சிதைந்து போன ஒரு
சமூகத்தி மாற்றத்தை
சரிசெய்ய முயற்சி செய்கின்ற
ஒரு மனிதனின் சிந்தனையை
சிந்திக்க வைத்திடா
எதிரியின் சிந்தனையே
ஒரு மாற்றத்தின் அழிவு !!
இதை எதிரிக்கு சமூகம்
சொன்னால் நல்ல
தலைவன் சமூகத்தின்
காவலன் !!
சிதைந்து போன ஒரு
சமூகத்தி மாற்றத்தை
சரிசெய்ய முயற்சி செய்கின்ற
ஒரு மனிதனின் சிந்தனையை
சிந்திக்க வைத்திடா
எதிரியின் சிந்தனையே
ஒரு மாற்றத்தின் அழிவு !!
இதை எதிரிக்கு சமூகம்
சொன்னால் நல்ல
தலைவன் சமூகத்தின்
காவலன் !!
அவள் சிந்தனையை
சற்று தட்டி நிறுத்தியது
அவள் கண்ணம் தொட்டு
விழுந்த மஞ்சல் வண்ண
இலை !!அவள் ஒரு நொடி
நின்று உதிர்ந்த இலை
பார்த்து மௌனமாய் நின்றாள் !
அந்த மௌனத்திற்குள் ஆயிரம்
வார்த்தைகள் ஊமையாய்
உதிர்ந்தது அவளிடமிருந்து !!
இலைக்கு புரியா மௌனம்
இறைவனுக்கு புரியுமென்றே
மீண்டும் நடக்கின்றாள் !!
சுயநலவாதியிடம் அன்பை
தேடாதே
பொதுநலவாதியிடம் உன்
உணர்வை தேடாதே
வறுமையிடம் உன் தகுதியை
தேடாதே
பணக்காரரிடம் உன்னையே
தேடாதே !!!
ஆற்றோரம் அருவி காற்றாட
தோப்புக்குள் சோடிகிளிகள்
காதல் கூத்தாட !
ஒற்றையில் போன மக
நெஞ்ச்சுக்குள் மாமன் நினைப்பு
நெருஞ்சி முள்ளாய் குத்த
அருவி ஓசை வந்து காதோடு
காதல் பேசவில்லை
தென்றல்காற்று இசையாகி
பாட தூண்டவில்லை
தழுவியேடும் கிராமத்து
இசைகள் காதோடு கதைகள்
கூறவில்லை அவள் நிற்க
கால் தழுவிய நீரும்
முட்டிமோதிய மீனும்
அவளின் உணர்வோடு விளையாட
அழைக்கவில்லை
அனாலும் அவள் விழிகள்
மட்டும் மாமனை தேடுது
தானாய் !!நெஞ்ச்சுக்குள்
அவள் பூட்டிவைத்த நினைவுகள்
அவள் விழிகள் தேட பேசுது
அவளோடு !!
போதுமடா சாமி நீ
தந்த வலிகள் !
கொஞ்சம் ஓய்வாய்
இருந்தால் தான் என்ன?
வீழ்ந்து விட்டபின்னும் ஏறி மிதிக்கும்
உந்தன் கால்கள்
மட்டும் கல்லில்லையா ?
எழுந்திடா சிலையே நீ
விழுந்தவள் மேல் நடப்பதெப்படி ?
வீழ்ந்தே கிடந்தாலும் இல்லை
புதைந்தே போனாலும் நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலும்
இல்லை நெற்றிக்கண்ணால்
எரித்தாலும் படைத்தவன் நீயே
என்கேள்விக்குப்பதில் தேடு !!!
உறவை உருவாக்கியவனும் நீயே
மனிதனை குறையாய்
படைத்தவனும் நீயே
மனிதனுக்குள் அரக்கனை
மனிதனாய் நடிக்க வைத்ததும் நீயே
பூவினை காசிக்கிடும் மிருகத்தை
மனிதனாய் காப்பதும் நீயே
நல்லவர்களை கெட்டவர்களாய்
காட்டுவதும் நீயே அறிவின்
கதைவடைத்து மனதின் வழியால்
மனதினை முட்டாளாக்கி
மனிதனை வீழ்த்திடுவதும் நீயே
வீழ்த்த மனிதனின் மேல்
ஏறி நடப்பதும் நீயே !!
