Friday 14 October 2011

பூ

இதயதாமரையில்
கொலுவாய் நானிருந்தோன்
உலகின் கண்கள் எல்லாம்
நம்மை ஒன்றாய் காணவோ!!
தன்னம்தனிமையிலும்
தவறியும் தவறுசொய்யாது
உனக்குள் வாழ்ந்தும்
என்னை தவறென்று நினைத்து
தவறவிட்டு விட்டாய் மண்ணில்!!
தவறி விழுந்தாலும்
தவறும் காலம் வரைஅன்போ
தவறா நினைவாய்  நீயோ
எனக்குள் ...................

Friday 7 October 2011

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,



 அசையும் காற்றின் அலையிடம்

மெல்ல கவியெழுதி கொடுத்தேன்


உறைந்த உணர்வின் நரம்பினை

மெல்லிய துளையிட்டு இசையொன்றை
இசைந்திட வேண்டி!!
அறுந்த உணர்வால் இறுகிய பாறை
 உன்னைக் கொஞ்சம்
அசைத்தசைத்து இழுத்திட!
எனக்காய்!! கொஞ்சம்
தென்றல் !
உதிர்த்த இசையில் அசைந்த
 உன் இதயத்தில் எழுந்த என்    சுவாசம்     
எங்கோ நான் தொலைத்ததாய்  
   உன்
 வார்தைகளாய் என் காதுகளில்
கடித்த நிமிடம் உறைந்தது என் உயிர்
அறுந்தது என் நரம்பு  இப்போ
இசையாய் நீயிருந்தும் கவியாய் நானிருந்தும்
ராகங்கள்    இசைத்திட முடியா     
வீணையாகின்றோம் நாம்!!!!!!


தாய்மடி

மண்ணில்பெண் தேடுவது
என்னவென்றறியாத காலதத்தில்
இதுவென்றது  காலச்சாரம்!!

அது பிழையென்றபெண்ணின்
இதயவாசலை!! மெல்ல திறந்து
தானென்றது அறிவுக்கண்!!

இயற்கைவாசல் தான் திறந்து
 சொல்லாது பெண்ணிற்காய்
கொடுத்தது அதுவல்ல இதுனென்று!!

எதையெடுப்பது என்றுதெரியாத
பெண்ணின் கைகளுக்குள் சிக்கிக்கொண்ட
இவ்வுலகிற்குள் நான் என்றது பத்துமாதம்!!

கடத்த பருவம் கண்ட ஆண்மை
பொய்யென்றது !சிதைக்கப்பட்ட பெண்மை
 வேடிக்காய் பார்க்கின்றது
 வரம்கொடுத்த இறையை  எங்கு காணவில்லை
!!
எங்கேயாவது தேடிபிடிப்பது என்று அழைகின்றது
காவிதரித்தஆண்மை !!!

 கொண்ட வாழ்வில் சிகரங்கள்
நாங்கள் எங்கின்றது பெண்மை!
 நாங்கள் இல்லா உங்கள் வாழ்வில்
எங்கே வரும் இனிமையென்று
வாதிடுகின்றது ஆண்மை !!!

வேடிக்கையான இறைவன்
ஒன்றுக்குள் ஒன்றைவைத்து
வேதனையாய் சிரிக்கின்றான் சிலையாய்!!

ஒன்பது நாள் என்ன ஓராயிரம் நாட்கள் விரதம்
கொண்டாலும் முடிந்ததும்         
விடித்ததும் யார்பெரிது என்பதே கேள்ளி?ஃ

தவம்

தென்றலின் வருடல்
சுறாவளியின் தொடுதலானது
விட்டிடாது  பற்றிய ஆணவம்!!..

இருவேற திசை காற்றில்
இருமனதின் மோதல் இன்பதின்
பாதையில் தேற்றிட்டஆணவம்!!....

பாதையோடு சேர்ந்து நடந்திட
முடியா இருகரை வழியில்
இருதயம்  இணைத்தகை வாதத்தால்
தொலைந்த மகிழ்ச்சி பிடி  ஆணவம்.!!..

ஒன்றுக்கு ஒன்று போட்டியிட்டு
ஒன்றை ஒன்று ஜெயித்ததில் கிடைத்த
வெற்றி தொலைத்தது புரியா ஆணவம்!!

நின்று கேட்டு நடக்கா தன்னை இழந்த
மனிதன் தொலைத்து எடுத்த கற்பனை
எழுதி முடித்த தன்னம்பிக்கை ஆணவம்!!!

முட்டி மோதியுடைத்த கருணையில்லா
தவமாய் தமிழன்   பெற்றதாய் எண்ணிடும்
முட்டாள் சிந்தனையின் தோல்வி ஒருவருக்கும்
உதவா ஆணவத்திற்கே வெற்றியாகின்றது.............