Sunday 29 April 2012

விழிகள்

சின்ன அருபுகளின் நடுவே
 மெல்ல  விரிந்திடதுடிக்கும் மொட்டுகள்
முட்டி மோதி மெல்ல வெளிவர
காத்திருக்கும் தோட்ட மணல்வெளி
 தன்னைப்பச்சைவர்ணம் போற்றி
அழகு காட்டி செழிக்கும் பசுமைகாலத்தின்
 ஓர் அந்திப்பொழு !
மெல்லத் தவழுகையில்!
அந்த பொழுதின் ரசனைக்குள்
தொலைந்த மனசு கரங்கொண்டு
 இறுக பற்றியே தன்னைப்பற்றியவளினை
அணைத்தபடியே ஒன்றையடி பாதையில்
இருவரும் தம்மைமறந்தே நடக்க!!
எங்கிருந்தே வந்த தென்றல்
உயரத்து மரங்களிடம் அப்படியென்ன
பேசியதோ சட்டென  இதழ்களைத்தூவி
ஒரு நிமிடம்  வாழ்த்திப் போக!!
உன் கைகளுக்குளே என்
உலகை வைதாய்  எண்ணிய
இயத்துடிப்பை உணர்ந்த மனசு
தன்ஆசைகளை உன் காதுகளில்
 மௌனமாய் சொல்ல 
உன்உணர்வுகளைில் கலந்த என்
உணர்வு 
 உன கண்கள்  என்னை ரசித்தபடி
ஏதேதோ சொல்லிடத் துடிக்க
புரிந்தும்  புரியாமலும் நான்
மனதிற்குள் ரசித்தபடி தவிக்க!!
அந்தநிமிடம் இந்த உலகில்
 யாருமே மகிழ்ச்சியாய்
வாழந்திடா ஒர் எண்ணம் தோன்ற
விழித்திட்ட என் கண்கள்
என்னைப் பாவமாய் பார்த்து
கேலியாய் சிரிக்க !!என் மனம்
கோவமாய் சினக்க   விழிகள்
           சொன்னது உன் கனவை நிறைவேற்ற               
                                                       என்னால் முடியாது என்று...................


Thursday 26 April 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

விளையாட்டு

படைத்தவன் மோதி மோதி
உடைத்திட்ட வெற்றியை
உடையவன் உண்மையின்றி
தொலைத்திட்ட வெற்றியை
விதி விரைதெடுத்து கணகிட்டு
பெற்றுகொண்டதாய்  எண்ணி
அழுகின்றது மனசு
மோதி மோதி களைத்திட்டதால்!!

வலி கொஞ்சம் கொஞ்சமாய்
கொடியோற்ற வர்ண வர்ண
கனவுகள் வெள்ளை கறுப்பாய்
ஆனதால் படிப்பும் பயற்று
கிடக்க அறியாமை சோம்பலுக்கு
குடைபிடிக்க நிழலின் சுகத்தில்
துயரம் சுகமாய் உறங்க
வெறுப்பு வார்தையாய்
கதைசொல்ல வாழ்கையின்றி
அழுகின்றது  தோல்வி வெற்றியை
 தொலைத்தாய் எண்ணி!!

இறையவன் படைப்பில்
எல்லாமே சுயநலம் பெற்றதாய்
எதையும் சிந்திக்க மறுக்கின்றது
அறிவு துன்பதின் பக்கங்களில்
நின்றுகொண்டு எதையும் செய்யாது
சந்தோஷபக்கங்களை வெற்றி
கொள்ளா   துயரமாய்
பிறப்பின் கணக்கு பாவம் என்று
கணக்கிட்டு சொன்னதால்
துயரங்களை துடைத்திட
நல்இதயமின்றி  பாவம்
வென்ற மனிதனுக்கு
கதைகதையாய் படிக்குது விதி!

Wednesday 25 April 2012

நாம்.........................

