Friday 31 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 பூக்களை நீட்டினேன் 

முற்கள்கிடைத்தது

 முற்களை நீட்டினேன்  

முற்களாய்  சொற்கள்  கிடைத்தது

சொற்களை நீட்டினேன்  

காயங்கள் கிடைத்தது

காயங்களை நீட்டினேன் 

வலிகள் கிடைத்தது

வலிகளை  கொண்டு கவிதையானேன்

அவமானம் கிடைத்தது 

அவமானத்தால் தனியே ஆனேன்

திமிரென பட்டம் கிடைத்தது!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 நாம் எதிர்பார்க்கும்

 உறவு எப்போதும் 

எம்மை அலட்சியமாய்

தூக்கியெறிந்து சொல்லும் 

நாம் எதிர்பார்த்திடா 

உறவே  

நாம் காயபட்டநேரம்

வலியுணர்ந்து நமக்காய்   துடிக்கும்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  ஓவ்வொரு முறையும் 

உனக்கு விடை

கொடுத்திடும் போது 

ஒன்றை கற்றுக்கொள்கின்றேன்

ஆனாலும் 

மனமென்னும் மாயகண்ணாடி

உன்னை நம்பியே ஏமாந்துவிடுகின்றது 

இம்முறை  உன்னில்

என்னை புதைக்கின்றேன்  

நான் பூப்பதும் 

என்மீது பூக்கள் விழுவதும்

நீ  எழுதும் கதையே 

 நானெழுதித்தோற்றதால்

உன்னிடம் விட்டுவிட்டேன்

நீ கைபிடிக்க 

நான்விழியிழந்தே  உன்னேடு

நடந்திட போகின்றேன்  

இருளுக்குள்

தொடகட்டும்   என்போராட்டம் !!!!



போரா

Thursday 30 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஆணிடம் சந்தோஷத்தேடல்

பெண்ணிடம் நின்மதிதேடல் 

பூமியழுகின்றது அழிவினால்

மாற்றமே மாறதென காத்திருக்கின்றான்

இறைவன்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வலிகளை ரசிப்பவருமுண்டு 

வலிகளால் அழுவருமுண்டு  என்

வலிகளே என்னை சிலையாய் மற்றிட

பலர் புன்னகைகளை பார்த்து  

புன்னகைக்கின்றேன் 

என்னை விட்டு பிரிவுகள்பிரித்தாலும் 

மெளனிக்கின்றேன்   தனியாய்

என்னால் பிறர் காயபட்டால் 

 மட்டும் அழுகின்றேன் என்

தவறை எண்ணி என்னை அழவைத்தவரை

பார்த்தால் மட்டும் சிந்திக்கின்றேன்என்னை

பழிவாக்கிமகிழ்ந்திட என்ன  கேவமென

பிறவிகள் வேண்டாம் எனிபிறந்துடவும் வேண்டாம்

யார்  சந்தோஷத்தையும் எடுத்துசெல்லா இறப்பே

வேண்டும்!!!இறையே!


குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை நேசிக்கா

இதயத்தையும் நேசிக்கின்றேன்

நேசமட்டுமே அழகான உலகமென்பதால்

இந்த உலகத்தின்  அழகே எந்தன் நேசம்

அந்த நேசத்தின் அழகே எந்தன் சுவாசம்

எந்தன்சுவாசத்தின் அழகே பூவின் அழகு

Wednesday 29 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 வருடங்கள் தொலைந்தது

வயதும் தொலைந்தது 

கனவுகளும் தொலைந்தது

ஆசைகளே

கூடாதென்று இருந்தும்

 வாழ்க்கையில் வலிகள் மட்டுமே

என்னை இறுக்கட்டிக்கொண்டது  

ஓவ்வொரு தோல்வியும்  ஓவ்வொருபுத்தகமென்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைந்தவையை தேடியழவுமில்லை

இழந்தவை எனக்குகிடைக்கவுமில்லை

இருந்தும் கற்பனை தோட்டம் பூத்தது

நியமில்லா கனவுகளில் சிலநேர சந்தோஷமாய்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 என்னிடம் இழந்திட இல்லையென்ற

பின்னே   தொலைவானது சந்தோஷம்

மரணமே. சந்தோஷமான  பின்னே

வாழ்க்கை  தேடலற்ற  சந்தோஷமானது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 நியமில்லா நிழல்மீது நம்பிக்கை

கொண்டு  நியத்தை விட்டு விடுகின்றோம்

நியமென நம்பி ஆதலால்  தோற்று

இழக்கின்றோம்நம் நியத்தை!!!


