Thursday 22 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  பிரித்தாளும் தந்திரம்
  • பிரிந்தவர் அறிவுக்கு  எட்டாதவரை
  • தென்றல் விளையாடும் நடுவே!!
  • பிரிந்தே  அழையும்  மேகங்களோடு

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  தன்னை நேசிப்பதை மறந்து
  • நேசிப்பவரை நேசிக்கமறந்து


  • நேசத்தோடு சண்டையிடுகின்றது
  • மனிதம்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  • எத்தனை எத்தனை கொடுமைகள்
  • மனிதன் கற்றுக்கொள்ள கிடைத்த
  • கொடுமைகள் 
  •  நாம் மனிதனை மனிதனாய்
  • நேசிக்க
  • இன்னும்  இன்னும் 
  • தொடரும் கொடுமை
  • கண்டும் அடுத்தவனை
  •  வஞ்சித்திடவே கூட்டம்
  • கூட்டமாய் அழைகின்றோம்  
  •  தண்டிப்பதில் உயர்ந்தவராய்!
  • !நம் காயத்தின் வலிகளுக்கு
  • அடுத்தவரை அழிப்பதே 
  • சிறந்த மருந்தென்னும் கொள்கையில்
  •   நாம்செய்த தவறை மறைத்தே!! 
  • மற்றவர் தண்டிக்கின்றோம் 
  • நம்மை நாம் சிறந்தவராய் 
  • காட்டிட !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கெட்டவன் காட்டிய உண்மை
முகம அறியாதே கெட்டவன்


மறைக்கும்  முகம்  பார்த்திடாதே
தண்டிக்கின்றோம் நல்லதை!!!

Sunday 18 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,


  •  இல்லையென்றே தள்ளிபோகின்றது
  • மனசு இருப்தாய் பொய் சொல்லி
  • இல்லாததை தேடுது வயது எதுவென
  • வாழ்கை அறியாதே இதுவேயென!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யார் இவர்கள் !
!மற்றவர்கள் வலிகளை புரிந்தவர்களா
தவறிழைக்கா உத்தமர்களா
உணர்வில் கலந்த எண்ணத்தால் 
தியகம் செய்தவர்களா!
 இருப்பதை கொடுத்து மற்றவர்
பசியை போக்கியே தம்மில் வறுமையை
உணர்தவர்களா !

சத்தமிட்டே
 மற்றவர்களில் நடுவே
தியாகியென்கின்றனர்!
 சத்தங்கள்காதடைக்க 
சற்றே திரும்பி பார்த்தேன்
ஆடபரவாழ்வை இன்னும் 
இன்னும் எட்டிஎட்டிபிடித்துக்கொண்டே
 உணர்வால்  சண்டையிடுகின்றனர்
உரிமையென்று பலரும்  கூடிகைதட்ட
காரியவதியாய் தன்னை நகர்த்தியே 
தியாகிளாய் ஒளிர்கின்றனர் !
அடிபட்டவன் பலமின்றி போனதால்
பலமிழந்தத அறிவுகொண்டு
ஏமாற்றும் கூட்டங்களே   
உலகில் சிறந்த தியாகிகளென்று 
நிமிர்த்தே நின்கின்றனர் 
இவர்கள் தானே வழிதிறப்பது  எப்படியென்று 
  புரியவில்லையெனக்கும்!!!

Saturday 17 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  இதழ்சிகக்கு சிமிழ்
  • இதழேர கோவம் கண்டு

  • வடிவெடுக்கு கனவு
  • பல ஏமாற்றம்  தொட்டு
  • உயிர்வடிக்கு  இதழ்
  • பல உருவத்தின் பொய்கள்
  • கண்டு!!!

குட்டிக்குட்டிச் சாரல்........

  •  இருந்தே தெரிய கற்றை போல்
  • இருந்தும் அழுகின்றது வாழ்கை
  • கடந்திடும் நாட்களின் அருமை
  • அறியாமல் 

கண்ணீர் அஞ்சலி!!!

