Tuesday 28 January 2014

யாருக்கும் வேண்டாம்

வேண்டாமேஓர் துணை
வேதனையும் கண்ணீர்துளியாய்
வேண்டமே ஓர்துணை!!
பாவியாய் பரதேசியாய்
வாழ்வதாய் சொல்லி வாழ்வை
ஏமாற்றி சிறைவைக்க
வேண்டாமே ஓர்துணை!!
பாதியாய் தாலியென்று
பாதைகள் தனைமூடி
போலியாய் நாடகமாடி
பொய்யாய் வருடம் தொலைத்து
மொதுவாய் கலடிக்கொள்ள
வேண்டாமே ஒர்துணை !!
 நின்று நிதானித்து மெல்லயெழுத்தாலும்
பாசவலையெடுத்து
கள்ளமாய் சிக்கவைத்து தன்னை
காத்திட பின்னிடும்முடிச்சிக்குள்
சிக்கிதவிக்கும் பைத்தியங்களாய்வாழ
வேண்டாமே ஒர்துணை!!!!

Friday 24 January 2014

மண்ணின் வாசனை...

ஆத்தோரம் வீடுகட்டி
வயல் உழுது நெல்விதைத்து
காத்தடகாவல்காத்து
நாற்று நட்டு களையெடுத்து
மாமன் கரம்உழைக்கையிலே
தந்தானே தானா
நானும் !!பாடுபடக்காத்திருக்கேன்
உன்னோடு மாமா!!
நட்டபயிர்சொழித்தாச்சி
சொழித்தபயிரும்  பூவாச்சி
பூவைக்கண்ட கார்மேகம்
மழையாக பொழிந்ததிலே
தந்தானே தானா
நானும் பயிராகநனைகிறேனே
உன்னோடுமாமா!!
தங்கபோல சூரியனும்
தகதகவெனமின்னியதால்
கதிரும்முற்றிசிவந்தாச்சி
நெற்றிவேர்வை முத்தாச்சி
தலைகுனிந்தகதிரைப்போல
தந்தானே தானா!!
நானும் கஞ்சிகொண்டு வருகிறேன்
மாமா உன்னோடு கொஞ்ச!!
உழைச்மனம்சிரிச்சாச்சி!!
சிரிச்சமனம்கதிர்அறுத்து கட்டாக்கி
கட்டுமேல கட்டுவைத்து
கலைத்து  தானும் நிற்கையிலே
தந்தானேதானா!
நானும் களத்து மேடு தூக்கவாரன்
உன்னோடு மாமா!!

Friday 17 January 2014

லொள்ளுக்கவிதைகள்,

பாலாய்சுரந்துஓடாய் தேயும்
என்னைப் பாடாய் படுத்தினாலும்
பாடுபட்டு ஓடி உழைக்கின்றது
காளைஎன்று!!
ஓர்நாள் அதை ஓய்வாய்
இருக்கவிட்டால்! மாலைபோட்டு
பொட்டு வைத்த என்மீதே
 கொம்பைதோய்த்து கூராய்
முட்டுகின்றது!!!!என்னப்பாகொடுமை
இது!!


Thursday 16 January 2014

பொங்கல்!!

பட்போடு பருத்தி
சோலையாய் என்னைசுற்றி
புதிதாய் இருக்கானோம்
வேட்டியில் மாமன்
கொஞ்சம் சாமிய த்தெரியக்கனோம்
பக்கத்தில் மகள் பாவாடையில்
ஊலாவக்கானோம்
எட்ட நின்று மகன்எழுத வெறுப்பில்
 என்னைப்பார்க்கானோம்
அச்சச்சோ !!அதிகாலை சேவல்
எங்கப்பா காணம்
வீட்டின் முன்முற்றத்தைவைக்ககானோம்
அடக்கெடுத்து அடுத்வரையும்
சேர்த்தெழுப்பி கோலமிட்டு
பானைவைக்க இடமும் கானோம்
ஆனாலும் பொங்கள் இன்று!!!
பாடசாலை முடித்து
மாலைவீடுவந்தமகன் சொன்னான்
 இனிப்பாய் இருக்குஅம்மா !
வேலைக்குசென்றமாமன்
இரவு வீடுவந்து என்ன செய்தாய்
இன்று என்றார்!! என்னைப் பார்த்து!!!
எனக்கு லீவு தந்தவன் மீதோ
கோவம் வந்தது எனக்கு!!!

Monday 13 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

இருவர் தொலைந்து
ஒன்றை உணர்வது காதல்!!!
இருவர் தொலைந்து ஒன்ற்றை
பற்றுவது வாழ்கை!!!
இருவர் தொலைந்து ஒன்றில்
தொலைவது காமம்!!!

இருவர் சேர்ந்து ஒன்றை பற்றி
இரண்டைத் தொலைத்து
ஐந்தாய் வளைந்து ஐந்தில்
நிற்குது  இதுவென்ன வாழ்வென்று!!!