Tuesday 28 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்


நம்பிக்கையே தடுமாறிவிழுந்திட.

  எல்லாமே பொய்களாகி போனதே உலகில்

எதை நம்புவதென தெரியாமல்  தடுமாறி

இழந்தே அழுகின்றது மனிதம்


Sunday 26 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 மாமன் இல்லா மரிக்கொழுந்து

தானாய் வாடுது லாசமற்று  உறக்கமிழந்த

மரிக்கொழுந்து விழிப்பில் அழுகின்றது

தனிமைகொண்டு  

இறங்கிடவும உறங்கிடவும்

மாமன் இல்லயே மரிக்கொழுந்தேயுனக்கு

வீனாய்ஏக்கம் தானாய் கொள்ளலாமா

குட்டிக்குட்டிச் சாரல்

 நாம் பொருமை கொள்ளவும்

நம்மை பொருமைபடுத்தவும் 

நாமக்க சிந்திக்கவும்

நம்கைபிடித்து நம் கண்ணீர்துடைக்கவும்

ஒரு  உறவு  உயிராய் இருந்தால்

 உலகில் இழப்பின்வலியை கூட 

தாங்கியெழுந்திட  முடியும்

நம்மால்!!!

ஓற்றையனாதைக்கும்  ஒரு உறவு நம்பிக்கையெளியாகும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 மனிதன் இயற்கையேடு யுத்தம்

செய்கையில்  பூமி மரணத்தேடு

யுத்தம செய்கின்றது 

Saturday 25 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உணர்வுகளிடம்  நாம் தேற்றிடிடும் போது

நாம் யாரேவாக தெரிகின்றோம் நம்மிடம்

உணர்வு தோற்றிடும் போது  நாம் நாமாக

தெரிகின்றோம்

குட்டிக்குட்டிச் சாரல்

நற்சிந்தனை நல்லுள்ளதை

என்றும்ஏற்றுக்கொள்ள உலகமே

இது இதற்கு உயிரை கொடுத்து உடலை

கொடுத்த  இறைவனே  சாட்சியின் காட்சி!!!!

Friday 24 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தடுமாறும்  இடத்தில்இதயத்தின் 

கைபிடியானேன்

தடுக்கி விழுந்த இடத்தில்  பிடித்தெழுந்திட 

கல்லானேன் 

 புரியா  நட்பு பிரியும் இடத்தில் புரிந்திட்ட 

நட்பானேன் 

 இழந்தவையை   இதயம்    அடையும்வரை

மனதின் உறுதியானேன் 

 இதயம்தன்னைதேற்றி தானேயெழும்வரை

  நல்இதயத்தின் நல்லவையே நானானேன் 

 எல்லாம் கைசேர கைதட்டி வாழ்த்திட்டு

தூரத்தின் தூரமானேன்என்னை  

 நானே ஏமாற்றி!!

என்னை  தொலைத்து என்னை புதைத்தேன்

எல்லாம்தெரிந்தும்!!!

தப்பாய் தவறாய்என் தேற்றங்களை

மாற்றியவர் விம்பங்களாய் மாற  

மெளனமாய் வேடிக்கை பார்த்தேன் 

புரியாமல் தடுமாறுவது மனிதமனம் 

தானே இறையே !!!

நம்தேவையும் தேடலும்

நம் சுயநலம்என்பதால் !!பார்வையும் எண்ணமும்

மனதின் கற்பனைதானே புன்னகைகள்

மெளனிக்க புதிராய் மாறியது  என் திருவுரும்!!!

நல்வையும் நல்லெண்ணமும் மாறாமல்

என்றும் நானே தானே தனியாய்!!