உறக்கமும் விழிப்பாய்  இருளுக்குள்
நினைவாய் கடந்ததே  இரவு !ஏன்
இறப்பின் படிகளில் ஓவாய்
 ஒரு பயனம் இருந்தும் வலிக்குதே ஏன்
எட்டநின்றும்  என்னை மறந்து  ரசித்தமுகம்
உமதோ!!தட்டித்த  வேளையிலும் 
தட்டிடாதே பார்த்த முகம் தானே!


நேர்கொண்ட பார்வை நேரெதிரே
நிற்க பயம் வரும் யாருக்கும்
கம்பீரக்குரல் கேட்டு பாதங்கள்
தடைபடும் தானாய் !அச்சங்கள்
அறியா மனசு அச்சப்படுவர் தவறுயிழைத்தவர்
கற்றவர் கல்வியாய்  கற்பனையில்
கூட தவறிடமாட்டார் வாழ்க்கைகே வழியானார் 
வாழ்த்தவர் பெருமை சொல்லானார்
வெற்றிலை சிகப்பழகில்  சிந்திடும்
புன்னகை தவமாகும் ! கையில் பிடித்திடும்
தடியில் பல ஆண்மைகளின் வரலாறுண்டு
வியக்கின்றது விழிகள் விந்தை மனிதன்
கரம்பிடித்தே நடந்த நாட்களை  சிந்தித்தால்
வரலாற்றுப் பொக்கிசம்  விதியிடம் கைதியானது
எழுத்தால் எழுதா ஓவியம் எழுந்தே நிக்கின்றது
உயரமாய்!!!

Friday 16 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  கண்விழி காத்திருக்க 
  • கண்மணி விழித்திருக்க


  • இதயெலியில் நிலைத்திருக்க
  • சுவாசத்தில் கலந்தோடுகின்றது
  • நினைவு உயிராய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  இதயத்தை  புரிந்தாடா உன்
  • நேசம் இறுதிவரை கானல்நீரில்

  • கால் பதித்தே நடந்திடும்  கனவே!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  • இதயத்தின் வலிகளை மறந்தே
  • இருப்பதை தொலைத்தே அழியுகின்றது
  • இதயம்!!!இதமான இதயதை இருப்பாக்கியே
  • உள்ளத்தை  
  •  உடைக்கின்றது இயல்பாய்!!
  • புரியாத பயணத்தில்
  • கற்றுகொண்ட புதிரான வாழ்கையின்பண்பற்றதேடல்
  • கற்றுகொடுத்த நேசமற்ற நேயமே!!!
  • உயிரற்ற வாழ்கை!!!

Tuesday 13 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,


  •  தனிமைதனை எடுத்தவன்
  • தன்னையிழந்தே தவறினில்
  • ஞாயம் தேடுகின்றான
  •  தனிமைதனை கொடுத்தவன்
  • வருத்தியபோல் வருந்தாமலே
  • வசந்தத்தை  தேடுகின்றான்!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிர்வரை உருகிய இதயம்
உயிர் போக உயிர் போக 
மடியினை கொன்றிடவா  மதியதனில்
மயக்கம் !! 
விதையதன் விருட்சம்
விடையதனை அறியாமலே  அழிந்திடவா
ஓடியதது குரல் தேடி !!

 விதியதன் தேவை மதியிழந்த உடலே
  கதியதன் காதல்
நல்ல உடல் குடித்த உதிரமா!!
கனிவதன்
கண்கள் காலத்தை கெடுத்தெடுத்த 
கனியே!!!
பிடியதன் கைகள் நாளை
உயிர்பறிக்கும் ஆயுதமா!
உறவதன்தேடல் துயிழந்த பயமா!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

  • மனிதம் இறந்த மிருகம்
  • வாழும் மனிதன்  மனிதம்
  • கொல்ல நேசம் காக்கின்றதோ!!
  • நன்றாய்  !!!