Saturday 19 April 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகிய மலரின் அழகை
அறுத்து ரசித்தெறிதவன்
கைகளுக்கு தெரிவதெல்லாம்
அழகல்ல அதன் தேவையோ!

அகவை 2

அஞ்சி அஞ்சி வாழ்ந்த தமிழ்
அஞ்சாமை அறிவின் சுடராய்
அயல் நாட்டு தடைகளில் நிற்காது
அஞ்சகத்து வார்த்தைகளை தனக்குள்
அள்ளிவைத்தெழுகின்றது துளிராய்!!

 உறவின் விழுதுகளால் ஒன்றுபட்டு
உயிரின் துளிர்ப்பை தாய்மொழியாக்கி
உண்மை நெருப்பின் வேங்காய்
உலகின் கண்களின்  காட்சிக்கு
உரிமை குரலாய் துளிர்கின்றது!!

கள்ளம் கொண்ட மனிதனின்
கற்றவித்தைக்கொடியில்
கபடமின்றிசுற்றிக்கொண்டு
கருணைகொண்டேர் கைகளினுடே
கண்ணின் பசுமையாய் துளிர்கின்றது!!!

செங்குருதி மண்ணில் வீசி
செந்தணல் காறறில் புரண்ட
செந்தமிழ்!  சிந்துநதிக்கரைதனில்
செழிதெழுந்திட எழுகின்றது
செங்கதிர் வீச்சின்  துளிராய்!!

விலங்குவுடைத்து  புதுப்பாதை நெய்து
விதியென வீதி புதைந்த நேயம் கொண்டு
விவகாரமாக்கிய விவாத்தின் மேல்னின்று
விடியல்பொழுது சூரியனைப்போல்
விரைந்து எழுகின்றது  துளிராய்!!!!

வஞ்சம் கொண்ட நெஞ்சத்தது
வஞ்சும் வார்தையின் உதிரத்தில்
வையகத்து அணல்க்காற்றில்
வைத்தகொள்கை மாறிடாது
வைகை நாணால் துளிராய்யெழுனின்றது !!

சொந்த மண்ணின் காயத்தில்
சொத்து சுகங்கள் மறந்த தமிழ்
சொந்த தேசத்து விடியலுக்காய்
சொத்தம் சொல்லி துளிர்க்கின்றது  விடுதலையாய்!!!



Thursday 10 April 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

முற்களில் காயப்பட்டு
கற்களில் மோதுப்பட்டு
கருணையின்றி உடைத்தெறிந்த
உயிர் இன்று தன்உயிரை
 எடுத்து காணிக்கையாக்கி
ஒவியமானது இறைபாததின் அடியில்




குட்டிக்குட்டிச் சாரல்......,

வெள்ளைமனசு வெண்தாமரை
விதிசெய்த சுரபிடித்து
மீண்டுது களையிழந்த
வீணையானது!!

Friday 4 April 2014

தவம்...

அப்பன் செய்ததவரை
அன்னை வடித்த நீரை
துடைத்தவர் நீங்கள் மாமா!!
அக்கரையின்றி இக்கரையின்றி
நிந்தம் வாடிய என் வாழ்விற்கு
உயிர்தந்தவர் நீங்கள் மாமா!!
எந்தனை துயர்கண்டோம்
அந்தனையும் ஓர் உதிர்ப்பில்
சிந்தம் கலங்கிட செய்தவர்
நீங்கள் மாமா !!எந்தனை பிறவி
தவம் செய்தோம் எம்மை
சுமையின்றி சுமக்கும் உங்கள்
இதயத்தின் அன்பைபெற நான்னறியேன்
அந்தனையும் உணர்வுக்குள்
அழிக்க முடியாதவம் மாமா!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அக்கிகுஞ்சொன்று
தர்மத்தின் வேர்நின்று
தலை நிமிர்கின்றது
தவறு கண்டு!!  சிந்தம் மயங்க
பக்கம் நடுங்க தெறித்தெழுகின்றது
தீக்குள்ளிருந்து
உரைப்பவன்  பொய்களில்
உறுதியற்றவன்  கைகளில்
எடுப்பவன் யாராயினும்
தப்பென உணர்ந்திட
சுவாலைக்குள்ளிருந்து
தலைநிமிர்கின்றது தவறுகண்டு
தர்மம்மற்ற சிந்தனையை
தகர்த்தெறிந்து தர்மத்தையுரைத்திட
தலைக்கிறுக்கை தனியெடுத்து
தலை எழுகின்றது சுவாலையாய்!!

Wednesday 2 April 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

வெறுக்கின்றாய்!!வேதனைகள்
தருகின்றாய் !!வாள்போன்று
வார்தையால் குத்துகின்றாய்

வாடி நான் போகையிலே
வந்தென்னைகாக்கின்றாய் !
நீ போலியா உண்மையா
 பட்டி மன்றம்போட்டு!
மனசு படுத்துறங்கி போனது!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அள்ளித்தந்தாய்யம்மா
 தோல்விகளை
அணைத்துகொண்டேன்னம்மா
ஏமாற்றங்களை!1
இழந்துபோனதம்மா நம்பிக்கைகள்
இருந்தும் தொலைத்ததம்மா
என்  இளமைக்காலம்!1
வருந்தி வாடுதம்மா இதயத்துடிப்பு
கரைந்துபோனதம்மா  என் கண்ணீர் மட்டும்!
நிழாய் வந்தாய்யம்மா என்னோடு
நியத்தை மறைத்தாய்யம்மா இருளோடு!!
கருணைகொண்டாய்யம்மா கண்ணோடு
மகள் விதியை வைத்தாய்யம்மா
முள்மீது!!!
கருகிப்போனத்தம்மா மொட்டென்று
 அதைத்தந்து பறித்தவளோ நீயேயம்மா!!

சிரித்து அழுகின்றேன்னம்மா  என்னோடு
பிறர் பார்க்க சிரிக்கின்றேன்னம்மா வாடாது!!
விதிக்கு பரிகாரம் செய்தாய்யம்மா
அந்தவிதியோ பரிகாசம் செய்யுதம்மா
கொடிக்கு முல்லையை கொடுத்தவள் நீயயம்மா!!
அந்த மணத்தை கொன்று கொடியறுத்தவளும்
நீயேயம்மா
கருணையோடுவாவம்மா மகள் செய்தபாவம் காத்திட!!