Showing posts with label கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............. Show all posts
Showing posts with label கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............. Show all posts

Friday, 31 July 2026

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

வீரத்தாலட்டின்!  


வீரமங்கை களமாடிய 

களத்தென்றல்!

வீசும்மூச்சுக்குள்  மூச்சாகியே 

மறுபிறவியெடுத்தே 

நடந்தபெண்ணின் துணிவிற்குள்  

சிக்கித்தள்ளாடு வீரம்  

மறுபிறவிகேட்டு !இது 

பணம்  கொடுத்த 

மோகமென்றாலும் 

விழுந்த  மண்ணில் விழுந்த 

உதிரம் இன்னும் மழைகாற்றால் 

கழுவிமுடித்திடவில்லையென்பதே 

நியம்!! 


Friday, 24 July 2026

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

உதிரம் பாய்ந்தோடிய 



நிலமகள் மேனிதனில் 

துறவறம்  கொண்டதுவோ 

உணர்ச்சிகள் !

குடித்த உதிரத்தில் நிலமகள் 

செழிக்க வான் சிந்திய 

கண்ணீர்த்துளிகளில்  

முளைக்கவில்லையோ 

விதைகள் 

இன்னும்  காரணம் காரணம் 

தேடும்  பலிகளின் விழிகளில் 

சுயநலம்  பிரிக்கின்றதோ 

உறவுகளின் உணர்வுகளை 

காலம் சொல்லும் கதைக்களத்தில் 

இன்னும்  மீதியுள்ளது 

சேர்த்திட முடியா 

தோல்விகளால் நிலமகளை 

மூடிய   உதிரத்தின் 

வண்ணங்களே !!

 

Friday, 26 November 2021

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

 விதியே !சதியே மதியே 

மண்ணில் விழ்ந்த உதிரம்

வழிந்தே  ஒடிய வனத்தில்  

எழுந்த கல்லறைகள்!  தம்

எண்ணத்தை  சொல்லியே 

 தன்னை கொடுத்து மண்ணில் 

வீழ்ந்தது  உணர்வாய்!!!

 எண்ணத்தைதொலைத்து 

மண்ணையும் விட்டு 

 கல்லைமட்டும் வைத்தோம்  

நம்நினைவில்  !!சிந்தைக்குள்

நம் நல்லதை சிந்தித்து  நாம் 

நமக்காய் வாழ்வதை 

மற்றவர் அறியாமதியால்

நம்மை காத்திட்டோம் தெளிவாய்!!!

கொடுத்த தாய்  தவிக்க

காத்திட மகனற்று புலம்ப 

பசித்தவயிறு வலிக்க

ஓற்றையிடமின்றி   துடிக்க  

நாம் கல்லாய்

பத்தோடு பதினென்றை

சொந்தமாக்கிகொண்டோம் விடுதலையை !!!

 நமக்காய்!!

பெற்றபிள்ளை சிறக்க மற்றவர்பிள்ளை

இழந்தோம் நமக்காய்  நாமே

 நீதிவழிகதைபடித்த நீதி தமிழாய்

நீதியற்ற  சரித்திரத்தில் நீதியுள்ள

மனிதனாய்நமக்காய் நாம் வாழ்கின்றோம்

நம்பொறுமைபேசி!!


Sunday, 14 November 2021

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

 உணர்வின்  விழிப்புணர்வை 

விழிகளின் விழிம்பில் 

விதையென விதைத்து

மண்ணுடல் வித்தாகிட

மரணத்தின் உணர்வை 

உயிரென சுவாசித்தே 

சுவாசத்தை நிறுத்திட  

விடுதலை  மூச்சில் 

வீரமாய்ப்பேசி

கையுரையணியாக்கி

மெய்யுரை கதையில் 

பொய்யுரை புகுத்தி

  ஐயகோ  பைத்தமிழில்  

நாமென 

 பரிதவித்தே கண்ணீர்

வடித்தவர் உணர்வுகள்

  தன் நலனேடு பிறநலம்

கண்டு   காணாதும்  வாழுது 

பொறுமையாய்  பெருமைமிக்க 

சமூகமென்று !!


