Tuesday 30 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வெற்றிபெற்றவர்கள் 

கைகளில் திறமையாளன்

வெற்றிபெற்றால்

வெற்றி  பெற்றவன்

வெற்றியின் பாதையின்

ஒளியின் வழிகாட்டியாகின்றான்

எப்போதும்!!!தன்னை 

புரிந்தவனே  இன்னெருவர்

வெற்றியின் பாதையாவான்!!

அதுவும் தன்னை 

நம்பியே பயணிப்பனே

இன்னெருவரை வெற்றியின்

ஓளியில் நிறுத்திட முடியும எப்போதும்!!

நாம்  தோற்க்கும் 

மனிதனின் வெளிச்சமானால்  

நம்  திறமையின்  

பாதைகள் அழகாகும்!!!

Friday 26 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வறுமைக்கு  பிறந்த

 மகளானேன்

வார்த்தைகள்  பேசிடா 

கவியானேன்

ஊமையின் காதல் 

பூவானேன்

உயிர்விட்டு சென்ற 

உடலானேன்

உள்ளம் சிதைத்து  இதயம் உடைந்த

கண்ணீர்பேசிடும் 

கண்களானேன்

வெள்ளிநிலா பார்த்தே  பசியை மறக்கும் 

குழந்தையானேன்

இழிவுபடுத்தி உயர்வு கொள் மனிதனேடு

பகையுமானேன்

பசம் தந்து  பாசங்கு செயது

ஏமாற்றிய வாழும் மனிதனுக்கு 

முட்டாளானேன்

இருந்தும் என்னில் ஒடும் வேகம் மட்டும் 

மாறவில்லை 

இழந்ததை  விட்டு அடுத்தது 

என்ன என்றே   கேட்குது 

நம்பிக்கை!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

  ஓற்றையாய் தட்டுதடுமாறி

நிக்கையிலே  

ஒரு உயிர்  கூட நடக்கையிலே  

வந்ததுயரம் கூட நம்மை 

எதுகும் செய்யாதே ஒடும்

அழகின் வடிவமாய்  

அன்பின் உச்சமாய்

புரிதலின் கைபிடியாய்  

தடைகளின் காப்பாய்  

காயத்தின் மருந்தாய்

குளிரின்வெப்பமாய் 

தாமையின் மடியாய்

எம்மேடு எமக்காய் கூடவே 

எம் பயணத்தின் கைகாட்டியானால்

எம் பயணத்தின் அழகே 

எம்மை கண்டெடுத்த உயிரின்

வெற்றி!!!வெற்றியின் புள்ளிகளிலே

மனிதன் தன்னை தேடுவதால்

தோல்வியின் புள்ளிகள் கைவிட்டு 

மரணிக்கின்றது!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இயந்திரமனிதனேடும்

பணத்தேடும் பேசமறந்த  மொழி

ஓலைகுடில் தேடி காலைத்தென்றல் தேடி

பறவையின் கொஞ்சல்தேடி

வைத்த செடிகளில் ஊமைமொழீதேடி

ஒற்றை உதயத்தை போர்வையேடே

எட்டிப்பார்த்திட்ட காலம்தேடி

இழந்த பருவத்தை மனதிற்குள் தேடி

தொலைத்த கனவை கண்டெடுத்திட 

காலத்தின் கற்பனை ஓலைக்குள்

மீண்டும்  ஒரு காகிதப் பேனா தேடி

கதைபேசிய குளம்தேடி 

கண்டவுடன ஓடி மறைந்து 

மீண்டும் பேசும் மீன்தேடி

ஒற்றைவேலிதடுத்தும் எட்டிபறித்த 

கொய்யாமரம் தேடி 

அக்கபக்கம் வாடியென கொஞ்சம்

அச்சம் கொண்டு  எட்டிபோகும் 

கால்தடம்தேடி

தன்னைதொலைத்த

மண்னைவிட்டு தன்னைதேடயே  ஓரு

வெள்ளைபக்கம்

கண்ணீர்த்தைளியழித்த வெற்றுபக்கத்தை

அழகாய் கிறுக்கிட  ஒரு வானம்பாடியாய்

மாறுகின்றாள்!!




