Sunday 23 December 2007

மழை

என் மீது நீ படும்
போதெல்லாம்
என் உடல்
சிலிர்க்கின்றது
ஏனோ
நான் பூக்களாய்
நனைகின்றேன்
என்னை தொட்டு சிதறும்
உன் சிதறல்கள்
என்னை விட்டு பிரியா
கவிதைகளானது
***
தென்றலால் குளிர்ந்து
மழையென நனைத்து
வானவில்லின் வர்ணத்தோடு
பூமிதனில் பூத்து
சுவாசத்தை வருடி
நதியில் நடை பழகி
கடலில் கலந்து
சூரியத் தீண்டலால்
மீண்டும்
மேகமாய் மறைகின்றாள்!

நினைவுகள்

என் உயிரே உன் பெயரை
மூங்கில் காடு என்
காதோடு இசைக்க
தொலை தூரத்து
வானத்தைப் போல்
தொலைந்திடா நிலவாய்
உன் நினைவுகள்
வந்து வந்து போக
அந்தி
மாலைப்பொழுதை
வெறுக்கின்றேன்
உன் நினைவால்

***
என்னேடு கலந்திட்ட
உன் விம்பங்கள்
என் இதயத்தில்
முள்ளாய் தைக்க
என் உயிர்
உனக்காய் துடிக்கின்றது
உன் நினைவால்
***
உன் ஞாபங்கள்
என் மெளனத்திற்குள்
மீட்கப்படுகின்றது
ஏன் தெரியுமா?
அதுகூட சுகமான நினைவுகள்
என்பதால்.....

***
அன்பால் அவளைஅணைத்து
தன் இதயக்கோவில்
அவள் உருவம் பதித்தவனின்
சிதறுகின்ற கற்பனையும்
உதிர்கின்ற பூக்களும்
அவன் முகம் காட்ட
அவன் நினைவைச் சொல்லும்
அவள் கனவுகளை
தென்றல் காற்றிடம
சொன்னாள்
அவன் காற்றோடு இருப்பதால்

***
எப்படி முடிந்தது
உனக்கு என்
நினைவுகளை
மறந்திட..
எனக்கு
சொல்லி தர மறந்து
விட்டாயே
உன்
நினைவுகளை
நான் மறந்திட
***
என்
மனச்சிறையில்
அவன் நினைவுகள்
தென்றலால் பதிவு
செய்து
சுழல் காற்றாய்
சுற்ற.....
என்னை அவன்
தீண்டி
அவன் வாசத்தை
எனக்குள் சுற்ற விட்டு
என் இதயத்தின்
நாளங்களை அவன்
நினைவென்னும்
சுழல்காற்றால்
பிடிங்கிச்சென்று
மீட்டுகின்றான்
எனக்காய் யாழை
**
பசுமரத்தாணியாய்
அவன் நினைவு
எனைத் துரத்த
பார்க்குமிடமெங்கும்
அவன் உருவம்
விம்பமாய்த் தோன்ற
பாவையிவள் தவித்தாள்
கண்ணிருந்தும் குருடா

பிரிவு

எனக்காய் நீ தந்த
சின்னச் சின்ன
மகிழ்ச்சிகளை
நான் அச்சத்தோடு
ரசிக்கின்றேன்

ஏன் தெரியுமா?
சண்டை வந்தால்
எனைப் பிரிந்து
விடுவாயோ என்று!!

பிரிந்து பிரிந்து
பிரிவையே வெறுத்து
விட்டேன் அன்பே
உன்னை பிரியவேண்டாமே என
நான் பிரிந்தேயிருக்கின்றேன்
என்றும்.....

****
உறவோடு உனைத்தேடி
உறவாகி நானிருக்க
உறவே எனை மறந்து
பறந்ததேனோ

உன் பிரிவால் சுதியின்றி
நல்ல ஜதியின்றி
என் பாதம் நடை பழக
மறுக்கின்றதே...

என் உறவே
உன் விழிப்பார்வை
என்னைத் தீண்டாதோ
என் உயிர் உன்னைச்
சோராதோ....

வாசம்

மலர் வாசம் வீசாயோ
தென்றல் காற்றே
கனிமொழியாள் படைப்பில்
கற்பனைக்குள் தோற்ற வாசம்
காலத்தால் அழிந்த வாசம்
இயத்தில் உறைந்த வாசம்
மலருக்குள் மறைந்த வாசம்
சுமையாக வந்த வாசம்
என்னோடு வாழும் வாசம்
எனை சுடராய் எரிக்கும் வாசம்
எவரோடும் தோன்றா வாசம்
புதைகுழியில் புதைத்த வாசம்
புதிராய் தோன்றிய தால்
என்னை வாசமில்லா வாசத்தை
சுவாசிக்க சொன்னது......

Friday 21 December 2007

மீண்டு முழு நிலா

பாரியவன் காதல் கொள்ள
பெளர்ணமி நிலாவும்
கொண்ட காதல் உயிர்த் துடிப்பால்
தன்னிலை தான் மறந்து பூமிக்கு
வந்தது...

காஞ்சுபுரப் பட்டுத்தி
நெற்றித் திலம் தானிட்டு
மல்லிகையும் தலை சிரிக்க
கைவலயல் கலகலக்க
கால் கொலுசு சத்தமிட
அதிசய தேவதையாய்
அசைந்தே வந்தாள்
பார்ப்பவரே அசந்திட..

பாவையவள் கைதொட
பாரியவன் துடித்து நிற்க
முகிர்த்தமும் வந்ததென்று
தோழியவள் அழைத்து செல்ல
அதிகாலையும் வந்து நிற்க
மணப்பெண்ணும் தான் மறைய
ஏக்கம்கொண்டு அவன் பார்க்க
வானமதில் அவள் சிரித்தாள்
தன் ஒளி தானிழந்து
வெள்ளை பொட்டொன்றாய்.......

என் அன்பே....

கரைந்து ஏன் போகின்றாய்
என் அன்பே!
தண்ணியடித்து தாடிவளர்த்து
காதல் காத்து!! கரைந்து ஏன்
போகின்றாயா என் அன்பே


குடும்பம் மறந்து வாழ்வைத் தொலைத்து
வீதியில் நின்று வீண் காதலால்
கரைந்து ஏன் போகின்றாய்
என் அன்பே

உழைப்பு மறந்து
உயர்வைத் தொலைந்து
சோம்பறிக் காதலால் உன்னை
நீ கரைந்து! கரைந்து ஏன்
போகின்றாய் என் அன்பே

கரைந்து கரைந்து போவதா
காதல், அல்லவே அல்ல!
கரைந்திடா காதலை நீ தேடி
காலத்தோடு லட்ச்சியம் வென்று
வாழ்ந்திடு என் அன்பே காதலேடு
வாழ்வையும்.........

Wednesday 28 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தீப்பொறி தன்னை தன்னகத்தே
கொண்டு,தீச்சுவாலையோடு
கலந்திட்ட எம் உயிர்த் தியாகங்களே

உங்கள்
எண்ணற்ற சிந்தனை சிதறல்களை
ஒன்றாக்கி மாறாக் கொள்கையேடு
கனவிலும் தேசியத்தை வளர்த்து
உங்கள் உள்ளத்தின் ஆசைகளை
எமக்கு தந்து, எம் உயிர் காத்து!
மண்ணுயிர் மீட்டிட,மரணத்தின்
வாசலில் உடல் கொழுத்தி, எம் இருள்
போக்கிய தன்னலம் காணா தியாகங்களே!

உங்கள்
உயிரை துச்சமாய் தூக்கியெறிந்து
ஈழக் காற்றினை சுவாசக் காற்றாய்
சுவாசித்து உடலை எமக்காய் தந்த
உயிர் தியாகங்களே உங்களுக்காய்
கவிதைப் பூக்களால் கோர்க்கின்றேன்
ஓர் அஞ்சலி மாலை....

Tuesday 27 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

விதையாய் விழ்ந்து விருச்சமாய்
எழுந்து,விடியலுக்காய் வித்தான
முத்துக்கள் இவர்கள்

எட்டுத்திக்கும் விடுதலைக் காற்றனுப்பி
உலகின் பார்வையை எம் பக்கம் திருப்பி
புரியா உள்ளங்களை புரிந்திடச் செய்து
கடலோடும் புயலோடும் தரையோடும்
தீயாக எரிந்து வானேறி வீரம் காட்டி
விதையான சுயநலமில்லா சுவாசத்தின்
முத்துக்கள் இவர்கள்........