குட்டிக்குட்டிச் சாரல்

 தோற்றபின எழுந்த நிமிடம்

தந்த கனவினையும் தோற்றேயான

கற்பனைகள் கற்று தந்த ஒரு புத்தகம்

அடுத்த நிமிடத்தை பொய்யாக்கியதால்

இந்த நிமிடம்   எனக்காய் பூத்தது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 மறக்க நினைத்தே தேற்ற

மறதியிடம் கொஞ்சிக்கேட்கின்றேன்

என்னை மறந்தே உறங்கிட ஒரு நாளை

குட்டிக்குட்டிச் சாரல்

 தன்னில் தன்னை தொலைத்து

தன்னைதேடும் நம்மில் தன்னையெடுத்து

மற்றவரையும்  சிந்தித்து   வாழும்  ஓரு உறவு

உலத்தின்உயர்வு!!!

Thursday 23 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முற்களின் நடுவே விழுந்தபூவினேடு

கற்களின் வலிசொல்லிய காயத்தினை

சொற்கள் கொண்டு மருந்தானாய்

என் இதயதுடிப்பில்  சேரா  ஓற்றை வார்த்தை

உன்னையையும் என்னையும் பிரித்தது

தனித்தனியாய்   

அந்த  இடையில் இடைவிட ஏமாற்றம் 

மனிதனை  தூரமாக்க

தூரமாய் விழுந்த தூரத்தின் நடுவே 

கருகிப்போன மலர்தேடிபார்க்கின்றது

உயிருள்ள ஓரு சொல்லை  

இல்லையென்றது தமிழ் பூவை

விட்டு உன்னிடம் வந்ததே

கடனாய்  போன கடன்காரியாய்  தமிழிடம்

தேற்றுகிடக்கின்றது பூ!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 கடக்கும் வரை தெரியா என்

கடந்த காலசுமையை

 கடந்த பின்னே கேட்கின்றேன்  

என்னை கடக்கும்விழிகளின்

அனுதாபார்வையினுடே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓருவர் எனக்கு கற்று தந்த

பாடத்திலே என் வாழ்க்கை தவறை

திருத்திட நின்று பார்க்கின்றேன்

என் கண்ணாடியை

குட்டிக்குட்டிச் சாரல்

 எட்டிபிடித்த கனவினை 

கட்டியணைத்தே நடந்திட

முடியா கற்பனை தேடலில் தொலைப்பதே

நியமென சொல்லியழுகின்றது 

வாழ்க்கைத்தேவை!!!!


Tuesday 21 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 பேச்சின்வீச்சு வார்தைகளில்

விளையாட  விளையாடும் விளையாட்டு

பொருளாய்  தேன்றுதே பெண்மை

காக்கும் கரத்திடமே   கனிபை பெறதவிக்கு

பெண்மை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தளிர்க்கொடி

 தளரும்  தளிர்நடை  கண்டு 

ஆதவன்  எழுகின்றதே  அடிவானில் 

மேகப் போர்வை விலக்கி!!

தளிர்கொடி 

 தளரும் தளிர் நடைகண்டு

தென்றலில் மோதி மேகம் உடைந்து

அழுது தவித்து வடிக்கின்றதே

 நீரை!!

தளிர்க்கொடி 

தளரும் தளிர்நடை கண்டு

வானில் மெல்ல    வளைகின்றதே 

வானவில்

 புன்னைகை்குடையாய்   !!

தளிர்கொடி 

தளரும் தளிர் நடைகண்டு

மாமன் இதயத்துடிபிற்குள் ஓர்அலை 

மாமன் மனசையுடைக்கின்றதோ

உணர்வாய்  !!

தளரும் கொடியோடு  

தளர்வாய் தலை கவிழும் பூவிற்குள் 

மெல்ல எழுகின்ற வாசம் போல்

மெல்ல உயிர் பெறுகின்றது தளிர்கொடி!!!



