Tuesday 30 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்மௌனத்தால் இழந்தை
உன்மௌனதால்  தரமுடியாது
உன்மௌனம் உடைத்து
உன்னை கேள் மௌனமின்றி
உன் இதயம் சொல்லும்
என் இதயவலியே நீயென்று!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

முற்கோணசக்கரத்தின்சுழச்சியில்
ஒன்றி்ன் தோல்வியே
இன்னென்றின் உறவின்  மலர்வு!!
விதியென பெண்மையழுதிட
மதியால் ஆண்மை ஒன்றை இரண்டாக்கி
உறவாகின்றது!

Thursday 18 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் உணர்வின் உதிரமான
ஒழுக்கம்  உன்னில் உயிராய்
ஓடிடாது போனால் !
உன்
 அன்னையின் கற்பத்தின் அழுகே
 உன் உயிர்!!

Wednesday 17 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொடரும் தோல்வியே
ஆசையாகின்றது
தொடரும் ஆசையே தோல்வியின்
முத்தாகின்றது!
தொடரும் முத்துக்களே
பேராசையாகின்றது
தொடரும்பேராசையே
வலிகளாகின்றது
தொடரும் வலிகளே
விரக்தியாகின்றது
தொடரும் விரக்தியே
மனிதனையழிகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆசைகள்  அழியுவரை

மனிதன் கற்பனையில்
மிதக்கின்றான்! கற்பனைகள்
ஆசையின் அழிவானதால் நேசம்
 உயிர் பெறுகின்றது!!

Tuesday 16 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பாறையென்றை குடைதெடுத்து
மரமென்றை நட்டான் ஒருவன்
செயற்கையாய் வைத்தால் வளராதே
வாழ்ந்தது மரம் பற்றிகொள்ள மண்ணின்றி
போனதால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்கைக்கண்ட நிமிடம்
சந்தோசத்தை கைதிசெய்ததாய்
தோன்றியது எனக்கு!! என்னை நேசிக்கா
உன்னை என் சந்தோசமென எப்படி
தேன்றியது எனக்கு!!இன்றுவரை
விடைதெரியா கேள்வி நீயே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்யின் அலையான
கனவுத்தோட்டத்தில்
உண்மை  உணர்வானகாதல்
வசந்தமின்றி அழித்தவுடகளில்
சாகமலர்ராய் மிதக்கின்றது!
யார்யாரோ தோற்பின்னும்!!

Wednesday 10 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

இருக்கும்வரை இறுதிவரை
தன்பைிழையெதுவெனத்தெரியாமனிதன்
தோல்விக்காய் !
அடுத்தவர் தலைமுற்களாய்
 வாழ்கின்றான்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

காட்டோடு நால்வர் பயணத்தில்!
தாகமும் பசியும்  களையோடு சோர்வும்
தேடலின் வலியும் தொடர்ந்த
பாதையின் ஓரமாய் !!
கண்ணேடு ஒர் குடிசை
 வறுமையின் தொட்ல்லிட்டு
தென்றலுக்கும் மழைக்கும் பயந்து
அஞ்சிஅஞ்சி நெருப்பிட்டு
அப்பப் பொங்கி உண்டு
தண்ணிரில் கண்ணீரில் மிதக்கின்ற வீடாய்
இருண்ட கண்னுக்குதெரியக்கண்டு!!

நால்வரும் தடுமாறி வாசல் போய்
நிற்க்ககண்ட பெண்ணவள் புன்னகைக்க நகையற்ற
புன்னகையென்றை புன்னகைத்து
கொடுத்திட உணவில்ல பாத்திரம்
தொடைத்து கால்வயிறு தண்ணீரோடு
கால்வயிறு உண்ணக் கொடுத்தவள் முன்னே!

பசிக்கு பகிர்ந்திட நற்குணம்
நால்வருக்கும்  நன்மைசெய்ய
தன்பசியெண்ணம் அடித்துக்கொண்டு
இலுத்துதிர்த்தனர்!முற்றத்தில் உணவை!!
பசியிடோடு  வயிறுதவமிருக்க கொட்டினர் தன் உயிர் சிறக்க!!!

புன்னகையாய்  நின்றவள் கண்ணுக்கு
சிற்றெறும் கூட்டமென்று சிதறி ஓடிவந்து
ஒற்றுமை வரிசையில் உணவோடு போவது
கண்ணின் காட்சியாய் தெரிய சொல்லொன்று கூறாது சிற்பமாய் நின்றால்!!!கட்டெருபின் அழகைரசித்தபடி!!!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனைமழைத்துளி
வலிகளின் சிதறல்
பிரிவின் வார்தைகள்
புரியாத் தேடல் இறக்கும் வரை
பொருத்தோல்வி அன்பு ஒன்றே !!

Monday 8 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் பிரச்சனையின்
நம்பிக்கை நான்னானால்
உன் தீர்வின் ஒளியும் நானேயாவேன்!!
உன்விடியலின் வெளிச்சம் நானானால்
உன்  பாவமன்னிப்பு நானாய்
இருந்திருப்பேன்!!உன் நம்பிகை
நேசம் நானாய் இருந்திருந்தால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ
கையிரண்டில். ஏமாற்றங்களை
அள்ளிக்கொண்டு முற்களை
காதலாய் தூவிக்கொண்டு
என்னை நடவென்று சொல்கின்றாய்
வலிகளை தாங்கியது உண்மையெனில்
நேசமற்ற பாலைவனமாய் நீயும்
தண்ணீரற்று இறக்கும் சொடியாய்நானும்
வசங்கள் மலராது இறந்திருக்கமாட்டோம்!!

Thursday 4 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

இரு மனசிற்கு
புரியாது தவிப்பது உணர்வு
இருமனசு புரிந்து தவிப்பது
காதல் !

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆண்மை கோவத்தில் அழிப்பது
பெண்மையின் அழகு!
பொண்மை கோவத்தில் அழிப்பது
இல்லத்தின் அழகு!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதம்
உதிரும் வரை
காத்திருந்து பாராட்டுவது நட்பு!
நன்மையின்றி குறைகாண்பது
இருக்கும்வரை உறவு!
எதையும் காணது எங்கோ பார்காது
விழும்போது சட்டென உதவுவது
நேயம் !! இது எதற்குளும்  சிக்காத மனிதம்!!

Wednesday 3 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ எடுத்தெறிந்த பழமைகளில்
ஒன்று நான்!
நீ தொலைத்து விட்டு
கவலைகொள்ளா பொருள்களில்
ஒன்று நான்!
நீ மறந்திட நினைக்கும் காயங்களில்
ஒன்று நான்!
நீ புரிந்திடா உணர்வால் அழிந்தவுணர்வில்
ஒன்று நான்!



குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்த நேரத்திலும்
தோல்சாயும் காயத்திற்கு
முற்களற்ற அன்பே!!
முகவரி உறவாகின்றது!!

Monday 1 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்யிற்கு அழகைக்கொடுத்து
உண்மைக்கு கண்ணீர்கொடுத்து
விதிக்கு வெளிச்சம் கொடுத்து
 ஓர் விளையாட்டு! பொம்மை  அறியாமலே
நடக்கின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சுயநலக்காரனிடம் காதல்
பித்துபிடித்து தவிக்கின்றது!
போராசைக்காரனிடம் காதல்
சுயமிழந்து துடிக்கின்றது !
உணர்சியாளனிடம் காதல்
உருக்குழைந்து  கிடக்கின்றது!
உண்மைக்காதல்  எதுவென
யார் மனசுக்கு தெரியும்!!