Friday 30 December 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆண்டவன் அருள்
ஆண்டாள்அடிமைக்குள்
 அகப்படவில்லையடா!!

மாண்டவர் புண்ணியமும்
கண்மனியின் வறுமைக்கு
உணவுதனைஅளித்திடவில்லையடா1!

பாட்டன் முப்பாட்டன்  கொண்ட
சொந்தங்களும் சுகப்படா
வாழ்விற்கு  சுகப்பயன்
காட்ட வில்லையடா1!

அப்பன் சொந்தும்
அடிமையிவளுக்கு  புதிதாய்
 வாழ   உதவிடவில்லையடா!!

மன்னவன் மனமும்
  மங்ககையிவள் வாழ்வின் ரோசா
முள்ளாய்   குத்திகிழித்தடா!!
மாமான் இதயமும் கல்லாய்
மாறி கருணையற்று காயத்தை
தேய்த்ததடா!

காயத்தை ஆற்றிட மருந்தினை
தேடி  மரிக்கொலுத்து
 மழைபோல்பொழிந்தாளடா!!


 கொடுமைக்கு வாழ்வாகி  கனவிற்கு
பொருள் தேடி ஆண்டோடு  வாழ்வு
சுகப்படாது கண்ணீரைில் கரையுதடா
ஆலிலையாய்!!!

Tuesday 13 December 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

சுரங்களை அவள் தந்து
சுவாசதிற்கு உயிர்கொடுத்தாள்
மூச்சுக்குள் இசையசைய
தாளத்தை பற்றிவிட்டாள்
பற்றியவள் சென்றபின்
தவிப்பிற்குள் கனமழை சுரங்களாய்
கொட்டுது பருகாலமற்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓர் பெண்ணவளின் காலத்தை
வலிகளே ஆள்கின்றது வழிகள்
இருந்தும் ஏனெனில்
வலியதன்
பாதை பழியோடு செல்வதால்1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணத்தை அணைத்திட
விதியிடம் வழியில்லை
இதயதின்வலியினை அனைத்திட
உணர்விடம் வழியில்லை
வாழ்ந்திட நினைத்திட
வாழ்கையில் இடமில்லை
உயர்திட எழுந்திட புதைகுழியில்
பாதையில்லை! இருந்தும்  இறந்தும்
உயிரோடு ஒர் கனவு!!!

Thursday 10 November 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு உயிரின் வலியை  நீ
 உனக்குள் உணர்ந்தால்
 ஒரு உணர்வு உனக்குள்
சுவாசமாய் துடிக்கும் அந்த
உணர்வே  காதல் ஏனெனில்!!
இதயங்கள  ஒன்றானால் உணர்வுகள்
பேசுவதே காதல்!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு காதலின் வலி
 வாழ்வைகொன்றால்
அந்த காதல் உணர்வற்றது
ஏனனெனில் காதல் சுவாசத்தின்
தீண்டல் உயிர்உள்ளவரை உறவாடும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒருதியாகத்தின் வலி
அதன் மகிழ்சியை கொன்றால்
 தியாகதிற்கு பொருள்ளில்லை
ஏனெனில் தியாம் வலிகள் நிறைந்தது

Tuesday 25 October 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,


சிரிக்கும் வாழ்விற்கு புரியாதது’
அவள் விதிக்கு மட்டும் புரிந்த
உண்மை!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிர் காக்க தனக்கான தேடலில்
தொலைத்த உணர்வுகளுக்கு
கிடைத்த வெகுமதி கண்ணீர்த்துளி!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விதியிட்ட தீயில் எரிந்த
உறவுகள் சொல்லாதே
சென்ற உண்மை
நாளைய தனிமைச் சிறை!!!

Thursday 22 September 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உண்மைக்காற்றினை உண்டு
உண்ணா உண்மையை
எண்ணா நம் உணர்விற்கு
இன்னா தம் அன்பினை
வெல்லாத் தமிழே இருதயநாடியுண்டா
உனக்கு!!!

சொந்திற்கு பட்டெடுத்து
பகடான பளபளப்பை
பத்திக்கு பாலாக்கி சொல்லுக்கு
கண்ணீரான தமிழே இன்றைய
சொல்லுக்கு உணர்வுண்டா
 உனக்கு1!!!

வெற்றிக்காய் வீரனாகி விடிவெள்ளிக்கு
புதையலாகி மந்தைக்கால் குழிக்குள்
விழ்ந்த தமிழேமனித புத்திக்கு புரிந்த
விடுதலை உணர்வுண்டா
உனக்கு!!!