நான் தேடும் பதிலும்
என் முன் நிற்கும் குறையும் நீயே !!
நிறைவு இல்லா உலகில்
என்னை குறைகாணும் கண்களின்
பார்வையும் நீயே !!!
கொஞ்சிப்பேசிய
கொஞ்சும் தூறலின்
கொஞ்சும் அழகினை
கொஞ்சமும் ஏற்கா வானவில்
மழைத்தூறலின் மேல்
கோவம் கொண்டு
குடையானது !!
விழுந்து சிதறிய
பனித்துளிகள் பூவின்
முகம் துடைத்து சிதறிய
பண்ணீர்துளிகளாய் அவள்
பாதம் கழுவியபோது
அவள் வாசம் பேசிட
வண்டுகள் கூடிசங்கம்
வளர்க்கின்றது !!
அவள் நிழலுருவத்திற்கு
கிடைத்த நேசம் அவள்
உணர்விற்கு கொடுக்கா
நியமே!! அவள் உயிரில்லா
ஓவியபொம்மையானாள்!!!
என்!
ஒரு !
நிழல் மரத்தையும்
காணோமே
நான் நடக்கும்
பாதையை முன்பே
கணித்த இறைவன்
செய்த சதியோ விதி !!!
ஒவ்வெரு உறவும்
ஒவ்வெறு நிலையில்
விட்டுப்போகும் போது
சொல்லும் பொய்களை
நம்பும் சொல் நேசம் !!
காலம் கடந்து தேடும்
வயது கற்று தரும் பாடம்
உனக்கான வாழ்க்கை
உன்னோடு !!!அன்னை
மகன் உறவானாலும்
தூரம் வரும் வரைதான்
கைகள் !!
மழையின் தூறலில்
விழுந்தெழுந்து
மழைக்காற்றில் அசைந்தாடும்
பூவைப்போல்
அவள் நனைய !அவள்
உடல் குளித்த நீர்
தன் குளிருக்கு அவள்
வெப்பத்தை தன்னோடு
கொண்டு செல்கின்றது மெல்ல !!
அவன்!
தன் வாழ்க்கைக்குள்
அவளை!!
கட்டி போட்டு விட்டு
நினைவினை காதல்
செய்கின்றான்!
அவளோ!!
அவன் வாழ்க்கையின்
ஓரமாய் நின்று
போகும் நாட்களை
வேடிக்கை பார்க்கின்றாள்
இருவர் வாழ்க்கையும்
நாளுகண்களின்
பார்வைக்குள் வாழ்கின்றது !!
பல சடங்க்குக்குள்!!
நாம் நம்மை
கட்டிப் போட் டாலும் !!கட்டிகாத்திட
இரு மனசு தன்னைத்தானே
ஜெயித்தித்திட்டால் தான் !
நம் சடங்குக்குகள் நாம் ஜெக்கின்றோம் !!
தூக்கி சுமந்த வலி
சுகமாய் ஒரு நாளில்
தலைகோதி தூங்க
வைக்கின்கிறது தாயாய் !!
ஏங்கம் கொண்ட விழிகள்
பாசாங்கு செய்கின்றது
தூங்குவது போல்!!
இல்லம் தழைக்க
உறவுநிலைக்க கட்டிக்காத்து
தன்னைத்தானே கட்டிப்போட்டு
ஓடிய உயிருக்கு தெரியா
இல்லத்து மகிழ்சசிகள்!!!
இப்போ !!
இல்லம் நில்லாதே ஓடுது
தனிமனித சுகந்திர
காற்றை தேடி !காமத்தை
வென்ற தந்தை தந்த
பாசம் தந்தையான
தந்தையைக்கும் தாயுக்கும்
குழிபறிக்க !
இல்லம் தேடுது தந்தை தயையை !
தொலைந்த அன்பில் !
விட்டுப்போய்! திரும்பா முடியாமல்
தெருவுக்கு தெரு அழுகின்றது
குழந்தைகள் பாசம் சொல்ல!!
ஒரு பாசக்கதையோடு !!
நாட்களில் நான் காதுகொடுத்து
கேட்டிடா சொல் அப்பா
இப்போ!! காதுகளில் ஒலித்திடும்
சொல்லும் அப்பா!1 நின்று
நிதானிக்க முடியா
நிதானம் அன்றில்லாக்கொடுமைக்குள்
இருந்தும் தேடமால் சொல்லுக்கு
சொல்லு சண்டையிட்டு
புரிந்ததும் புரியாமல்
தொலைத்த உயிர் அப்பா!!!
