Thursday 31 May 2012

பேரின்பம்

உயிரோடு  உயிர்  கலந்த  உணர்வை
உயிரும் உயிரும்சேர்த்து
உயிராக்கி ஓர்உணர்வின் மொழியாய்
உயிருக்குள்  கொடுத்ததால் !!!
என் உயிர்  வந்து திண்டாது
 இவள் கற்பதிற்குள்!!!
பிறப்பின் பால் வந்தவர்கள்
பிறபினை தப்பென்று பிறவா
என்னைப் பாராது திட்டுவதை
மௌனதேடு கேட்கின்றேன்
தவறோ புரியாப் பிறப்பி  நானென்பதால் !!!!
அம்மா இவளுக்கு அந்த காலத்து
மனிதர்கள் சொன்ன சடங்கின்றி
 கழுதிற்கு தாலியின்றி நான்வந்தால்!
!அம்மா இவள் தப்பானவளாம்!! 
பாட்டிக்கும் தாத்தாவிற்கும் நான்
அவமான சின்னமமாம்   !அப்பா
உயர்சாதியென்பதால் தொட்டுக் கெடுத்த
அம்மாவிற்கு தகுயில்லையாம் 
அவரோடு  சேர்த்து வாழ!!! அதனால் 
நான் வேண்டாமாம் இவ்வுலகிற்கு !!! அப்பாவின்
குடுபக் கௌரவம்  காபாற்ற தப்பான
உறவிற்கு சாட்சியான நான்
வேண்டாமென்று தப்பான பிள்ளையை 
பெற்ற தாத்தாசொல்லுகின்றார்!!
தப்பான வாழ்வை மனிதன் வாழ
கூடாது என இறை வைத்த தத்துவம் புரியாது!!!
ஊரும் உறவும் அறிய முன்
என்னை கருவோடு அழித்திட
அலோசனை கூட்டம் !!!
தவறிய பின்னோ அழுதுடிக்கின்றாள்
தன்னை என்னி  அன்னை !!!என்னை அல்ல!!!
இறைவா மீண்டும் ஒரு தப்பான
பாதையை காட்டாதே என்னை
சில மாதம் மட்டும் சுமக்கும் அமாக்களுக்கு!!
என்ன நான் செய்தோன் மனிதா?
உன்னால் சிந்திக்கா வாழ்வு
என்னை அசிங்ப்பார்வை பார்க்க
கருவோடு களைகின்றேன்
கருவறை இருள் போல் ....
அம்மாவாய் அப்பாவாய் ஒன்றாகும்
காதல் தேகங்களோ உங்கள் 
உணர்விற்குள் என்னைச் சபிக்காதீர்கள்
மீண்டும் மீண்டும் கொலைகார்
நீங்கள் தான் ...............நாங்கள் அல்ல!!!!!

Sunday 27 May 2012

பிறவி..............

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அடிதடி!! அடடா !!இல்லமும்
சட்டசபை ஆச்சி!!
எதிர்கட்சி ஆளும் கட்சி
அடிக்குது லுட்டி !!அடடா!!!
இரண்டுக்கும் நடுவோ
ஓர் விடுதலை மூச்சுக்கு
புரியா வாழ்வாச்சி!!
பிள்ளைக்கும் பெண்ணுக்கும்
இரண்டே கதையாச்சி !! அடடா
கண்ணும் காதுக்கும் 
குளிரான பேச்சு வீட்டுக்குவீடு
சொல்லும் கதையாச்சி!!!
ஆச்சுக்கும் அப்புவுக்கும்ம்
பதருக்குள் அறிவாச்சி!! அடடா
மகனுக்கும் மருமகளுக்கும்
அறிவோ பதராச்சி!!
போதைக்கு பெண்ணாச்சி
பொருளுக்கு அவன்னாட்ச்சி
உணர்விற்கே புரியா அருளாச்சி
இருந்தும் அடடா!!
புரிதலுக்கு மேடையாச்சி 
பிறவி இதுவாச்சி !!எனியும்
காலம் தான் சொல்லனும்
விடுதலை பேச்சு!! ஆனாலும்
வந்து வந்து தேயுது காமத்தின் ஆட்சி
அடடா !!என்றுமே இதுவே  செய்துஆட்சி

