நல்லவை கெட்டவை
அறியாமலேயே எல்லாம்நல்லவையாய் தெரிந்த நிமிடம்
நானும் ஒர் ஏமாளியே!!
கெட்டவை
கண்டு நல்லவையை எடுத்து
கெட்டவை கற்பித்த பாடம்
தந்த காயம் தாங்கியே
தூரமானேன்!!
கெட்டவை தவிர்த்து
மனசும் எண்ணமும் உறுதியாக
எனக்கான என்னை நானே
செதுக்கிக்கொண்டேன்!!
தவறுகளிடம் இருந்து
தவறிப் பாதம். வைத்தாலும்
நிலைகொள்ள முடியாமல்
திரும்பு பாதம் என்னை தண்டிக்க!!
ஓழுக்கமில்ல வாழ்வில்
சில நெடிமுடிந்தாலும் பலநெடி
மனசின் கோவம் என்
உணர்வின் தவறினை தண்டிக்கும் !!
அறிவுக்கும் உணர்வுக்கும்
நடக்கும் யுத்தில் உண்ர்வு தோற்றே
திரும்பிடும் தானாய்!!
மொய்யான நட்புக்கூட
கூடி நடந்ததில்லை என்னோடு
இற்றை வரை எழுதிய
கற்பனைகள் என்
வறுமையை காத்திடவில்லை
இருக்கும் வரை புரியாநேசம்
இறந்தவர் நிழல் முன் பேசும்
படையல் போன்றது!!
இதனை புரியா
மனிதனின் பொய்களேடு நடந்திடா
மனசு ஊமையான மொழி
போல்கூண்டுக்குள் நிழலானது!!
இதைபுரியா மனிதனே
எனக்கு பகையானான்!!!!

No comments:
Post a Comment