Showing posts with label விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்........................ Show all posts
Showing posts with label விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்........................ Show all posts

Monday, 31 August 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................

ஆற்றோரம்  அருவி காற்றாட  



தோப்புக்குள்  சோடிகிளிகள் 

காதல் கூத்தாட !

 ஒற்றையில்  போன மக 

நெஞ்ச்சுக்குள் மாமன் நினைப்பு 

நெருஞ்சி  முள்ளாய்  குத்த 

அருவி ஓசை  வந்து   காதோடு 

 காதல்  பேசவில்லை 

தென்றல்காற்று இசையாகி 

பாட  தூண்டவில்லை 

தழுவியேடும்  கிராமத்து 

இசைகள்  காதோடு  கதைகள் 

கூறவில்லை  அவள் நிற்க 

கால் தழுவிய  நீரும் 

முட்டிமோதிய  மீனும் 

அவளின்  உணர்வோடு  விளையாட 

அழைக்கவில்லை  

அனாலும்  அவள்  விழிகள் 

மட்டும்  மாமனை  தேடுது 

தானாய் !!நெஞ்ச்சுக்குள் 

அவள்  பூட்டிவைத்த  நினைவுகள் 

அவள்  விழிகள்  தேட பேசுது 

அவளோடு !!


Friday, 31 July 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 தெருவிளக்கு  இல்லா 

தெருவுக்குள்  நான் 

 நிலவொளியில் 

நடகையில்  என்  

 மனசு கையில் பிடித்த 

கற்பனை  மாமன்   மனசு!!

மாமா!!  நீயில்லா !

அலங்கராவிளக்கொளியில் 

நான் நடக்கையில் நான் 

கைப்பிடித்த  மனசு  நீயென்றாலும் 

கொஞ்சம் அச்சம் பட்டு 

தவிப்பதேன் மாமா !!நீயில்லா 

இவ்வுலகம் இருள்நிறைந்த 

பாதையென்பதாலா !

Friday, 22 May 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

அத்திப்பூ சிகப்பழகில் 

ஆதவன்  முகில்குளிக்க 

பவளமல்லி வாசத்தில் 

மாமன் தோப்புக்குள் என் 

மனசு  தான்  குளிக்க 

வெட்டிக்கொண்டு ஓடுது 

ஆத்துநீருக்குள்  கயல்விழி 

கட்டிப்போட முடியாமல்  !!

எட்டுத்தொட்டு  எடுத்து 

பதுங்கி நிக்கின்றது கால்கள் 

மாமன்  அழகில் !

கொட்டி கிடக்கின்றது வேர்வை 

எடுத்து விதைக்கும்  விதைநெல் போல் !!


 

Wednesday, 11 June 2025

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாமனுக்குள்  நான் 

பூத்த  வாசம்  வென்று 

எழுந்திட  மண்ணில் 

இல்லை  ஒரு  வாசம் !!

மாமன் தந்த மனசை     

வென்று  பூத்திட

  எங்குதேடினாலும்  

 இல்லை  ஒரு  இதயம் 

மண்ணில்! 

அப்பா அன்பை   

வென்று  மாமன் 

கொடுத்த  காதலில்  எரிந்த 

பூவின்  சாம்பலில் 

மிஞ்சிய  செலவு மாமன் 

நினைவு !!!




Tuesday, 1 October 2024

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாமன்  கைபிடித்து 

மாந்தோப்பு   காற்றாட 

மெல்ல  நடக்கையில் 

மல்லிகை பூக்கள் 

கண் பட்டு  நிலமுகம் 

ஏன் புன்னகைக்கு 

தனியாய்!  விழுந்த 

நிழலுக்குள்  ஏழுந்த  சிற்பம்  

பார்த்தலோ !!!இல்லை 

உதிரும்   பூக்கள்  ஏங்கியே 

வாடிச்செல்லாக் கோவம் 

கொண்டு விழுவதாலா  ! இல்லை 

மாமான் கொஞ்சிடும்  

கொஞ்சல்  மொழி  கேட்டதலா..... !



Wednesday, 14 August 2024

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாலைக்குள்   மலர்கள் 

 பூத்தது  உனக்காச்சி 

மாமா !

 வெள்ளிக்கொலுசு ஒலி 

 உன்னால் என்னைப்போல்  

 சிணுங்குது மாமா !!