Monday 21 May 2012

உயிர்வரை

உள்ளத்துக் காதலை
உண்மை அன்பினால்கட்டி !!
உயிர் மூச்சிற்குள்
உன்னை  என்னை  வைத்து
எனக்கும் உனக்கும் வந்த
காதல் சொன்னதெல்லாம்
என்னிடதில் அப்படியோ இருக்க!!
உன்னிடத்தில்  வந்ததொல்லாம்
 உன்னை  எடுத்து என்னை
வடிதெடுத்த கற்பனைகள்மட்டுமே !!
எப்படி !!எப்பவும் உன்னைமட்டும்
சிந்திந்து என்னை மறந்திடிம் எனக்கும்
 உனக்கும் ஒர் காதல்
ஆண்டுகள் கடந்தும் ஆயிரம் இழந்தம்
அப்படியோ என் மனதில் புத்தம் புது வாசமாய்......
தேடி எடுக்க வாழ்விருந்தும்
தேவையின் தெளிவிருந்தும்
தேவையில்லாப்  பைத்தியமாகி
இன்னும் எதையும் இழக்கா
 நினைவுகளாய்  என் இதயத்தில் 
 அச்சுபிழையில்லாபுத்தமாய்
அப்படியோ இருக்க!!உன்நினைவுகள்
மட்டும் அப்பப்ப  தென்றல் தெடும்
காற்றால் உதிர்கின்ற இழ்கள் போல்
என்னுல் வந்து வந்து உதிர்கின்றது நம்வர்ணக்
கனவுகளை......





Friday 18 May 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

உன்னதம்


என்னைக் கொன்று உன்னை
பெற்று பொருமை தந்து
நம்மை பெற்ற  வாழ்வின்!!!
அற்புதக் கருணை ஒன்று
தொலைய தொலைவில்
தொலைந்து நிற்க!!
நான்யார் நீயார் யாரும்
அறியா வாழ்விற்கு  ஒளிகொடுத்து
உன்  உயிர் கொடுத்து
என்னை பெற்ற உன் உருவதிற்குள்
மெல்ல கரைகின்ற என்நிழலை
  என் உளியொடுத்து  என்னை
வடிக்கின்றேன் நீயாய் நான் மாறிட!!!!!

Thursday 17 May 2012

பந்தம்

ஆண்ஐாதி பெண்ஐாதி
உலகிற்கு இருஐாதி அப்பாடி!!
ஆணும் பெண்ணும்சரிபாதி !!
இருந்தும்!! ஏன் ஓர் பொய்ப்பாதி!!

சிவனுக்கு சக்தி சரிபாதி
இருந்தும்!! பிறந்து பிரிந்து
சோருவது  எப்பாதி!

முருகனுக்கு வள்ளி சரிபாதி
இருந்தும்!!தெய்வானை ஏதற்காய்
ஓர் பாதி!!
கண்ணனுக்கு ராதை
உயிர்ப்பாதி இருந்தும் !! ஆண்டாள்
எதற்காய்பாதி!!

கோவலுக்கு கண்ணகி சரிபாதி
இருந்து்ம் !!மாதவி யாருக்காய்ப்பாதி!!

இப்படி! அக்கரைக்கும்
இக்கரைக்கும்  இடதிற்கும்
வலதிற்கு்ம்ஒர் பாதி பாதியாய்
நிற்கும் கதைகள் சொல்லு்
பாதிப் பெண்களின் பாதிவாழ்கைக் கதைக்கு
 எப் பொருள் முப்பொருள் காண
இப்படைப்பு......
..
பாவையவள்  படைப்பின்
பாவக்கதைகள்  சொல்லும்
பொல்லாத உலகிற்குள்
பொருந்த வாழ்கைக்குள்
 சற்றும் நில்லாத காற்றைப் போல்
முன்னாடி பின்னாடி தள்ளாடி
கொஞ்சமும் குறையாத பாசம்
இல்லாது போனதால் என்றால்???????????