எம் மண்ணின் ஒளியெல்லாம்
அவர் முக ஓவியமாய் விரிய
இருளுக்குள் ஒளியாகி,இருண்ட
வாழ்விற்கு வெளிச்சமாகி
வானத் திங்களின் ஒளியெடுத்து
உலகத்தின் பார்வையில் வீழ்ந்து
விடுதலை உணர்வை எம் இதயத்தில்
வித்தாக்கி மறைந்த எம் முத்துக்கள்
இவர்கள்..................................

Tuesday 20 November 2007

அழிவுகள்

தன் இனம் அழித்து
உயிர் எடுத்து
இரத்தத்தால் பூமி நனைத்து
மனுதர்மம் காக்கின்றது
யுத்தமென்னும் அழிவு

சுறாவளிக் காற்றாய்
சுற்றி சுழன்று
வேரோடு பிடுங்கி
வெற்றுடல் குவித்து
வேடிக்கை காட்டி
நிக்கின்றது ஓர் அழிவு

பூமி வெடித்து தீப்பொறி
எடுத்து பூவுடல் எரித்து
கடல் பொங்கி உடல் தழுவி
உயிர் குடித்து ரசிக்கின்றது
இன்னுமோர் அழிவு

இப்படி
அழிவின் மேல் அழிவு வந்து
அழிகின்ற பூமி தெரியாமல்
கற்பனையில் கிறுக்கின்றேனோ
பூமியின் அழகு தனை
புரியாமல்..................தவிக்கின்றேன்

Sunday 18 November 2007

உணர்வு தந்த சில கிறுக்கல்கள்..

ஈழத்து மண்ணே நான்
சில காலம் உன் மடியில்
வாழ்ந்திட வேண்டும்!
அகதி வாழ்க்கையில் நான்
தொலைந்த நின்மதியை
மீண்டும் தேடிட வேண்டும்!
இருக்கும் காலம் இனித்திட
விரைவில் நீ மலர்ந்திட
வேண்டும்...

*****************
ஈழமே நீ வேண்டும்
அதற்காய் நாங்கள் இங்கே
இனைந்திட வேண்டும்

வார்தையாலம் வீண்வாதம்
விட்டிட வேண்டாம்
தமிழர் நாங்கள்... மற்றவை
மறந்திட வேண்டும்

பசிக்காய் அழுதிடும்
குழந்தையின் அழுகுரல்
நிருந்திட வேண்டும்
இங்கே இனைந்திட்ட இதயங்கள்
நாங்கள் சூழ்நிலை அறிந்து
கரம் சேர்ந்திட வேண்டும்

**************************
உறவின் உயிரைக் காத்திட
முடியவில்லை
ஆனாலும் உணர்வில் ஓர் வலி
சொல்ல தெரியாவில்லை

உண்டேன் உறங்கினேன்
ஆனாலும் எதையோ இழந்ததாய்
ஒர் தவிப்பு எனக்குள்
என்னை
தொலைத்து கோழையாய்
இழந்த விட்ட தமிழ் உணர்வால்
துடிக்கின்றது இதயம்
எதனால் நானும் தமிழ் என்பதாலா
புரியவில்லை ராமா
ஆனாலும் நீயாவது
காத்திட தோன்றிடுவாயா?
கட்டத்தரையில் கண்ணீரோடு
என் உறவு .....வலிக்கு எனக்கு.........
****************
முள்வேலிக்குள்
இவனை
சிறையிட்டாலும்
இன்று சோர்ந்திடும்
இவன் இதயம்

நாளை ஒர் நாள்
முற்கம்பிகளை
உடைத்தெரிந்து
விரிச்சமாய்வெளி் வரும்

இவன் கண்களில்
இன்று தெரித்திடும்
தீப் பொறி நாளைய
விடுதலையை
சொல்லிடும் எரிமலைக்
காற்றாய் .......

****************
வீரரே உம் இரத்தத்தில்
முளைத்திட்ட
செடிகளெல்லாம்
உமாக்காய் பூக்கள் பூக்க
உம் மரணத்தால்
உதிர்ந்திட்ட வெள்ளை
மலரெல்லாம்
சிகப்பாய் பூத்திட்டது
உம் கல்லறையின்
பக்கத்தில் உறங்கிட
அல்ல
உம் கனவுகளை
மீட்டெடுத்து எம்
தேசத்தை காக்க.........
...................................................
தன்னுடல் தனை மறந்து
தனாக்காய் வாழாது
எமாக்காய் வாழும்
தியாக தீபங்கள் இவர்கள்
ஆனால்....
இன்று பூவுடலாய்
பூமியில் சரிந்த வேளை
இழிவின் மேல் இழிவு செய்து
கொடுமைக்கு மேல் கொடுமை
செய்து
அரக்கனாய் ரசிக்கும்
மனிதனின் மத்தியில்
மனித நேயத்தின்
புனிதம் சொல்லி
புனிதமாய் மறைந்தனர்
மறையா மறைவில்..
...........................................
வென்று சேரட்டும்
கைகள்
ஒன்று கூடட்டும்
இதயங்கள்
வெடித்து சிதறிய
மனிதநேயத்தால்
சிதறிக் கிடக்கும் எம்
உறவின் துயர்காத்து
இருளில் புதையும்
மண்ணின்
விடியலைத் தேடி
ஒன்று சேரட்டும்
கைகள்
..............................................
தமிழர்கள் நமக்காய்
ஒர் இடமின்றி
தவித்திட் காலம்
வென்று எமக்காய்
வரைத்திட்ட தேசத்தின்
புதிய பூபாலம்
எமக்காய் பிறக்க
நம் வீரர் உறுதிகொண்டு
இணைந்திடுவோம்
ஈழத்தின் தாகத்தோடு

Saturday 17 November 2007

சுமை தாங்கி

இன்பங்கள் பலகோடி அவள்
வரவாள் உன்னைச்சேர
துன்பமே வந்ததென்று
கிண்டலும் கேலியுமாய்
எத்தனை காயங்கள் நீ கொடுத்தாலும்
உன்னைத் தாங்கிக் கொள்ளும்
சுமைதாங்கி அவள் தானே...

எத்தனையோ விண்மீன்கள்
உன் வாழ்வில் வந்து வந்து
போனாலும் , நீயே அவைகளை
ரசித்தே நின்றாலும்,உன்
இருளுக்கு ஒளியாய் இறுதிவரை
உன்னோடு வருபவள் அவள் தானே!


தன்னுயிர் உள்ளவரை
உன்னை சுமந்து உன் கருவை சுமந்து
உன் வாழ்வை தன் வாழ்வாய்
எண்ணி, உனக்காய் சுமக்கின்ற
சுமைதாங்கி என்றும் அவள்தானே..............

Wednesday 31 October 2007

தேடல்கள்

பழமையில் புதுமை
தேடி
புதுமையிலும் புதுமை
தேடி
புதிதாய் ஒர் வாழ்வை
தேடி
பண்பில்லா பண்பில்
சேர்ந்து
பரிகாசம் தன்னைச்
சுமந்து
உறவிற்கே உறவு
சொல்லி
முறையே இல்லா
உறவில் சேர்ந்து
தேடலினால் தேடிக்
கொண்டோம்
பொறுமையில்லா இதயம்
கொண்டு
சொல்ல முடியா
பாதை ஒன்றை
புதிய வாழ்கையென்று………

Friday 26 October 2007

தீக்குளிப்பு

ராமன் தீயெடுக்க
சீதை குளித்தால் இன்று
இராவணர்கள் தீயெடுக்க
சீதைகள் குளிக்கின்றனர்

இதிகாசம் கண்ட தீயால்
கலியுகமும் குளிக்க
பணகார முதலைகள்
எடுத்த தீயில்
வறுமைத் தவிப்புக்கள்
நித்தம் குளிக்கின்றது

வரதட்சனை மாமியார்
வைத்த தீயில் மருமகள்
மட்டும் குளிக்க
வரன் காணா கன்னியவளை
ஏக்க தீ சுட்டெறித்தால்
மரணத் தீ அவள் குளிக்க

கோழையவன் எடுத்த தீயில்
குடும்பமே குளித்துக் கரைய
கடவுள் அவன் காட்டிய தீ
கருணையில்லா மனிதர்கள்
வைக்கும் தீயானது............

