Thursday 22 September 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உண்மைக்காற்றினை உண்டு
உண்ணா உண்மையை
எண்ணா நம் உணர்விற்கு
இன்னா தம் அன்பினை
வெல்லாத் தமிழே இருதயநாடியுண்டா
உனக்கு!!!

சொந்திற்கு பட்டெடுத்து
பகடான பளபளப்பை
பத்திக்கு பாலாக்கி சொல்லுக்கு
கண்ணீரான தமிழே இன்றைய
சொல்லுக்கு உணர்வுண்டா
 உனக்கு1!!!

வெற்றிக்காய் வீரனாகி விடிவெள்ளிக்கு
புதையலாகி மந்தைக்கால் குழிக்குள்
விழ்ந்த தமிழேமனித புத்திக்கு புரிந்த
விடுதலை உணர்வுண்டா
உனக்கு!!!

சிந்தனை சிலிர்பிற்குள் சிம்மாசனமிட்டு
 கற்றவர்   உச்சிதலை கர்வத்தின்
மகுடத்தில் சிகரம்கண்ட தமிழே உக்காத்து
ஆட்சி செய்ய அரியசமுண்டா
உனக்கு!!
பக்கில் இருந்தும் பசிப்பன் சட்டிக்கு
உணவழிக்கா பக்குவமற்றவர்
பக்கில் படுத்துறங்கும் தமிழே
உன் சொந்த குரலின் உரிமை சட்டிக்கு
விடுதலைகிடைப்பது எக்காலம்!!!!




குட்டிக்குட்டிச் சாரல்......,

அந்தரத்தில் அந்திமாதிரை
அந்திசாயும் நிமிடம்
அழுகின்றது அக்கரையற்ற
இக்கரைகாற்றினை முக்கரையும்
உணர்ந்து!!!!!

Tuesday 13 September 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கள்ளத்தனதை கண்களாய்
வைத்து  அவள்
உருவத்தைவெட்டியெடுத்து
 விழிசமைத்து அப்பாவிவாய்
வேடமிட்டு  நின்றான் மாயவன்!!!

அவன் அப்பாவிக்குள்ஒழித்த
கள்ளத்தனதை அப்படியே
அப்பாவியாய் பற்றி  அவன் மாயதின்
மானுக்கு புள்ளிவைத்தால் அவன்
கண்களின் வித்தைக்கு விந்தையாய்!!

அவன் சிந்திக்கா சிகரத்தின்
சிந்தைக்குள் வித்தை செய்து
மாயவன் வித்தையை சிந்தையாக்கி
விதிக்கு விடைகொடுத்தல்  மந்திரமாயமற்ற
தந்திரத்தை அன்னையிடம் பெற்று!!

மந்தை மாக்களின் மந்திமனதை
மந்திரகோலின்றி கட்டியவளுக்கு புரியாத
மாயவனின் மந்திர புன்னகைக்கு
மத்தியில்  சிக்கிய தந்திரத்தின் மாயம்!!!

இருந்தும் இன்னும் மாயவனின்
மாயவுலகத்து மாயமாய் அவன்
இதயத்தின் முற்களில் அழகிய ரோஜா
அசைந்தாடு சுவாசத் தாலாட்டில்......................

Monday 12 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

சற்றென ஒர் மின்னலெளி
என் இதயத்தை தாக்கியது போல்
உணர்ந்தியது அவனைக்க
ண்ட நிமிடம்
அந்த நெடி ஆறடிக்கல்லொன்றை
என் இதயம் சுமப்பதாய் ஒர்
எண்ணம் கண்னில் ஒளியகி
என்னில் விழுந்தவன் எந்தனை
அழகென என்னை பார்க்கும்
கண்கள் மின்னிச்சொல்கின்றதே!!

Friday 2 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொப்பை பெருத்து
தொப்பி தலையில்
வலுக்கை வந்தும் வயதை
தாண்டிய அனுபவம் வராது நிற்பதால்
தானோ !!வயதுகள் தாண்ட மறுக்கின்றது1!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயம்  உடையும் வரை
இருப்பதை உணராது
உடைத்தபின் இதயதிற்காய்
அழுவவதால் பயனில்லை!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னைச் சுமந்தவள்
முதுமையில் காத்திருக்க
தனக்காய் வாழ்ந்திடவந்தவள்
இளமையில் காத்திருக்க
தன்உயிரால் மலர்ந்தவள்
குழந்தையாய் காத்திருக்க
காதிருப்பை காதிடாதவன்
உலகை காதிட யெழுகின்றான்
!!


குட்டிக்குட்டிச் சாரல்......,


அவள் வலிகளால்
மூடப்பட்டு நிமிர்த்திடாது
துடிக்கின்றாள்1! அவன்
ஏன் எனத்தேடாது யாரென
சந்தேகிக்கின்றான்!!
அவள்இதயத்துடிப்பை மறுத்து
கொஞ்சம் கொஞசமாய்
மரணவலியால்  அழுகின்றாள்!
அவனோ எதையும் உணராது
அவள் கண்ணீரை அழிப்பதாய்
அவள் உணர்வை கொலைசெய்கின்றான்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உணர்வுகள் உள்ளவரை
காதல் நதியில் விழும் துளிர்களை
யார்தடுத்தாலும் நிற்காது
 அலையானபிழையான
வாழ்வின் காவியத்தை
நிறையில்ல வாழ்வின் குறையாக்கி
தவிப்பதை இறைதடுத்தாலும்
முடியாது!!! எதுவென வாழ்கை
புரியும் வரை!!!

Thursday 1 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்வீடு வாவென்றது
இதயவாசல் துள்ளிக்குத்தது
அன்பென்று பெண்ணாய் நின்றது
அவள் அணைப்பில் யென்மங்கள்
கனவாய் வந்தது என்னவென
புரியாதவிப்பு பிரிந்திடா பிரிவாய் தொடருது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்னை அவள் வாசல்
அடியோன் இதயவாசல்
கருணையவள் மடி என்
கண்மணி தூங்கிட தந்த மடி
வெற்றியின் உச்சமவள்
நான் வென்றிடும் நம்பிக்கையவள்
புன்னகை மலர்முகமவள்
என் கண்ணீர் துளிகளின் சந்தேசத்நிமிடமவள்
இளமைத் தாய்மை யவள்
என்னை வெறுப்பவர் நிலைத்தடம்பதிப்பவள்
அன்பின் ஆழமவள்
நான்வெறிடா இதயத்தின் துடிப்பவள்!!!!!