Monday 20 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இழந்தவை புரியா 
இலக்கணப்பிழை இவள் 
தொட்டதை தடுக்கும் கைகள்
தடாகத்தை விட 
தண்ணீர் த்தும் விழிகள்
ஒரமாய் தனியே ஒரு 
அனாதை  போராட்டம்
கூடவே பல உறவு 
தூரமாய் தோன்றும்அவளுக்கும் 
எட்டி பிடிக்க ஆயிரமிருக்க
தடைகளாகும் அவள் கோலங்கள் 
தன்னை தேற்றி தன் காலுன்றி எழுந்திட
காலம் கேட்கும் நாட்களை கடனாய் 
காப்பதாய் பாதுகாப்பதாய் 
தடைகள்போடும்  உறவுகள்
திருபும் திசையெங்கும்  மனிதம்
இவள் கதை பேசும் பலதாய்
மங்கள அழகில்  வலையவந்தவளை
அமங்களத்தின் அடையாளமென்று  பூட்டி
வைத்திட ஆயிரம் கதைகள் 
இரக்கமற்ற மனதனை  
படைத்த இறைவனையே  சபிக்க
தோன்றும் அவளுக்கும்இருந்தும் 
தன்னக்காய்ஓடிடயெழுந்தால்
எந்தனையே மனிதன் இரக்கமென்று
அவளை தப்பாய்  கைபிடித்திட 
துடிப்பார்
அதனையும் தாண்டியேடும 
இவளினம்இரக்கத்தை காட்டும் 
ஓரு மனிதன் கிடைப்பது  அதிசயம்
அந்த அதிய இதயம்  கிடைத்தாலும் அதையும்
அசிங்கமாக்கும்  இவ்வுலகின் முகத்தை உடைத்தெடுக்கும் ஆண்மகன் 
உறவின் வரம்
அந்த வரத்தைபெற்றவள் 
வாழ்க்கை  உயர்ந்த புத்தகம் 

குட்டிக்குட்டிச் சாரல்

உன்னால் உனக்காய் செய்ய

முடியா வாழ்வை கற்பனையாக்கினாய்

என்னை   புரியாமலே என் உணர்வை

நீ   சிந்தியாமல் !உனக்காய் சிந்ததில்

உடைத்தெறியபட்டது  என் விம்பமே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 கனவுகள் தேற்றதால் 

நினைவுகள் ஆசைகளை  வேடிக்கை

பார்த்திட  கற்பனைகள் தன்னை

இழந்தது எல்லாம் மாயையென்றது

Sunday 19 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 திரும்பி பார்க்க மறுக்கும் நம் வாழ்வின்

ஆசைகளை கொஞ்சம்  நிறுத்தி

நின்று திரும்பிபார்த்தால் நாம் இழந்தவை

பெரிதாய் தெரியும் 


Saturday 18 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உயிர்வரை உயிர்யெழுதும்

உயிர்ஓசை  ஒரு நெடி சந்தோகம்

உயிரையே எடுக்கும் உயிர் நேசம்

குட்டிக்குட்டிச் சாரல்

  ஒற்றைசொல் உயிர்வரை 

துடிப்பு  உறவான பின்னே தேடியே

இறக்கும் உயிர் கற்பனை பூந்தோட்டம்

கல்லறைகேயழகு   விற்பனைக்கு  கோடிக்கதை

படித்தும் புரியாநிலை! !!பாதியின் பாதியாய்

பாரெங்கும்  உறவு!!!!

Thursday 16 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்பிக்கையால் இறைவனிடம்

அழுகை. நம்பமறுத்தால் நம்மோடு

நாமெழுதும் பிரிவு

குட்டிக்குட்டிச் சாரல்

 விடைதேடும் விடையாக நீ

கேள்வியேடு நான்  மாறுபட்டே

மாற்றியேடி மாறிவிட்டோம்  நாம்

யாரோவாய்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 இதயத்தின்  தாலட்டில்
 ஓரு தொட்டில்காத்திருக்கு 
தூக்கத்தை தொலைத்தால்
கனவுகளின்  தாலாட்டில்
  ஓரு  தொட்டில்   பூத்திருக்கு
நியமென கனவு சொன்னதால் 
விழியோரம்   தாலாட்டு
விழித்திருக்கு. தொட்டில்
விதியோரம்  தூக்கத்தை  விதைத்தால்!!!