Wednesday 24 October 2007

அன்பே நீ வில்லனானால்

உன்னத பந்தம் ஒன்று
உன்னோடு எனைச் சேர்க்க
உன் கரம் பற்றியதால்
உன் உறவாய் நான் வந்தேன்

பலர் வாழ்ந்து நமைச்சேர
இணையான துணையாக
நம் வாழ்வில் நாம் சேர்ந்தோம்

மகிழ்ச்சியாய் சில நாட்கள்
மகிழந்தே போக ,சத்தியம்
தனை செய்து ,அன்போடு
எனை அணைத்த, இன்ப
நாட்கள் கசந்ததேன்!
இப்போது நம் உறவு புரியவில்லை,
எனக்கும் தான் எதுவுமே கூறாமல்
வார்த்தையால் எனைக் கொன்று
சாக்கடையாய் நீ பார்க்க
என்ன தான் நான் செய்தேன்

இரட்டை வேடம் நீ போட்டு
அழகாய் நடிக்க உன் வேடம்
தெரிந்தும் புரியாமல் நான்
தவிந்து இன்னும் வாழ
என்ன பாவம் நான் செய்தேனே
தெரியவில்லை எனக்கும் தான்!

வில்லனவன் வெளியிலென்றால்
உன்னிடம் சொல்லலாமே
வில்லனோ நீயென்றால்
நான் யாரிடம் தான் சொல்ல
துணையாய் வந்த என் அன்பே
நீ கூறு கொஞ்சம்.............

Tuesday 23 October 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஆயிரம் ஆயிரம்
மனிதப் பூக்கள்;! பூக்களாய்
பூத்துக் குலுங்கிய என்
தோட்டத்தில்
யுத்தமென்னும் அரக்கன்
உடல் சிதறக் குண்டெறிந்து
உயிர்ப் பலியெடுத்து
அழிவின் மேல் அழிவு செய்து
பசியோடும் வலியோடும்
என் உறவை என் நட்பை
தவிக்க விட்டு!என் தோட்டத்தின்
அழகை ச் சுடுகாடாக்கி
எம் மிடத்தில் எம் மினத்தை
காக்கின்றான் சமாதான உயிர் குடித்து


சொல்லிச் சொல்லி மாண்டு
காயத்தின் மேல் காயத்தால்
கருகிய வாழ்வு ஒளிறின்றி போக
எங்கோர் முலையில்
உறவுகளின் நம்பிக்கை
மட்டும் உயிர் வாழ்கின்றது
என்றும் மாறாமல்........


Monday 22 October 2007

தோல்விகள்

ற்பனையின் அழகு என்றும்
நிஜத்தின் தோல்வி
பொய்யின் அழகு என்றும்
உண்மையின் தோல்வி
போலியின் அழகு என்றும்
உறவின் தோல்வி
ஏமாற்றத்தின்
அழகு என்றும்
நம்பிக்கையின்
தோல்வி
சந்தேகத்தின்
அழகு என்றும்
மகிழ்ச்சியின்
தோல்வி
ஆடம்பரத்தின்
அழகு என்றும்
அமைதியின் தோல்வி
பிரிவின் அழகு என்றும்
வாழ்வின் தோல்வி
யுத்தத்தின் அழகு என்றும்
மனிதனின் தோல்வி
சிந்தனையின் அழகு என்றும்
கடவுளின் தோல்வி!

Friday 17 August 2007

தருவாயா?

பூவின் மென்மை தனை
பேச்சிலும் செயலிலும்
கொண்டவளை பலர் ரசிக்க...
கல்லைப் போன்ற
உறதி தனை மனதில்
கொண்டு தோல்வியிலும்
வெற்றி கண்டவள்
சுகந்திர காற்றை சுவாசிந்து
பிரிவை தாங்கா இதயம்
கொண்டதால்
வெற்றியிலும் தோல்வி
கொண்டாள் இறைவா
இவளுக்காய் தருவாயா?
உறுதியான இதயத்தை...

Thursday 16 August 2007

கிறுக்கல்கள்,

உண்மைக் காதல்
ஏட்டில் வடிக்க
பொய்மைக் காதல்
வாழ்வைச் சிதைக்க
புரியா உணர்வில
தெரியா உறவாய்
சேர்ந்த காதல்
கல்லறைக்குள் வாழ
இறப்பின் சிறப்பு
காதலில் தெரிய
கண்ணீரால் நனைந்த
காதல்
கல்லில் செதுக்கிய
காவியமானது...

*******************
பத்து மாத கருவை
சுமந்து பட்டினியும்
வலியுமாய் ரசித்திடும்
பெண்ணவளின் நளிங்கள்
மீது எனக்கு
ஒர் காதல்

சிந்தும் சிரிப்பில்
சிதறும் அழகில்
மென்பஞ்சு மொட்டு
அசைந்திடும் அசைவில்
தொலைந்து நிற்குது
என் காதல்

வறுமைத் துயர்
தான் தாங்கி
பிரியா உறவாய்
சேர்த்தே நிற்கும்
உறவின் மீது
எனக்கும் ஒர் காதல்

முதுமை வந்தும்
மாறக் காதல்
தாம் கொண்டு
சேர்ந்தே ரசிக்கும்
ஜோடி மீதும்
எனக்கும் ஒர் காதல்
*****************
அழகின் கவர்ச்சியின்றி
பார்வையின் மோதலின்றி
எனக்கும் அவனுக்கம்
ஏற்பட்ட காதல்
சொல்ல முடியா கதைசொல்ல
என் உணர்வில் கலந்திட்
அவன் வசம் என்னை
காலமுழுக்க சுவாசிக்க
சொன்னது
*****************
நான் மழையைக்
காதல் செய்ய
மழை பூமியைக்
காதல் செய்ய
பூமி அழகைக்
காதல் செய்தால்
மனிதன் அழிவைக்
காதல் செய்கின்றான்

Saturday 4 August 2007

பத்தி

ஏழை பசித்திருக்க
படைத்தவன் பத்தி ரசித்திருக்க
துடிக்கும் ஏழை
துயர் துடைக்கா மனிதன்
மூடநம்பிகை பயத்தால்
சுயநலபத்தி கொண்டு
கற்பனை சிலைக்கு உயிர் கொடுத்தான்
தான் வாழ!!
புராணம் சொல்லா
அன்பைச் சொல்லி
ஆடரம்பர வாழ்வை
கடவுளுக்கு காட்டி
படைத்தவன் சொல்லா
பத்தியொன்றை!
சமூகத்திற்கு கொடுத்து
ஏழைச்சிரிப்பில் கடவுளை
காணா மனிதன் தொட்டுணரா
கற்பனைச்சிலையின் உயிர்த்துடிப்பால்
தொட்டுணரும் ஏழையின் கண்ணீர்
துடைக்க மறந்தான் பத்தியால்!!!

Thursday 2 August 2007

மனிதன்

உலக மென்னும்
அற்புத படைப்பின்
அழகிய பொய்கள்
நாங்கள்
அறிவு கொண்டு
அழிவை நேசித்து
போலி கொண்டு
நிம்மதியழித்து
இன்பம் தேடி
துன்பம் நேசித்து
காலம் தனை
காகிதக் குப்பையாக்கி
மரணம் கொண்ட
மாய வாழ்வின்
உதிர்ந்த இதழின்
கற்பனை கொண்டு
வாழ்வின் சரித்திரத்தை
இறந்த உயிரின்
இரத்தத்தில் எழுதுகின்றோம்

Monday 30 July 2007

தவறுகள்

என்னில் பல
தவறு வாழும்
போது
மற்றவர்
தவறை நான்
கூறியதால்
என்
தவறை மற்றவர்
கூற
மற்றவர்
தவறவை நான்
கூற
என்னை நானே
புரிந்து கொள்ளாது
மற்றவறை
புரிந்து கொண்டேன்
தவறாய்...

Sunday 29 July 2007

வாழ்க்கை..

எனக்காய் நீ தந்தாய்
உனக்காய் நான் இருக்க!
இடையில் யார் வந்தார்?
என்னை ஏனோ நீ பிரிய

உன்னினைவுகள்
எனைச் சுட என்னவனே
உன்னவளாய்
உன் வாழ்கையில்
இன்னும் நான்
தொடர்வே இல்லா
தொடர்கதையாய்
தொடர்கின்றேன்.....

Friday 27 July 2007

முகவரி

பெண்ணே உன் காதலின்
எல்லை அழித்து
உணர்ச்சியின் கவர்ச்சியால்
பெண்மையின் மென்மை
அழித்து
பத்துமாதம் சுமந்த தாய்மை
தனை அழித்து
காலத்தின் மாற்றமாய்
சிசுவை அழித்து
உன்னை நீயே
அழித்துக்கொண்டு
யாரைக் குறை
சொல்லுகின்றாய்

உன்னை இழந்து
உன் வாழ்வை இழந்து
மானம் காத்திடவா
தப்பான முகவரி
எழுதுகின்றாய் பெண்ணே........

உன் சிந்தனை மாற்றி
உன் முகவரி மாற்று
புதிய வாழ்கைக்காய்
புதிய உலகிற்காய்
மற்றவரை தண்டிக்க
முதல்..

Tuesday 24 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

எங்கள் தேசத்தின் வரலாற்றில்
இணைந்திட்ட
முதிர்வில்லா தோழனே
தியாகத்தின் தியாகமே

எம் நெஞ்சகத்தே குடி
கொண்டநெருப்பின் நெருப்பே!

யுத்த களம்தனில்
வீருநடை போட்டு
வெற்றி வெற்றியென
வென்று குவித்த
தோழனின் தோழனே

மரணத்தை உடலக்கு கொடுத்து
இலட்ச்சிய பாதைக்கு மரணம்
இல்லவே இல்லையென
எரிந்திடும் புதைகுழியில்
இருந்து விருட்சமாய்
எழுந்திட்ட வீர்களே! உம் விடுதலைக்கு
எம் தீப அஞ்சலி!

உங்களுக்காய்
எம் விழிணீர் அகற்றி
நெஞ்சம் தனில் நெருப்பேந்தி
சிந்தனை சுடரோடு
தீயாய் இணைந்து
பூக்கள் தூவி நிக்கின்றோம்

மீண்டும் மீண்டும்
ஈழம் தனில்
மனிதபூவாய் பூத்திட
வேண்டும் என்று.......


***********
எம் தேசத்தின் சரித்திரத்தில்
ஒன்று கண்ணீரில்
நனைகின்றது இன்று
பூவெடுத்து கண்ணீர்
அஞ்சலி செய்கின்றோம்

யூலையே ... நீ தந்த
கறுப்புப் புகையால்
கருகி விட்ட
மனித நேயத்தின்
நினைவுச்சுமைகளை
அழித்திட முடியாமல்

கரைகின்ற கண்ணீர்
அமுதசுரபியாய் எம்மிடம்
இருப்பதால் கரைகின்றோம்
கண்ணீரில் இன்றும்.....

சதி.....

யாரும் யாரையும்
விரைவில் வென்றிடத்
தேடிய பாதையாய்
நீ ஏன் வந்தாய்!!

கண்ணே மணியே என
காதலால் கொஞ்சிய
கதலின் சரித்திரத்தை சகதிக்குள்
தள்ளி நீ ஏன் வந்தாய்!!

பாசத்தை போலியாக்கி
போலிக்குள் உன்னை வைத்து
துரோகத்தை நட்பாகி
தூய்மையில்லா சீரழிவை
தேடும் மனிதன் தன்னைத் தான்
வெட்டும் கொண்டுமையாய்
நீ ஏன் வந்தாய்?

புரிந்து கொள்ளா மாயையென
சொன்னவர் மாண்டிட
மண்டவர் சொல்லியதை
வாழ்பவர் மறுந்து
புரியாது போனதால்
உதிர்ந்து தவிக்கும் தவிப்பின்
தவிப்பாய் நீ ஏன் வந்தாய்?

புரிந்து கொள்ள வைத்தாலும்
புரியாது வாழ்வதும்
உன்னாலே தானே சதியே..................

Monday 23 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

இயற்கையின் செழிப்பும்
பசுமையின் விரிப்பும்
பார்த்திடும் இடமெங்கும்
நீல வர்ணமாய் கடல் அலையும்
மோதி மோதியோடும்
பெண்ணின் நெலிவாய்
நதிகள் நடைபழக
வயல்வெளியெங்கும்
காதல் சிட்டுக்கள்
கதைபேசி மகிழ்ந்திட்ட
அழகிய தீவு

இன்று...
புதைகுழியாய்
எலும்புக்கூடுகளின்
சுடுகாடாய்
பெண் மங்கையின்
கற்பைப் பறித்திட்ட
அரக்கனின் ஆக்கிரமிப்பாய்!

அழுதிடும் குழந்தையின்
எதிரியாய் மாறிட வாழ்வின்
வாழ்கையில்லா தேசமாய்
இழப்புக்குள் சிக்கித்
தவிக்கின்றது

ரசிக்க வந்தவர்கள்
அவலங்களை படமாக்கி
சொல்லியும் புரியாத
அழிவுக்குள் மீளமுடியா
மனிதர்களானோம்
அழகிய தீவில்

Sunday 22 July 2007

கிறுக்கல்கள்,

என் கண்ணில் நீர் முத்தாய்
சிதறும் போது
உன் பாசங்கள் என் இதயத்தில்
பதியப் படுகின்றது

இந்த உலகை
மறக்கின்ற நிமிடங்களாய்
கவிதையை அணைந்துக்
கொண்டோன்

என்
மெளனசிரிப்பொலியால்
பலதை மறைந்துக்கொண்டேன்
இந்த வாழ்வை ரசிப்பதால்
இன்னும் வாழ்ந்து கொண்டு
இருக்கின்றேன்

***
என் சேகங்கள்
உன் இதயத்தை
தொட்டதா?
ஏன்? என்மீது
கோபம் கூட
வருவதில்லை

உன் பாசம்
எனக்கு வேதனைகளை
தரும்போது அமைதியாய்
சிரித்துக் கொண்டேன்

என்பாசத்தை பரீட்சித்தவன்
என்பதால் அல்ல
என்மீது - நீ கொண்ட
அன்பினால்

***************
எத்தனை கொடுமை
நீ தந்தாய் எனக்கு
உன்னை நான்
நேசித்ததால்!

போலியாய் நீ வந்தாய்
வேதனையென்றேன்
உண்மையாய் மாறினாய்
அப்போதும் வேதனைகள்
பல கண்டேன்

உன்னை நான்
எப்படி வெல்வது?
புரிந்துகொள்ளா
உணர்வே நீ
சொல் எனக்காய்
கொஞ்சம்

இரத்தமும் சதையும்
சேர்ந்த என் உடம்பில் நீ
எங்கே இருக்கின்றாய்
புரியாது தேடுகின்றேன்
புரியாத உணர்வே
உன்னை வெல்வதற்காய்

Saturday 21 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

மண்ணில் பிறந்தோம்
வாழ்வதற்காய்
அங்கே மரணம் துரத்த
ஓடுகின்றோம்
எங்கேயெனத்
தெரியாமல்

யாரிடம் சொல்வது
எம் இனத்தின் சாபம் தனை
எதிரிகளோடு   எம்
உறவுகள் எமைத்துரத்த
வழி தெரியாபாதையில் ஓடினோம்
எங்கே எனத் தெரியாமல்

எமைக் காத்ததோழர்களே!!!
எதிரிகளோடு எம் இனம்
அழிந்திடும் சாபம் மாறிடுமா?
அங்கே!!

Friday 20 July 2007

சகோதரனுக்கு....

கவிதையின் கவியாய்
எங்கோ பிறந்து என்
தங்கைக்கு உறவாய்
என்னோடு உறவாகி
என் சோகங்களின் வலியை
கண்ணீரில்லா சிரிப்பொலியாய்
எனக்கே தந்து
என் உணர்வுகளை
சொல்லாமல் செய்து
பிரமிப்பாய் ரசிக்க வைத்து
சிரிக்கவைத்தவனே! உன்னோடு
சண்டைகள் பல போட்டு
முரண்பாடுகள் கண்டபோதிலும்
அக்காவாய் தொடரும்
நம் பாசம் என்றும்
தொடர்ந்திட வேணுமடா?
உன் அக்காவாய்
உன் கனவுகள் நனவாகி மகிழ்ச்சி
பொங்க வாழ்ந்துகின்றேன் என்றும்





என்னவனே...

காதல் சொல்லா
கற்பனையில் கலந்திட்ட
உறவுவே! என்
உணர்வுகள் புரிந்திடாமல்
ரசிக்கத் துடித்தவன் நீ

ஆனால்...
யாரிடமும் காணப் பாசம்
உன்னிடத்தில் கண்டேன்
நான்...

பல பேரைக் கடந்து
வந்த போதிலும்
உன் மென்மையான
இதயம் என்னை விட்டகலா
சிந்தனைஆனது ஏனோ?


