Wednesday 30 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அறிவுப்பசிக்காய் பலதைத் தேடி
அன்பின் பசியிடம்
தொலைத்திடும்போதே
உறவின்பசி  உன்னை காக்கின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 கவித்துளியில்  கண்ணீர்துளி
கலந்ததை உயிர்துளியறியாக் கற்பனை
அவள் தொலைத்த வாழ்கைக்ககு
எழுதிய முடிவுரை!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னில் நின்று என்னை பிரிந்திட
இயலாது எனஅறிந்தால் தான்
 இறை உன்னை எனக்குள்
பதியம்போட்டுவிட்டான்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எதைத்தேடுகின்றோம் எதையடைத்தோம்
எதையிழந்தோம்  எதைபெற்றோம்
 என சிந்திக்காத நம் அறிவு எதையும்
இனக்காட்டாது  நமக்கு!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வறன்ட காலத்தில்  முத்திமிட்டுசெல்லும்
முதல் மழை வாசம் நீ
என் நாசிக்  காற்றாய்  கலந்திடம் போதே
 எனக்குள்  புதுவாசம் பிறக்கின்றது

குட்டிக்குட்டிச் சாரல்......,



உன் இதயம் அடிக்கடி நிக்கிறதாமே 
பயப்பிடாதே அங்கே வசிப்பவள் 
நான் தான்
 உறங்கும் போது என்னை தூங்கவைக்கவே 
உன் இதயம் சத்தமின்றி துடிக்கின்றது 
உன் இதயம் புரிந்ததை நீ புரிவது எப்போது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,


என் புன்னகைகளை
அள்ளிகொண்டவன்
நீ
உன்னக்கண்கள் காட்டிகெ்கொள்ளும்
 நிமிடத்தில் இதழ்கள் சிவக்கின்றன

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்ணாடியான உன்னில்
நான் தேன்றும் போது மட்டுமே
என் விம்பம்  எப்பாதும் அழகாய்
தோன்றுகின்றது

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிரிவுகளில் நான்
தேற்று கொண்டே இருந்ததை
 உன்னைக்கண்ட நிமிடதில்
அள்ளி தெளித்த
 கண்ணீர் மழை  சொன்னது
உலகத்தில் பிரிக்கமுடியாத உறவு நமதென்று

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிர் சத்தில்
உன் மூச்சின் சத்தம் கலந்திட்ட வேளை
 ஒரு சுரமில்ல இசைஉருவானதே
அவ்வளவு இனிமையான நம் காதல்

Saturday 12 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......

வாழ்கை கசந்திடும்
போதே பொய்கள் சுமையாகின்றது
காயங்கள் வலிக்கின்ற  போதே
உண்மைகள் சுடுகின்றது
எல்லாம் புரிகின்ற போதே மரணம்
பிடிக்கின்றது1!!

Tuesday 8 March 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆதியில் தமிழல்வாழ்குடில்
வாழ்தமிழ்பெண்னெருதி
நாகரிகவாழ் குடில் வாழ்பெண்னாய்
வாழ்திட அசைகொண்டு
ஒற்றையெண்ணத்தில்  ஒன்றை
ஒன்றெண்ணாது உள்ளத்தின்
முகத்தின் ஒற்றையுருவமாய்
அன்பிமலரினை இதயத்தின்
இதழாய்  கற்கை கடலினில் நீந்திடா
கரையதனில் நின்றபடி
 ஒற்றைச்சொல்தேடி ஒன்றுக்குள்
ஒன்றை ஒழித்திட கருத்தாய்
வாழ்ந்திட வந்தாள்1!!
முன்னும் பின்னும் வாழ்பவர்
முகமறியதவள் முன்னேபின்னே
நின்றவர் முகத்திற்குள் முகம்வைத்து
முப்பதுகதை சொல்ல
முன்னும்புரியா பின்னும்புரியப்பெண்ணாய்
வாழவந்த எண்ணத்தை மாற்றியே
திரும்பினால் தன்னுலகதிற்கு !!
ஒன்றைஒன்று அடித்தே  கொன்றாலும்
 ஒன்றைமுகமாய்  சுற்றியே  வாழ்வதால்
அதுவே பிடிதவுலகானது அவளுக்கு!!