Friday 28 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

நல்ல ஆண்மை
உலகில் அரிதென்ற காவியம்
ஐந்து பெண்மையை
தவமிருக்க செய்தது
ஓர் ஆணிற்காய்!!
நல்லபெண்மை பல உண்டென்ற
காவியம்!!  ஒர் ஆணிற்கு
 பல பெண்ணையை தவமாய் கொடுத்தது
நியதியின் நியதிகளின்
நியதிதான் என்ன?

Wednesday 26 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

 பெண்ணவள் எழுத்தாணியை
பிடிதெழுதியதால் அதுகூட
விபச்சாரியானது  !!
அறிவுள்ளவுலகில் அவள்
சொல்வதெல்லாம் அறியாமையல்
கற்றவையோ என பட்டம்கொடுத்து
சொல்லொடுது  எறிகின்றனர்
அவள்மேல்!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் ஏமாற்றங்களை
சேகரித்து கொண்டே


இருந்தேன் !உன் வழி மாற
இப்போது !!நீ தந்த ஏமாற்றங்களை
திரும்பி பார்கின்றேன்
 நான் வழி மாறாது வாழ!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ நான்
ஒன்றென்றபோது
மனசு ஏங்கியது தனிமையால்!!
நீ நான்
 தனியென்றதும்  இதயம்
துடித்தது வேதனையால்
நீ  நானின்றி
மற்றவரைநேசிக்க
உணர்வுகள்  துடித்ததுவலியால் !!
இன்று எல்லாவலிகளும்
என்னைக்கொன்றபின்னர்
வாழுகின்றேன் வலியின்றி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனக்காக வாழும் மனிதன்



தன்னையே புரியபோது
மற்றவரை புரிந்தாய் சொல்லி
தன்னையே ஏமாற்றுவது
புரிந்தும்!!
என்னைப் புரியவில்லையே
என நீ அழுது உன் கண்ணீரை
வீணாக்கவோ!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஐந்துவயதுதனில் தாய்க்கரம்
பற்றிய பிஞ்சுமனசொன்று


எங்கே தொலைத்து மீண்டும்
 கரம்பிடித்தால் தொலைத்த
தாயென்று !!இன்று
உயிர்பெற்றாள்!!!

Wednesday 19 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

பரிதாவமாச்சு பாவமாய்போச்சு
ஊருக்குள் திண்டாடமாச்சு
வாழ்கை!!
எதனாலையா  வந்தது இங்கே
குழப்பம்
காதல் போல் இதுக்கும்
பைத்தியமான மனசு !உள்ளுக்கள்
அறியாமை அறிவால்
அறிவற்று அடுக்கு பதவியைக்காக
பல கதைகள்!
ஐயையோ!! வேண்டாமே என்றவள்
அறிவேடுபோன்றாள் தனியே!!1

Saturday 15 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு வெற்றியின் படிகளில்
பல திறமைசாலிகள்
படுத்திருப்பதை  ஒரு
சாதனையாளன்  உணராத போதே
ஒரு அனுபவம் தேற்கின்றது

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்   கண்ணில் நின்று
விழுந்த கண்ணீர் துளிகள்
எனக்குள்  விழுந்த நிமிடம்
ஒர் காதல் முத்தாய்மின்னக்கண்டேன்
உன் சோகம் மற்றவரை
கலங்கசெய்த நிமிடம் எனக்குள்
ஓர் காதல் கவிதையானது!!

Friday 14 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் இதயறைகளில்
மோதியோடுவது உதிரங்கள்
மட்டுமல்ல
 உன் நினைவுகளும்
தானடா !!
எப்படி நான் இப்படி
என எண்ணி எண்ணி
பைத்தியமானதற்கு
நோயும் நீயே!!மருந்தும் நீயே


குட்டிக்குட்டிச் சாரல்......,

இனியது வாழ்வு
கனியது காலம்


சுவையது நேரம்
சுவைத்திட யுத்திகள்
தெரியாது முற்களை
பற்றிக்கொண்டு
வெட்டிவிடுகின்றாய்
பலவாறு !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதலெனும் அழகானவாழ்கை
கையில் வெண்ணையாய்


 உருகியோடுது உன்னில்
நின்று !
அதை பிடித்திட நேரமின்றி
ஓடுகின்றாய் அதனை முத்தி!!

Thursday 13 February 2014

குட்டிக்குட்டிச்சாரல்....





