Showing posts with label நட்பின் சாரல்.............. Show all posts
Showing posts with label நட்பின் சாரல்.............. Show all posts

Monday, 10 August 2026

நட்பின் சாரல்.............,

 தேடுது கண்கள்  



அவனைப்போல் 

ஒரு ஆணை  

கோடி கொடுத்தாலும் 

கிடைக்காது  போடி 

என்கின்றதிமிரில் 

என்னை  கண்டுகொள்ளாமல் 

அவன் 

கொஞ்சம் மறந்து

 விட்டவன் போல் அவன் 

சந்தோசமாக  இருந்தாலும் 

எங்கோ  தொலைத்த 

சின்ன சின்ன சந்தோஷத்தை 

தேடும்  குழந்தையாய் 

என்னை  தேடுவான்  !!

அப்போதும்  கோவம் மறந்து 

நான்  சொல்லும்  சோகத்தை 

முகம் சுழிக்காமல் 

மீண்டும் கேட்பான் 

புதிதாய் கேட்பது போல் 

நடித்தே !!இருக்கும் போதும் 

விழும் போதும் விலகினாலும் 

வலிக்கும்  நேரத்தில் 

சொல்லாமல்  புரிந்த உறவு 

எப்போதும்  அவன்  தான் !!!


Wednesday, 7 May 2025

நட்பின் சாரல்.............,

சொல்லாமல்  வந்து !

சொல்லுக்கு  சொல்லு 

ரசனையாகி!  சொல்லியே

தமிழோடு  விளையாடி 

கை பிடிக்காமல்  கண்கள் 

பாராமல்  என்னோடு 

நடந்து!   திரும்பி  பார்க்கும் 

ஏடுகளுக்குள்  ஓடாமல் 

ஒழியாமல்  இருக்கும் 

ஒற்றை  நட்பு!  இருந்ததால்  

தானோ!  எழுந்து  நடத்தேனோ!  

 ஆண்மைகளை கடக்கும் 

போது! இறைவனை  திட்ட

தோன்றும்!  அப்போது  வந்த 

 ஆண்மை நிந்திக்காமல் 

 சிந்திக்கவும்  வைத்து! 

இருந்து!ம்  ஒரு  பிசாசின் 

 நல்ல   உள்ளத்திற்கு 

நன்றிகள்  பல  !!!
 







Sunday, 26 July 2020

நட்பின் சாரல்.............

என்னை தொலைத்ததை
உன்னைக்  கண்டதால் 
அறிந்தேன் தோழி
மீட்டிடவே துடிக்கின்றாய்  மீதி
வாழ்கையை  

 காரைந்ததை அள்ளிடமுடியாதே தோழி !!
வலிக்கு எனக்கு!!
நட்பு
காலம் கடந்தேன் வந்தாய்  என்னைத்தேடி
தோழி
கனிந்தகாலத்தை நினைத்தே மகிழ்ந்திடவா
ஏமாறறிய காலத்தை  எண்ணி அழுதிடவா
நடிக்கின்றேன் உன் முன்னால்  
நீ நம்பவில்லை! என்றாலும் ! 
இந்த உலகம் கற்று தந்தது இதைதான்
எனக்கும்!!!கைபிடித்து நடந்த காலம்
வசத்தின் வலிகலானதேன் தோழி  
இன்று!!

Sunday, 24 May 2015

நட்பின் சாரல்.............,

என்னை வரவேற்ற
என் உறவிற்கு நன்றி
என்னை வரவேற்க்த் தவறிய
உறவிற்கும் நன்றி
பண்பாடு இங்கே
வாழ்வதற்கு நன்றி
என்கவியைச்சுட்டு
வரிகளை மாற்றி
சின்னதாய் கடித்த
நண்பனுக்கும் நன்றி
எச்சரிக்கை தந்த
நண்பனுக்கும் நன்றி
கவிக்கு கவிதந்த
நண்பனுக்கும் நன்றி
பெண்னிற்குபெண்
எதிரிஇல்லை என்று
சொன்ன தோழிகளுக்கும் நன்றி
என்னைப்பற்றிக்கேட்ட
நண்பிக்கும் நன்றி
கறுப்பு எனக்கு
ரெம்பப்பிடிக்கு நண்பி
வரமுதல் தந்த அன்பிற்கும்
நன்றி!!

Sunday, 5 August 2012

நட்பு





பொய்யில்லாக்கயிறு கட்டிக்கொள்ளும்
பொய்யின் இலக்கணம்
தொட்டுப் பிடித்து நிக்கின்றது
உறவைத்தொலைத்தும் உறவை விட
நட்போ பெரிதென்று!!

