Monday 31 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் விடியலில்
உன் கனவு
என் உணர்வுக்குள்
விடை தெரியா குழந்தையாய்
என்னை அரவணைக்க!!

அதிகாலைச் சூரியனின்
ஒளியாய்  மகிழ்ச்சி பரவியே
மலர்கின்றேன் உன் நினைவுகளால்!!

எந்தனையாண்டுகள் என் மதியில் இருந்ததுவோ!
உன்நினைவுகள்
இந்தனை இன்பத்தை தருகின்றது
       உன் விம்பம் !! இதனால் தானோ
இன்று முட்டாள் பெண்ணானேன் உன்னால் !!!

Friday 28 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓர்ஆண்மையின் திறமையென்பது
பெண்மையின் மானம் போன்றது
ஓர்பெண்மையின் திறமையென்பது
ஆண்மையின் கைகள் போன்றது
காக்கவும் முடியாது
தடுக்கவும் முடியாது நிற்குபோதே
இரு உறவும் தேற்கின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் கனவிற்குள்  நீயிருந்து
கற்பனையை  விதைக்கின்றாய்

என் உணர்வுக்கள் நீயிருந்து
உறக்கத்தை திருடுகின்றாய்

என் உயிருக்குள் நீயிருந்து
சுவாசத்தை எழுப்புகின்றாய்!!

Thursday 27 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிருள்ள காதல் கொண்டு
உயிரில்ல ஒன்றை நேசிக்கின்றாய்

உயிர்கொண்ட ஓவியமதை
உயிரில்லா காதலால் உரசுகின்றாய்

உயிர்கொண்ட உயிரானகாதல்
உயிர்பெறாது  நிற்கின்றது சிலையாய்!!



Wednesday 26 March 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெண்டக்காய் நறுக்கயிலே
என்விரலும் நறுக்கிடவே
இறுக்கமாய் நின்றமாமன்
இளகி மனம் பதறியென்னை
 தழுவக்கண்டேன்!!
வெறுப்பாய் பார்த்த கண்கள்
கருணை சித்தியணைக்கக்கண்டேன்
 ஓடிவந்தகால் பக்கதில் நிற்க்கண்டேன்
 இதழ்கள் இரண்டும் முத்தமிட
துடிக்கக் கண்டேன்!
வெட்டுப்பட்ட கயமது
வெட்கத்தில் நாணக்கண்டேன்
ஒரு நெடித்துடிப்பதனில்
கோடிக்கால காதல்கண்டேன்!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

காத்திருக்கும் நெடிகள்
கேலிபேச நீ போசாது
போனதேன்!!

மலர்த்த முகம்
தவித்திருக்க நீ  காணது
இருப்பதேன்!!
உள்ளமது உறவாட
துடித்திருக்க நீ என்னை
எண்ணாதிருபதேன்!!
இதயமது நிலைத்திருக்க
நினைவதனை நீ  நிழாக
மறைத்ததேன்!!
உயிருக்குள் நானிருக்க
கவியாக நீ இருக்க
காலமதையழித்ததேன்!!

Tuesday 25 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் நினைவுக்குள் என் வாசம்
வசந்ததைத் தொலைத்திட்டு!!
உன் சுவாசத்திற்குள் என் உயிர்த்துடிப்பு
உடலைத்தொலைத்திட்டு!!
உன் கருணைக்குள் என் கண்மணி
பார்வையை தொலைத்திட்டு!!
உன் இதயதிற்குள் என் குடில்
முகவரியை தொலைத்திட்டு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓட்டிக்கொண்டே வெட்டிம்கைகளை
சட்டென விட்டிடாதே
பற்றிக்கொண்டே பதறியும் நடக்காது
ஒட்டிக்கொண்டே வெட்டிடாது
தட்டிக்கொண்டே  நட
களைத்திடும் வரை!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இன்பதின் சுவையெடுத்து
துன்பத்தின் கண்ணீர்துடைத்து
தருமத்தின்  சுவையெடுத்து
அதர்மத்தின் வழியழித்து
காலத்தின் சுவையெடுத்து
 கணக்கிற்கு கொடுத்திடு
புதுச்சுவை!!!

Thursday 13 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னில் பாதியென்று
உரிமையை மறந்து விட்டு
என்னை தேடுகின்றாய்!!
என்னில் பாதியென்று
உன்னால் வந்த காயத்தை
மண்ணில் புதைக்க சொல்கின்றாய்!!
என்னால் காயமென்று  உன்னை
ஏமாற்றி என்னை வெறுகின்றாய்!
உன்னிலும் என்னிலும்
இல்லாதயென்றை மற்றவர்
சொல்ல மண்டையைஆட்டுகின்றாய் !
ஆனால் மனிதனாய்
மறிட மட்டும் மறந்து விடுகின்றாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நினைவுச்சிறைவைத்து
நியத்தை மறைத்து வைத்து
கொலுப்
பொம்மையாய்
என்னை வைத்து
பாசத்தை விலைபேசுகின்றாய்
என்னை மறந்து நீ!!
கைக்குள்  கருவான கற்பனையினை
கதைக்குள் தொலைத்திட்டு
கையை விரித்து நிக்கின்றாய்
கதையே தவரொன்று!!

Tuesday 11 March 2014

பருவகாலம்......

தை மாசி
உன்னைக் கண்டு!!
நான்
புதிதாய் துளிர்க்கக் கண்டேன்!!
பங்குனி சித்திரை
 உன்னைக் கண்டு!!
நான்
அருப்பியே சிரித்து நின்றேன்!!
வைகாசி ஆனி
 உன்னைக் கண்டு!!
நான்
மொட்டு விட்டு  காத்து நின்றேன்!!
ஆடி ஆவணி
 உன்னைக் கண்டு!!
நான்
இதழ்கள் மலரும்
மலராய் மலர்ந்து நின்றேன்!!
ஐப்பசி புரட்டாசி
உன்னைக் கண்டு!!
நான்
காய்யைப் போல  காய்ந்து நின்றேன்!
கார்த்திகை மார்காழி
உன்னைக் கண்டு!!
நான்
கனிந்த கனியாய்
 உத்தன் தன்கையில் விழுந்தேன்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை த்திருடாது
என் கற்னைகளை திருடிய
உன்னை கண்ட இரவுகள்
 என்னைத்திருடி உன்னிலின்றி
என்னைச் சிறையிட்டு
உணர்வைக்கொன்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கனவுகள் சிலகாலப் பொம்மையாய்
கண்ணெதிரோ
ஏமாற்றங்கள் சிலகாலப்
பாதையாய்
கண்முன்னே
கற்பனைகள்  சிலகால கைப்பிடியாய்
கண்ணுக்குள்ளே
விரக்த்திகள்   சிலகாலவழித்துணையாய்
கண்ணோடு
எதிர்பார்ப்புகள் சிலகால கைத்தடியாய்
கண்னெளியில்
சோகங்கள் சிலகால ஒவியமாய்
கண்திரைக்குள்!!மாறிமாறி சிறையிட்டது அவளை!!