சிந்தனை சிலிர்பிற்குள் சிம்மாசனமிட்டு
 கற்றவர்   உச்சிதலை கர்வத்தின்
மகுடத்தில் சிகரம்கண்ட தமிழே உக்காத்து
ஆட்சி செய்ய அரியசமுண்டா
உனக்கு!!
பக்கில் இருந்தும் பசிப்பன் சட்டிக்கு
உணவழிக்கா பக்குவமற்றவர்
பக்கில் படுத்துறங்கும் தமிழே
உன் சொந்த குரலின் உரிமை சட்டிக்கு
விடுதலைகிடைப்பது எக்காலம்!!!!




குட்டிக்குட்டிச் சாரல்......,

அந்தரத்தில் அந்திமாதிரை
அந்திசாயும் நிமிடம்
அழுகின்றது அக்கரையற்ற
இக்கரைகாற்றினை முக்கரையும்
உணர்ந்து!!!!!

Tuesday 13 September 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கள்ளத்தனதை கண்களாய்
வைத்து  அவள்
உருவத்தைவெட்டியெடுத்து
 விழிசமைத்து அப்பாவிவாய்
வேடமிட்டு  நின்றான் மாயவன்!!!

அவன் அப்பாவிக்குள்ஒழித்த
கள்ளத்தனதை அப்படியே
அப்பாவியாய் பற்றி  அவன் மாயதின்
மானுக்கு புள்ளிவைத்தால் அவன்
கண்களின் வித்தைக்கு விந்தையாய்!!

அவன் சிந்திக்கா சிகரத்தின்
சிந்தைக்குள் வித்தை செய்து
மாயவன் வித்தையை சிந்தையாக்கி
விதிக்கு விடைகொடுத்தல்  மந்திரமாயமற்ற
தந்திரத்தை அன்னையிடம் பெற்று!!

மந்தை மாக்களின் மந்திமனதை
மந்திரகோலின்றி கட்டியவளுக்கு புரியாத
மாயவனின் மந்திர புன்னகைக்கு
மத்தியில்  சிக்கிய தந்திரத்தின் மாயம்!!!

இருந்தும் இன்னும் மாயவனின்
மாயவுலகத்து மாயமாய் அவன்
இதயத்தின் முற்களில் அழகிய ரோஜா
அசைந்தாடு சுவாசத் தாலாட்டில்......................

Monday 12 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

சற்றென ஒர் மின்னலெளி
என் இதயத்தை தாக்கியது போல்
உணர்ந்தியது அவனைக்க
ண்ட நிமிடம்
அந்த நெடி ஆறடிக்கல்லொன்றை
என் இதயம் சுமப்பதாய் ஒர்
எண்ணம் கண்னில் ஒளியகி
என்னில் விழுந்தவன் எந்தனை
அழகென என்னை பார்க்கும்
கண்கள் மின்னிச்சொல்கின்றதே!!

Friday 2 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொப்பை பெருத்து
தொப்பி தலையில்
வலுக்கை வந்தும் வயதை
தாண்டிய அனுபவம் வராது நிற்பதால்
தானோ !!வயதுகள் தாண்ட மறுக்கின்றது1!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயம்  உடையும் வரை
இருப்பதை உணராது
உடைத்தபின் இதயதிற்காய்
அழுவவதால் பயனில்லை!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னைச் சுமந்தவள்
முதுமையில் காத்திருக்க
தனக்காய் வாழ்ந்திடவந்தவள்
இளமையில் காத்திருக்க
தன்உயிரால் மலர்ந்தவள்
குழந்தையாய் காத்திருக்க
காதிருப்பை காதிடாதவன்
உலகை காதிட யெழுகின்றான்
!!


குட்டிக்குட்டிச் சாரல்......,


அவள் வலிகளால்
மூடப்பட்டு நிமிர்த்திடாது
துடிக்கின்றாள்1! அவன்
ஏன் எனத்தேடாது யாரென
சந்தேகிக்கின்றான்!!
அவள்இதயத்துடிப்பை மறுத்து
கொஞ்சம் கொஞசமாய்
மரணவலியால்  அழுகின்றாள்!
அவனோ எதையும் உணராது
அவள் கண்ணீரை அழிப்பதாய்
அவள் உணர்வை கொலைசெய்கின்றான்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உணர்வுகள் உள்ளவரை
காதல் நதியில் விழும் துளிர்களை
யார்தடுத்தாலும் நிற்காது
 அலையானபிழையான
வாழ்வின் காவியத்தை
நிறையில்ல வாழ்வின் குறையாக்கி
தவிப்பதை இறைதடுத்தாலும்
முடியாது!!! எதுவென வாழ்கை
புரியும் வரை!!!

