை 

பிடிங்கிய வலியை

கற்றுக்கொண்டு துடிக்கும்

இதயத்தின் வலியை விட

பெரிதல்ல  

உற்ற பந்தம்

உயிரேடு இருக்க  

மற்றதெரு பந்தம்

உன்னில் பெரிதற்ற  

உன்னால்உருவான 

வாழ்க்கை  பெரிதாகும்


குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னேடு பேசிய வார்த்தைகள்

மழையேடு பேசிய  மலரின்

தன்னம்பிக்கை பறித்துபோன

துளிகளின் மரணம்!!!


Tuesday, 25 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓன்றாய் கூடி 

நன்றாய் வாழ 

ஓன்றை  கொண்டாடினால்

நாம்

 இறைவரைந்த மனிதன்!

ஓன்றையெடுத்து 

நாலாய் உடைத்து

ஐந்தாய் நின்று 

 எதையும் கொண்டாடமல் 

இருக்கம்   நிமிடத்தை

கறுப்புத்துணியால்  

கட்டி வைத்ததாய்நினைத்தால்

 நாம்

மனிதன் வரைந்த 

இறைவன்!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 முதுமையின்  ஏக்கத்திற்குள்

சிறைபட்ட தேடலாய்

கைவிட்ட கரங்களின் தூரம்!

கண்தேடா பதையேர

 காத்திருப்பால்

ஏக்கம் கொண்ட இதயம்

காத்திடாமலே காதுகளேடே

விசாரிப்பு!

பூட்டபட்ட அறையைபோல்

தூரமான உறவுகள்

பணத்தேடு குதுகலம் !

தேவயின்றிய ஆடம்பர

தேவையால்

தேடிபேசும் சுகவிசாரிப்பு!

முன்னே பின்னே சித்திக்கா

முடிவெடுப்பால்

முதுமைக்கு  வயது போதாதே

போகின்றது தீயேடு!




குட்டிக்குட்டிச் சாரல்

 ஒய்விற்காய் ஏங்கும்

மனதினை அலைச்சியம்

செய்யும் போதே 

போராடும்வாழ்வு

ஓய்விற்காய் தூரமாய்

ஒடுகின்றது

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................


 நாம் நமக்கான

 முடிவுகளை

தாமதமாக சிந்திப்பதால்

கற்றுக்கொள்ளும்

 வயதைத்தாண்டி

கற்றுக்கொடுக்கும் வயதில் 

நம் வாழ்வியலை சரிசெய்ய

முடிவை எடுக்கின்றோம்!!

இன்றைய வாழ்வியலில்

நாம் எடுக்கும் முடிவு

மற்றவரின் தவறான 

முன் உதாரணமாகின்றதால்

நம்மை மதிக்க நம்மிடம்

எந்த காரணமும் இல்லாமல்

போய்விடுகின்றது!!!

Sunday, 23 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 விடியலே  இல்லையென



இருளேடு கடந்தவை கற்று

தந்தையே  விதியென

கடந்திட்ட  உயிரில்!

ஒளியாய் தேயும் 

உணர்வில்  

புதைக்கபட்ட உடல்

சிதையும் காலம்

வரை 

மறாதே  தொடரும்

நியங்களின் வலிகளால்

நிழலுக்குள்  வரைந்த 

ஒவியமும்  அழுதிடும்

இவள் விதி  கண்டு!!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இன்மைகள் கொண்டே

நன்மைகளை சொல்லியே

போகும் பாதையேரம்

கனவுகளை போல்  சில

நிமிடங்கள் நம்மையேன் சந்தித்தே

கடக்கின்றது என தெரியமாலே

நின்று ரசிந்து தேடுவதே  நம்

வாழ்வின் புரியா கேள்விகள்

அந்த நிமிடம் வரமலே

இருந்திருக்க கூடாதாயென

பல நெடிகள் புலம்பினாலும்

தடுத்திட முடியா நியதியே வாழ்க்கை


Friday, 21 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................


 கிண்டலும் கேலியாய்

ஓரு கூட்டம்  

அறிவேயில்லையென

அறிவுகள் கூற 

ஓரு கூட்டம்

தவறுகளை தேடி 

திருத்தியே வாழவைக்க 

ஒரு கூட்டம்

இப்படி 

கூட்டமாய் சுற்றும்

கூட்டத்தில் ஓருவர்

நேய்யில் விழுந்தாலும்

துன்பத்தில்

விழுந்தாலும் காணவில்லை

ஓருத்தரையும் !உண்மையில் 

அன்பின் உருவமற்ற 

அன்பபை  தொலைத்திட்டே 

மற்றவர் வாழ்க்கையை எடுத்து 

இன்னெருவரின் பொழுதுபோக்கவே 

கூட்ட மெல்ல கூடுதோ

உறவாய் !!! 



Wednesday, 19 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்


 கொஞ்சநேரம்

தோல்சாய்ந்தே கவலை மறக்க

தோழன்  வந்தான் என்னோடு 

 விம்மலுக்குள் கரைந்தே

காணாமல்  போன காலத்தின்

 விக்கலைப்போல்!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 எழுந்தின் வடிவமாய் 

கவியின்  உண்ர்வாய் 

கற்பனையின் உருவமாய்

என்னைக்கொடுத்த கனவின் 

விழிகள் குருடானதால்

ஊமையானது மொழியின்  காதல்


குட்டிக்குட்டிச் சாரல்


ஒன்றை  விட்டுகொடுத்தவர் 

ஆர்ப்பாட்டமின்றியே! 