Thursday 25 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 இருளேடு நடந்தே 

பழகிய நாட்கள் கற்றுகொடுத்ததை 

ஓளியிடம் கற்று கொள்ளா 

அறிவை இருள் சூழ்ந்த வாழ்க்கை தந்தால் 

இருளே பிடித்துகொண்டது

மனதிற்க்கு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 காலகாலமாய்  ஒன்று என்பதை

ஆண்மை ஏமாறும் பெண்ணின 

கைகளிலே கொடுத்திருக்க 

பெண்மை  மட்டும் இன்னும் மாறாமல்

இறுக்கியே பிடித்தே நடக்கின்றது

ஓன்றை எதிர்பார்து  அனைத்ததையும்

இழந்து!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 பிடித்தென பிடித்த பிடிவதமே 

பெண்மை இழந்திடும் வாழ்க்கை

படித்தென்ன உழைத்தென்ன

உயர்ந்தென்ன 

பிடித் தொன்றாலேயே

அசிங்கபட்டு அவமானபட்டு

அழுவதே வாடிக்கை  

இதைபடைத்தவனும்

அறியா ஆண்மைக்கே  வேடிக்கை!!!



Tuesday 23 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 உதிர்ந்து விழுந்த 

நரைமுடியில்

அழுது விழுந்த  கண்ணீர்துளி 

நனைத்த ஈரமதில் 

ஒட்டிகொண்ட கண்மைத்துளி

கேலியாக பார்க்கின்றது 

என்னை

இழந்த  இழப்பில் விழுந்த

ந்தியில் இழுத்த

பொம்மையாய் நீயிருந்தால் கூட 

எடுக்க கரம் இருந்திருக்குமென்று!!!


Thursday 18 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைத்து விட்டு. தொலைவில்

நின்று தேடுகின்றோம் நாம்

தொலைத்த உணர்வினை

தொலைத்தது நமென தெரிந்தே


Wednesday 17 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை ஏமாற்றியே

என்னை வென்றதாய்

நம்பிய இதயத்தின்

நம்பிக்கையின் கைபொம்மை நான்!

விழ்ந்த போதும்   

உடைந்திடமால் அழிந்திடமால்

அப்படியே  இன்னும் நான்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓரு அன்னையின் 

ஓரு உயிர்த்துடிப்புற்க்குள் 

ஓரு உயிர்பிறப்பின்

ஓரு பிறப்பே தாய்மை

இந்த உயிருக்குள் உயிர்கள்

காத்திடும் வடிவமாய் பிறப்பவளே

அம்மா!

உலகின் படைப்பிற்க்குள் 

பெண்மை காத்திடும் ஓளியின் வடிவமாய்

பிறந்த அன்னையவள் கொண்டாடிட

கொடுத்த வர்மே 

அம்மா!

இவள் தடுமாறினால்  இவ்வுலகே

தடுமாறுமென்பதால்  அன்னையவள்

ஆண்மையிடம் கொடுத்தாள்

கொண்டாடிட ! பெண்னை

கெடுப்பவனும்  கெட்டவனும்

ஒரு நிமிடம் கைகூப்பிட 

நினைத்திடும் அன்னையவள்

கொடுத்த வரமே அம்மா

இங்கே! மன்னிக்கும் கடவுளானால்!!







விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 யாரேயெருவர் 

யாறும் அறியாமல் நம்

வாழ்க்கைக்குள்  எது தடுத்தும்

வந்துவிடுகின்றனர்!!

எதையும் உணரும் தருமின்றி

நம்மை காப்பது போல்

வாழ்க்கையை  கொடுத்திட்டு

இது தான் 

சந்தோஷமென்கின்றோம்!!

அழிப்பதும்   காப்பதும்  

நம்  உறுதியான

மனதின் செயல்!

அறிவிருந்தும் நாம் 

நம்பிக்கையால்

செயலற்று  சிலையாய் நின்றிடும்

தருனம்!

உணர்வுகள் அடைக்கலம்

தேடிட  இதுவே உலகில் நாம்

தேடிய சிறந்த தருனமாய் 

தோன்றும்!

இடைவெளி  கற்றுப்புரிந்திடாமல்

இருபதையே அழித்திடும் தருனமாய்

நாம் புரியும் காலம் புரியும் போதே

வாழ்வில் அனைத்தும் இழந்திருக்கும்

தருனமாய  

தோற்றே வீழ்வோம்!!!

இதனால்தானே

நம் வாழ்க்கை ஒரு ஓழுக்கத்திடம்

ஓப்படைக்கபடது !

இப்போ!

ஓழுக்கமே  இங்கே சிக்கலாகி

ஓழித்தேடிவிளையாடுது நம்

வாழ்வை விட்டு!!!வரமுறைகள்

தடுமாற வறையரைகள்

திசைமாற  வாழ்வியல் 

மாயவுலகானது!!!


 


Saturday 13 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

ஓரு பௌரணமியாய்

தன்னை  தனக்கென  

எடுத்து 

ஒருவெளிச்சப்பாதயில்

ஓரு அமவாசைஇருளை 

வெளிச்சத்தில்

எடுத்துசொல்வாளென  நம்பியே

ஒரு அம்மாவினை

கொடுத்தான் இறை  பௌர்ணமியாய்

ஒரு அமவாசை

ஓருவெளிச்சத்தில் எழுவதை

அறியாமலேயே உயர்வதால் தான்  

வெளிச்சதின் அருமை புரிவதில்லை!!!




விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சின்ன சின்ன சந்தோஷமே

ஓரு கண்ணாடியாய் 

உடைந்திடும் போது 

எங்கே வாழ்வில் பெரிதாய்

தேடிட 

சின்ன சின்ன முயற்ச்சியே

தோல்வியாய்  திரும்பிடும் போது

எங்கே வாழ்வில் பெரிதாய் 

 முயன்றிட

சின்ன சின்ன கனவுகளே 

கைசோராமல் நழுவிடும் போது

எங்கே கனவுக்குள்

வாழ்வை தேடியெடுத்திட

சின்ன சின்ன புன்னகைப்பே

கண்ணீராய் மாறும் போது

எங்கே  வசந்ததை

 எதிர்பார்க்க

சின்ன சின்ன நம்பிகையே 

கூடிடாதே தோற்றிடும் போது

எங்கே வாழ்வை நம்பி 

நடக்க!

சின்ன சின்ன தந்துவமே

இங்கே காத்திடாத போது

  இறைவன் எழுதிய  விதியின்

உறையை எங்கே தேடிப்படித்திட

சின்ன சின்ன

மனதிற்க்குள்

இல்லையென்னும் கற்பனையே

இருக்கு என்றபொய்யாய் 

 வாழுது சின்ன சின்னதாய்!!!




Tuesday 9 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 மலரென்று  மடிதனில்

மலர்ந்த நாள்  இன்று

பூவெடுத்து தாய்மையை 

பூத்திட செய்த நாளின்று

அன்னையவள் கையேந்தி

புன்னகைத்த நாளின்று

மலருமென எண்ணியே தாய்மை

நெஞ்சணைத்த நாளின்று

இறைவன் எழுதிய விதியறியாமல்

கொண்டாடியே மகிழ்ந்த நாளின்று!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 ராசியில்லாதவள்யென

மற்றவர் கூறும் போது வலித்ததுயில்லை

இறைவா !!!

நீயே தந்து பறித்த பொதே

நானும் மடியில்லா பிறவியின்

குழந்தையானபோதே எனக்கும்

வலிக்குது தானாய் ஏனோ!!!



Sunday 7 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 திரும்ப கிடைத்திடா நிமிடங்கள்

கிடைத்திடும் பொழுதே 

நாம்  தொலைத்தது

திரும்ப  கிடைத்தது மகிழ்ச்சி

நம் அர்த்தமில்லா காலத்தில்

தொலைத்த சந்தோஷமே

நமக்கு கிடைத்ததால்  கிடைத்தது

கிடைத்திடும் வரமென

உணர்வு உணரும் போதே 

வாழ்வும் புன்னகைக்கும்!!!




Saturday 6 May 2023

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 மனசு கொஞ்சம் வலிக்க

கண்கள் கொஞ்சம் குளமாக

நானெ நீயாய் கடந்த காலம்

இந்தனை காலமா?

யாரே திருப்பிய பக்கத்தில்

ஏக்கங்களாய் என் இதயம் 

கொஞ்சம் பரமாய் நின்றே துடிக்க

உன்னை தொலைத்த என் விதி

என்னை பார்த்தே புன்னகைக்கின்றது 

உன்னைப்போல் 

மீண்டும் கையேந்த முடியா

பாவியாய் இன்னும் உன்னை

சுமக்கின்றேன் நினைவேடு

என்னில்  நின்று பிரித்திடமுடியாமல்

கடல் அலையாய் மேதியுடைக்கின்றது

என்னை!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நம்

ஆசை கனவுகளை

மற்றவர்களிடம்

எதைகொண்டும் எதிர்பார்க்க 

முடியாத பாதையாய் நாம்

தெரிவுசெய்து  விட்டு 

நம் ஆசைக்காய் அடுத்தவரை

கட்டாய படுத்த  முயல்கின்றோம்

கட்டயத்திடமே தேற்கின்றது

நம் கனவின் பாதை நமக்காக

நாமே  தேடிய கனவின் பாதையை

நாமே தொடர  பாதையையும்

நாமே  தேடவும் வேண்டும்

காலத்தின் மாற்றதை ஏற்க மறுபவனே

காலத்திடம் தேற்றிடவும் செய்கின்றான்

மாற்றமே நம் பாதையின் தெளிவு

எதைகொடுத்து சரிசெய்திட முடியா

வாழ்க்கையிடம் எதையும் எதிர்பார்க்கதவனே

மதிக்கபடுகின்றான் !!!