ஏணிப்படிகளில் நடந்திட
ஆசையில்லை
புகழைத்தேடி
ஓடிடவும் ஆசையில்லை
இதற்காக !!
உன்னைத் தேடவுமில்லை
நான் தேடியவுலகிற்குள்
இவைகள் இல்லாநந்தவனமே
தேப்பாய் நிற்க!
உன்னையன்றி யாருமில்ல
வனத்தில் என்னையன்றி
 தனிமையான என் இதயமும்
அது தேடிய வாழ்கையுமே
உனக்காய் காத்திருக்கின்றது!!


குட்டிக்குட்டிச்சாரல்.....





உன்தேய்பிறைகாலத்து
மதியாய் உன்
வளர்பிறை காலத்து
ஒளியாய் உனக்குள்ளே
நான் இருந்திடவே ஆசை
எனக்கன ஆசையாய்
உன் அன்பையே யாசிக்கின்றேன்

Wednesday 12 February 2014

குட்டிக்குட்டிச்சாரல்.....

தீப்பிளம்பின் தீச்சுவாலை
வரைந்த தீயெவியம்
சாபங்களை வரமாய்பெற்று
உயிர்பெற்றுபாவங்களில்
உருப்பெற்றுஅக்கினி
பார்வையில்ஒளிபெற்று
 உண்டானது தியாகதீபமாய்!!


குட்டிக்குட்டிச்சாரல்...



 இதயநிறைந்த வலிகள்
இயன்றும் முடியவில்லை
வெளிவர!
தனித்திட்டு வாடியே நின்றவள்
தன்சோகம்  மறந்து
 உன் சோகம் கண்டநிமிடம்துடித்தால்
உனக்காய் !1ஆதரவற்று நின்றவள்
 நேசிக்கா உன்னையும் நேசித்ததாள்
காதலால்!!

Saturday 8 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

வார்தையெடுத்து
வார்தை தொலைத்து
வாய்யாடிய வாயாடி
உன்பார்வையின்றி
உன் பாதையோரம்
ஓர் வார்தையுமின்றி
ஊமையானள்...... 

Friday 7 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லாம் நின்று
 எல்லாம் சென்னது
எல்லாமே நீயென்று
இன்று !
எல்லாம் பேசி
மௌனம்கொண்டு
உன்னைவென்று
எல்லாமே நானென்றது!

பிண்டம்

கடவுள் தயாரிப்பில்
மிகத்தேவையான இயந்திரபெண்
தேவைக்கேற்பதயார்படுத்தி
விற்பனைசெய்வது விசித்திரம்!!

 மனிததர்மங்களில்அடிமைபுத்தகத்தேடுகளில்
 வரையபடுகின்றகோழைச்சித்திரம்
அனுமதியின்றி எழுதபடும்
நீதிபக்கங்களின் முற்களற்ற
தராசின் சிறைக்கதவுகள் !!

உடைத்தெறிந்து எத்தனிப்பவள்
பெயரோ  சமூதாயசுவர்களில்
ஆவணப்படங்கள்!!

பார்வையற்றவர் பார்த்திட
துடிக்கும் பாதகத்திகள்  கழுக்கால்களில்
தொங்கவிடப்படும் அற்புதம்!!

நீதிகளை புரட்டியெடுத்து
இடிமுழங்கமாய் வீரவேங்காய்
எழுத்திட்டாளும் !!வீட்டுவாசலில்
பாவமன்னிப்புக்காய்
காத்திருக்க காகிதங்கள்
 செல்லாது மூடிவிடுகின்றது
அவளை மஞ்சல் போட்டு!!

Thursday 6 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உதிரிந்திட்ட மரத்தின்
கிளையில் நிழலின்றி
கூடுகட்டிய கிளியதனின்
முட்டாள் காத்திருப்பு
கனியின்றி காயின்றி
உணவின்றி உடல்மெலிந்து
இறந்தபின்  நால்வர் சருகெடு்த்து
பெருமைபேசி உடலெரித்த போது
புரிந்தது !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணத்தின் வாசலில்
சிக்யஉயிரதனை
மதியின்வாசல் மெல்ல
மீட்டிட்டதால் !!

விதியின்வாசல் செல்லச்சிரிப்போடு
கண்ணீர்த்துளியை மேகமாக்கி
உறங்கிகொண்டது நாளைய
அறுவடைக்காய்!!

இன்றுதப்பித்துக்கொண்ட
உடலில் அறுக்கொள்ள
முடியா ஓர் உயிரின் அரவணைப்பு
ஆனாதையின்றி சிரிக்கின்றது
பிரிக்கமுடியா உறவானதால்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,


என்னைச் சேர தவமிருக்கும்
என்னவன் உயிர்துளி
என்உயிரில் கலந்திட்டு
எனக்குள்துடித்திட
காத்திருக்கு !!மண்ணில் சேரா
மழைத்துளியாய்!!