Sunday, 17 May 2020

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

மரணத்தின் குவியலில்
மன்னிக்கா பாடம் 
உணர்வுக்குள் பதிவிட்டது
உலகு!! உண்மையின் பாதையில்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ...பொய்கள் கற்பித்தது 
கொலைக்கல்வி !!
இறந்திட்ட
ஆன்மாக்கள் கேட்க்கின்றது
புதிய பாதை!!!இருந்தும்
ஒளிகள் ஏற்றிபார்க்கின்றது
விடுதலை!! கருணைகொஞ்சம்
துடிக்க!! இரக்கம் பேசிப்பேசி இறக்க
துயரத்தின் வலிகளை மட்டும்
மண்சுக்கின்றது இரத்தகறையோடு!!!
தர்மத்தோடு இயற்கை மட்டும்
கருவறுக்கின்றது பாரபட்சமற்று
மனிதகுலத்தை!!! மனிதன் தேடிய
பார்வைகள் பாரபட்சத்தால் எதிரியின்
படைப்பிற்குள் சிக்கி அழிகின்றது
தனித்தனியே!!

Sunday, 28 July 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

உதிரங்கள் உறைந்த
வெள்ளக்காட்டிற்குள்
உதயமிழந்த பொழுது!!
உரிமைகள் அழிந்து உயிர்களற்ற
Bildergebnis für கறுப்பு ஜூலைஉடல்களின் வழியே
 உதயமகன்ற அகதிப்பொழுது!!
உணர்ச்சிகள் எழுந்திட
 கார்மேக கூடலுக்குள்
 கண்ணீர் துளிகளில்
உதய தாகம்
 கொண்ட பொழுது!!
எரிமலை காற்றினை எதிர்த்தே
  பயமின்றி சுவாசித்திட்டு  
உயரம் தொட்ட பொழுது!!
பாவமென பார்வைகளால் பார்த்திட
மறந்த விழிகளையும் வியப்பில்
ஆழ்த்திய புரட்சிப்பொழுது!!
இருமாப்புடன் நின்றாடியவர்கள்
முன்னே சுழல்காற்றாய் 
நின்றாடித்திசைகள் 
தொட்ட பொழுது!!
விடியலை தேடியே 
விடியலின் வாசலில்
  காத்து கிடக்கின்றது
விடியும் பொழுதிற்காய்!!!

Saturday, 27 April 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,


தீவிற்குள் இட்டசாபம்
நேயற்ற மரணதிற்கு 
போட்டதோசட்டம் !!
குண்டுமழை  உதிரக்காடு
மேகமழை வெள்ளக்காடு
ஓடுது உயிர் உடலைகாத்திடமுடியாது
தவகால பாவம்  இது!!

 கடவுளுக்கு மெட்டுகளின் உயிர்மாலை
சிவனால்  பார்வதியிட்டது
 உண்மையோ  பொய்யோ 
 விஜினால்
குவணியிட்டது உண்மையோ 
பொய்யோ  
பற்றியே படர்கின்றது !! 
பொய்யோ உண்மையோ 
யாருமறிய அழிவுகளே
 மக்களுக்கு பரிசாக  !!!!

Thursday, 7 March 2013

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஊரும் உறவும்
உருக்கழிந்து போயாச்சு!!

போக்கிடம் தனையிழந்து
அயல் நாடும் வந்தாச்சு!!

சிக்கிய உறவும்
இருக்குமே இல்லையே நமக்கு
தெரியாது போயாச்சு!!

வலுவான வரலாறும்
வாழாது அழிஞ்சாச்சு!!

ஆழ்வதும் வாழ்வதும்
தெரியாமல் போயாச்சு

புரியாது தவிந்திடும்
என் தமிழனே எழுந்திடு
எம் மானம் தன்மான
அடகுக்கடை பாத்திரமாயாச்சி!!

உடலின் உதிரத்தில் ஓடும்
அக்கினித் தீயல்லவா நீ!!

வெற்றிப்பாதை கண்ட தமிழன்
 விட்டதை வென்றிட
தலைவன் பாதை வருவான்!!

புரட்சியும் எழுச்சியும்
திவிரவாதமும் தந்தவனுக்கே
திருபி கொடுத்து எடுத்து
என்றும் நம்மை நாமே ஆழ எழுந்திடு
!!

Saturday, 10 November 2012

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,



மண்ணைத் தொலைத்திட்ட
இதயங்களே !கொஞ்சம்  நாம்
தாய்மண்ணையும்  சிந்தித்தால் தான் என்ன?

உறங்கியே வாழும்
 இதயங்களே! கொஞ்சம்
மண்ணுக்காய் விழித்திட்டால்
தான் என்ன?
அறம்பாடும் இதயங்களே!
கொஞ்சம் அல்லல்படும்
தமிழுக்காய் பாடினால் தான் என்ன?

இறைபாடும் இதயங்களே!
மனிதஇயங்களில்  கொஞ்சம்
அன்பையும் தூவினால் தான்  என்ன?

தமிழ்பேசும் இதயங்களே!
கொஞ்சம் தமிழுக்காய்  வாழ்ந்து
பார்த்தால் தான் ஏன்ன?