என் உயிருக்குள்
உன் உயிரை வைத்து!!!
என் நெற்றி திலகத்தில்
உன் நினைவை வைத்து!!!
என் கூத்தலில்
உன் வாசம் வைத்து!!!
என் நெஞ்சசை தொடும்
உன் தாலியல் என்
 இதயத்துடிப்பை வைத்து!!!
என்  வாழ்கைக்குள்
உன் வாழ்வை  வைத்து!!!!
என் கண்களில்
உன் நலத்தை  வைத்து!!!!
என் கோவத்தில்
உன் கருணையை வைத்து!!!
என் பொண்மையை
உன் பொறுமையில் வைத்து!!!
என் உள்ளதை உன்னிலும்
உன் உள்ளதை என்னிலும்
கொண்டு உண்டு வாழ்திட!!!
காலம் எமக்காய் கற்றுதந்திட
எந்த கதையும் வேண்டாம்!!!!
அன்போ!!! காலதிற்கு காவியமாய்
நாமோ வாழ்ந்திடுவோம் வா !!!!


Tuesday 24 April 2012

கலைமகள்

கலைகள் கண்ட கலைமகள்
பெற்ற கலையதனை
கலாச்சார தேல்விகள்
தொட்டு சொன்ன விழிமியங்கள்
பட்டுதெறித்த வைரங்களாய்
தீட்டியெடுத்தும் கரியாகியோநிற்க!!

 வந்த ஆடம்பரம் தேவை சொல்லி
 தேவைசொல்லி மனிதனுக்கு
 சொல்லி விட்டு போவதென்ன!!

 ஆணுக்கு பெண் சுமையான
 வாழ்விதென்று  பெண்ணவள்
தோல்கொடுத்து தோல்கொடுத்து
 தொலைத்த அன்பினை !!கட்டி
போட்டு கேட்க காரிகையும்
 இட்டிடமூடியா மூடிச்சும்
பொய்யென்று  ஆனதென்ன!!

வாழ்ந்திட முடியா ஆடவனும்
 கல்லாகி போனதாய் வேலிதனை
ஆங்காங்கோ கலட்டி தொங்கவிட்டு
உரிமையிலல்லா ஆணாய்
எடுத்தெடுத்து ஒட்டுபொட்டினைப்போல்
அடைமொழிஅகராதியைவடித்தெடுத்து
 சொல்வதென்ன பண்பாட்டின்மறுபக்கமாய்!!

கற்பில்லா ஆடவன் கண்டெடுத்து
 பெண்ணிற்கு  கொடுத்ததெல்லாம்
பயனற்ற கலாச்சார குப்பைகளின்
அடிமைத் தனமென்றால்!!
 வந்து வந்து போகும் ஆண்கள்
எந்தனையென்பதெல்லாம
இங்குவாழத்தெரியா
 பைத்தியமே உனக்கெதற்கு!!

ஒன்று மட்டும்இல்லையென்றால் நானும்
மௌனித்து வந்திருப்போன்
கற்புக்குள் பெண்ணை வைத்து
நல்ல கருவிற்குள் மழலை
வைத்து உலகிற்கு தாயவளை
இயற்கை வைக்கா விட்டிருந்தால்
கலையோடு பெண்ணை வைத்து
பெணிற்கு எல்லை வைத்து
உலகிற்கு தந்த இறை அப்பே யார்?ஃஃஃஃஃஃஃஃஃ

Friday 20 April 2012

உயிர்க்காதல்

உடல் மொழி கண்டு
உணர்வு மொழி பேசுது 
கொண்ட  காதல்!!

வழிவழிபாதைகளில்
காத்து காத்து நிற்குமா 
உயிர்க்காதலை 
வென்ற உணர்வின்
 மொழியாய் சொன்னதென்ன
 கண்டதென்ன சொல்வதென்ன !!

உயிர்க் காதலாகி கருவாகி
அன்னை வயிற்று இருளுக்குள்
உயிராகி  அழும் கரு மொழி 
புரியாக்காதல்
பெற்றோர்ராகி இட்டு கட்டும்
சண்டையினை புரிந்திடா
உணர்வின் காதலாய்  உயிர் கொடுத்து
உயிர்காத்து உயிரழித்திடும்
 உயிர்க்காதலாய் எதைத்தேடி
 எதையெடுத்து எதைசொல்லுது
வாழ்வதற்கு!!