இதயசிறைக்கதவிற்க்குள்
சிறைவைத்த உயிரின்
இதயம் புரியா துடிப்பிற்குள்
நின்று பேசிய உணர்வு
கேலிபேசிட்டாலும் வலிக்கின்றது
என் புரிதலில்லா காலம் பார்த்து !!
இருந்தும் இப்போதும் என்னை
ஏமாற்ற நானே சொல்லும்
உயிர் ஓசை அப்பா !!!
கண்மூடிதனமான
நம்பிக்கைகளை
கைபிடித்து சேர்ந்தபோது
எல்லா மனிதனும்
ஓன்றை நம்பினான்!!
வெவ்வேறு திசைகள்
வெவ்வேறு
நம்பிக்கைகள்!
வெவ்வேறு பாதைகளாய்
கடந்தமனிதன் !
கண்திறந்த நம்பிக்கைகள்
தனிமனிசுகந்திரம்
பெற்று மூழ்கி தோற்று போகுமோ
மனிதத்தேடலில்
அவள்!
தொலைத்த அப்பாவின்
நிழலை ! நியமில்லா நீ
தருவாய்யென அவள்
செய்த கற்பனைகள் அவளையே
அழித்தது நிஜயம் !!
ஆணுக்கு!!
என்ன தேவையென
பெண்ணை படைத்த
இறைவனை விட அறிந்த
உலகிற்கு பெண்ணிற்கு
என்ன தேவையென விவாதித்தும்
விடைகளை தொலைத்தே
தேடிக்கொண்டே இருக்கின்றது
உலகு !!இந்த உலகிற்குள்
பிறந்த அவளுக்கும் புரியவில்லை
அவளை வைத்து பிழைக்கும்
கற்பனைவாதிகளுக்கும்
தெரியவில்லை தெரிந்ததெல்லாம்
ஒன்றே !!அதுவா
ஒன்றுமே இல்லை
போகும் பாதை போகமுடிய
முற்காடு தான் ஆனால்கைகள் கத்தியானதால்
வலிகள் அதிகமாய் காயத்தை
பார்க்கின்றது !!
அவள் எழுதிய
ஏடுகளில்
கிழித்தெறியப்படட
அவள் சந்தோசங்கள்
இன்னும்
யார்கையிலும் சிக்கவில்லையே
அவள்! இன்னும்
கானல் நீர்
பூந்தோட்டத்திற்குள்
பூப்பறிதே சூடுகின்றாள்
வெண்ணிலா இரவுக்குள்
தூக்கம் தொலைத்து
ஓடும் அவள் சோர்விற்குள்
இல்லா ஒரு துணை
இறைவன்
எழுதிய புத்தகத்தின்
வெள்ளை காகிதத்தின்
வெள்ளை யெழுத்துக்கள்
யாராலும் படிக்க முடியவிடடாலும்
அவள் தனிமை மொழிப்போர்
செய்கின்றது அவளோடு
தேடுது கண்கள்
அவனைப்போல்
ஒரு ஆணை
கோடி கொடுத்தாலும்
கிடைக்காது போடி
என்கின்றதிமிரில்
என்னை கண்டுகொள்ளாமல்
அவன்
கொஞ்சம் மறந்து
விட்டவன் போல் அவன்
சந்தோசமாக இருந்தாலும்
எங்கோ தொலைத்த
சின்ன சின்ன சந்தோஷத்தை
தேடும் குழந்தையாய்
என்னை தேடுவான் !!
அப்போதும் கோவம் மறந்து
நான் சொல்லும் சோகத்தை
முகம் சுழிக்காமல்
மீண்டும் கேட்பான்
புதிதாய் கேட்பது போல்
நடித்தே !!இருக்கும் போதும்
விழும் போதும் விலகினாலும்
வலிக்கும் நேரத்தில்
சொல்லாமல் புரிந்த உறவு
எப்போதும் அவன் தான் !!!
நிலைத்த நினைவிற்குள்
நினைக்கும் நினைவினை
நிலையென மட்டும் வைத்த
நினைவிற்கு சொல்லிப்போ
கொடுமையாக கொல்லும்
விசம் நான் தானடி உனக்கு என்றும் !!!
விழியின் தோல்வியில்
தூக்கம் துக்கமானது
வயதின் தோல்வியில்
ஏக்கம் எழுந்து நடக்கின்றது
வறுமையின் தோல்வியில்
வறட்சியின் கனவு
வாசலில் பூசணி பூ
வைக்கின்றது
அயல் வாசல் கதவின்
முன் யாசகம் கேட்டிடும்
அறிவின் முதிர்ச்சி !!தன்
வாசலில் ஒரு மனிதனையும்
தலைவனாய் அங்கிகரிக்கா
அகங்காரத்தின் வீழ்ச்சி
இங்கே !!ஒரு
இனம் பேசும் அறிவு
தனிமனித தாக்குதலுக்குள்
ஒரு தலைவனும் தோன்ற
இனத்தின் தோல்வி !!வார்த்தைகளுக்குள்
மாயாயலம் ஏழையின் கனவிற்குள்
உணவு !அடிவயிரோ வலியில் !!
பேசிப்பேசி அழித்த பெருமை
நம்மையே சாரும் !!
மனமென்னும் !!
சாக்கடைக்குள் விஷச்செடிகளை
நட்டுவிடும் அறிவிற்கு
தெரியாமல் போகின்றது
உயிரை!!
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும் விஷத்தையே
மனதிற்குள் பதியம் போட்டு
வார்க்கின்ற கொடுமையை
தடுக்கின்ற ஆயுதமே தானென !!
கழிவறைகளிவோடு நின்று
கழிவிய கழிவறை பணத்தில்
பெருமைகொள் சமூகம்
ஒன்று !! பணத்தால் தன்
சாதிதொலைத்து சாதிபெருமை
பேசும் சிறப்பை கிராமத்து
பெண்ணிவள்!புன்னையோடு
வேடிக்கை கொள்கின்றாள்!
இருக்கும் !இல்லாமலும் இருக்கும்
ஒன்று இருக்க தேடும்
வேடம் சிறப்பாக
மனிதனிடம் இல்லாமல்
போகா ஒன்றை பார்த்து
பெருமை கொள்கின்றது !!
தெருவிளக்கு இல்லா
தெருவுக்குள் நான்
நிலவொளியில்
நடகையில் என்
மனசு கையில் பிடித்த
கற்பனை மாமன் மனசு!!
மாமா!! நீயில்லா !
அலங்கராவிளக்கொளியில்
நான் நடக்கையில் நான்
கைப்பிடித்த மனசு நீயென்றாலும்
கொஞ்சம் அச்சம் பட்டு
தவிப்பதேன் மாமா !!நீயில்லா
இவ்வுலகம் இருள்நிறைந்த
பாதையென்பதாலா !
வீரத்தாலட்டின்!
வீரமங்கை களமாடிய
களத்தென்றல்!
வீசும்மூச்சுக்குள் மூச்சாகியே
மறுபிறவியெடுத்தே
நடந்தபெண்ணின் துணிவிற்குள்
சிக்கித்தள்ளாடு வீரம்
மறுபிறவிகேட்டு !இது
பணம் கொடுத்த
மோகமென்றாலும்
விழுந்த மண்ணில் விழுந்த
உதிரம் இன்னும் மழைகாற்றால்
கழுவிமுடித்திடவில்லையென்பதே
நியம்!!
இருப்பவனுக்கு !
இழப்பின்மீது பயம் !
இழந்தவனுக்கு
தன்மீதி பயம் !
எல்லாம் !
வெறுத்தவனுக்கு எதன்
மீதும் பயமில்லை !
அவனை!!நம்பினால்
இழந்து விடுவோம் என்ற
பயமே பயந்து
காட்டிக்கொடுக்கின்றது
இழந்திட விருப்பாதவனே
எதிரியாகின்றான் என்று !!!
வளர்ச்ச்சியை
அறிய விருப்பினால்!!
உன் சிக்கல்களை கூறிப்பார்
தீர்வை வைத்தே உன்மீதே
உனக்கு நம்பிக்கை வரும் !!
ஒன்றை தீர்வுக்கு
ஒருமுறை அல்ல
பலமுறை சிந்தித்தாலும்
கிடைக்கா ஒரு பதில்
இல்லத்தரசிக்கே
சொந்தமான கேள்வி !!
