Thursday 31 January 2013

மறவன்............

மறைவிற்குள் நில்லா  மறவன்
மறைவு தேடிச்சொல்லும் கதையென்ன
வரவிற்காய் கூடும்  மறவன்
வரமாய்  எண்ணும் மரவென்ன

கொடிகொடியாய் அறுக்கும் மறவன்
கொடியின் வேரில் தேடுவதென்ன
அடிதடியாய் அலையும்  மறவன்
அழித்த மரவின் கெதியென்ன

பழமைக்குள் புதுமைதேடும் மறவன்
மறவென சொல்லும் கதையென்ன
கட்டுபாட்டை இழந்த  மறவன்
கட்டிக்காக்கும் மரவென்ன

ஒழுக்கத்தை  இழந்த மறவன்
ஒழுக்கமாய் எழுதிடும் மரவென்ன
பெண்ணினத்தை இழிவுபடுத்தும் மறவன்
பெண்ணிற்காய் சொல்லும் மரவென்ன

இரு பாலாய் பிறந்தமறவன்  ஒருபாலுக்காய்
எழுதும்  மரவென்ன
இருட்டிற்குள் மனசை வைத்த மறவன்
வையகதிற்கு சொல்லும் மரவென்ன

வாழும்வரை வரைந்த மரவை
மறவன் இருக்கும் போதேஅழிப்பதென்ன!!
தமிழுக்காய்  சொல்லிச்சொல்லி மறவன்
வாழ்கைக்கு தடையாகி போன மரவென்ன

தடைகளாய் தடையிட்டமரவைவிட்டு
 தடையின்றி வந்திட்ட  மறவன்
தடை தாண்டி கற்று தன்வாழ்விற்காய்
தேடிக்கொண்ட மரவென்ன!1

தலையில்லா மறவனாகி  இன்று
தலைகீழாய் தெறித்தோடும் மறவன்
தவறியபின் தேடியழையும் வாழ்வின்
 கதையின்  மரவென்ன!!

அடிமைக்குள் ஓர்மரபு  !
பாலோடு பால் கலந்து
பாலாகி நிற்பதென்ன
பொறுமையாய் இருந்த மரபு
பொறுமையின்றி போனதென்ன  மண்ணெங்கும்
கொடுமைகளோ மரவாய் ஆனதென்ன!!!!

Tuesday 22 January 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அப்பாவி


 என்கண்ணில் விழுந்தெழும்
தினக் கனவின் தொல்லை நீ
என் உறக்கத்து   விழிதுறக்கும்
சாமத்து குழந்தையின் அழுகையும் நீ
என் உயிரில் கலந்தோடும் உணர்வுகளை
ஒரு நொடியில் துன்புறுத்தும்
துயரம் நீ 
இருந்தும் தனிமைக்குள்  சிறையாகி
 கொஞ்சமும் விழகாது  
என் எதிரில் வம்புகள்  செய்வதும் நீ
நடக்கும் போது திரும்பிப் பார்கையில்
என் நிழலுக்குள் ஒழிவதும் நீ
சமைக்கும் போது பிழைக்கும் உணவில்
தொலையும்சுவையின் ருசியும் நீ
எழுதும் போது பிழைக்கும் சொற்களில்
 குழப்பம் செய்வதும் நீ
தடுத்தும்  நிற்காது தினம் தேடும் 
என் மனதினையெடுத்ததும் நீ
பிரித்த போதும் எனனக்குள் துடிக்கும்
இதயமாய் இருப்பதும் நீ 
இருந்து விழுந்து என்னைச் சேர 
கண்ணீர் துளி நீ
இருந்த போதும்
என்னைப் புரியா  அப்பாவியும் நீ




Sunday 13 January 2013

யார் தவறு...............................

பெண்னே வறுமை யுத்தை
வென்றிட வேலையுத்தை
நடந்தும் நீ கொஞ்சமும்
கருவறையைக் கல்லறையாக்கு!!!

கிழிந்து விட்ட ஆடை மறைக்க
புதுப்பாதை தொடங்கும் நீ
கொஞ்சம் கற்பப்பைக்கு
விடுமுறை கொடுத்து
கண்ணிற்கு ஓளியையெடு!!

 உன்னை  மறந்த வேளை
வாழ்வை கண்ட  சந்தோசதில்
வசதியில்ல வாழ்கையில்
ஆடம்பரம்  தேடும்   உன்
மனசின் மறதிக்கு மருந்தையெடு!!

காமத்தீயில் சுழன்று கரைந்து
இணைந்து வயிற்றைநிரைத்து
இறைவன் கொடையொன
ஒன்றிண்டைஅடுத்தடு பெற்று விட்டு
ஓப்பாறி வைப்பதனை விட்டுவிடு!!!!

அத்தனையும் பெட்டையென
அதற்குள்ளும் ஆண்பிள்ளை தேடும்
உன் கருணைச் சுயநலத்தின் கள்ளிச்சொடிப்பாலை
ஆணிற்கு கொடுத்திடா தந்திரத்தை
கருணையோடு நிறுத்தி விடு
உன்னையோ நீ ஏமாற்றுவதையும்  புரிந்திடு!!

உன்வயிற்றை கண்ணீரால் நிறைத்து
மழழை வயிற்றை தண்ணீரால் நிறைந்து
அகதியாக்காதே !!அதை அடிமையுமாக்காதே!!!
கொடுமை படுத்தாதே கொன்றுவிட்டு
தியாகியாகி தெருவில்விட்டுதேடியழையாதே
கொஞ்சம் கருணைகொண்டு
கருவறையை கல்லாய்யாக்கிவிடு!!

உன்னைச் சுமாக்கா தலைவன் சொல்லை
நம்பி பிள்ளைசுமக்காதே
துள்ளிதிரியும்வயதில்பள்ளி
 சிறுவர்பையுக்குள் குழந்தையை  வையாதே
அடிமைக்கழுதையாய் பொதியச்சுமக்க
எங்கும் அனுப்பாதே!!!!
!கொஞ்சம் !!கருணைகொண்டு பிள்ளை
                                      சுமந்திட  உண்மை கண்டிடு பெண்ணே!!!

Sunday 6 January 2013

வாழ்வு

படைத்தவன் எழுதியதை
திருத்திட எண்ணி
அழித்திட  முடியாபக்கத்தை
அழித்திட  எண்ணி
இருந்ததையும் தொலைத்து
இரவு பகல் அழுது எடுத்தது என்ன
கொடுத்தது என்ன  வந்தது என்ன
சிந்தனை என்ன இந்தவாழ்க்கையில்!!!
இருப்பதை விட்டு நடப்பதை விட்டு
வருவதைவிட்டு கிடைப்பதை விட்டு
விட்டு விட்டு போகும்வாழ்கையில்
எதைத்தடுக்க  ஓர் ஆட்டம்
எதை விரட்ட ஓர் ஓட்டம்
எதை அள்ள ஓர் போராட்டம்...................