Showing posts with label விழியேடு மொழி பேசும் சாரல்........................ Show all posts
Showing posts with label விழியேடு மொழி பேசும் சாரல்........................ Show all posts

Thursday, 3 September 2026

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

சிதைந்து  போன ஒரு 

சமூகத்தி  மாற்றத்தை 

சரிசெய்ய முயற்சி  செய்கின்ற 

ஒரு மனிதனின் சிந்தனையை 

 சிந்திக்க  வைத்திடா 

எதிரியின்   சிந்தனையே  

ஒரு  மாற்றத்தின்  அழிவு !!

இதை  எதிரிக்கு  சமூகம் 

சொன்னால்  நல்ல 

தலைவன்  சமூகத்தின் 

காவலன் !!

Thursday, 18 June 2026

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 தூக்கம் கலையா விழி 



ஓடும்  கைகால்களை 

நில்லென  கெஞ்சியே நிற்க 

வேள்வித்தீயாய்  சுற்றியே 

 எழுப்பியது  கோடைகாலத்து  

ஆதவன் !!

மனதின்  சோர்வினை  சுட்டதோ 

விழித்து கொண்ட என்  விழிகள் 

வாவென கெஞ்சு  என்னை !!

Friday, 19 September 2025

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 தருவாய்யென  காத்திருந்த 

தருணங்கள்  போனது 

தானாய் !

தருவியா  என  கேட்டு 

தராமல்  பதில்  இல்லாமல் 

தடுமாறும்  தருணங்களை 

புரியாமல்  விளையாடும் 

விளையாட்டும்   பிடிக்காமல் 

களைத்தேவிட்டமனசு வெறுக்கு 

தானாய் தன்னை! அறியாமல் 

புரியாமல்  கூட  தோன்றும் 

தோற்றங்களே தோற்கடித்திடுது 

தவறாய் !!விலகியே  விதியோடு 

நின்றாலும்  விளையாட்டு 

மட்டும்  பூனையிடம்  மாட்டிய 

எலியாய்  தவிக்கின்றது ஏனோ !!! 


Saturday, 28 June 2025

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

இப்போது!  நின்றுபேசிட

நேரமில்லா  நாளையை 

தேடியலையும்  

இற்றைப்பொழுது ! எப்போதும் 

திரும்பாது  என  தெரிந்தே 

விட்டு  செல்லும் 

 உறவு  அற்றைபொழுது  தெரியும்  

எதுகும்  நிரந்தரமில்லையென !

இருந்தும் !மனசின் நிலையில்லா

நிலையே!

 எதையோ  தேடியலைகின்றது !

கிடைத்த நிமிடத்தை 

தேட  மனிதனிடம்  கொடுக்க 

இருக்கும்  நிமிடத்தின்  சந்தோசத்தை 

இழக்கின்றது !!



 

 

Tuesday, 15 October 2024

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

தன்னை  நேசிக்கும் 

ஒரு  பெண்ணை  

ஏமாற்றி 

இன்னொரு  பெண்ணுடன்

பொய்யாக 
 

வாழும்  வாழ்கை   

பெருமைக்குள்  

ஒரு  ஆண்மை 

சிறந்து  நிற்க்கும்  

பெருமை 

ஒரு  பெண்மையின்  

அழிவின்  தொடக்கம் 

இந்த  மண்ணில்  மட்டும் 

சாதாரணம்!  

Tuesday, 24 September 2024

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 நம்  உதிரத்தில் உதித்த 

உறவென்றால் அக்கறை 

காட்டும்  நாம்!  நம் 

உதிரம்  ஓடும்  ஒரு 

உயிர்மேல்  இத்தனை 

வன்மம்  காட்டுவது  ஏன் !!

அதுகும் பெண்ணென்றால் 

சொல்லவேதேவையில்லை 

இன்றுவரை  எனக்கும்  

புரியவில்லை  உறவுகளின் 

உணர்வுகள் !!!ஆனாலும் 

நாம்  மனிதர்கள் !!!