Tuesday 14 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உடல் விற்று உடல் வாங்கி

உடல் மாற்றும் சாக்கடைக்குள் 

உடல்களுக்கு! என்ன பெருமை

Sunday 12 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மண்வாசணை மழைத்துளியே

மண்ணேடு  உறைந்த 

மண்ணின் ஈரமே

என்னேடு என்னாலும் 

நின்றாடும் குழந்தைத்தமிழே 

பின்னாடும் இளமையை 

முன்னாடகவியாடும் செந்தமிழே 

சொல்லாடும்  உன்இனிமையில் 

கொஞ்சம் வில்லாட வந்த அம்பு 

பூவேடு  வந்த வாசணையில்

கண்ணால் சொல்லா நேசத்தின்

கவியாய்  நின்றாடா

காதலில் மலர்ந்தாடும் இதயத்தை 

கற்றிட தவமிருக்கும்  தமிழே 

கொஞ்சம்  கொஞ்சி பேசினால்

 என்னேடு அழகாய் தோன்றியாடும் 

 செந்தமிழின் தமிழே

கருமையின்கார்காலத்தின்ஒளியாய்

ஓளிரும் ஓளியே அடிவானத்தின் 

வண்ணத்தில்  ஓளிரும்

எந்தன் எண்ணத்தின் வண்ணத்தின்

அழகின் அழகே!!!எந்தன் காதல் பூவின்

 உயிர்ஒவியம்நீயே!!








Friday 10 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 பிரிந்தோடும் நீரோடை  தடைதகர்த்து

வழிதேடியிணைத்தோடும்  ஒன்றாய்  ஆனால்

நேசம்கொண்ட மனிதனேடு 

பிரிவானால் தடைபோட்டு

தடைதாண்டா  வழியடைத்து  தனியாகி 

தான்னில் நேசத்தின்பெருமை கொள்கின்றான்

Thursday 9 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உயிரேடு கலந்து உயிர்வரை போராடி

உயிர் வாழ  வாழ்வின் உணர்வில் 

 கலந்ததோடியதை  உயிர் பிரித்து

உணர்வி்ல் நிறுத்தி தன்னையெடுத்து

மற்றதையழிக்கு நேசம்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நிலவே நிலவின் நிழலே

நியமாய் தொலைந்ததும் நீயே

நிழலாய்  தொலைத்ததும்நீயே 

கனவாய் தூங்கியம்  நீயே

கனவிலும் நியமாய்கரைந்ததும் நீயே  

காலை மாலை தேடலானதும்நீயே 

விழிகள் ஏங்க  தொலைவாய்  போனதும் நீயே

மறைந்ததை மறைந்திட ஊமையானது நீயே

ஊமையின் மொழியிலும் உணர்வுகள் காட்டியதும்

நீயே உணவுற்க்குள்  சிறைபட்டு கதவுகள் 

உடைந்ததும் நீயே காற்றாய் மறைந்தது

கற்பனை கதைபடித்ததும் நீயே!!!வேடிக்கையாக்கி

வேதனை தந்ததும் நீயே அந்த வேதனையை 

ரசித்ததும் நீயே  ரசித்தவள் ரசனையின் கனவுகளை

கடசியில் கண்ணீரில் நனைத்ததும் நீயே



Monday 6 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 சோலையோரம்  காலைநேரம்

கானாபாடும் பறவை யோடும்

 ஏனோ கொஞ்சம் இதமாய் தோன்றும்

மனதினோரம்  ஏதோ நினைவு  

தோன்றி தோன்றி மறைய

இயல்பாய்  துடிக்கும் இதயம்

காணாமல் போன ஒன்றை தனக்கேதோடும்

உணர்வு  எதை எதை சொல்லி குழப்பும்

பிடிவாதம் கொஞ்சம்  தன்னை காட்டும்

ஆனாலும் தேற்றே  தவிக்கும்  இயல்பாய்

அனைத்தும் நமக்குள்!!!