Thursday 1 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்வீடு வாவென்றது
இதயவாசல் துள்ளிக்குத்தது
அன்பென்று பெண்ணாய் நின்றது
அவள் அணைப்பில் யென்மங்கள்
கனவாய் வந்தது என்னவென
புரியாதவிப்பு பிரிந்திடா பிரிவாய் தொடருது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்னை அவள் வாசல்
அடியோன் இதயவாசல்
கருணையவள் மடி என்
கண்மணி தூங்கிட தந்த மடி
வெற்றியின் உச்சமவள்
நான் வென்றிடும் நம்பிக்கையவள்
புன்னகை மலர்முகமவள்
என் கண்ணீர் துளிகளின் சந்தேசத்நிமிடமவள்
இளமைத் தாய்மை யவள்
என்னை வெறுப்பவர் நிலைத்தடம்பதிப்பவள்
அன்பின் ஆழமவள்
நான்வெறிடா இதயத்தின் துடிப்பவள்!!!!!

Wednesday 24 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஏய்!! என் கூண்டுக்கிளியே!!
என்மாமானுக்கு என்ன ஆச்சி
காவியோடு மலையேறியும்
தெய்வானையோடு கடும் தவம்
புரிந்தவர்!!இப்போ காடுக்குள்வாராரே
வள்ளி வாசம்தேடி !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இளமைகளின் உணர்ச்சி
தடுமாற்றம்
முமையின் பக்குப்பாட வயது
நல்ல உறவினை அழிக்க!!!
இங்கே!!!
இல்லறம்  பொய்ப்பித்ததோ
நல்லறம் தொக்கி நிக்கிற்க!!!

Tuesday 23 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை ஆயுள் வரையெயிந்திட
என்னால் முடிந்ததது எப்படி
என்னை புரிந்திட உனக்கு உன்
ஆயுள் போதாது  போனதால்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெருந்தாக்  காதலை
பொருத்தமில்ல இதயங்கள்
பெறுவதால் தான் காதல்
காலங்களை காயங்களைாய்
கடத்துகின்றது!! நம்இதயத்தில்
பாசம்உணர்வின்றி விசத்தை
கடந்துகின்றது !!!புரிந்தால் காதல்
இறக்கும் வரை உணர்விற்குள்
பாசத்தையே கடந்தும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னையோ ரசிக்க தெரியதவனுக்கு
எந்தபேரழகி மனையாலும்
அவன் வாழ்கை சுமைதான்
தன்னை ரசிக்க தெரிதவனுக்கு
அழகற்ற மனைவிகூட தேவதைதான்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ரசனையற்ற மனசுக்
எந்தனை கோடிகொடுத்தாலும்
அதனால் எந்த வசத்ததையும்
உருவாக்க மாட்டான்!!
ஒற்றைசாசுயில்லதவன் ரசனையால்
ஓருாயிரம் வசத்தை வற்றிய குளத்திலும்
அமைத்திருப்பான்1!!

!!

Sunday 21 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அவள் பாதைகளில் முற்கள்
வாழ்கை முழுதும் வறுமை
அவள் இருளுக்குள்ஒருவன்
 நிழலென்றான்1!பக்கதில்
 முதியவர் புன்னகையோடுகேட்டார்
எந்தனைநாள் அவள் சாப்பிட்டு
அவனே தெரியாது என்றான்
பெரியவர் சிரிந்தபடி கூறினார்
புரிதல்கள் தொலைத்து
கற்பனையில் நிலாய் வாழ்கையற்று
நிக்கின்ற நீ எப்போது விழிப்பாய் 1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பக்குப்படா மனசு
பட்டபின் தவிக்கையில்
யார் மனசும் புரியாத மயவுலகம்
அவள் இருள் சூழ் வானத்தை மூடியதால்
அக்கம் பக்கம்  புரியதவள்
சிறைவைத்தால் தன்னை
வைத்த காலம் தந்த பக்கும்
படைதவன் கொடுத தண்டனை
அந்தனையும் சுட்டதால்
சிறையினை உடைத்து சிறகினை
விரிக்கின்றாள்
அனுபத்திறனின்  உறுதியால்1!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அன்னைகாலைச் சுறுற்றியவன்
அன்னையேயோ உறவாய்
 எண்ணி வளர்ந்தவன்!
அன்னையை காத்திட்ட பிள்ளையென
உயர்ந்தவன்
பிடிகரம் விட்டு பிரிகின்றான்
தனியாய் வாழப் பெரியவனாய்
அழுகை தனனை மறைத்து
புன்னகை சிந்தி வாழ்த்தியவள்
வாசலில் நிக்கின்றாள் அவன்
வரவிற்காய்!!!
அந்தனையும் பொய்யாய்
 போனபோதும்  உண்மையாய்
ஒர் உறவு
மகனாய் வாழச்சொன்னவளுக்கு
பிரிவுப்பொய் உணர்வைஅளுத்துவதால்
ஏக்கத்தோடு  காத்திருக்கின்றாள்
அவன் வரவிற்காய்!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