துடித்திடும் என் இதயம்
சொன்னது, துடிக்காத உன்
இதயம் வரைந்து சென்றது
காதல் ஒவியம் தானென்று!

அகதியாய் ஒர் வாழ்கை ........



கற்பனைகள் பல கொண்டு
பட்டங்கள் பெற்ற போதும்!!
வாழ வழியின்றி
வாழ்ந்தவிடம் தானின்றி
தூரதேசத்தில் துரத்தும்
சுமைகளில் தொலைந்த
தமிழன் தேடியும் காணா
கற்பனையாய்
உடல் வருத்தி
உணவு விடுதியில்
உழைக்கின்றான் தன் குடுபத்திற்காய்!!

மரத்து போன உணர்வுகளில்
தொலைந்த மகிழ்ச்சியை
அவசர அவசரமாய்
தேடிடும் தமிழன்!
இயந்திரத்தேடு போட்டியிட்டு
போட்டியிட்டு வென்று
சவற்கார நுரைக்குள்
கைகள் குளிக்க
களைத்து வெறுத்து
வலியோடு வாழும் கொடுமைகளை
சொன்னால் தான் புரியுமா?
பரிதாவ மனித வாழ்கை
ஏக்கங்கள் தனைக் கொண்டு
கண்ணீரில் கரைந்திட
சந்தோஷ தேடலில்
தொலைந்து போன
நாட்களை தேடுது மனசு!!!

Wednesday 18 July 2007

மூன்றாம் ஆண்டு நினைவு [19-07-2007]



மூன்றாம் ஆண்டு நினைவு - கவிதைகளால் ஒரு அஞ்சலி
மூன்றாம் ஆண்டு நினைவில் என்ன செய்வது என்று புரியாமல் கவிதைகளால் அஞ்சலி செய்கிறார்கள் இவர்கள்...

யார் இவர்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வியை விடுங்கள்... ஏதோ ஒரு வகையில் இந்தக் குட்டிப் பெண்ணின் நினைவை இதயங்களில் ஏந்தியவர்கள் இவர்கள்...

என் மடியில்
பூத்திட்ட சின்ன
மலர் இவள்
என்னைத் தாயாக்கி
எனக்குத் தாயாகி
தன் சுவாசத்தை
எனக்காய் தந்து
இன்று என்
சுவாசத்தில் கலந்திட்டவள்
மீண்டும் பூவானாள்
இங்கே என்றும்
என்னோடு வாழும்
அவள் வாசம்
இந்த
கவிதைப் பூக்களில்
வாழ்வதால் என்
ஆத்மா சமர்ப்பணமானது
இங்கே...!






------கவி ரூபன் -----------------

சின்னப் பெண்ணே
நீ மறைந்து
மூன்றாண்டாம்
உன் நினைவு
மட்டும் எப்படி இன்னும்
எல்லோர் மனதிலும்
முரண்டு பிடித்து
முக்காலி போட்டு
உட்கார்ந்து இருக்கின்றது?
பக்கத்தில் இருந்து
பார்த்துப்
பழகியறியாதவன்
நான்...
இருந்தும் செவிவழி கேட்டு
நிழற்படத்தில் பார்த்துத்
தெரிந்த எனக்குள்ளும்
எப்படி நீ விஷ்வரூபமானாய்?
வாழ்க்கை
விசித்திரம் தான்
வந்து போகும்
உறவுகளும் அப்படியே...
யாரோ
கிழித்த கோட்டில்
நீயும் நானும்
எப்படிச் சொந்தங்களானோம்?
சாவு அருமையான
விஷயம்!
இறப்பது தெரிந்தும்
'நிரந்தர இருப்பு'
அனுமதி பெற்றது போல
செய்யும் செயல்களில்
தான் எத்தனை
முரண்பாடு?
குட்டிப் பெண்ணே
நினைவுச் செதில்கள்
குற்றி
கண்கள் குளமாகின்றது
உண்மை தான்
ஆனாலும்
வெறும் வார்த்தை
ஜாலங்களில்
பாசாங்கு செய்யப்
பிடிக்கவில்லை
மறுபிறவி
உண்டெனின்,
எனக்கு மகளாய்
வந்து பிறவேன்
மகிழ்ந்து விளையாடலாம்!
எவ்வளவு அழகாய்
முடிச்சுக்கள்
விழுகின்றது...
வாழ்க்கை அழகு தான்
அவரவர் புரிதல் படி!
பெண்ணே
நினைவுக் கவிதை
என்று நினைத்து தான்
தொடங்கினேன்
ஆனால்
வாழ்க்கையின்
வடிவான பக்கங்களைப்
புரட்டத் தொடங்கிவிட்டேன்
உதிருகின்ற
பூக்களைப் பார்த்து
அழுவதைவிட்டு
மலருகின்ற பூக்களைப் பார்த்து
மகிழ்வதே
உன் நினைவு
எனக்குச் சொல்லும்
பாடம்!
உன் நினைவை
ஏந்திக் கொண்டு
வாழ்வென்னும் பெருங்கடலில்
நீந்தப் போகின்றேன்
ஒரு சமயம்
இருவரும் சந்திக்கலாம்!

[http://kaviyarankam.blogspot.com/2007/07/blog-post.html]

-------சுபா (சித்தி) ----

பூவொன்று
உதிர்ந்ததென்று
தாயின்று அழுகையிலே
விழிநீர் துடைப்பதா
விம்மல் அடக்குவதா
அல்லல் துடைக்கும்
கையொன்று எப்போதும்
ஆறுதலாய் பற்றுமென்று
தோளினைப் பற்றுவதா?
எதுவும் தோன்றாமல்
மனசுக்குள் மானசீகமாய்
மங்களங்கள் தோன்றட்டும்
என்று
மகேசனை வேண்டுவதா?
நீ
சிரிக்கும் போது
சிரிக்கவும்
அழும்போது
விழிநீர் துடைக்கவும்
நல்ல உள்ளங்கள்
சுற்றி இருக்க
சோகமென்ன என்றுரைப்பது
தானே சரி?!

----அம்மம்மா அப்பப்பா.......

எங்கள் முதல் முத்து
நீயம்மா எங்கள்
முதல் சொத்தும்
நீயம்மா காலங்கள்
கடந்தும் மறந்திடா
உறவும் நீயம்மா
உன் அன்னையின்
ஆராக் காயமும்
நீதான்னம்மா

........சித்தப்பா சித்தி....
உனக்காய் தேடித்
தேடித் நான்
அனுப்பிய அத்தனை
வாழ்ந்துக்களும்
உன் அன்னையிடம்
ஆனால் நீயோ.....
இறைவனிடம்
..............மாமா........
வெண்பனியில்
உன்னை நனைத்து
நான் ரசிக்க
என்னோடு சண்டை
போட்டவளோ....
இப்போது பனிகாலத்து
நினைவு நீயம்மா
...........மாமா சித்தி.....
உன்னை பார்கவில்லை
அதனால் நாங்கள்
உன்னை மறக்காது
தவிக்கும் அன்னைக்காய்
அழுகின்றோம்
..................நட்பு ..உறவுகள்..
சின்ன வயதிலே
பாசத்தின் ஆழம்
சொன்னவள் நீ
அழகின் ரசனை
சொன்னவள் நீ
குறும்பால் கவர்ந்தவள் நீ
அந்ததனையும் நினைவாய்
இருக்க நீமட்டும்
நிழலாய் ஏன்
மறைந்தாய்
............................

கீர்த்தன அர்ச்சணா....

உன் நினைவுகளை
நாங்களும் மறக்காது
எங்கள் இதயபூர்வமான
கண்ணீர் அஞ்சலியை
மீண்டும் மீண்டும்
செய்கின்றோம்....

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தீயென தன் உடலுக்கு
தீயிட்டு
புறப்பட்டாள் எட்டுத்திக்கும்
சுட்டெரிக்கும் தீயென
பெண் மங்கை!

நம்விடுதலை காற்றை
அவள் சுவாசித்தால்
மென்மை பாறையாய்
உறையா வெண் குருதியில்
தன்னுடல் நனைத்து புறப்பட்டாள்
பெண்மங்கை!

தன் திறமை தனை தான் நம்பி
 உலகிற்கு தன் வீரம் சொல்லி
தன் உறவிற்காய் கை கொடுத்தாள்
பெண் மங்கை!
தன் உயிரை துச்சமாய் எண்ணி
இரவு பகல் தனை மறந்து
பொன்மலர் தீக்குள் ஒளியா
ஈழத்துமண்ணில் விழ்ந்திட்டாள்
பெண்மங்கையாய்!