Monday, 16 September 2024

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

அவள்  வலிகளை 

புரிந்திட  யாருமில்லை 

அவள்  வலிகளுக்கும் 

ஆறுதல்  இல்லை 

அவள்  வலிநிறைந்  பாதையில் 

நியங்கள்  இல்லை 

அவள்  வாழும்  வாழ்கைக்கு   

அர்த்தங்கள்  இல்லை 

அவள்  கைகள்  சோறும் 

போது  கைகள்  பற்றியே 

தங்கிட  யாருமில்லை 

அவள்  அழும் போது 

கணீர்  துடைக்கவும்   யாருமில்லை 

தனியாக  நிற்கும்  அவளின் 

கற்பனை  போல்  

அவள் கனவுகளும்  வாழ்க்கையும் 

யாரோ  திரும்பி  பார்க்கும் 

நொடி  சந்தோஷத்திற்குள் 

உயிர்வாழ 

அவளை  குறை கூற மட்டும் 

இத்தனை  உறவுகள் 

அவளின்  கற்பனையுலகிற்குள் 

எப்படி அவளோடு !!!நியமாய் 

வாழ்கின்றது !!

Friday, 30 August 2024

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

ஒருமுறை 

 ஒருநிமிடம் 

ஒருநொடி  

கிடைக்கும் 

ஒரு அக்கறையை 

  பற்றிக்கொண்டு 

தடுமாறுது   

பெண்மனம்! 

கொடுப்பதுபோல்

  நடித்து 

அக்கறையற்று 

 நழுவியோடுது 

ஆண்மனம் !!!

தொலைப்பதுவும்   அழுவதும் 

பெண்மைக்கு கிடைத்த 

 வரம் !

அழிப்பதுவும்   கெடுப்பதும்வும்  

ஆண்மைக்கு கிடைத்த 

 வரம் !! பெற்றவராமாய் 

ஒன்றையொன்று  ஆழிக்குது  

சாபமாய் !!!



Thursday, 29 August 2024

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 கடுமையான  வாழ்க்கை 

கொஞ்சம் சலிக்காமல் 



போகவே  இனிமையான 

தருணத்தை உண்டாக்கி 

கொண்டாடிட செய்தார்கள் 

அதையயையும் கொடுமையாக 

மாற்றியது  விதி

 இனிமையயை  பேச்சில்

 கொண்டதால் 

வாழ்க்கையில்  இல்லை போலும் 

இனிமை  !!விளையாட்டு 

பொம்மையாய்  ஆனதால் 

  எடுத்தெரியும் 

கைகளை பொறுத்தே 

வாழ்க்கையில்  கருணையும் 

அன்பும்  காயத்தின் 

அளவும்  உள்ளது !!!விதியோடு 

மோதி  முடிகின்ற  பூவிற்கு 

மதிகொண்ட மணல் வீடு 

அலை மோதும் வரைத்தான்  போல.... !!!

Thursday, 1 August 2024

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 அவள்  இழந்தவாழ்கை 

திருப்பகிடைப்பது  ஒன்றும் 

பெரிதல்ல!!  அதுவும் 

அவளுக்கு சாபங்களாய் 

கிடைக்குமெனில் அவள் 

இழந்தவை  இழந்தவையாய் 

இருக்கட்டுமே !!திருப்பிடா 

வசந்தம்  திரும்பாமலே 

இருக்கட்டுமே !!படைப்பின் 

தண்டனைகள்  போதா

அவளை  ஏமாற்றியே 

ஒரு தண்டனை கொடுப்பதில் 

 மனதிற்கு  என்ன கிடைக்கு 

புரியாமலே  நிற்கின்றேன் 

பாலை வனத்திற்குள் !!!


 

Saturday, 16 September 2023

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

  நம் 



வாழ்க்கையை 

நாமே

கேலி கூத்தாகி  

மற்றவர் கேலியில்

சிதைக்கின்றோம் ஏனோ!!

வாழ்க்கையை வாழ நமக்கே 

தெரியாதபோதே

 நாம் எடுக்கும  முடிவுகள்

நம்மையே கேலிபேசும்!!

ஒரு விதையின் அழகில்  ஓரு

உயிரின் அழகு  பூப்பதே 

மனிதயழகு !!இதை புரியாமல்

தன்னை தானே அசிங்கப்படுத்தி  

வாழகற்றுகொண்டது!!!அதுவே 

அழகென்று 

 மண்ணின் அழகு  மனிதனின் அழகில்

பூப்பது!!!