ஒருமுறை அல்ல பலமுறை
கேட்டாலும்
கொடுக்கா வரமும் அவள்
சுமக்கும் மனதின்
சுமைகளின் கேள்விக்கே
வலி !!!
மாமன் கைபிடித்து
மாமர நிழலுக்குள்
அவள் பேசிய காலம்
ஒரு மாமரப்பூவின்
உதிர்வை கூட
ஏற்க மறுக்கின்றது !
மாமன் பறித்து
அவள் உண்ட மாங்கனிகள்
சுவையாய் தித்திப்பாய்
மாமன் இருந்தாலோ !!
சின்ன சின்ன சந்தோஷமே!
வாழ்க்கையென்னும்
அவளுக்குள் !!
பெரிய பெரிய கனவுகள்
அவளை கேட்காமலேயே
அவள் விழிகளுக்குள்
வந்து வந்து போகின்றது !!
பாதி உண்டு மீதிக்கு ஏங்கி
ஏழ்மையருக்குள்
வறுமையைக்கற்று
ஏழ்மைதாய்யின் வறுமையின்
நாட்களுக்குள் விழுந்து எழுத்து
தவழ்ந்து நடந்த மனிதன்
ஏழ்மையின் வாழ்வை அழித்து
பெருமைகொள்ளும் சமூக நீதி
சிந்தனையை! மனிதனுக்குள்
வித்திடும் சுகந்திரத்தை
கற்றிட ஒரு வரலாறு எழுதும்
தலைவனை கொண்டாடி
சமூகம் கற்றுக்கொள்கின்றது!
தனது வாழ்வை காத்திட
அடுத்தவன் அழிவில்
தன்னை தலைவனாக்கிடும்
சமூக கொள்கையை!!
கோடி இன்னல்களின்
நடுவே கொஞ்சமும் அச்சமில்லாதே
பூவான பெண்மை
கொஞ்சிபேசிடும்
கோழை மனிதனிடம்
மட்டும் வார்த்தைகளில்
விழுது விடுக்கின்றதே
கொஞ்சமும் யோசிக்காதே
இங்கே அறிவை வெல்லும்
ஆயுதம் எது
தேடித்தேடி பார்க்கின்றேன்
இதுவரை சிக்கவில்லை
மனசின் சிறைக்குள்
அடைக்கப்படட உணர்வின்
மாயயாலத்தின் மர்மங்களின்
பக்கங்கள் கோடுபோட்டதும்
பொய்யே !!
அன்பெதுவான
தேடிப்பார்த்தேன்
யாரிடமும் கிடைக்கவில்லை
நான் தேடிய அன்பு !அன்பை
கேட்டேன் அன்பிடமே!
அன்பு கண்ணீரோடு
சொன்னது நீகொடுத்து
நீ தேடும் நான் தொலைந்த
இடமே அன்பு !உன் வீட்டில்
அழகான ஒளியின் வெளிச்சம்
ஊர்பரவ ஊர்பேசும் உன்
வீட்டில் உன் கண்களின்
ஏக்கம் நான்னென !நான்
தேடும் நீயும் நீதேடும்
நானும் தொலைக்கப்பட்ட
பெண்மையை !தேடாத
சமூகத்தின் வீரமென்றது !
கற்பனை தேடும்
கனவுக்குள் பெண்மையழகு
ஆண்மைக்கண்ட கல்லுக்குள்லும்
பெண்மையழகு
வாழ்கை கண்ட உயிருக்குள்
மட்டும் பெண்மை அழகை
கண்ணீர்குடிக்கின்றது
நிலைகொள்ளா வேலைகளை
நிலையில்லா உயரத்தில்
வைத்து! நிலையில்லாமல்
நின்றுகொண்டு
நிற்கும் உறவுகளை
நிலைமாற செய்துவிட்டு
நிலைக்கும் கற்பனைக்குள்
நீயும் நானும் பேசும்
வார்த்தைகள் எனறும்
போலிமுகம்கொண்ட
விம்பத்தின் அழகே !
இங்கே நாம் தொலைத்து
தேடும் வாழ்விற்க்குள்
அன்பே தோடும் பொருளானால்
காதல் எப்படி வாழும்
வாழ்க்கையாகும் !