தென்றலுக்குள்   என்  வாசம்  

உன்  வசமாய்  காலந்து நழுவு 

மாமா! 

 தலையணையை  அணைக்கையில் 

  கூட உன்னைபோல்  நடிக்குது  

மாமா !!

கூந்தால் பட்டு  சிதறிய நீர்

உன் நெஞ்சம் பட்டு  குளிருது 

மாமா !! விடியல் வந்து 

தூக்கம் கெடுத்து  எழும்பியோட 

சொல்லுது மாமா !!

ஆடிக்கற்று  வெப்பத்தில் 

வேர்வைத்துளி போல் 

வேண்டாமென்றாலும்  தானாய் 

பூக்குது  மாமா !!!
 



Tuesday, 26 March 2024

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 எதையெடுத்தும்  நான் கொடுக்கவில்லை 

மாமா 

நான் கற்பனையுலகவானில் 

பறக்கவில்லை  மாமா  

நீ தந்த நான்

உன்னோடு பிறந்திறந்து

காலக்காகிதமாய்

நினைவுக்குள் மறைந்தே

போனோம் மாமா

இருந்தும் 

 அக்கம்பக்கம்

அவரவர் கொடுப்பதை  நாமாய்

சும்மா கொடுக்க சுகமாய்

இருக்கு மாமா கேட்டாலும்

கிடைக்காது நீயில்லா 

நான் மாமா !!1


Wednesday, 7 February 2024

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,


 அழகான நாட்களை 

உருவக்கத்துடிக்கின்றேன்

 ஆயுட்காலம் இழந்தபூவாய்

ஒரு சிலர் கையை பிடித்து

நடக்க ஆசை கொள்கிறேன்

முடிந்து போன பாதையில்

நின்றுகொண்டு !

 மாமன் இதயத்துடிப்பை 

கேட்க நினைகின்றேன்

எரிந்த சாம்பலின் முன் 

முடியாதென கூறும்

 இறைவன் முன்  

ஒற்றை பூவை வைக்கின்றான் 

நினைவு பேசும் மொழிகேட்டு!!1


Monday, 25 December 2023

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

மாமன் நெஞ்சுக்குள் வாழும்

இந்த கூண்டுக்கிளி

மாமன் உயிரை தன்


 நெஞ்சுக்குள் சுமந்த்து

மாமனை நினைவிற்குள் தன்னை  

 வைத்து தன்னை  

வடித்தால் ஒவியமாய்!

Sunday, 29 October 2023

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 இங்கே !!

இல்லை மாமா  நான் 

எங்கே!! 

எடுத்துச்சென்றாய் 

என்னை!

எங்கையும் காணேமாமே  

நம்மை!

யார்  யாரே 

தேடிப்பார்த்தும்  

இல்லையென்று  

சொல்லியழைக்க 

நாம் மட்டும் 

 என்னவானோம் !!

ஒற்றை உயிரெடுத்து

எந்தன்  இதயம் சுமந்து  

ஓருமுறை கனவுக்குள் 

பேசிட  வா மாமா!!

கற்பனைக்குள் 

நம்மை  கண்டு  வந்த 

கண்களுக்கு

ஒற்றை உயிர்வாசம் 

பேசும்  நாமே  

வாழ்வின் தேடலாக 

வாமா மா !!!


Friday, 16 June 2023

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 என் பூந்தோட்டதிற்குள்



 ஓர் வாசம் 

என் நாசித்தூவரங்கள்

கேலிபேசும் வாசம்

என் பூக்கள்

தோற்றே தலைகுணியும்

 வாசம்

என் மாமன் 

 சேற்றோடு வேர்வைக்குளியிட்டு

கம்பீரமாய் நடக்கும் 

வாசம்

எனக்கு மட்டுமே பிடித்தவாசம்!!!


Monday, 3 April 2023

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 சித்திரைப்பெண்னிவள்

சிற்றிடை சுற்றிய பட்டுடை

பட்டெளியில் நித்திரை போனது

மாமனுக்கு !!

 சிந்தைக்குள்  வந்தவள் 

முகம் சிந்திய புன்னகையில்

நிலவெளி வெறுத்தது 

மாமனுக்கு!

வெட்டிய நெற்கதிர் 

குத்தியே

சமைத்த சோற்றிக்குள் 

கைகள் கோலபோட்டிட 

அத்தையவள்

உருட்டியவிழிகளுக்குள் 

உருண்டெழுந்து மாமன்  

உண்டதென்னவே அவள்

நினைப்பதைத்தான் !!!