ஆண்டுக்கு ஒருமுறை  அழிந்ததை
நினைக்கும் இதயங்களே!அப்பப்
கொஞ்சம் மாண்டு போனதை
நினைத்தால் தான் என்ன?

தன்னைக்காக் தனக்காய்
மண்டியிட்ட இதயங்களே!
கொஞ்சம் மண்ணுக்காய்
 தலைநிமிர்ந்தால்தான் என்ன?

வாழ்விழந்து வழியிழந்து
வாழயிழது தவிக்கும் இதயங்களே!
கொஞ்சம் இழந்ததை நினைத்து
எழுந்தால் தான் என்ன?

அது  இது எதுவெனத்தெரியா
இதயங்களே!
எல்லாம் எம் விதடுலையென
கூடிவாழ்ந்துவென்றிட எழுந்தால் தான் என்ன?


Saturday, 1 September 2012

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,


மண்ணில் கண்ணில்
புத்த தர்மம் எழுதிய அகிம்சை
நடைபாதை பாதசுட்டக்குள்
காப்பாற்ற பட்ட ஊர்வண காட்டா
நன்றியால் எழுந்த வீரம்!! புத்தர்
கொள்கைக்கு கொடுக்கா உயிரை
தன் உயிர் காத்திட மாற்றி மாற்றி
பிற உயிர் பறித்து தான் வாழ
எழுந்த அகிம்சையே தமிழன் உயிரானது!

இழந்ததால் பிரிந்தால் தன்னை தொலைத்தால்
தழிழன் எழுந்து தலைநிமிர்ந்ததால்
தன்னை கொடுத்து எடுத்தது மீண்டும்
கொடுத்ததை நினைத்து நினைத்து
உருகு தழிழ் ஈடாக எதையும்
பெற்றிட முடியாமல் தவிக்கும் தவிப்போ
தேசத்தின இழப்பாய் போனது!

தவித்து புலம்பினாலும் வழிதேடும்
கொள்கையில் வடிவாய் அமர்த்தாலும்
தற்பொருமை  பேசி பேசி
வந்தவர் நின்றவர் போனவர்
பின்னால் கூட்டிப் போனதால்
ஆசைக்காய் பணம் வந்து
கதைபடிக்க ஆடம்பரம் ஆடைகிழிக்க்
எம்மிடம் உள்ளது கையிழக்க
கட்டிப்போட்ட திறமை தலைமிர
தலைகவிழ்ந்தது உண்மையானது!!

பலகால தவம்
இன்னும் தேடும் தேடலானதால்
கண்டு கொண்ட குற்றசாட்டு மற்றவர்
மற்றவர் என்ற வீரப்பேசி
சின்ன நாட்டு சிற்கார தமிழ்
கற்றதை பெருமைக்காய் விற்று
வீரமிருந்தும் பொருமையால்
வாழ்வின்றி தவிக்கின்றது..
இன்று நாளை என்று!!…
.

Friday, 23 July 2010

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

நினைவுகள் எடுத்து
நியாயம் தேடி
ஆண்டு தோறும்
கண்ணீர் மாலை

கண்கள தொலைத்து
காவியம் தேடும்
கல்லறை மாலை


அன்பைத் தொலைத்த
மறத்தமிழன் தேடிடும்
காணமல் தொலைந்த ஒற்றுமைமாலை


வந்து வந்து போகும்
நாட்களின் கொடுமையை
கிழித்தெறித்து வாழ்வைத்தேடும்
புதிய சிந்தனையின் கண்ணீர் மாலை


தொலைந்த தமிழனுக்காய்
தொலையும் தமிழன்
ஆண்டுக்கு ஆண்டுக்கு
தேடிடும் கண்ணீர் மாலை


விடுதலைத்தீயில் விடுதலைதேடும்
உண்மை தமிழனின்
உண்மைக் கண்ணீர் மாலை


தொட்டெடுத்து கட்டிய உயிர்களின்
வெற்றி மாலையின் கண்ணீர் பூவிற்குள்!
இன்று கண்ணீர் மாலையாகின்றது
நாளைய உதயம்..............

Wednesday, 2 September 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

முகவரி அழிந்து முகம் மறைந்து
மூடிய கதவிற்குள் !
முகவரியில்லா முகங்கள்
இரும்புக்கம்பிகளுக்குள் ஓடிப் பிடிந்து
விளையாடும் விளையாட்டில்
உடல் சிதைந்து உயிர் இழக்கும்
மனிதனுக்காய்!! பாதுகாப்பு சட்டதிற்கு
அடிபனிந்த ஓலைக்கீற்று
முற்கம்பிக்குள் மறைந்து அந்த
ஒடுக்கப்பட்ட மனிதனின்
விடுதலைக்காய் பாடுது கண்மூடி!!
உண்மை பேசிய உயிரில்லா
உடலின் ஆந்மாவின் பாடலாய்!!!