விம்பங்கள் மறைந்து விண்ணுலக
விண்மீனாய் தோன்றியவளே
மண்ணில் ஏனடி மீண்டு விம்பமானாய்!!
ரசித்த இசையின் விம்பத்தின் தாலாட்டாய்
என் கண்ணில் ஏனடி பட்டாய்
நெஞ்சத்தில் இன்னும் ஒர் தீ எரியுதடி
அணையாது உன் நினைவாய்
என்னையெடுத்து எண்ணை ஏனடி
ஊற்றுகின்றாய்!!!!

Tuesday 2 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உச்சிவெயில் தாக்க
உள்நாக்குவறல
எச்சில் கூட வற்ற
கண்கள் கொஞ்சம் மயங்க
சுற்றி நிறைந்த
வியாபரநிலையமெல்லாம்
தண்ணீரில் விலையிட்டு வைக்க
ஒற்றைக்காசுகையில்  இன்றித்தவித்தளை
கடந்த காரில் இருந்த நாய் சொன்னது
என்னைவிட உன் பிறவி  மோசமென்று !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓன்றை முகத்திற்கு ஒன்பது
முகமூடியிட்டவன் தன்னைத்தொலைத்து
அவளை தேடினான் கதாலால்!!
யாரோயிவன் என்றதால் உலகிற்குள்
அவளும்பொல்லாதவளானால்
 அவன்ஏமாற்றியது அவளையென்பதால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மல்லிகை சரம்தனை
கையில் கொடுத்து
தலைசூட சொன்னால் நண்பி
தன்னை மறந்து அவள் தலையில்
சூடிட  ஒரு நெடியாசை  கொண்ட நிமிடம்
கண்கள் குளமாக ஆசை தடுமாற
தடுமாறியது அவள்கை
கைநழுவி தரைதொட்டது சரம்
கைவிட்ட 
சரம்தன்னை மறந்து
புன்னகையேடு  பார்த்தது  அவளை
என்னவென்று கூறபெண்னே
எந்தன் வாசனைக்குள்
மெல்லிசையானவளே
என்  கற்பனைக்குள்  
சுவாசமாய் புன்னகைப்பளே
நீ சூடிகொள்ள  முடியா என்வாசம்
விடுதலை பெறா விதைவின்
வாசமாய் யானது  பெண்னே  
தலைமுறைகள் தலைசாய்க்கும்
அழகில் தாய்மையானஉந்தன் 
சிறப்பை  ஏந்தும்
அழகே எந்தன் வரம்!!!!என்றது

Wednesday 27 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உண்மை பொய்யின் அழகில்
தோற்றிடும் போதெல்லாம்
யெத்திடும் என்பது உண்மையானாலும்
உண்மையெத்திட எடுத்திடும் காலத்தாலே
வெற்றிபொய்யின் உண்மையாக்கி
விடுகின்றது!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னால் வாழ் கறபனைகள்
எந்த வறுமைக்கும் உணவாகாது!!
உன்னால் வாழ் உழைப்பே
உன்னைல் வாழ் உறவின் பசிக்கு
உணவாகும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

புரிந்தவன் கைகள்
உயர்ந்தால் இருள்கள்
சூழாதாது காத்திடும்
இணைந்திடும் கரங்கள்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தீக்குள் தாரை தாரையாய்
கொட்டிய கண்ணீரையும்
தாருக்குள்புதைந்த உடல்களையும்
அள்ளியொடுத்து  குவித்த மனிதநேயத்தால்
கொட்டிய உதரத்தை  வாய்க்கால்
வழியனுப்பி  வாய்திறக்காதே அழுது
ஆண்டவன் அடிமையாய் காலகாலமாய்
கண்ணீர் கதையெழுதி தவிக்குது
தன்னை சிதைத்து !!
பொல்லாப்பு புதுப்பாதை  தனக்கான
தன்திறமை என்னவென யார் காண்க!!
வாழ்கை வாழ்தேசம் தன்னையாழ்
சிறப்பெய்தவன்  சிதைகனவு
நாரைகாண் வாழ்வாக 1!
அடிமை நிழல்ஆடம்பர வாழ்
பொதிசுமைபணம் பொருமைபாபுகழ்1!
தன்னை தான் சிதைக்க
உயிர்யெழுத்தீத்தாய் கறுப்பு யூலைக்குள்
ஆடம்பர குடைபிடித்தால்
மனிதம்  தன்னைகாக்காமனிதர்களால்
தொலைந்தது  தவிக்குது விடுதலையின்றி!!!!





