Wednesday 31 December 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மண்வாசனைக்கரையில்
வார்த்தைதொலைத்து
வாழ்வை தேடும் வறுமைக்கு
வாழ்கைகொடுத்து
வாழயெழுந்த மனிதநேயதை!
வறட்சி கொடுத்து ஏன் மண்ணில்
புதைந்தாய் என்னிடம் சொல்லாது !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏய்! இனிய வருடமே
உன்னைக்கண்டு என் வயதை
கண்டு! கண்டு கண்டு 
காயங்களால் வெந்து வெந்து
ஏமாற்றங்களைக் கொண்டு கொண்டு
என்னைக்கொன்று!உன்னைக் கொன்று
என்னை வென்று எழுந்திட்டேன்
உனக்காய் !கொண்டு வா  
என் துன்பங்ளை கொண்டாடிட
நான் ரொடி!!!நாளைய
கனவில்லை  கற்பனையுமில்லை
எதிர்பார்புமில்லை
என்னை வென்றிட வரும்
உனக்காய் காத்திருக்கின்றேன்
உன்னோட பயணியாய்
கண்ணீர் துளிகளை  பரிசாய் கையில்
ஏந்தியபடி!!

Thursday 18 December 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை எரித்தது விதி
விதியை எரித்தேன் நான்
கனவை  எரித்தது  வறுமை
வறுமையை எரித்தேன் நான்
வாழ்வை எரித்தது நேசம்
அந்த நேசத்தை எரித்திடாது
சாம்பலை இட்டுக்கொண்டேன்
நெற்றியில்  !!
நேசம்  உண்மையானதால்!!

Monday 15 December 2014

ஆதிக்கம்!!

கொத்துக்கொத்தாய்
அடிமையாகியதால்  கொத்தடிமை
கற்று ஆண்மை  கொணடவளை
அடிமையாக்கி கொண்டாடுது தான்
அடிமையாய்!!
விற்றவள் வாங்கியவள்
கொத்துக்குள் அடிமையானதால்
தேவதாசி ஆண்மைக்கு அடிமையானாள்
அடைக்களப்பொருளாய்!!
மெட்டியெலி கூப்பாடிட்டு
ஆண்மைக்கு தாழ்பால் இட்டதால்
பெண்மையின்கால்விரல்
காப்பானது காதலால்!!
கட்டுடல் களையின் காமத்திற்கு
கட்டுண்டு கருணையோடு இசைவதால்
பெண்மைக்கு இயற்கையே 
இழிநிலை கொடுத்தது
அழித்திடும் சக்தியற்று!!
பொற்காலம் பொதிகைக்குள்
புலம்பெயர்ந்தால் துள்ளியெழுந்த
பொண்மை இக்காலம் துயர்க்கரமறுத்து
தனியே வாழகற்றிட்டது!!
அப்பாடி!! அலைமோதும் ஆண்மையும்
அலைபாயும்  பெண்மையும்
தடுக்கிவிழுந்தாலும் தனித்தனியே
நிமிர்கின்றது! தவறுகள் இதுவல்லவென்று!!
ஆணாதிக்கம் பெணாதிக்கம்
                                                   எதுவெனத்தெரியாது ஆனாலும்
முப்பால் முழுப்பால்  தப்பால்அரைக்கரை
சரியாகி  இங்கே பிழைக்குள் 
கைகோர்கின்றது ஆதிக்கமின்றி!!