Friday 30 December 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆண்டவன் அருள்
ஆண்டாள்அடிமைக்குள்
 அகப்படவில்லையடா!!

மாண்டவர் புண்ணியமும்
கண்மனியின் வறுமைக்கு
உணவுதனைஅளித்திடவில்லையடா1!

பாட்டன் முப்பாட்டன்  கொண்ட
சொந்தங்களும் சுகப்படா
வாழ்விற்கு  சுகப்பயன்
காட்ட வில்லையடா1!

அப்பன் சொந்தும்
அடிமையிவளுக்கு  புதிதாய்
 வாழ   உதவிடவில்லையடா!!

மன்னவன் மனமும்
  மங்ககையிவள் வாழ்வின் ரோசா
முள்ளாய்   குத்திகிழித்தடா!!
மாமான் இதயமும் கல்லாய்
மாறி கருணையற்று காயத்தை
தேய்த்ததடா!

காயத்தை ஆற்றிட மருந்தினை
தேடி  மரிக்கொலுத்து
 மழைபோல்பொழிந்தாளடா!!


 கொடுமைக்கு வாழ்வாகி  கனவிற்கு
பொருள் தேடி ஆண்டோடு  வாழ்வு
சுகப்படாது கண்ணீரைில் கரையுதடா
ஆலிலையாய்!!!

Tuesday 13 December 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

சுரங்களை அவள் தந்து
சுவாசதிற்கு உயிர்கொடுத்தாள்
மூச்சுக்குள் இசையசைய
தாளத்தை பற்றிவிட்டாள்
பற்றியவள் சென்றபின்
தவிப்பிற்குள் கனமழை சுரங்களாய்
கொட்டுது பருகாலமற்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓர் பெண்ணவளின் காலத்தை
வலிகளே ஆள்கின்றது வழிகள்
இருந்தும் ஏனெனில்
வலியதன்
பாதை பழியோடு செல்வதால்1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணத்தை அணைத்திட
விதியிடம் வழியில்லை
இதயதின்வலியினை அனைத்திட
உணர்விடம் வழியில்லை
வாழ்ந்திட நினைத்திட
வாழ்கையில் இடமில்லை
உயர்திட எழுந்திட புதைகுழியில்
பாதையில்லை! இருந்தும்  இறந்தும்
உயிரோடு ஒர் கனவு!!!