வித்துடல்கள் வீதியில்
மரணத்தின் தூய்மையால்  எம்மிடம்
சொல்லாமல் சொல்லியது
அவர்களே !சிகப்பு மலர்களென்று

Tuesday 17 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன்னுடல் சிதறிட
தேசமெங்கும் கலந்திட
மரணத்தை தன்னுடல்
சேர்த்து நடத்தனர்
மகிழ்ச்சி பூக்களாய்!
எம் விடுதலை காத்திட
எம் உயிர் காத்திட
தன் உயிர் தந்த
தோழர்கள்..!

மரணத்தை காதலித்து
தேசத்தை சுவாசித்து
கல்லறையை நேசித்து
எம்மிடம் சொல்லாமல்
சொல்லிச் சென்றவை
ஆயிரம்!

அதனால்! அஞ்சிய நான்
இன்று  என் விழி
நீர் கொண்டு
செய்கின்றேன் அஞ்சலி
புனிதமாய் உதிர்ந்திட்ட
உயிர்களே உங்களுக்காய்....

Monday 16 July 2007

வறுமையின் கண்ணீர்

வறுமைப் பெண்ணின்
உணர்ச்சிகள்
குடும்பச்சுமையிலும்
கூலி வேலையிலும்
கரைந்து போனதால்

சீதனச்சந்தையில்
அடிமாடாய் நின்ற
வறுமைப்பெண்
வந்து வந்து போகும்
ஆண்களை ஏக்கத்தோடு
பார்த்து சொன்னாள்..

இது
வறுமையின் குற்றமோ
ஆண்களின் குற்றமோ
இல்லை
பெண்களே !! பெண்களை
புரிந்து கொள்ளா குற்றமென்று

ஆனாலும்
பணக்கார விதவைப்
பெண்ணிற்காய் கண்ணீர்
விட்டாள்
மீண்டும திருமணம்
சந்தையில்
சீதனம்ப் பேச்சியில்
விலை மாடாய் அவள்
நிற்பதை பார்த்து

தன்
கண்ணீர் துடைக்க ஆண்
இல்லாத அவளைப்பெண்
அவளுக்காய் கண்ணீர்
விட்டாள்......

Sunday 15 July 2007

விலைமாது

பாவப்பட்ட ஜென்மங்கள்
இருளும் வெளிச்சமும்
ஒன்றானாது இவர்களுக்கு
பகலில்
தீண்டப்படாத உறவுகளாய்..
இரவின் ஆசைக் கிளிகளாய்
வாழ்ந்ததிடும் இவர்களை
காரிஉமிழ்ந்து வசைபாடும்
உத்தமர்கள் ஆயிரம்

ஆனால்
கொடுமை யிலும் கொடுமை
பகலில் மட்டுமே
இரவின் முதல் ரசிகனுமாய்
வாடிக்கையாளனுமாய்
முகமூடிதிருடனுமாய்
வாழ்பவர்கள் இவர்களோ

இந்த பாவப்படட
ஜென்மங்கள் தன்
உணர்ச்சிகள் விற்று
மரணத்தை தேடி
யாருக்காய் வாழ்கின்றனர்?

Saturday 14 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன் கணவன்
உயிரைக் காத்திட
முடியா..
கலியுகக் கண்ணகி
கண்மூடித்தூங்கி
பல நாட்களாச்சி!

வாகனத்தின் சத்தமெல்லாம
மரணத்தின் ஓசையாச்சி
பயந்து பயந்து பாதி உயிர்
அவளுக்கும் போயாச்சி!
இறந்திடாமல் நரகமும் சொர்க்கமும்
கண்முன்னே  தோன்றலாச்சி!

போராடிப் போராடி
களைத்திட்ட அவளைத்தேடி
வெள்ளை வேணில் வந்தம்மா
விதவையென்னும் பட்டம் ஒன்று

 யார் தடுத்தும் இறுதியில்
மாறிடாக்கோலம்
அவளுக்கும்  சொந்தமாச்சி ...!

Thursday 12 July 2007

யார் அவள்

வானமே இல்லாத நிலவாய்
தென்றலே தொடாத மலராய்
எழுதப்பட்ட புத்தகத்தில்
வர்ணிக்கப்படாத கவிதையாய்!
கண்களின் கண்ணீரைப் புரிந்து
கொள்ளா உறவுகளின்
சுமைதாங்கியாய்!
மூடநம்பிக்கையின் ஆணிவேரில்
தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய்!
இரவின் வரவிற்காய் காத்திருக்கும்
அல்லிமலராய்!
கனவுக்குள் நிஜத்தை
தோடுபவளாய்!
தலையணைக்கு மட்டும்
தெரிந்த கண்ணீரின்
ஈரத்தை சொல்ல
யாருமில்லாதஅவள் யார்?

என் விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட சாரல்...1



சிதைந்திடும் கோலத்தில்
கரைகின்ற கண் மையில்
வழிகின்ற விழிநீரை
ஏந்திடா தனிமைக்குள்
சமாதானத்தின் சின்னமாய்
தூய்மையின் சோகமாய்
வெள்ளை மலரொன்று.
விடியா இரவுகளில்
தொலைந்திட்டாள்
ஏக்கங்களோடு

தன் மனதைப் புரியா
மனிதர்கள் சமாதனம்
வேண்டா தனிமைச் சிறைக்குள்
தூய்மை தேடினாள் தன் தூய்மை
சொல்ல...
**************************
பூவென்று பூக் கொண்டு
பூப் போல் பூமகனைத் தேடி
நதிமேல் நதியாய் நதிபோல்
நதி கடந்திடுது தனியாய்
வெண் முகத்தின் ஒளியால்
வெண்மேகம் ஒளிபெற்று
சிரிந்து வரவேற்க !
கரு கூந்தல் தொட்டதென்றல்
கருமேகம் கூட்டி சின்னத் துறல்
போட்டு வரவேற்க !
சின்ன வேர்வைப் புள்ளி
தொட்ட துறல் பட்டுச் சிவந்த பெண்னைப்போல்
சூரியன் வந்து வரவேற்க!
வந்த சூரியன்ப்பார்வையால்
 கொண்டநாணப் பெண்மைபோல்
வானவில் வந்து வரவேற்க!
மெல்ல விரிந்த பூக்கொண்டு
வானவில் வர்ணமாய் மெல்ல போகின்றாள்
பூமகனைத் தேடி......

*****************************
வாழ்ந்த நாட்கள்
இனிமை சொல்ல
உண்மை பாசம் தாம்
கொண்டு !இணைந்த
இதயக் காதலால்
போகும் நாட்கள் தனை
மறந்து! முதுமைக் காலத்து
இளமை நினைவில் மயங்கி
நிக்கின்றது முதுமை இங்கே
************************************
வெள்ளைப் பனிச்சாரல்
பூமி நனைக்க, நனைந்த
பூமி குளிரில் தவிக்க!
தவிக்கும் பூமியியோடு
முதுமை துடிக்க!
துடிக்கும் முதுமையின்

உணர்வின்றி குழந்தைகள்
குதிக்க! குதிக்கும் குழந்தையாய்
விரிந்திடும்  மலர்களை
மூடிய பனிக்குள் இதழ் நடுங்க!

நடுங்கும் மலர் கண்டு நான் வாட
வாடிய எனைப் பார்த்து
என் இதயம் துடிக்க!
துடிக்கும் எமைப் பார்த்து

சூரியன் சிரிக்க! சிரிந்த சூரியன்
சிந்திய வெப்பத்தில் வெண்பனிஉருக!
உருகிய பனி கண்டு ,
என் மலர் சிரிக்க!
சிரிக்கும் மலர்கண்டு நான் சிரிக்க
எனை பார்த்து என் இதயம்
சிரிந்ததுமெல்ல .....................