நகர்கின்றார்  

 ஒன்றை  எடுத்துகொண்டவர் 

ஆர்ப்பாட்டமாய் வாழ்கின்றார்

விட்டு கொடுத்தவருக்கு

மட்டுமே  மனசின்  உணர்வு

புரிவதால்!!  தன்னை  

விட்டுக்கொடுத்தே

தனியாய்   வந்துவிடுகின்றார்

இதை புரிந்தவரே வாழ்வில்

மன்னிக்கவும் தெரிந்ததவர்


Tuesday, 18 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 கனவுகள் அழகாய்

தோன்றிமறைகின்றது

கையில் கிடைக்காமலே

வாழ்க்கை தோல்வியேடு 

புன்னகைக்கின்றது

கனவை நேசித்தும் மறந்தும்

காலங்கள் ஒடி மறைகின்றது

கனவுகளாய்!!!

Monday, 17 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என் மரணத்தின் பாதையேரம்

பல மரணத்தை கடக்கின்றேன்

எந்த மரணமும் மனிதனுக்கு

வலியை கொடும்பதாய் தெரியவில்லை

அன்று மரணத்தின் இழப்பிற்க்குள்

இருள் சுழ்ந்தது   இன்று

பணம் கொண்ட வெளிச்சங்கள்

பாதையை தெளிவாக்கியே போக

வலிகள  கூட ரணங்களாகதே

கடந்து போகின்றது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 சின்ன சின்ன விடையங்களில்

கூட குட்டிக்குட்டி சந்தோஷம்

இருப்பதை புரிந்த இதயமே

மகிழ்ச்சியாய் வாழ்கின்றது

Saturday, 15 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

ஒருவாழ்க்கை!!  

இன்னெருவரின் வாழ்க்கையை 

பறித்து நமக்கு யாசகமாக

கொடுப்பது  எப்போது

நமக்கு புரிகின்றதோ!!!

அப்போதே!!  அந்த வாழ்க்கையில் 

நாம்  தோற்றுவிடுகின்றோம் 

எனக்கு தானமாக 

கிடைக்கும்  வாழ்க்கை 

பிடிப்பதில்லை  அதலால்

யாருடைய வாழ்க்கையையும்

யாசிக்கவில்லை!! பறிக்கவுமில்லை 

நானே தனியாக  வாழ்வை

வாழத்தொடங்கினேன்

சிலநேரம் வெறுப்பும் வரும் 

சிலநேரம் கண்ணீரும் வரும் 

ஆனாலும் யாரும்

என்னால் அழுவதில்லை!!!

Friday, 14 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டுக்கொடுத்ததன் வலி

விட்டுக்கொடுத்தவர்  மட்டுமே

உணரும் போது விட்டு பிரிந்தவர்

எப்படி பிரிவின் வலிகளை

உணர முடியும்  பிரித்தவர்

புரிவதில் பிரிவுமில்லை பிரிவுகள்

பேசிட காதலும் காத்திருப்பதில்லை

காத்திருந்தால்

தொலைபது காதலுமில்லை!!

Thursday, 13 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சிதறியே வாழும் மனிதன்

ஓற்றைசொல்லால்   ஓற்றை

குடும்பத்தை ஓன்றாக்கி போனான்

குடும்பமாய்வாழும் மனிதன் 

தன்னை காணவில்லையென

ஒற்றை குடும்பத்தை கையில் வைத்தே

நித்தம் சண்டையிடுகின்றான்

இங்கே 

இறைவனையும் காணவுல்லை

இறைவண் படைத்த மனிதனையும்

காணவில்லை!!!மதம் மட்டும்

வாழ்கின்றது!!!!




Tuesday, 11 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஆட்சியாளன்பேசும்மொழி

ஆட்ச்சிபுரியாயமல்  உயரும்மொழி

காலத்தின் மொழிகளேடு

காலத்தோடும்கவிதைமொழி

யுத்த்தில் காலத்தளமாடும்

உதிரத்தின் வீரமொழி

அழித்தாலும்அழிவின்றி 

வாழும்மொழி

வரலாறுகள் தேடிப்பேசும்

பண்பின்மொழி

வரலாற்றையே  தேற்கடித்த

வெற்றியாளன் மொழி

படித்திட படித்திட 

சுவை தரும் அன்பின்மொழி

பலமொழிகள்தேடிப்பேசும்

பழமைமொழி

திறமையாளனை படைத்தே

திறம்பட ஆண்டமொழி  

தேடியும் ஆடைத்திடா  

தேசமின்றி  தேசம் வாழும் 

 இனிய மொழி இருந்தும்

ஏனோ தனக்குள் தானே

சண்டையிட்டே தேற்குது வீனாய்!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விழுந்தபோது உயர்ந்த 

கையின்  முன்னே 

வெட்டிக்கதை பேசிய

உருவங்கள் !உடைத்தே  

நெறுங்கியதுகள்களில் 

கைவைத்தே எழுந்தவள்

இவள்!!!இவளை 

அழித்திட  முன்றவரையும் 

கைப்பிடித்தே  நடக்கின்றாள் 

விழுந்தாலும்  எழுந்தாலும் 

இவளிடம்  இருப்பது 

நம்பிக்கை  மட்டுமென்பதால் !!!

மனிதனிடம்  பாடத்தை  

கற்றுக்கொண்டவள் 

இயறக்கையோடு   காதல் 

கொண்டவள்   தன்  பாதையில் 

தனிமைக்கு  துணையாய் 

விதியோடு விளையாடி

 யார் மேலும்  பகையின்றி 

போகின்றாள்  உண்மையையும் 

பொய்யையும்  வேடிக்கை 

பார்த்தபடி!!!!1