Thursday 18 April 2013

ராதையின் விழி பேசும் சாரல்,


ராதையிவள் கண்ணின்
மொழிநடையழகில் கவியெடுத்து
கண்ணன் குழலிசையின்
மெட்டென்றை பாட்டாய்
சட்டென தொட்டு விட!
காதலாலால் தென்றல்
பட்டென இசையாய் இதழ்விரிக்க!
கருவிழி கவியழகை  ராதை
நடையழகு இடைதொட்ட
நாட்டியம் தாள நடையழகில்
பதம் பிடித்து  சிற்பி செதுக்கா
ஒவியமாய்காதல்க் கதையொன்றை கண்ணன்
மொழியழகுத் தமிழாய் இசையோடு
இணைநடையழகில்  காதல் உணர்வழகு
ஊமை மொழியழகில் குரல்ழகாய்
அலையழகில் ஒளிக்க!
பசுவோடு புல்லும்  பசியேின்றி
கண்ணன் இசைகேட்டு
நிற்கின்றது  அசையாது.............


Wednesday 17 April 2013

இளந்தளிர் அகவை1



எதிர்எதிர் திசையில்
எதிரியாய் நிற்காது
ஒற்றை நிழல் குடையின் கீழ்
இளையோர் நாம் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!

சிதறிய மனிதர்களை சோர்த்து
ஓடிய மனிமர்களை தடுத்து
அறிவுள்ள மனிதர்களை அருகமர்த்தி
இளையோர் நாம் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!

இளமைத்துள்ளளோடு
பண்பாட்டை காத்திட
தமிழ்த்தாய்பிள்ளைகள் நாம்
தமிழுக்காய் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!

சங்கத்தமிழ்காத்த தமிழினம்
சங்கறுத்தாலும்வீழ்த்திடாதென
சங்க தமிழனாய் சங்கம் வைத்து தமிழ்காக்க
இளையோர் நாம் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!


சுற்றி நின்று பகை சுட்டாலும்
சுடுகாட்டு சாப்பலாய் போனாலும்
சாம்பலில் இருந்து உயிர்த்து
இளையோர் நாம் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!


அஞ்சும் தமிழினத்தின் அச்சம் களைந்து
அச்சமில்லா  அஞ்சாமை ச்சுடராய்
சிந்தனை தெளிவோடு ஓறைஓளிதீபங்களாய்
சற்றும் தயங்காது  இளையோர் நாம்
 எழுகின்றோம் எம்மண்ணின் ஒளித்தீபங்களாய்

Monday 8 April 2013

இனிமை

காலத்தின் வறட்சி
வாழ்கையின் வசந்தம்
தேடலின் தொலைவு
ஏழ்மையின்  எதிர்ப்பு
இருந்தம் இவள் இனிமையின் கனவு

அழுகையின்  சொந்தம்
அறியாதவர்  சந்தோசம்
அறிந்தவர் நின்மதி
தனிமைக்குத் துணை
இருந்தும் இவள் இனிமையின் கனவு

காண்பவர்  தேடல்
கருணையற்றவர் சொத்து
ஊனத்தின் கண்கள்
பாலைவனத்தின்    பசுமை
இருந்தும் இவள் இனிமையின் கனவு

முற்களின் முகவரி
கற்களின் பாதசுவடு
கடலின் உப்பு
காணலின் தண்ணீர்
இருந்தும் இவள் இனிமையின் கனவு

உறவின்  வெறுப்பு
புத்தியின்  பெண்மை
தாய்மையின்  கண்ணீர்
விசத்தின் தேன்
இருந்தும் இவள் இனிமையின் கனவு