 

Wednesday, 15 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓற்றை சலிப்பில் தேனீருக்காய் 

ஓரு ஏக்கம்

வேலைக்களைப்பில் சமையலுக்காய் 

ஓரு ஏக்கம்

ஓய்வாய் அமர்கையில் கூடி

வாழும் வாழ்க்கைக்காய்

ஒரு ஏக்கம்

எல்லாம் இருந்தால் 

 இல்லாமல் ஓடும் நேரத்திற்க்காய்

 ஒரு ஏக்கம் !

ஏக்கம் ஏக்கமாய் 

அடைபட்டு கிடக்கும்   உறவு 

பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு 

வெளிநாட்டிலும்

ஏங்குது  தனித்தனியாய் ! 

Friday, 10 February 2023

விழியேடு மொழி பேசும் சாரல்.......................

 யாரும் திரும்பி

 தர முடியா மரணத்தின் 

கோலதால்  வலியாகி

உள்ளே அழும் 

பெண்மையை

ஓரமாய் சாடையாய் 

விலக்கியே வைத்திடும்  

வாழ்க்கைக்குள்

ஓற்றை இதயம்

 துணிவாய் மீண்டும்

கொடுக்கும் கோலம் 

பெண்மைக்கு

யாரும் கொடுத்திட முடியா

 விலைமதிபற்ற

பொக்கிஷம் !


நேசம் உண்மையெனில்

இங்கே  தடையுடைக்கும்! 

துணிவு 

Friday, 3 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மண்ணேடு ஒரு காதல்

 வந்து பெண்னோடு 

கதை பேசியே ஏங்க!!

மறையா நிலவாய் தேய்ந்து  

வளர்கின்றது   ஓரு காதல்! 

விழிமோதி  மோதியே

காலம் கனிந்திட 

மனச்சிறக்குள் மெல்ல  

ஒரு காதல்  பெய்கின்றது

முதல் மழையாய்!!

சில்லென்ற சிலிர்ப்பிற்குள் 

பூத்தகாதல்  

வெட்கத்தில் வெப்பத்தை 

விழுங்கிட !

நில்லென்ற  குரல்  கேட்டு

சிட்டுக்குருவியாய் மறைந்திட

சொன்னது  நாணம் 

தொட்டு  பூத்த காதல் !!

வில்லென்று குடை பிடிக்க

மழையேடு பேசியே விளையாடி

தன்னை மறந்த

 பூத்த   இதயத்திற்குள்

பூப்போல் பூத்தது  அழகிய 

விண்ணோடு காதல்   !!!

Sunday, 25 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தம்



கனவினை  தாமே

செதுக்கிடுக !!!!

மற்றவர் கைகளில்

உளியினை

கொடுத்திடாது இருந்திடுக!!!

உளியினை பிடிக்கும் கரம்

எப்பவும் நம்மை வென்றிடும் 

கரமாகவே கண்டிடுக!!

இல்லையெனில்!நம்மை போல்

கனவு தடுமாறும் 

தன் கனவைவெல்ல தானே

சிந்தித்திக்க!

தன் கனவேடு

மற்றவரையும் பயணிக்க 

செய்க

தன் கனவிற்குள் யாரும் 

நிரந்தரமுமில்லையென

உணர்விற்கு சொல்க!

கட்டிப்போட்டு கதைபடிக்க 

கனவு தேவையுமில்லயென

சிந்தித்து செயல் புரிக!

காலத்தின்மாற்றதேடு 

தன் கனவையும்

சோர்ந்தே மாற்றிக்கொள்க!

கனவிற்க்கும் வயதிற்க்கும்

தொடர்வுகள் இல்லையென்று

விம்பத்தை உடைதெறிக!

கனவேடு

ஆசைகளை கலந்திடாமல்

கையெடுக்க !

மற்றவர் வார்த்தைகளையும்

கொஞ்சம் செவியெடுக்க!

தேவையானதை அறிவிற்குள்

அடக்கியே  சிந்திக்க!

தேவையற்றதை செவிவழிவிடுக!

தன்கனவினை மற்றவர் விரும்பிடும்

வித்தைகளை  கையெடுக்க !

ஓடும்வேகத்தை 

ரசனையேடு  கைபிடிக்க!

 உன் ஆசைகாய்  கனவை 

கட்டிபிடித்தே   காயத்தை 

கூட்டாதே !

ஆசைக்கு  வெளியே 

கனவை வென்றிட 

ஆசைக்கு    கனவை செதுக்கிடுக 

மாற்றதின் குடையை வானவில்லாக்க

கனவு வண்ணங்களாகும் 

இதயங்களேடு!!!

இல்லையேல் கனவேடு போராட்டமே 

மாற்றதின் புள்ளியே

மனிதனின் வாழ்க்கையின் புள்ளி

சிந்தனையின் வரைவை உன்

கற்பனையில் செதுக்கு தானாய்

கனவு நிலைத்திடும் உன்னை சொல்லி

உன்னை நீயே கனவிற்காய்

யாரிடமும் கொடுக்காதே

பிச்சையிடும் கரங்களில் 

உன் கண்ணீர்துளியை விழுத்தாதே

உன் வலிகள்  உன்னையே

கேலியாய் பார்க்கும்

கனவை உருவாக்கிட தெரிந்தவனுக்கு

அறிவே சிறந்த ஜோதி!!!



Saturday, 3 September 2022

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 இல்லத்தின் அழகிற்குள்

அஞ்சலப்பெட்டிபோல்

பயண் பட்டால்  பெண்!! 

வாசணைதிரவியமாய்

வலம் வந்தான்  ஆண்!!  

இங்கே!!

வாசணைபட்டு வீசும் காற்றின் 

 வாசணையை 

பலர் பேசிபெருமை கொள்ள

அஞ்சல் பெட்டிகள் 

மட்டும் 

மறைத்தே வைத்தே 

நாயம்  பேசியே 

ஆசைகளை கொன்று 

காதல் கொள்கின்றது




Thursday, 3 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என் மனத்தோட்டத்தின்



இளமை நினைவுகளை 

உன்தென்றல் தொட்ட பரிசத்தில்  

தொலைத்து  தான்விட்டேன்  போல 

என் மனம் என்னிடம்

சிறைபட்டுகிடக்கின்றது  

எவர் கேட்டும்பேசமால்  

ஆச்சரியமாயுள்ளது  நான்

தொலைத்த பக்கத்தின் 

 தெளித்த  மைத்துளி

நீயென நினைக்கையில்!!!



Friday, 26 November 2021

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 பாட்டன் முப்பாட்டன் 

பெண்பிள்ளைக்காய்

உயர்த்தியவேலியையும் காணேம்

நம் ஒழுக்கத்தையும் காணேம்

பண்பாட்டு சாக்கடை 

கறைகள் என்ற நம் இனத்தின் 

பண்பாட்டை  உடைத்தெறிந்த

நம் தன்னம்பிக்கை 

வலுக்கி தேற்ற  இடத்தில்

அறிவாளியுமில்லை பட்டிகாடுமில்லை 

பெண்மை மட்டுமே 

இறந்துகிடக்கின்றது  அனாதையாய்!!!




Friday, 18 June 2021

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 புகழ்களின்!!

 பாதைகளை தொட்டவர்களால்

ஓரு நிமிடத்தில் !

மாற்றத்தை உருவக்கிட 

முடிந்தால் !உங்கள்

 வாழ்கையின் நிமிடங்கள்

 எந்தனை அர்ந்தமுள்ளது

 கோடிக்கண்களின் பார்வையின்

வெளிச்சம்!! 

நீங்களென புரிந்தாலே 

போதும்!  அழகிய

மாற்றம் தனாய் உலகையாலும்!!!!

Tuesday, 7 January 2014

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

வியாபரமாக்கிய வாழ்கைக்குள்
 விற்பனை சரக்காகிய மனிதன்
பணமின்றிய  நேசத்தை கொள்வனவு
செய்திட முடியாமல் 
இப்போ!! 
பொய்யா கனவிற்குள்
 விழுந்தெழுந்து
மெய்யான வாழ்வினை 
தொடத்துடிக்கும் 
வேட்டிக்கும் சோலைக்கும் இதனால்
சண்டையப்பா !!!
பொய் சொல்லி தேடிய உறவை
கொஞ்சம் மெய்யாய் உழைத்து
காத்தால் தான் என்ன!!!!