விட்டுக்கொடுத்து வீரியம் பேசி
விதை போல் நித்தம் நித்தம்
முளையிட்டு 
சொந்தமில்லா சொந்தங்களை
இதற்குள் செந்தமாய் சிறைபிடித்து
என்னவென சொல்லத்தெரியது
நிற்கின்றது நட்போடு!1
எத்தனை இருந்தும்
 அந்தனையும் இதற்கள் 
தேடிக்கொண்டு
 அதனையோ வேண்டுமென்று 
விட்டுப்பிரிந்தும்
பிரிய முடியாது தேடுது
 நட்பை மட்டும்!!
கருணையும் கடவுளும்
 அன்பும்அரவணைப்பும்  
நல்லதும் அர்ப்பணிப்பும்
இதற்குள் மட்டுமேயுண்டென்று
நட்போடு வந்த உயிரை 
 உறவாய் ஏற்றுக்கொண்டு 
உன்னதம் இதற்குள்
சொல்லும் நட்பிற்கு 
ஏன்னிந்த தனியுலகம்!!
உறவுக்குள்ளும் நட்பிருந்தால்
உறவு கூட சிறப்பு தான் நட்போ!!
தந்தை கொடுக்கா நட்பு!
அன்னை சொல்லா நட்பு 
!கணவன் காட்டா நட்பு!
மணைவி  இழந்த  நட்பு!
பிள்ளளையை பின்னிடா நட்பு!
நட்பை தேடுது வெளியே தனியாய்
 நட்பபே சிறப்பொன்று!!!!

Friday, 11 February 2011

உதிர்ந்தாடிடா என் மதியோ………



எழுதுகோல் ஏந்திய
எழுத்தில்லா சித்திரதிற்குள்
புரியா கவியாகிய என் 
புதுமைத் தந்துவமே!!

புதுமைக்கு புதுமை சொல்லி
இனிய வாழ்வை எட்ட வைத்து
எட்டவோ நின்றாலும் நீ என்றும்
முழுநிலவோ!!

நிந்தனைகள் நின்மதியை
நித்தம் நிறைத்தாடினாலும்!!
என் மதி யோடு நின்தனை செய்ய
உன் மதியில் நின்றாடும் நின்மதியாய்
வந்தாடும் என் பொழுதுக்குள் நீ என்றும்
முழு நிலவோ!!

விட்டோடிடும் காலத்திலும் 
விட்டிடா வலிகள் வந்தாடிடும்
பொழுதுகளில் என்னோடு
புன்னகைக்கா உன் மதியை விரட்டியாட
சொல்லியாடும் என் பொய் கூட 
புன்னகைக்காக உன் மதியை வீழ்ந்திட தான்!!!
என்றாலும்!!! நீ என் முழுநிலவோ!!

என்னில் வந்த கனவினை
 உன்னில் வைத்து
உன்னோடு விளையாடினாலும்
என்னோடு தோன்றும் கோபம் கூட
கதைபேச கண்ணின்மணி நீ சிரிக்க தான்!!
என் அழகை ரசிக்கா உன் மதியை
ரசிக்கும் என் மனதிற்கு என்றும்
நீ முழு நிலவோ!!!!!!

Friday, 20 July 2007

நட்பின் சாரல்.............,

கவிதையின் கவியாய்
எங்கோ பிறந்து என்
தங்கைக்கு உறவாய்
என்னோடு உறவாகி
என் சோகங்களின் வலியை
கண்ணீரில்லா சிரிப்பொலியாய்
எனக்கே தந்து
என் உணர்வுகளை
சொல்லாமல் செய்து
பிரமிப்பாய் ரசிக்க வைத்து
சிரிக்கவைத்தவனே! உன்னோடு
சண்டைகள் பல போட்டு
முரண்பாடுகள் கண்டபோதிலும்
அக்காவாய் தொடரும்
நம் பாசம் என்றும்
தொடர்ந்திட வேணுமடா?
உன் அக்காவாய்
உன் கனவுகள் நனவாகி மகிழ்ச்சி
பொங்க வாழ்ந்துகின்றேன் என்றும்





Sunday, 24 June 2007

நட்பின் சாரல்.............,

என் காதல்
தலைவானுமில்லை
என் தாய்க்கு
மகனுமில்லை

என் கனவுகளைப்

புரிந்தவன்
என் ஆசைகளைத்
தெரிந்தவன்



என் அன்பில் தாயைக்
காண்பவன்
என் கல்லறை நாட்களை
கவிதையாக்கியவன்

என் வளர்ச்சியில் ஏணியனவன்
 என் மகிழ்ச்சியில்
அகம்மலர்பவன்
 என் உணர்ச்சிகளை
 புரித்து நடப்பவன்


தன் காதலியை எனனக்கு
உறவாக்கியவன்
என் நரகத்தை
மகிழ்ச்சியாக்கியவன்
இருவரும்  ரசிக்க ..நான் சிரிந்தேன் அவனால்......