Tuesday, 20 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கைவிளக்கு கையேந்திய

காலம் தொட்டு 

தெருவிளக்கு வழிகாட்டும்

காலம் வரை

புறாவிடம் தூது சொன்ன 

காலம் தொட்டு

கைபேசி தூதாகும் காலம்

வரை பெண்மையின்

உடலுக்கே அதிக

கூட்டம்!!!கவிநடை நடந்தாலும்

கதைநடைநடந்தாலும்

அழகான கற்பனையாய்

விற்பனையாகின்றது பெண்

உடல்கள்!!குறை நிறைந்த

உடலானாலும்  அழகான உடலானால்

அது கூட  தேவையின்  தேவையாகின்றது!!!



No comments: