Wednesday 27 February 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

கனவச்சிறகு

பறந்த வேகத்தில் உதிர்த்த
கனவை எடுத்த வேகத்தில்
அழித்தது விதி

கொடுத்த அரும்பைக்கொண்டிடா
கொடியவாழ்வை  படைத்தது  விதி

இருந்த உறவை மிருமாக்கி
பிரித்து திரித்து பெருமைபேசி
புதிய பாதை கொடுத்தது விதி

இழந்த வாழ்வை  அழித்த உறவை
கருணையோடு  காத்தத விதி

காத்த உறவை தீயிலிட்டு
தனிமைக்கொடுமை தந்தது விதி

நலிந்த போதும் நலியாது
நாளும் பொழுதும்  துரத்தும் விதி

நாதியற்று தவிக்கும் போதும்
நாலுபக்கமாய் நிற்கும்  விதி

மரணம் ஒன்றோ நின்மதியென
உணர்ந்த போதும் தடுத்து காக்கும் விதி!!!!!

Friday 22 February 2013

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

காலத்தை மரணத்திடம்
கொடுத்து விட்டு
அரக்கனிடம் நாயத்தை தேடி
நாதியற்று நின்று கொண்டு
நாடிதுடிக்க கதைபேசி
வாழ்வதால் என்னலாபம்

வீழ்பதும் எழுவதும்
நாமாகும் போது வீழ்ந்தே கிடந்தால்
வாழ்வது யாரு வாழ்வுமது ஏது

கேலிபேசி கேலிபேசி
வாழ்வது நமக்கு கேள்வியாகி
போனபின் இன்னும் மண்ணுக்குள்
தேடித்தேடி சொன்னாலும்
மாறுமா எம் மனம் தேடுமா புதுயுகம்

ஆடை அணிகலன் அடுத்த  வீட்டாருடன்
அதிகபடி தேடி அணிந்து பெருமை பேசி
நாகரிகத்தேடலில் புதுமை காணும்
எம் புதிய பாதைக்கு  அடுத்தவர்
ஆவி போனாலென்ன   சாமியே போனாலென்ன

நம் வாழ்வில் நாம்காணும் இன்பம்
மற்றவர் காணவரை துன்பமில்லை

எழுச்சி பிறக்க அங்கங்கே
எழுந்து பேசி பயனில்லை எழுது கருவறை
தொடக்கம் கல்லறைவரை  விடுதலை காற்றின்
வெப்பத்தை  சொல்லட்டும்  குழந்தை வரை
கிழவர் வரை இது தான் தேவையென்று

பிரிந்து பிரிந்து கிடந்த மனதில் எழுப்பு
 தனக்காய் ஓர் விடுலைத்தேடலை
இது முடியாதென நினைத்து கொண்டு
விடுதலை தேடினால் கடசிவரை தேடலே  மிச்சும்!!!!

Wednesday 6 February 2013

இரு இதயம்

உன் மகிழ்ச்சிகளில்
நான் தொலைவாகின்றேன்
உன் சோகங்களில்
நான் அருகமர்கின்றேன்
உன் தேவைகளில்
நான்  நீயாகின்றேன்
உன் சோர்வுகளில்
நான் நிழலாகின்றேன்
உன் ஆசைகளில்
தொலைவாகின்றாய்
என் மகிழ்ச்சிகளில்
 துயரங்களாகின்றாய்
என் கனவுகளில்
வேடிக்கையாகின்றாய்
இருந்தும்   நமக்குள் பிணைப்பு!!
நாமாய் நாம் வாழ
ஆண்மையா பெண்மையா
தடையென எண்ணிய
தேடலில்  ஆண்டுகள் கடந்து
மி
ஞ்சியது சொல்லறித இரு இதயமே!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


காதல்கொண்டாலும்
 தன்னைமறந்திடாபெண்ணிவள்
சதிகொண்ட   விதியற்று
இணையோடு  துணையாக
யென்மத்து பந்ததில்   இணைந்தவள் !!

கணப்பொழுதும்  பிரிவை
பிரிய முடியாது தவிந்தாலும்
பிரிவிற்கே சொந்தமானவள்விதியின்
பாவத்தின்கணக்கானதால்

காமத்தீயுக்குள் உணர்வுகள் தன்னலமாய்
எரிந்தபோது  தன்னைக்கல்லாய்யெடுத்து
உளியின் கூரால் சிலையாய் வடிதே
உணர்வைக்கொன்று மீராவானாள்

மற்றவர்வாழ்விற்காய் புன்னகை
செய்தவள்
வாழ்வை வாழத்தெரிந்தபோதும்
தன்வழி பாதைக்குள் முள்ளாய்
மௌனமானாள்!!

தன்னைத்தான் காக்கத்தெரிந்தவள்
 ஏமாற்றுக்காரர்களின் அவமானத்தையும்
தன்மானதோடு காத்தே வாழவைத்தாள்

தனக்காய் மற்றவர் வாழ்வை
 அழித்திடாது காத்திட தன்  வாழ்கைக்கு
விலகிட்டே தன்னை சிறையிட்டாள்

பிறந்த பிறப்பை புரிந்தவள்
பிறப்பை கெடுப்பவனை நேசிக்காமல்
வெறுத்தால் தனித்தே நின்றாள்

பிறப்பிற்காய் அழாதவள்
இருக்கும் நாட்களை வீணடிப்பர்களை
மட்டும்  மன்னிக்காது வெறுத்தால்
வனதிற்குள் வானம்பாடியானாள்!!
தன்னிற்கு பெருமையாக மனிதனை  காணப்
பிடிக்காது!!