Saturday 11 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்மடியுறங்கிட
ஒரு நெடியில்லா மணிகளில்
பலயுகவாழ்கை எதைகற்றிட்டது
நம்மிடத்தில் !!
இருந்தும் இல்லாவாழ்விற்குள்
தொக்கி தொடர்வது
சாபங்களா கேபங்களா!!
ஆனாலும் !!!
நாமிருவரும் ஒருவர்
ஏனனில் கணவன் மனைவி!!!
இதைமாற்றிட நிமிடங்களில்லா
நான் நீ தனியுலகத்து தேடல்கள்!!

Wednesday 8 January 2014

தூரிகை!!!!!

ஓவியமாய் சிற்பியாய்
சிலையாய் எங்கேங்கே
என் முன்னோகாட்சியானாய் நீ!!
நீண்ட வாழ்வில் ஒர் நாள்
மாயமானாய் போனாய்!!
தேடிகளைத்து ஓய்வாய் அமர்த்தேன்
எனி  இல்லையென்று  !மீண்டும்
 என் கைகளில் ஓவியமாய்
வந்தமர்ந்தாய் விசிந்திரமாய்
 பார்தேன் !!
 உன் முகழகு  உன்னை
எங்கே தொலைத்திட்டு
மீண்டும் என்னிடம் வந்துள்ளாய் என்றது!!!
என்னிடம் வரும்போதெல்லாம்
என்னைத் தொலைத்து
ஓவியமாய் வருகின்றாய் எதற்காய்!
உனக்குள் நானிருக்கும் வரையோ
உன் ஓவியத்தில் உயிரிருக்கும்
என்னைதொலையாதே
உன் உயிர்த்துடிப்போ நான் தான்
என்னைத்தொலைத்து  நீ
என்னையே   தேடியழைந்து
என்னிடமே வருகின்றாய்!!என்பதை
நீ எப்போது புரிவாய்!!!!!



Tuesday 7 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னக்கு ஒர்
பெண்சுமையால்
இறைவனிடம் தூக்கத்தை
 வரமாய் வேண்டு!!
உனக்கு ஓர்
பெண்சுகமானால் அந்த
பெண்ணை வரமாய்
வேண்டு

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதஅழகுப்பசி காமமாகி
மிருகத்தின் உணர்சிபசியில்
அழிகின்றது இது எப்போ
அன்புபசியிடம்  தோற்கின்றதோ
அன்றே நன்றே நடக்கும்



குட்டிக்குட்டிச்சாரல்...



எதிர்எதிரில் இருந்தபோதும்
பிரிந்தே இருந்த மனசு
 உன்னைப்பிரிந்தபின்பே
 இணைந்துவாழுது உன்னோடு
நிழலா  நியமா எங்கு நீயோ
என்னோடு!!

லொள்ளுக்கவிதைகள்

வியாபரமாகிய வாழ்கைக்குள்
 விற்பனை சரக்காகிய மனிதன்
பணமின்றி நேசத்தை கொள்வனவு
செய்திட முடியுமா
இப்போ!!
பொய்யா கனவிற்குள் விழுந்தெழுந்து
மெய்யான வாழ்வினை தொடும்
வேட்டிக்கும் சோலைக்கும் இதனால்
சண்டையப்பா !!!
பொய் சொல்லி தேடிய உறவை
கொஞ்சம் மெய்யாய் உழைத்து
காத்தால் தான் என்ன!!!!

Monday 6 January 2014

லொள்ளுக்கவிதைகள்,

கற்பின் வட்டதிற்குள்
பெண்மையை மட்டும்
அடைத்திட்டதால் !!


அடைபடாத சிங்கம் புலிகள்
மானை ஆடவிட்டு வேட்டை
ஆடுவதால் !!
மனிதவட்டதிற்குள்
ஐயோ!! பாவமானதே மான்கள்!!

லொள்ளுக்கவிதை







சொர்கம் பெண்மையென்று
ஆண்மை தேடியதால்
இலவச இணைப்பு
உச்சவிலையானது
இதில் வாங்குபவன் தவற
கொடுப்பவன் தவற
இருவர் தவறும் புதுபாதை
தேடுது தன்னைக்காத்திட!!

Sunday 5 January 2014

குட்டிக்குட்டிச்சாரல்.......

உன் மகிழ்ச்சி தடையான
என் பாதைகளை  நான்
தடைசெய்திட்டேன்!!! ஆனால்
என்விழிகளில் பதிவான உன்னை
தடைபோட இயலவில்லை
உன் அன்னைப்
போல் நானும்நேசித்தால்
 நீயோ!!
உன் அன்னைக்கு கொடுத்த
அதே தண்டனையை
எனக்கும் தந்திட்டாய்!!!!

Saturday 4 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மெனளதின் அமைதியில்
எழுகின்ற கனவிற்குள்
சிரித்திடும் உன் முகமழகு!!
பேசாவார்தைக்குள் பேசிப்போகும்
உன் திமிர்ரழகு
எல்லாரசிக்கும் இவள் உணர்வை
புரிந்திடும் அழகு எப்போது!!

Thursday 2 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எண்ணத்தில் உன்
எண்ணம் நிழாடுகையில்!!
கனவில் உன் விம்பம்
நியமாகுகையில்!!
கற்பனையில் உன் வார்த்தைகள்
கதையாடுகையில்
என் கண்கள் குளதில் நீராடுகின்றது
உன்னால்!!