Thursday 18 August 2011

விளையாட்டாய் ஒர் விதி

பஞ்சதிலும் பஞ்சம் மறக்க
பஞ்சனை தலையணையாய்
ஒர் காதல்  கற்பனை வார்த்தைக்கு
கைகொடுத்து பசியகற்றி
கனவாய் உயிர் பெற்று
உயிரோடு விளையாட !!
உணர்வு மயங்கி   மறத்து
உயிரோடு உயிர் சேர்ந்து
உயிருக்குள் உயிர்பெற்று
உறவாகி கருவாகி கனியாகி
நிறை நிலாவாகி ஒளிபெற!!
குறைகண்டு பணம் தேடி
பதவிபெற்று அசிங்கமாகி
விரட்டிய விதியிலோ  அவமானச்சின்னம்
அடிவயிறு  வலியாகி முத்தாகி
பூமியில்   பூத்தபோது!!
பசிதுறந்த   கேள்வியாய்
 தலைவிதி தான் நானாகி
பாதையோர அழுக்காய்
உயிர் துறந்த பெண்மைமுன்
மானம் தொலைத்த காமமாய்
பாடம் சொன்னது இது விதியென்று...
யார் இதை நம்புவார்?

சொந்தம்

பலசொந்தம் கூடி நிக்க
சிலசொந்தம் பகைத்து நிக்க
உறவாகி நின்றசொந்தம்
விலகிப்போக !!

விடைதேடிகளைத்த சொந்தம்
ஊரைக் கூட்டி கதைபேச
உயிரில் கலந்த சொந்தம்
எட்ட நின்று கண்ணீர்விட!!

சொத்துகள் சொந்தக்காரராய்
ஆயுள்காலப் பாதபூசைசெய்ய
அழகான தவறுகள் அதற்குள்
மறைந்து ஆறாம் அறிவை காக்க!!

உனக்கும் எனக்குமான மண்ணில்
கற்களும் முற்களும் என்னைத்தாக்க
பூக்களும் புல்வெளியும் உன்னைக்காக்க!!

புரிந்தது எனக்கும் என்னிடம்
இல்லத பணமும் பதவியும்
உன்னிடம் உண்டானதால்
என்னைக்காக்கா அனைத்தும்
உன்னைக்காப்பது!!                 

வாசல்ப்படி

சுறற்றியவேலிக்குள்
சுவராய்பெற்றோர்
கட்டி நின்று காத்தபெண்கள்
 விடுதலை காற்று வீசிய திசையில்
வேண்டிய திசைகடந்து பறந்தால்!!

திசைகள் மாறியவாழ்வில்
சிதைகின்ற குடும்பங்கள்
நித்தமும் உழைத்த ஆண்மகனை
அவமான சின்னமாக்கியகதை
வீட்டிற்கு வீடு வாசல்படியானது!!

வாசல் தாண்டி இல்லாத குறைகூறி
குறையில்லா மகான்தேடி ஓடும் பெண்கள்
விட்ட பிள்ளையால்..அப்பா முருகனாய்
அம்மா வள்ளியாய் நித்தம் நித்தம்
 தேடுவது அப்பாவும் அம்மாவும்!!!

உழைத்து  உழைத்து சேர்த்த பணத்தின்
உயர்ந்த ஆடம்பரம் தேடிய  சந்தோஷம்
 வீடுக்கு வீடுவாசல்ப் படியானது இன்று!!!


Sunday 14 August 2011

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அன்னனையர் தினம்


முத்தாடாது எடுத்தமுத்தவள்
தந்தியாடிய தரைநிலவாய்
என் உயிருக்குள் நின்றாடிட வந்தவள்

திட்டியாடிய பொழுதுகள்
வந்து வந்து வதைத்தாடிடும்

தொட்லிட்ட விதியவள்!
துயரத்துளிகளாகி  மெல்லென ஆட்டும்
கட்டி வைத்த தைரியங்களை
கட்டவிழத்து உடைப்பவள்!

தொட்டணைத்த கைகள்
பிடியின்றி தவிக்க
தேற்றிடா மனதுக்குள்
சோர்வாய் வந்து சுகமாய் உறங்குபவள்!
சொல்லொடுத்து பாமாலை
பாடிய இதயமும் துடிப்பிழந்து
தவிக்கின்றது தாமையால்..............................

கனவானகற்சிலை......

என் நிழலுக்கு
நிழலொன தொடர்ந்த
நிழலான உணர்வென்று
நியமானச் சொல்லி
கனவென்றை உள்ளோடு
விதையாக்கி என் நினைவோடு
நிழலாகிக் கதைபடிக்க!!

அறிவிலந்த மனமிது
அதற்காய் காத்திருந்து
காத்திருந்து சுகமிழந்து
தான் தவிக்க!!

சொல்லியும் சொல்லாமலும்
சுமையான வாழ்வது
உயிர்கொண்ட உணர்வால்
மெல்ல மெல்ல தனக்குளுடைய!!

பெண்ணிதயம்  தானிழந்து
தன்யையே தானழித்து
தனக்குள் தான் தொலைய            
மறந்ததிடா நினைவுகள்
உணர்வைக் கல்லாகி
கொஞ்சம் கொஞ்சமாய்
தன்னையோ கல்லாக்கி
கற்சிலைகனவாகின்றது.............................

யாரிவள்.........

கதிரவன் கனிமொழி
காரிருள் ஒளிமொழி
காந்தவில்மொழி
தென்றலின் அசைமொழி
பூக்களின் புதுமொழி
இறைவனின் அருள்மொழி!!
காகிதப்பொருள்மொழி
கல்லின் கூர்மொழி
பாதையின் பாதமொழி
முற்களின் முதல்மொழி
முவேந்தர் சொல்மொழி
முதுமையின் தாய்மொழி
மூத்தவர் பண்புமொழி!!
அறிவில்லா பார்வைமொழி
அடைக்கல பறவைமொழி
சிந்தனை சிறகுமொழி
சிந்திக்கா இதயமொழி
இன்பத்தின் சொல்மொழி!!
சொல்லிடாத் துயர்மொழி
 புன்னகைக் கண்ணீர்  மொழி
களைத்திடா கதைமொழி
கவிதையின் விழிமொழி
கருணையுள்ளோர் அன்புமொழி.....