எதைவைத்து யாரைப்படைத்தான்
இறை!!
எதற்காய் இந்த வாழ்கை
யாரை யார்வெல்ல வந்ததிந்த
மனுடம்  !!
கரையும்மனதிற்கு பிடிப்பதெல்லாம்
அறிதும்அறியாமை கல்வியா................?


Wednesday 16 May 2012

சக்காலத்தி

அக்காளின் கணவருக்கு
அக்கரையாய் ஒர் பாசம்
அக்காவிற்கு தெரியாது
வந்தால்!!
தற்காலம் அக்காளிடம்
தங்கை சக்காலத்தியானால்!!!

 முக்காலம் இக்காலம்
எக்காலும் போனாலும் ஓர் உறவு
பெண்ணிற்கு இப்படியொரு பெயராய் 
எப்படித்தொடருது!!!
இல்லாத பொல்லா கனவில்
நில்லாது மிதப்பதாலா!!

சொல்லாது வந்த பொல்லாத
காதல் நில்லாத உணர்ச்சியை
கொள்ளாது கொள்வதாய் பொல்லாத
உணர்விதற்கு .இல்லாத கதையை
கொஞ்சம் கல்லாத மனம் சொல்வதாலால!!
நில்லாது வடிக்கும் பொல்லாத கருணையால்
அக்களும் தங்கையும் எதிரியாய் மாற்றிவிளையாடும்
விளையாட்டின் அர்தம்புரியவில்லை !!

அத்தனையும் செய்துவிட்டு
அப்பாவி வேஷமிட்டு அக்கரையாய்
நிற்கும் அத்தானின் மனதிற்குள்
அந்தனையும் பொய்யாய்யனதாலா!!
உணர்ச்சியை  தவிப்பாக்கி உண்டுவிளையாடி
உண்டிட்டு  கல்லாய்நிற்பது தான் ஆண்மையா .,,,,,,,,,,,,,,,,,,,,,

Wednesday 9 May 2012

நானும் நீயும்

மொழியின் காதலில்
தமிழின் அகரத்தில்
வாழ்வின் சிகரத்தில்
புகழின் கிற்றுகளில்
என்றோ ஒன்றாய்வாழ்ந்த
ஞாபகங்கள் நன்றாய் என்
விழிகளில் ஒளித்திரையில்
 வாழ்வதால்!!! 
வரியாய்க் கவியாய்
கற்பத்து ஓவியமாய் என்
கண்களின் உயிராய்
நிற்று நடக்கும் நதியாய்
நில்லாது ஒடும் நீரை போல்
தள்ளாடும் மனசும்  மறக்காது
 துடித்திட நீயேயானாய்!! என்
முன்னாலும் பின்னாலும்
சொல்லாத நினைவாய் நீ
நிற்காது  வருவதால் பொல்லாத
 ஐயம்!! ஐயத்தின் மேல் வந்தாலும்!!
என் மனசு  உன்னை
அள்ளியணைத்திட முடியா
வையத்து ஊமத்தம் மலரானதேன்!
அனிச்சம் மலரனய்!! உன்னை
அள்ளிக்கொள்ள முடியாது தள்ளிவிட்ட
தாய்விதி சொல்லிக்கொள்ள
வந்தென்ன உனக்கும் எனக்கும்..........?