*****************************

வண்ணமதி ஓளியில்
வெள்ளிநிலவென்று
இருண்ட வாழ்வின்
இருள் போக்க
மென்கரத்தால் ஒளியெடுத்து
இல்லமெங்கும் ஒளிர்கின்றாள்


புதிய காற்றின் வாசமாய்..
***********************************
சலனமில்லா இதயமென்று
உயிர் ஓவியமானதால்
பார்வைகள் பல சொல்ல
புரியா மனிதர்கள் பார்வையின்
நிலை கண்டு! இருளோடு
ஒர் சிறை தான் கொண்டு
இருண்ட வானத்தின்

நச்சத்திரத்திலும் நிலவிலும்
உறவின் முகம் கண்டு
பூவின் சிரிப்பில் தனை
மறந்து ,உரிமையோடு
உலமை ரசித்திட !
தப்பான தப்பு
தப்பாய் தவறி விழ
புரிந்தது அவளுக்கு
உண்மை உலகம்....
*********************************
இழந்த வலி தனை மறக்க
கல்லறைப் பூவென்று
கருவறை விதியால்
வாசமின்றி விசியது
வர்ணப்பூக்களின் முகம்
போல.....
காயம் தந்த கண்ணீர்
காலமும் மற்றிடா கோலம்
நிலையாக்கொண்டதால்
இப்போ! தவிக்கின்றாள் தன் நிலை
கண்டு................

ஏந்திய கையுக்குள்
ஓர் கை
இணையத் துடிக்கின்றது
சமாதானத்தைப் போல்
எட்ட நின்றே...





********************************
சிந்திய சிரிப்பொலியும்
பேசிய வார்த்தையும்
நித்தமும் என் காதில்
ஒலிக்க..
அவளோ சித்திரமாய்
சுவரில் தொங்கி
நித்தம் நித்தம் என்னை
நித்திரையின்றி தவிக்க விட்டு
அழகாய் சிரிக்கின்றாள்
என் நினைவோடு

எத்தனை எத்தனையோ
கற்பனைகளை என்னோடு
நித்திரையின்றி சொல்லி விட்டு
அத்தனை கனவையும் என்னிடம்
விட்டு சித்திரமாய் சிரிக்கின்றாள்
என் உயிரோடு


நித்தம் நித்தம் என் இதயம்
துடிக்க மறுத்தது அவள்
கன்னக்குழி சிரிப்பழகை
காணாது

எத்தனை எத்தனை கொடுமைகள்
வாழ்கையோடு வந்தாலும்
கண்மணியே!! உன்னை இழப்பது
போல் கொடுமை வேண்டாம்
இந்த பூமியில் எனி...............
*********************************
அழகு காதல் தான்
சேர
உணர்ச்சி தடுமாற்றம்
கூட்டுச் சேர
தப்பு தப்பில்லா சரியில்
ஒன்று சேர
கூடியவன் கூடுவிட்டு
தான் போக
பெண்மையின் தாய்மை
அதில் சேர
கற்பத்தில் கரு சேர
பத்து மாதம் சுமை சேர
சிற்றெறும்பு காட்டு
மரப்பொத்தில் சிசு சேர
நெஞ்சில் பால் சுறக்கா
பெண்மை தன் மானம்
காக்க
எறிந்தால் மொட்டு ஒன்றை
சித்தெறும்பின் காவலில்......

******************************


இதயங்கள் இரண்டும்
ஒன்றோடு ஒன்று
காதல் கொண்டு
தாயாய் சேயும்
சேயாய் தாயும்
மாறி மாறி
இன்பக் கனவைச்சொல்லி
இந்த உலகம் தாம் மறந்து
புதிய உலகம் தாம் கண்டு
வாழ்கின்றது வாழ்கையொன்று

*********************************

******************************
அறியா மனிதன்
அழிவு நிறுத்தி
அதிகார வர்க்கம்
தனை மாற்றி

கருவறை முதல்
கல்லறை வரை
உயிரின் உரிமை
தனை இழந்து தவிக்கும்
உறவிற்காய்......

பூப்பறிக்கா கைகள்
பூவேந்தி வருகின்றது
இறைவா உன்னிடத்தில்
பசியில்லா தவிப்பில்லா
உயிரின் வாழ்விற்காய்...

Wednesday 11 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

எம் இனத்தின் உயிர்குடித்து
குருதி தனில் நீ
நனைத்தும் அடங்கிடாத
உன் தாகம்
இன்னும் தொடர்கின்றது தொடர்
கதையாய்!!

வருடத்தில் ஒரு
முறை நீ தோன்றினாய்
எம் இனத்திற்கோ
பல முறையேன்வந்தாய்?

சின்ன உயிர் தனைக்
கொள்ள எத்தனை
பெரிய ஆயுதங்கள்
பாசத்தைச் சொன்ன
இதயங்கள் கருகிய
கோலங்கள் கண்முன்னே
பார்த்துப் பார்த்து அழுதிட்டோம்
கண்ணிருந்த கோழைகளைாய்!!

ஆனாலும்! நாம்
இன்னும் கரைகின்றோம்
குருதியில்  
விடுதலைத் தீயில் எரிந்திட்டாலும்
எம் கண்முன்னே நிழலாய்
உன் சோகங்கள் மாற்ற முடியா
வலிகளாய்!
யாரிடம் சொல்வது  நாம்
 மனிதனுக்குள்  மாறுபட்ட உயிர்களான
கதை...?

Tuesday 10 July 2007

ஹைக்கூ... கவிதைகள்

தாய்யூட்டிய பால்
அவள் இனத்தை அழித்தது 
ஆணாதிக்கம்
*******
காதல் வைத்தியம்
பைத்தியம் ஆனதால்
  வைத்தியம்  செய்தது  பாசம் 
*********
அழகிற்க்காய் ஆடைகிழிப்பு
வறுமையாடை
தேடித் தவிப்பதோ  நூல்     
 
*********
தனிமை சிரிக்கின்றது
உரிமைப் போராட்ட
குடும்பசிதைவைப் பார்த்து
*********
பொய்யான முகங்களால்
பரீட்சைவந்தது மூகமுடிக்கு
பாசத்தைக்காக்க!

*********
என் கணவனுக்கு
எல்லாம் நானென்றாள் அவன்
உணர்ச்சியை அழித்து 
*********

பெண்விடுதலைக்காய்
கருந்து சொன்னான்
வீட்டிலோ பெரியபூட்டு

*********
ஆடம்பர வாழ்கை 
வெள்ளித்தட்டில் 
பிச்சையெடுக்கின்றது  பாசத்தை 

*********
சீதனச்சண்டையில் இருவர்
பாடோ பெரும்பாடு
போலி முகத்தல் 

*********
முகம் தெரியா முகவரியில்
உணர்ச்சித் தடுமாற்றம்
நட்பானது
*********
கல்லறைக் கல்லாய் நீ
நான் நம் உணர்வோடு
வாழ்கப்பாதை    
*********
நீ சாதிக்க கனவு நானான்
 ஆனால்  என் கனவு
 கனவுக்கள் சாதனையானது!
*********
திருமணச் சந்தையில்
மீண்டும் தேடல் பத்துப்
பொருந்தம் மறுமணத்திற்காய்

*********
பெற்றோர்கள் சண்டை
பிள்ளைகள் தூது !நாளைய
வாழ்க்கைப்பாடத்திட்டம்

***************************
காலத்தின் கட்டாய மாற்றம்
வேடத்தில் மாறியதால்
வில்லத்தனம் வில்லியானது!
****************************
இன்றைய நட்பு
நாளைய  தேடலால்
நீ எனக்கு யரோவாகின்றது
நட்பின் ஆழம்
*************************
என் இதயம் வலிக்கும்
போது நீ தொல்லையானாய்
நினைவுகள்
***********************
மொழிகள் ஊமையானது
உன்னைப் போல்
மெளனம்.........
**********************
அம்மா திண்டாட  மது 
கொண்டாடவந்து   
மக்களுக்குப் பிறந்தநாள் 
************************
தொடர் தொடராய் சோகம்
அழுதழு அவள் ஓய்ந்தாள்
சின்னத் தொடர் 
***************************
ரசிக்க தொடங்கியவன்
ரசினை தொலைத்தான்
ரசனையில்லா காதலால் 

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஈழமாம் எம் நாட்டில்
வாழ்வதற்கு வழியின்றி
உண்பதற்கு உணவின்றி
அலை பாயும் எம் இனத்தை
கரை சேர்க்க யார் வருவார்?

வேதனையில் எம்மவர்கள்
துடிதுடிக்கும் காட்சியினை
பார்ப்பதற்கு கண்ணுண்டா?
கொடுமைகளைக் கேட்பதற்குக்
செவியுண்டா? இதனை
கூறுவதற்கு யார் வருவார்?

நீதிகள் வெந்த பின்னர்
சுடர் விடும் அநீதிகளால்
எரிகின்ற ஈழத்தை
அனைத்தெடுக்க இங்கே
யார் வருவார்?

