Sunday 30 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாசகமிட்டவள் யாசகமிட்டவனிடம்
யாசகம் கேட்டாள் யாசிப்பான்னென்று
யாசிக்காதவன் முன் யாசகம் கேட்டதன்
முட்டாள் தனத்தை  ஒரு சிக்கலின் அனுபம்
சொல்லிசென்றது அவளுக்கு!!

Wednesday 12 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமான் உயிருக்குள் உணர்வாகிய 
ஓர் உயிர் !என் உணர்வுக்குள்
 உயிராகி !என் விழிகளின் 
கனவிற்குள்  பேசு  காதலின் மொழியினை !
மாமா! நீ!  கருணையற்று
 தொலைத்தநேசம்!  என்னை 
கண்ணீராய் கரைக்கிது உனக்காய் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தீயகாயத்தால் தீந்தவள்
வலிகளை யாரோ கூறுகையில்
உள்ளங்கை சாம்பலில் 
ஒருபிடியற்று ஊமையானால் 
வார்தைகளில் அடங்காவலியானதால்!!
வேர்வையது துளிகளில் 
வீழ்ந்ததுளிகண்ணீரானதால் பூத்தமலர்வாட
 பூவைவிழிநோக பார்வையது உறைய
மனசின்வலி பனிதுளியானது பார்வைக்கும்
தெரியமலே!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் எண்ணங்களே 
உன் வாழ்கை
உன் மௌனங்களே
 உன் சிதைவுகள்
உன் புரிதல்களே 
உன் அழிவுகள்

Monday 10 August 2015

குருதிப் புனல்

நாம் தழிழரொன எழுந்திட்ட
 சிங்களே! 
ஆறுசுவை  உண்டு   அடுத்தவருக்காய் 
பேசி!நாட்காட்டிகள் கிழிக்கும்
 நாதியற்ற கொள்கைகளை வைத்து 
நாலுகால் கதிரையில் அமர்த்து 
ஐயா !நீங்கள் சிறையான
தேசத்தில்  எந்தகொடியேற்றபோகின்றீர்கள்!!
அபயமான தழிழாகி தேசத்ரோகியாகி
சட்டவிரோதக்கும்பலாகி  தீவிரவாதியாகி
தெருவில் விடபட்ட தழிழை நேசித்த
தமிழனாய்யிருந்தால் ஓன்றுமை
ஒன்றே வேதமெனயெடுத்து
ஒன்றையாவது அகற்றியிருபோமே!!
ஆளுமை கட்சியிடம் போராடி!!
நாளைய முத்துகள் இன்றைசொத்தையாகி
போதையில் விழுந்து காமத்தேன் குடித்து
சகதியில் சருகுகின்றதை  பார்த்தும்
தமிழா !நீ தழிழனாய் இருந்தும் 
குருடனாய் வாழும்போது
கட்சியமதைத்து  சட்டசபைபோய்
வெட்டியாய் கத்தியெதைசாதிக்க போகிறாய்!!
தன்னை தானே இழிவுபடுத்தி எதிராலியை
உத்தமனாய்  உயர்தி  தமிழை பதவிக்காய் 
பேசுவதை விட 
தழிழா  நீ அரசியல் ஊமையாகிவிடு!!
சாதிக்க முடியா தேசத்தில் தொலைத்திட
எம்மை  ஓர் தலைவன் தேடியெடுக்கம் வரையாவது
அடிமைமண்ணின் ஆடம்பரமாளிகைக்காக
நம் மாவீரகள் சாம்பலை அத்திவரமாக்காதிருப்போம்!!!




Thursday 6 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உண்மையன்றி என்னிடம்
உன்னையன்றி என்னிடம்
உள்ளயேயும் இல்லை மாமா
வெளியேயும் இல்லை மாமா
கனவும் நீயே  உறகாவிழியும்
நீயே !உறக்கம்கெடுத்து உளறவிட்டு
உன்னை விட்டுப்பிரிவை!
பிரிக்காகாலமும் நீயே தான்மாமா!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோவத்தில்  கொஞ்சமறந்து
கொஞ்சும் கிளிதனை மறந்து
கொம்புத்  தேன்கூட்டில் சிக்கிக்கிட்டு
எட்ட முடியா மலையுச்சியில்
தவம் புரியும்  என் மாமா 
வேப்பிலைக் கறுப்பாயி
வேப்பம்பூதேனாகி நீ வேண்டா
வரமாகி வாராவே உனைத்தேடி!!
ஓடாதே எனைக்கண்டு
 தவசிக்கோலம் தனைக்காக்க
காளையே உன்னைக் கட்டியாழ!!
சரியான யோடி எனிநான் தான் தாடி!!!

Tuesday 4 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் மல்லுவேட்டி
மடிப்பை பார்த்து விழுந்த
 என் இதயம் எட்டெடுத்து
நடக்கும்  மாாமன் நடையழகாய்
அங்கும்  இங்கும்
அலையுது தவிக்கு  மாாமன்
நிழலோடு !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

படடினியேடு
பிணியும்
சத்தமின்றி உயிர்குடிக்க எதிரியாய்
சிலர் எதிரோ இருநந்து ரசிக்க
இல்லையென்றவர் இல்லமும்
கானல்நீராய்மறைச்சி போச்சு
பலர்கண்களின்  முன்!!!