Saturday 5 May 2012

மொழி

பள்ளியில் படித்தெல்லாம்
வாழ்க்கைக்கு உதவ
வில்லை
உள்ளத்து மொழியினை நாவிற்கு
மறைக்கத்தெரியவில்லை
கள்ளத்துமொழிபடிக்க ஒர்
பள்ளிக்குப் போனதில்லை
நடிப்பின்மொழிக்கேர் வாத்தியார்
வைத்ததில்லை
பொய்யின் மொழிகற்று
வாழப்பழகவில்லை
ஏமாற்றி வாழ ஒர் மொழியும்
தேடவில்லை
அறிஞ்ஞரின் மொழியினை
கற்றிட தோன்றவில்லை
அறிவின் பக்கத்தை அறியும்
அறிவும் எனக்கில்லை
 அறிவுடையோர் கேள்விக்கு பதிலும்
அறிவு கொண்டு சொன்னதில்லை
மனிதறிவின் தத்துவத்தின் பக்கங்களும்
 என் அறிவிற்கு புரியவில்லை
மனிதப் பிறப்பின் கணகிற்கு கொடுத்த
மொழியதனை தேடியும்  நான் கற்கவில்லை...................................................



Friday 4 May 2012

என்றும் அன்புடன்

குழந்தை பருவம் அறியா அறிவு 
 அன்னை அன்பைமட்டும் புரியும் உணர்வு
சொன்ன பக்தியில் எதையும்கேட்கா
 அறிவில் வந்தது பக்தி காதலாய்உன்னிடமே!!

வளர்ந்த காலம் இளமைக் காலம்
கிண்டலும் கேலியும்  என்
கூடவோ தொடர பாதி மோதகம்
எனக்கே எனக்கென்றுசண்டையிட்டு 
வாங்கி உண்ண வந்தது பக்தி காதலாய்உன்னிடமே!!!
பருவக்காதல் உணர்ந்த காலம்
உன்னைப் போல் அன்னை மகன்
காணா பெண்ணாயாய் தேடிய
 பக்தியில்  சுற்றிய மனம் சுற்றியோ வந்தது
காதலாய் உன்னிடமே!!
தாய்மை பருவம்
கண்ட காலம்! உன்னை போல்
ஒர் மகன் எனக்கும் வேண்டி
வந்தது பக்தி  காதலயாய் உன்னிடமே!!

எல்லாம் முடிந்து  இழந்த காலம்
தவியாய் தவித்த  மனசு யாருமற்று
பட்டுநின்றநிலையிலும்
துணையென வந்தது
பக்தி காதலாய்உன்னிடமே!!

மேலும் மேலும் துயரங்கள் 
 தீட்டிப் பார்த கூரிலும் குத்தியெடுத்து
 வார்தைதெடுக்கும்  உறவின் சொல்லுக்கு
தேனீயற்ற தேனைப் போல்இனிமையாய்
 மனம் வந்ததுபக்தியோடு காதலாய்உன்னிடமே!!

எதுமில்ல வாழ்வில்
எதுகும் செய்யா
 உன்னை எதுகும் கேளாது
எப்பவும் அமைதிதேடி மனம்
அமிர்தமாய் நின்றிட
 வருகுது  பக்தி காதலாயாய் உன்னிடமே!!

ஆணைமுகம் கொண்ட உன்னை
அன்பிமுகம் பார்து ஆற்றில் கரையும்
உன்னில் அழகு முகம் கண்டு தொடருது
பக்தி உன்னிடமே காதலாய் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Tuesday 1 May 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

இதயத்துளி

சுட்டிக்கதையாகி
சுடரில்லா ஒளியாக்கி
 வெட்டிப் புதைத்த நினைவதனை
தட்டித்தட்டி உயிராக்கி
மெல்லக் கனவாக்கி
கற்பனைக்குள் சிறகாக்கி
எடுத்தென்னை உறவாக்கி
 சுட்டு எரித்தும் எரியா
வாழ்வாக்கி பின் தள்ளிக் கண்ணீர்
 கதைசொல்லி இருந்தும்
 கதறும் மனமதனை
 விட்டுப் பிரித்து  தவிக்கவிட்டு
தவிக்கும் எண்ணத்தை சுயநலமாய்
அழித்து  திரும்ப திரும்ப
பிரியா மணலால் கட்டி
துடிக்க துடிக்க எரியும்
வலிகள் கண்டும்  என்று  துடிக்காக
                            இதயம். நீயேயானாய்  ..............