Friday, 22 April 2022

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 வீசும் காற்றில் 

சிக்கிக்கொண்ட

ஓற்றைப்பூ   இது. !

 பற்றிக்கொள்ளபக்கமில்லா 

வெட்டவெளியில் மாட்டிக்கொண்ட 

ஒற்றைப் பூ இது !!

அச்சம் கொஞ்சம் 

பயமும்கொஞ்சம்  கொண்டு 

தடுமாறிடும்  ஒற்றைப்பூ  இது !!

வேகம் கண்டு   விவேகம் 

இழந்து பயந்து 

தவிந்து தடுமாறியே 

விழுந்த ஒற்றைப்பூ  இது !!!

வேகம்  பட்ட காயத்திற்கு 

மாமான் கையால்

மருந்தை  பூசிக்கொண்ட

மரணம்ப்பூவிது!!

காலத்தை கடந்து 

கயவரையறிந்தும்

தீயிற்க்குள் தன்னை 

சுட்டபூவிது !!

கொஞ்சம் மெளனித்திட
து

போதும் காயமென்று!!!



Tuesday, 5 April 2022

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாமனேட தோல்சாய்ந்து



வானத்து நிலவேடு 

உறவாடிய நிமிடங்கள் 

கார்காலகாற்றாகி 

மழையேடு கரைந்து தான் 

ஓடியதோ!!

 வடிந்தோடிய நீர்போல்

படித்திருக்கு நெஞ்சக்குழிக்குள்!1

அச்சாரல்  பட்டதால்  

முத்தாரம் கேட்ட

முகத்தோரம் இன்னும்   கொஞ்சம்

மிஞ்சிக்கிடக்கும்சிகப்பழகு

கண்குழிக்குள் பூக்கின்றது  

மாமன் நினைப்பாகி!

மாமன் மூச்சோரத்தென்றலின்

வெப்பத்தில் என்  கூந்தல் 

காய்ந்த  நாட்களை

நானும்  தோற்றாடி தொலைத்ததாய்

 சொல்லுதே கரு வானம்!!

மாமன் கையேடு கைப்பிடிக்குள்

பூத்திட்ட காதல் பூவிற்கே

 வெட்கம் வர !!

 காலத்தின் காவியத்தில்

விதியென்று எழுதியதே  மாயத்தை

மண்ணில் உயிர் வாட

மரணம் மாலைபோட 

காகிபூவிற்கு1

வண்ணம் தொலைத்தைபோல்

தொலைந்தது  கனவுக்காதல்!!!!








Sunday, 26 December 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................

 மாமனை   இழந்த 

 மரிக்கொழுந்து

தனியாய் வாடுது உல்லாசமற்று  

உறக்கமிழந்தமரிக்கொழுந்து 

விழிப்பில் அழுகின்றது


தனிமைகண்டு  

இறந்திடவும் முடியமால் 

 உறங்கிடவும் முடியாமல் 

மாமன் நினைப்பு மாயைக்குள் 

தவித்து நிக்கும் மரிக்கொழுந்தை  

வீனாய்ஏக்கம் தானாய் கொல்லாமா

மாமன் மரணித்தபின்னும் !!!

Thursday, 2 December 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாமன் தோப்பு  ஊஞ்சல் 