Thursday 21 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொட்டில் இட்டு தாலாட்டி
தோல்மேல் சீராட்டி
பத்து மாத சுகம் தந்து
நெஞ்சினில் மூச்சானவளே!
உன்னை சுட்டெரித்த தீ ஏனடி
இன்னும் என் இதயத்தை சுற்றியெரியுது!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்யான உறவுக்குள்
உண்மை உறவானவளே
நிலையில்ல மகிழ்விற்குள்
நிலையான துயரமானவளே
நிலையற்ற சிந்தனைக்குள்
நிலையான தவமாய் இருப்பவளே
என் நிலையா செல்வம் நீதானம்மா

குட்டிக்குட்டிச் சாரல்......,

வார்தைகளை நான்  தேட
கண்ணீர் துளி எனைத் தேட
நினைவுகள் உனைத்தேட
கட்டியணைத்திட கைகள் தேட
ஆண்டுக்குள் நீ தொலைந்து
வருடங்களாய் காத்திருப்பதை
உன் வயது சொன்னதடி என் சொல்லமே!!!!

Saturday 2 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

கசங்கிய ஆடையில்
ஆற்றல் வந்து ஆளுமை
கொண்டதால் ஐயாயிரம்
திண்ற ஆடைக்கு
 தலைகுனிவு வந்தால்
வழியதன்  திறவுகோலே
வாழ்விற் மதியாய் நின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாமரைதண்ணீராய்
 தாவணிக்கனவுகள்
தனியானபோதும்
மதியதன்அகம்தனை
இருள் வந்து  சூழ்தபோதும்
வறுமைக்கு ஆடை
சரியாக கிழித்தபோதும்
நம்பிகைஒளியென்றை கயிராய்
பற்றியவள் நடை பார்த்து திரும்புது
ஆயிரம்முகங்கள்!!!

Sunday 26 June 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அந்திக்குள் ஒர்பொழுது
அந்தி வானம் சிந்ததும் பொழுது
தென்றல் சொரிந்த காதல்
சிந்திய செந்தேனாய் இதழ் இனிக்க
வெந்தேன் உடல்  சிவக்க நானும்!

Friday 24 June 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தலைமுறைகளாய் தலைகாத்த
தலைசிறவர்கள் கவசம்
தனியாய் வந்தததுவோ வாழ்வில்
தலைகள்  உருளுதே
தனிதனியயாய் கவசமின்றி !!

சிந்தனை யெண்ணமெல்லாம்
தனிதனி வலிகளால் வந்ததுவோ வாழ்வில்
வளர்தும் மனிதன் வளராது
வாடுகின்றான் வாழ வழியின்றி1!

வழிமுறை வாழிபாட்டுத்தோடலெல்லாம்
மனிதனுக்கு தவமின்றி கிடைத்ததுவோவோ
வாழ்வில்
புறாக்களுக்கு கிடைத்திட்ட சமாதானம்
மனிதனுக்கு  கிடைக்காது தவிக்றான்1!

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையோ
தலையணைசண்டையானதோ வாழ்வில்
வாய்குள் வார்தை சிக்கா
வாய்கால் சண்டைக்கு வரப்பு சாட்சியான
தே!!

Sunday 19 June 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை காணும் கண்கள்
என்னிடம் ரகசியம்   பேசிவிட்டு
போகின்றது
உனதருகே ஒர் அழகான
தேவதையிரு ந்த போதும்
விசித்திரமாய்  தோன்றினாலும்
புன்னகையோடு  ரசித்துக்கொண்டேன்
என் ஏமாற்றதை!!!

Wednesday 1 June 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிர் இருக்குமு்  வரை
அவன்!
கற்பனைகள் என் வாழ்கையில்
நான்!
  இறந்தபின்னர் அவன் உண்மைகள்
என் கல்லறை கற்கள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு உயிர் வாழும் வரை
அறியா வாழ்கை ஒரு உயிர்
அழிந்தபின்னர் பிறக்கின்றது
மனிதனுக்கு!!
ஒரு உயிர் இருக்கு வரை
வராப்பாசம்! உயிர்
இல்லாத போது வருகிறது