Wednesday, 1 July 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

அவையங்கள் அவையிழந்து
அவையில்லா அவையங்களின்
வலியோடு சிதைகின்ற உடலில்
வடிகின்ற உதிரமாய் உதிர்கின்ற
உணர்வை தொட்டெழுப்பும்
ஈயும் எறும்பும் விட்டிடாதா என
ஏங்கும் ஏக்கத்தை தட்டி விட
முடியா தவிப்பாய் தொட்டவலியும்
விட்டிட சோகமும் கொட்டக் கொட்ட
கொட்டிய வாழ்வை
தட்டிய தர்மம் சத்தமில்லாது
சொல்லுது சூது கவ்வியதாய்..

Wednesday, 17 June 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

புதைகுழி மண்ணிற்குள்
உடல் மறைய !
முகமிருந்தும் முகமின்றி
முகவிரி தேடும் உடலையும்
உயிரையும் பாதுகாக்கின்றது
உடைந்து எரிந்த உயிரில்லா
மரங்கள் தமக்கு எருவாய் போன
மனிதனை !!
எஞ்சியது மிஞ்சியது
மனிதனென எண்ணியதால்!
சிறையில்லா சிறைச்சாலையில்
சுகந்திர காற்று ,சுவாசிக்க கடன்
கேட்பது போல் ,மறுக்கப்பட்ட
காற்று விடுதலை செய்ய
அடிமை உயிரைத் தேடுது மெல்ல!
இட்ட கட்டளையால்
வென்ற கொடுமை
ஏங்கும் மனிதனிடமிருந்து
இன்னெர் விடுதலையை தேட!
தெரிந்தும் தெரியா உலகம்
உதிரும் உயிரின் எண்ணிகை
கொண்டு தேடுது உண்மையின்
உண்மையை! உறங்கும் உயிர் போல்....

Sunday, 8 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன் நெஞ்சத்து காதலாய்
மண்ணை நேசித்து
தன் நெற்றி திலகமாய்
குருதியை நேசித்து
தன் வேலியின் தாலியாய்
விசத்தை நேசித்து
தன் அழகுடலின் உடையாய்
வெடி மருந்தை நேசித்து
தன் கைகளின் வர்ணப் பூசைப்போல்
ஆயுதங்களை நேசிந்து
தன் கருவின் உயிராய்
தன் மக்களை நேசிந்து
பெண்மை புயலாகி
மென்னை கல்லாகி !
ஒவியமாய்
தன் உணர்வை விடுதலையாக்கி
எல்லையில் நிற்கின்றாள்
எல்லாம் தன் உறவென எண்ணிக்கொடு
தன் உயிரைக் கொடுத்து
மண்ணுயிரைக் காக்க..........

Monday, 2 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

யுத்தத்தின் கையில் உறவு
பரிதவிக்க காட்சிகள்
கண்களைக் குளமாக்க!

ஏன் இதுவென்று சற்றே
மனம் உடைய! உடைந்த
மனதை தட்டியெழுப்பி!!

எழுந்த உள்ளத்தை உறவாய்
இணைந்து !இணைந்த உறவின்
கரங்களை இறுகப் பற்றி!

பற்றிய கைகளுக்குள்
பதறிய நெஞ்சங்களை
சிதறாது அணைத்து!

அணைத்த உறவோடு
காயத்தால் தவிக்கும்
உயிரையும் தவிக்காது
அள்ளியெடுத்து!

எரிமலையாய் !!!!
தமிழ் எழுகின்றது!
மனதின் உறுதியால்
உயிரின் உறுதிவரை !

எதிரியின் எதிர்ப்பை
எதிர்த்தே நின்று உலகின் வெறுப்பை
உடைத்தே உரைத்து தமிழை
உதிராப் பூவாய் காக்க!!!

Friday, 20 June 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

உலகமெங்கும் என் தமிழ்
உயிராய் ஒலித்திட
ஒளியிழந்த  எம் உரிமைதனை
உலகிற்கு சொல்லிட
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

உயிர் மேல் பாதம்தனை
எடுத்து வைத்தாலும்
சரித்திரம் படைத்தவர் நாங்கள்
சரிந்திட மாட்டோமென
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

மரணமே எம் கண்முன்னே
வந்து நின்றாலும்
சொல்லிற்கும் செயலிற்கும்
அர்த்தம் இல்லா
வாழ்வை நாம்
வாழ்ந்திட மாட்டோம்!
எம் விடுதலை வேகத்தை
குறைத்திடவும் மாட்டோமெனப்
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

மனிதரில் நாமேமாணிக்கம்!
எம்மைக் கண்டெடுத்திடா
உலகமே உன்னை
வெல்லும் வரை
எம் உயிரின்
இறுதிப் பயணம் முடியும் வரை
பொங்கிடுவோம்
தமிழால் பொங்கிடுவோம் என
பொங்கு! தமிழென பொங்கு!!