Sunday 5 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பூத்த பூவிற்குள் நான் ஒரு

  பூவினின்சருகானேன்

  கண்கள் தேடிடும்உறவிற்குள் நான் ஒரு

இறந்து போன  உயிரானேன்

பார்க்கும் பார்வைகள்  நான்  ஓரு

ஒவியத்தின் இருளானேன் 

எழந்தேடும் கற்பனைக்குள் நான் ஒரு

பொருளற்ற சொல்லானேன் 

விழுந்தேடும் கனவிற்குள்  நான்  ஒரு

பகல் நேரத்தூக்கமானேன்

விரைந்தோடும்  காலத்திற்க்குள் நான் ஒரு

முகவரியற்ற  அஞ்சலானேன்

நின்று பேசும் மனிதனுக்குநான் ஒரு

பொழுதை போக்கு  தேடலானேன்

நேசமென்ற இதயத்திற்கு நான் ஒரு

குறும் செய்தி தகவலானேன் 

பாசமென்ற உள்ளத்திடம்  நான் ஒரு

ஏமாறும்  கைதியானேன்

இருண்ட வாழ்க்கைக்கு யென்றும் நான் ஒரு

ஓளிகொடுக்கும் ஓளியாவேன்



Saturday 4 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 தவறுகளை ஏற்றுக்கொள்ளா

உறவுகளை நேசித்தால் ஏமாற்றங்களும்

வலிகளும் உறவாகும்

Thursday 2 December 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மாமன் தோப்பு  ஊஞ்சல் 

மாடத்து துளசி  

வண்ணமயில் நடைபயிலும்  

மல்லிகைகொடியாடும்பந்தல்  

சண்டையிட்டு கேள்வி கேட்க்க கிளி

கொஞ்சி பேசும் மைனா  

வயலேடு பேசும் தென்றல் 

அருவிபோல் ஓடும் நீர் 

அதனேடு  துள்ளி  குதிக்கும்

மீன்கள்  அமதியை உடைக்கும் 

வேலையாட்கள் 

அதனையும் வேடிக்கை பார்க்கும்

சின்னஞ்சிறார்கள் 

அடிக்கடியழும் கணக்கபிள்ளை

கம்பீரம்தேற்கும்மாமன் நடை

கண்களும் ஏங்கும் ஆண்மை 

கரடுமுரடு பேச்சு ஆனாலும்

கவியாய்  மாறும் ஓருத்தியேடு மட்டும்

அழகாய் தேற்கும்  பார்வை  அயிரம் பேர்

நடுவிலும் தெரியும்  உணர்வு 

சொல்லியும்புரியாக்காதல்

சொல்லாதே  பிறந்தத பிறப்பு

கேட்கமல்  துடைக்கும் கைகள்

கொஞ்சம் துவண்டால் துடிக்கும் இதயம்

பார்க்காமல்  தேடாமல் பேசாமல் 

இருக்கா மனசு 

அவள்உயிரை மட்டும்சுமக்கும் உடல்

யார் கடந்தும்  மாறா காதல் 

மாமன் தோப்புக்கு அழகு 

அவள் வாயாடும் வார்த்தைக்குள்

மாமன் வாழும் புன்னகையின் அழகே!!

மானின் அவள்!!!





குட்டிக்குட்டிச் சாரல்

 எவ்வளவு ஆழமாய்  

நாம் புரிந்து கொண்டாலும் 

நம்மைபுரியா இதயங்களோடு  

 வாழும்போதே. நம் 

புரிதலும்  தடம்மாறும் !!!

நிறைந்த உணர்வாய்

நம் படைப்பு  இருந்தாலும்

குறைந்த புரிதலாய் 

 நம் வாழ்க்கை  மாறும் போதே

நிறைந்த கோவமாய் நாம்

தெரிகின்றோம் !!!இங்கே

நம்மை நாம் 

வெற்றிபெற்றால் 

 போற்றபடுகின்றோம் !


குட்டிக்குட்டிச் சாரல்

நமேக்கே தெரியா நம்மை
சிலநேரம் நமக்கு சொல்லும்
விம்பங்களை கண்டு கோவம் கொள்வதே
நம்விம்பத்தின்  உண்மை!! தோல்வியாய்
நினைந்து சண்டையிடுவதற்கு நம்மை
சிந்தித்தால் வெற்றியாய். ஒரு உறவு பூக்கும்!!