Friday 5 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................


பெற்ற குழந்தை முகம் பாராமல்

வீசியெறியும்  பெற்றவர் 

உணர்ச்சிக்கு பழியாகும்

குழந்தையின் ஏக்கங்கள்

இல்லாமல்  இல்லையென்ற

உறவிற்கு  அன்னையாகிட

இற்றை நாளில் ஆசை கொண்டேன்

இல்லையென்பரை  இருக்குயென்று

பிச்சைபோடும் கரமாய் இல்லாமல்

கொடுக்கும் கரமாய் மாற்றிடவே

இற்றை நாளில் ஆசைகொண்டேன்

ஒற்றை  உலகில் இருக்கும்

உயிர்கள் அனைத்துமே  ஒன்றை 

உறவாய் ஏற்றம் பெறவே  இற்றைநாளில்

ஆசைகொண்டேன் 

ஆசையேடு ஆசைகள் 

 அலையேடு  இழுத்தே போக 

அனல் மேல் விழுந்த உயிராய்

இற்றைநாளும் ஆனது  எனக்கு



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மரணம் 

என்னை சிறைகைதியாக்கிய

பின்னே தனிமை  எனக்கு

ஆயுள் தண்டனையெழுதியது

உறவ உரிமைபெற நிலையிலேயே

உயிர் உறங்கிட துடித்தது

குற்றத்தின் தண்டனையை

மாறிமாறி மனிதன் தந்தபோது தான்

பிறப்பு ஏளெ புரிந்தது 

எல்லாம் அவன் எழுதிய சாபமென

இருந்திடவே  

வாழ்க்கை  ஊமையாது !!



குட்டிக்குட்டிச் சாரல்

 இன்று சொல்லிபோகும்

மரணம் பசமென்கின்றது

நாளை தன் மரணம்  இன்றைய

பொழுதையெழுதிடவே!!


குட்டிக்குட்டிச் சாரல்

 இக்கட்டிற்குள் சிக்கவிட்ட

சிக்கலை சிற்பமாக்கிய

என் கற்பனைக்கு தெரிந்தது

ஒரு கனவின் வடிவம்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 விழுந்திட முதலே பிடித்திடும்

கரம்  இருந்திடும் உறவிற்க்கு

கிடைத்திடும் வெற்றியே

வாழ்வில் சிறந்த பரிசு!!!

Thursday 4 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என் பேச்சில்  என் கோவம 

என் மூச்சில் இல்லை  உயிர்

அவன் தூக்கி போட்ட என்னில்

அவன்  எழுதி சொன்ற கோலம்

 அவன் அலச்சியத்தால் எனக்கு

கொடுத்த தண்டனை!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 ஓற்றை ரோஜாவை 

மெழுக்குள் புதைத்து 

கண்ணாடி குவாளைக்குள்

அடைத்தது போல் 

சிலர்வாழ்வின் அழகு

அழகை மட்டும் புரிந்து

கடக்கும் நிமிடத்தின்

பார்வையே சிலர் பார்வை

உணர்வுகள்  எங்கே ?? இங்கே

பூவிற்கு இல்லையே உயிர்!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 அனைந்தும்  இழந்து

கூட வரும் நினைவு

 சிலர் வாழ்வில் அச்சம் 

சிலர் வாழ்வில் அனுபவம்

சிலர் வாழ்வில் வலி 

சிலர் வாழ்வில் மறதி

சிலர் வாழ்வில் மட்டும் தான்

அடுத தவறின் ஆரம்பம்!!!


Wednesday 3 May 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 மனசுபேசி மொழிகள்

புன்னகைத்து போதுமென

விழிகள் பேசி மௌனம் புன்னகைத்திட

புன்னைகள் சொன்னது 

மொழிகளை ஊமையாயிருயென!!

Monday 1 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இருப்பவர் கொடுத்திட பிடித்திடா 

இல்லாதவர்  கையில் நின்றிடா 

உழைப்பின் வறுமையே

ஊதியம்.  

இது காலகாலமாய்

மனிதசங்கலியின் அடிமைதனத்தில்

சிக்கிக்கொண்டு  இன்றைய நாளிலும்

ஓடிட சொல்லுது. ஓய்வின்றி!

வறுமையைம்  கடனும்

பசியும் வட்டியைம் 

நோய்யும் மரணமும் நின்றட

விடுவதில்லை ஓர் நாளும் 

நின்மதியும் வருதில்லை உழைத்தாலும்

இருப்பவர்  மனதில்

சிந்தனையும் மாறவில்லை!

உழைப்பவர் உழைப்பில்

வறுமையும் மறையவில்லை  தன்னாலும்

கண்ணீரும் மாறவில்லை என்னாலும்!!!