Tuesday, 27 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

விதையாய் விழ்ந்து 
விருச்சமாய் எழுந்து,
விடியலுக்காய் வித்தான
முத்துக்கள் இவர்கள்

எட்டுத்திக்கும் விடுதலைக் காற்றனுப்பி
உலகின் பார்வையை 
தன்  பக்கம் திருப்பி
புரியா உள்ளங்களை 
புரிந்திடச் செய்து
கடலோடும் புயலோடும் 
தரையோடும்
தீயாக எரிந்து 
வானேறி வீரம் காட்டி
விதையான சுயநலமில்லா
 சுவாசத்தின் முத்துக்கள் 
இவர்கள்........

எம் மண்ணின் ஒளியெல்லாம்
அவர்கள் !
 முக ஓவியமாய் விரிய 
இருளுக்குள் ஒளியாகி,
இருண்ட வாழ்விற்கு 
வெளிச்சமாகி
வானத்திங்களின் ஒளியெடுத்து
உலகத்தின் பார்வையில் வீழ்ந்து
விடுதலை உணர்வை
 எம் இதயத்தில்
வித்தாக்கி மறைந்த 
எம் முத்துக்கள் இவர்கள்..................................

Tuesday, 23 October 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஆயிரம் ஆயிரம்
மனிதப் பூக்கள்;! பூக்களாய்
பூத்துக் குலுங்கிய என்
தோட்டத்தில்
யுத்தமென்னும் அரக்கன்
உடல் சிதறக் குண்டெறிந்து
உயிர்ப் பலியெடுத்து
அழிவின் மேல் அழிவு செய்து
பசியோடும் வலியோடும்
என் உறவை என் நட்பை
தவிக்க விட்டு!என் தோட்டத்தின்
அழகை ச் சுடுகாடாக்கி
எம் மிடத்தில் எம் மினத்தை
காக்கின்றான் சமாதான உயிர் குடித்து


சொல்லிச் சொல்லி மாண்டு
காயத்தின் மேல் காயத்தால்
கருகிய வாழ்வு ஒளிறின்றி போக
எங்கோர் முலையில்
உறவுகளின் நம்பிக்கை
மட்டும் உயிர் வாழ்கின்றது
என்றும் மாறாமல்........


Tuesday, 24 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

எங்கள் தேசத்தின் வரலாற்றில்
இணைந்திட்ட
முதிர்வில்லா தோழனே
தியாகத்தின் தியாகமே

எம் நெஞ்சகத்தே குடி
கொண்டநெருப்பின் நெருப்பே!

யுத்த களம்தனில்
வீருநடை போட்டு
வெற்றி வெற்றியென
வென்று குவித்த

தோழனின் தோழனே

மரணத்தை உடலக்கு கொடுத்து
இலட்ச்சிய பாதைக்கு மரணம்
இல்லவே இல்லையென
எரிந்திடும் புதைகுழியில்
இருந்து விருட்சமாய்
எழுந்திட்ட வீரர்களே! உம் விடுதலைக்கு
எம் தீப அஞ்சலி!

உங்களுக்காய்
எம் விழிணீர் அகற்றி
நெஞ்சம் தனில் நெருப்பேந்தி
சிந்தனை சுடரோடு
தீயாய் இணைந்து
பூக்கள் தூவி நிக்கின்றோம்

மீண்டும் மீண்டும்
ஈழம் தனில்
மனிதபூவாய் பூத்திட
வேண்டும் என்று.......


***********
எம் தேசத்தின் சரித்திரத்தில்
ஒன்று கண்ணீரில்
நனைகின்றது இன்று
பூவெடுத்து கண்ணீர்
அஞ்சலி செய்கின்றோம்

யூலையே ... நீ தந்த
கறுப்புப் புகையால்
கருகி விட்ட
மனித நேயத்தின்
நினைவுச்சுமைகளை
அழித்திட முடியாமல்

கரைகின்ற கண்ணீர்
அமுதசுரபியாய் எம்மிடம்
இருப்பதால் கரைகின்றோம்
கண்ணீரில் இன்றும்.....