மாமன் மாடத்து துளசி  

வண்ணமயில் நடை

மல்லிகைகொடியாடும் பந்தல்  

சண்டையிட்டு கேள்வி கேட்க்க கிளி

கொஞ்சி பேசும் மைனா  

வயலேடு பேசும் தென்றல் 

அருவிபோல் ஓடும் நீர் 

அதனேடு  துள்ளி  குதிக்கும்மீன்கள்

  அமதியை உடைக்கும் 

வேலையாட்கள் 

அதனையும் வேடிக்கை பார்க்கும்

சின்னஞ்சிறார்கள் 

அடிக்கடியழும் கணக்கபிள்ளை

கம்பீரம் தோற்கும் மாமன் நடை

கண்களும் ஏங்கும் ஆண்மை 

கரடுமுரடு பேச்சு ஆனாலும்

கவியாய்  மாறும் ஓருத்தியேடு மட்டும்

அழகாய் தேற்கும்  பார்வை  

அயிரம் பேர் நடுவிலும் தெரியும்  உணர்வு 

சொல்லியும்புரியாக்காதல்

சொல்லாதே  பிறந்தத பிறப்பு

கேட்கமல்  துடைக்கும் கைகள்

கொஞ்சம் துவண்டால் துடிக்கும் இதயம்

பார்க்காமல்  தேடாமல் பேசாமல் 

இருக்கா மனசு 

அவள் உயிரை மட்டும் சுமக்கும் உடல்

யார் கடந்தும்  மாறா காதல் 

மாமன் தோப்புக்கு அழகு 

அவள் வாயாடும் வார்த்தைக்குள்

மாமன் வாழும் புன்னகையின் அழகே!!

மானின் அவள்!!!





Sunday, 24 October 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 பந்தபாசங்களில் 

 நம்பிக்கையில்லாதவள்

ஆழ்மன பொக்‌கிஷம்

 அவள்  மாமன் தானே!

ஆழ்ந்த உறக்கத்தின்

 கனவாகியே  அவள் 

தூக்கத்தை கெடுத்தே

எழுப்பிடும்  காதலும் 

  மாமன்தானோ !வழிந்தோடும்  

விழித்துளி வழிநீர் 

நீர்துளிவிம்பமாகி 

விழும் துளி  ஏந்தியே 

துடைத்திட கிடைத்திட்ட கரம்

மாமன் அவன்  காரமோ !

நிஜமற்று போன

அவள்  வாழ்க்கையில் 

நிழலான  கனவின் 

 உயிர்த்துடிப்பாய் 

துடிக்கும்   அவள் உயிர் 

மாமன்  தானோ !!


Tuesday, 19 October 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 கட்டுமரம் கடலையை கிழிக்க



மாமன்  கட்டிவைத்த ஆசை 

அலையோசை  கிழிக்க 

மாமன் கட்டுடல் கம்பீரத்தில் 

 கண்ணம்மா கற்பனையும்

 திமிராச்சி  !!!விடிகாலை 

முகம் குளிக்க !மல்லிகை பூ

பூத்த வாசத்தில்மாமன்  

கொஞ்சம்  குளிக்க! 

தான் தூங்கா விழி   ஏக்கம் 

 கண்ணம்மா வைச்ச பார்வை 

  நம்பிக்கைக்கு !!  மாமன் கைதுடுப்பாச்சி 

ஆதவன் துயில் கொள்ளும்

இருளுக்கு இருமனயெளியாச்சி  

நீரின் ஓசை அடங்கிட 

கண்ணமாவுடல் யாரும் வடிக்காமல் 

கற்சிலையாச்சி அந்த

கற்சிலையுள்  கண்ணிரெண்டும்

உயிர்கொண்டெழுந்து

ஏக்கமாய்  காத்திருக்கு  மாமன்

வரும் வரை !!

Saturday, 18 September 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 இரவு! என்னைத்தாலாட்ட 



என் மாமன் 

ஏனோ என்னை மறக்க

உறக்கத்தொலைத்த 

விழியே !என் 

மாமனைத்தோடாதே

உறங்காங்க  தேடும் கனவே 

என் கண்களை  கேளாதே

கற்பனையாய்  வடித்த !!

  என் மதியையே 

மாமன்  முகம்  காட்டி 

என்னை  மயக்காதே

இருளே!!

 என் விடியலை  தொலைக்காதே

மாமனே!!

 உன் உயிரை நோகதே!!!

Friday, 19 March 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 எங்கே !இவள்  மாமன்!!

 இங்கே 

இவள் காத்திருக்க

 இளமை தொலைந்திருக்க

முதுமை  உடலை  தொட்டிருக்க

 தொலைவில் ஓரு செய்தி

 தொலையாமல்  காதோரம் 

கேட்டிருக்க 

 இருவிழி இரவோடு 

 தவமிருக்க

தலையோடு வெண்பனி 

 பூத்திருக்க 

அலைமோதும் ஆசைகள் 

அலையாதே கூன் விழுந்து 

வில்லாக வளைந்திருக்க 

விடியலில் மாமன் வந்திடுவானென 

உதயத்தைத்தேடி இவள் 

உயிரைக் கைபிடித்தே 

காத்திருக்கின்றாள்!!!

மல்லிகையும் மணமிழக்க 


ரோஜா இதழ்சுருங்க

உயிர்தெரியா காகிதப்பூப்போல!!!