உன்னை என்னை புரியா
 உயிர்க்காதல் இன்னென்றை
புரிந்து உயிரொன சேரத்துடித்து
உயிர்க்காதலாய் கற்று தந்த
 உடல்மொழி த் தேடலின்
உடல்கள் மட்டும் புரிந்த வாழ்வில்
விட்டு போவதென்ன காதல்!!

உனக்கும் எனக்கும் இடையில்
இன்னொருவர் எடுத்துச் சொல்ல
நம் காதல் சொல்லும் என்றால்
காதல் வெறும் காகிதகிறுக்கள் தானோ!!

உயிர்க்காதல் மொழியில்லா
கல்லறையிலும் சேர்ந்தே வாழும்
என்றால் !மொழியில்லா உயிர்
உடல் மொழி தேடாதே  அப்போ
உடல்மொழியோ உயிர்க்காதல்!!!

Thursday 19 April 2012

முல்லை

கொடியிடை தளரிர் நடை
இடையரும் நடைதளர்
 வனதில்!!
வெயிலிடை தடை இடை
தளர்நடை வழியில்!!
நிழல் படர் குடையிடை
 மரத்தின் நிழல்படா
 சுற்றிடைத் தொடரில்
 மரம்தளர் வளையல்
கதிரிடை ஒளிபடர்கொடியின்  நடுவழி
                                      நதியிடை  தடையிடை  
 இடையில்!!!!
மழையிடை குளிர்நடை
தளிர்கொடி உதிர்வில்
கொடுபிடி   இடை நடு காற்றுடன்
கரைத்திடாவனத்திடை  வண்ணக்
கொடிமலர் படரிடை
 கவிடை தொடரில் !!
 தென்றலிடை தவமாய்    மலரிதழ்  உணர்வில்!
கண்ணிடை இருளுக்குள்  
கவிநடை பேசி
வீசுகின்றது வாசமாய்...........

Tuesday 10 April 2012

உண்மை

ஒற்றை ஒற்றை
சொற்களைக் கோர்த்தெடுத்து
சொல்ல சொல்ல
கேட்டதொல்லாம்!!!
பற்றிழந்தவன்
பக்குவமாய் மற்றவனை
பைதியமாக்கி புத்திசாலியாய்
 தான்  வாழ  கண்ட வழிகளை போல
ஆனதென்ன வாழ்விலே!
!
ஏமாற்றம் கண்டு கண்டு
தன்னிடத்தே தானிழந்த வாழ்விற்குள்ளும்
ஏமாற்றி கண்டதென்ன இன்பம்!!

இன்றும்  என்றும்
 கடக்கும் மாற்றம்
நாளை கடக்கும் உயிருக்குள்
ஒழித்து வைத்து ஏமாற்றுவதற்கு
எதை மறைத்து  எதை புதைத்துக் கொண்டு
போகும் உடம்பு!!!

சுட்டு விடும் நெருப்பென்று
விட்டு விலகி எட்டவோ நின்றாளும்
சொந்தம் என்ற பந்தம் சுட்டிடும்
 நெருப்போடு  சொந்தமாய் போனால்
 உரிமை என்ற  உண்மை
உண்மையாய் உண்மை சொல்ல வந்திடும்
நாளை நெருப்போடு உறவு எரியும் போது!!!!


மின்னல்

எங்கோ எப்போ எவ்விடதில்
வந்ததிந்த சந்தோஷம்
எங்கோ எப்போ எவ்விடத்தில்
தொலைந்தது இந்த சந்தோஷம்
எங்கோ எப்போ யாரிடத்தில்
கிடைத்தது இந்த சந்தோஷம்
எங்கோ எப்போ யார்கெடுத்து
தொலைந்தது
 இந்த சந்தோஷம்
எங்கோ எப்போ எவர் கொடுத்து
பெற்றதிந்த சந்தோஷம்
எங்கோ எப்போ எவர் பறித்து
போனதிந்த சந்தோஷம்
எங்கோ எப்போ எதற்காய்
வந்ததிந்தசந்தோஷம்
எங்கோ எப்போ எப்படி தொலைந்தது
இந்த சந்தோஷம்
எங்கோ எப்போ எதன்னுடன்
வந்து சேரும் இந்த சந்தேஷம்
எங்கோ எப்போ எது வந்து
பிடித்தால் போகும் .இந்த சந்தோஷம் ......................................