யாரோ எழுதிய கற்பனைக்குள்
யாரோ தொலைத்த காதலை
நாமும் இன்னும் எதுவென
தெரியாமலே தேடிக்கொண்டே
இருக்கின்றோம் !அன்பேயில்லாமல் !!
உதிரம் பாய்ந்தோடிய
நிலமகள் மேனிதனில்
துறவறம் கொண்டதுவோ
உணர்ச்சிகள் !
குடித்த உதிரத்தில் நிலமகள்
செழிக்க வான் சிந்திய
கண்ணீர்த்துளிகளில்
முளைக்கவில்லையோ
விதைகள்
இன்னும் காரணம் காரணம்
தேடும் பலிகளின் விழிகளில்
சுயநலம் பிரிக்கின்றதோ
உறவுகளின் உணர்வுகளை
காலம் சொல்லும் கதைக்களத்தில்
இன்னும் மீதியுள்ளது
சேர்த்திட முடியா
தோல்விகளால் நிலமகளை
மூடிய உதிரத்தின்
வண்ணங்களே !!
செல்லமாய்!
செல்லம் கொஞ்ச
செல்வமாய்!
நாங்கள் வந்தோம்
அப்பாவின் கைகளுக்குள் !!
அன்பின் !மொழிக்கேட்டு
அன்பென்னும் !
கூட்டுக்குள் செல்லசிட்டுகளாய்
சிறகடித்தே பறந்த நாம்
பரந்த வான்கடைந்து தூரதேசத்து
துரமானாலும்!
நிழல் குடையின் வடத்திற்குள்
கூடிப்பேசி சிரித்து மகிழும்
சொர்க்க வாசல் அப்பா !
கோவம் வரும் கூடவே அம்மா
குரலும் வரும் பின்னே !
பிரிவுகள் பிரித்தாலும்
பிரிக்கமுடியா இல்லம்
அப்பா !
இன்று அவருக்கு
பிள்ளைகள் ஒன்றுகூடி
சின்ன விழா
நான் தூரம் நின்று
ரசித்தது வியக்கின்றேன்!
அவரை ! அவர்
மகிழ்வை கண்டு வியக்கின்றது
விழிகள் !
ஆனாலும் !
மகள்களை மறக்கடித்த
மருமக்களுக்கு என் இதயத்தால்
நன்றிகள் கோடி !!!கூடியகைகளுக்குள்
கொடுத்த வரம் அவர்களே !!!
நாம் செய்யும் செயலின்
அர்த்தங்கள் நமக்கானசந்தோஷத்தை தருவதால் தான்
அதில் மற்றவரின் சந்தோஷங்கள்
சேர்ந்திருப்பது புரியாமல்
போகின்றது !அதனால் தான்
நமக்கான சந்தோஷத்தேடலில்
மற்றவரை தொலைத்து
விட்டது தெரியாமல்
வாழ்கின்றோம் !!
மாட்டிக்கொண்ட
புள்ளிமான் துள்ளியோடி
அள்ளிக்கொள்ள கைகள்
நீட்டிய போதே
தெரிந்தது இது
மாயாவுலகென்று சந்தமில்லாமல்
காட்டுக்குள் திரும்பியது
மாயாவுலத்து வெளிச்சத்தைவிட
காட்டின் இருள் அழகென்று !
காப்பாற்றும் கைகள்
கிடைத்தால் போராடும்
நிமிடங்கள் அழகு
சோர்வுகளை தோற்கடி
கைப்பிடிக்கும் கைகளுக்கு
தெரியும் மனதின் வலி !
தெரியாமல் மாட்டிக்கொண்ட
மனதிற்கு கண்ணீரே
கைகள் !!
உயிர்நோக
அடித்து விட்டு
உயிரே நீயென சொல்லும்
வார்த்தைக்குள்
உயிருக்குமென
நம்பிட சொல்லும்
நம்பிக்கையே
உயிர் குடிக்கும் விஷம் !!
விஷமான வாழ்க்கைக்குள்
இனிப்பான சொற்கள்
வாழ்ந்திடாதுடிக்காது !!மரணித்த
பின் சூட்டப்படும் மாலைக்கு
கிடைக்கும் அழகே
வார்த்தையின் நிதர்சனம் !!
புரியாமல் புரிந்தது போல்
எதர்க்கவும் நடிக்கலாம்
ஆனால் வாழ்க்கைக்கு இது
உதவாத உதாரணம் !!