இதயங்கள் காணுகின்ற
இன்பக்களை வென்றிட முடியாமல்
இருள் தனில் தவிக்குதையா
ஒளியின்றி எம் இனம்  இம்மினதிற்காய்
ஒளியினை  ஏற்றி வைக்கயார் வருவார்?

Sunday 8 July 2007

புரியவில்லை

எம் உணர்ச்சிகள் எமக்கு புரிந்தாலும்
புரியாத வாழ்கை தனில்
புரியாத பயணங்கள் சில...
கணவனயாய் மனைவியாய்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உயிர்களாய் பிள்ளைகள்
எம்மோடு வாழ்ந்திட்டாலும்!!
ஏனோ புரியாத சண்டை ஒன்று
தொடரான தொடர்கதையாய்
எம்மோடு !!
அண்ணனாய் அக்காவாய்
தங்கையாய் தம்பியாய்
பாசத்தின் உறவிற்குள் உறவாய்
நாம் வாழ்ந்தபோதும்!! ஏனோ
உரிமைக்காய் சண்டை ஒன்று
எம்மோடு !!
சண்டைகள் சண்டைபோட்டு
எதிர்ப்புக்குள் எதிர்ப்பாய் நின்று
பிடிப்போ இல்லா வாழ்கை ஒன்றும்
பிடிப்போ இல்லாமல் எம்மோடு தோன்ற

சீதனசந்தையில் பெண்னேடு பென்னும்
பொருளோடு பணமும் விழ்ந்திடா
திருமண வாழ்வின் விழ்ந்திட பயணத்தின்
வீண் வம்பின் உணர்ச்சி தான் ஏன்?

Saturday 7 July 2007

மனம்

என்னை சிறையில்
அடைத்து விட்டு
போலியான வாழ்கை
எதற்கு மனிதா_ நீ
சொல்லு கொஞ்சம்

அப்பப்பா!! எந்தனை வேஷங்கள்
நீ போட்டு மற்றவர் துயர்
ரசிக்கின்றாய்

என்னை நீ மறந்து
மிருகமாய் நீ மாறி
உன்னை நீ அழிந்து
உன் வாழ்கை அழிவது
அறியாமல் தவிக்கின்றாயே மனிதா?

ஏன் மனிதா? உன்னிடம்
நான் சிறையிருப்பதை
மறந்து போனாய்
உனக்காய என்னை
ஒரு தரம் திறந்துபாரேன்!!

Thursday 5 July 2007

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


விதி


அன்னை மடிதொட்டு
தந்தை கரம்தொட்டு
மாமன் உறவைத் தொட்டு
மாமியின் பாசம் தொட் டதால்
அன்பே உன்னைத் தொட்டு
மழலைகள் வாழ்வைத்தொட்டு
சொர்கம் என்னைத்தொட
சோதனை நமைத்தொட்டு
இறப்புகள் வாழ்வைத்தொட்டு
பிரிவுகள் எனைத் தொட்டதால்
இதயம்வ லியைத்தொட்டு
கண்கள் நீரைத்தொட்டு
கவிதை சோகம் தொட்டு
தவிப்புகள் எனைத்தொட்டு
துடிக்கின்றேன் உன்னால்
இதுதான் விதியா?

ஏன் இந்த மயக்கம்

இயற்கையால் இணைந்த
அழகிய வாழ்கைத் தோட்டத்தில்
ஒன்றோடு ஒன்றாய் உறவு கொண்டு
வாழும் நாம் இங்கே
எப்போது சிந்திப்போம் !!

பட்டிமன்றம் போட்டு
வாதிட்டு வாதிட்டு களைத்தே
விட்டோம் ஆனாலும்
தீர்ப்புகள் மட்டும் மாறி மாறி
வந்து போக இருட்டுக்குள் நின்று
கொண்டு வெளிச்சத்தில்
தவிக்கும் எம் அறிவுக்கண்
எப்போது தான் திறக்கும் இங்கே

தப்புகள் வரும்போது
நீயா? நானா? என
சண்டை போடும் நாம்
எற்றுக் கொள்வோமா?
அழகா வாழ்கை நாம்
இருவரும் சேர்வதில்
தான் என்று......

தொலைபேசி

என்னைத் தொட்ட சோகங்கள்
இது வரை தொட்டதுண்டா
யாரையும்?கண்ணீரில் கரைகின்ற
பல கதை நான் கேட்டு
என்னை நானே நொந்து கொள்ள!
ஏக்கங்கள் தனைக்கொண்டு
உறவினைத் தேடும் உறவுகள்
என்னோடு உறவாகி உறவுகொள்ள!
பாசம் தனைத்தேடித்தேடி என்னோடு
அடைக்கலமான குழந்தைகள்
ஆறுதல் தேடிப் பாசம் கொள்ள!
பிரிவின் துயரால் இதயத்தடிப்பாய் துடிக்கும்
காதல் நெஞ்சங்கள் என்னோடு
கொஞ்சிப் பேச! கொஞ்சும் இவர்களின்
வலிதனை சொல்ல வார்தையின்றி
நான் மௌமாய் தவிக்க!
தவிக்கம் என்னோடு
இயந்திர வாழ்கையில் தொலைத்த
மகிழ்ச்சியை கணவனும் மனைவியும்
என்னை அணைத்து தேடிக்கொள்ள
காத்திருகு்கம் நேரத்தின்
வலியினைச்சொல்ல வார்தையின்றி
நான் தவிக்க,தவிக்கும்
என்னையும் வம்பிலுத்து வம்பில்
மாட்டி விடும் வாலிப நெஞ்சங்களோ
உங்களை என்ன சொல்லி நான் திட்ட

தேடலால் வந்தசாரல்.....,

எங்குமில்லா சொர்க்கத்தை
சாட்சி வைத்து!
பத்துப்பொருத்தம் தனைப்பார்த்து
சாதி மதம் கூடி வர
நட்சத்திரம் சேர்ந்து விட
காசு பொருள் ஒத்து வர
இருகுறிப்புகளின் சங்கமத்தில்
தெரியா இதயங்களை
புரியாக் காரணத்தால் தெரிந்தும்
இணைந்து விதியென்னும் மதியை
சதியால் வென்றிடச் சொல்வதா
திருமணம்?
இல்லையே...இரு உணர்வு
ஒன்றான இரு இதயங்களின்
நீண்ட நாள் கனவுகள் தானே.....

தேடலால் வந்தசாரல்.....,

காவியக்காதல் முதல்
கலியுகக் காதல்வரை
இதிகாசம் முதல் இலக்கியம் வரை
கனவுமுதல் கற்பனைவரை
அப்பப்பா!!
பெண்கள்பாடே பெரும் பாடு

ஆதி முதல் அந்தம்வரை
அந்தனையும் சிந்தைக்குள்
கோலம் போட !
காலை முதல் இரவு வரை
மங்கையிவளை எண்ணிக்கொண்டு
அலங்கோல பொம்மையாக்கி
எதற்காய் இத்தனை ஆர்ப்பாட்டம்
பிரிகாசம்!!

மாற்றங்களின்றி மாற்றமேயில்லாது
இவர்கள் வாழ்வதற்கு
அதிசயப் பிறவிகளா?இல்லை
உணர்ச்சியற்ற ஜடங்களா?
எதற்க்காய் இத்த வெறுப்பு
உங்களுக்கு இவர்கள் மீது..............

என் உயிர்ச் சாரல்............,



பூவுக்குள் பூவாய்
பூமகள் இவள் உறங்க!
பாசத்தோடு உறவுகள்
 கண்ணீர் சிந்தி சுற்றி நிற்க!!

இவளையும் வெறுத்திடும்
சில இதயங்கள் பெருமூச்சு
விட்டு நிற்க

ஏனடா சந்தித்தோம்
இவளை என
சிலர் திட்டி நிற்க

இவள் மட்டும்
பூவோடு பூவாய் வாடாது
உறங்கிக் கொண்டு!
தன் இறுதி
விடுதலைப் பயணத்தில்
மலர்ந்த மகிழ்ச்சிப் பூவாய்யாகின்றாள்

இன்று
இவளுக்காய் அழுதிடும்
உறவுகள் மறந்திடுவார்
மரணத்தை மீண்டும் நாளை!!!

Sunday 1 July 2007

குட்டிக்குட்டிச் சாரல்......,


எனக்கே தெரியாது

நீ விரித்த வலையில்
புள்ளி மானாய் நான்
இரையாக நீயெடுத்து
ருசித்து விட்டாய்
விதியென நான் அழுகின்றேன்
சதியென தெரியாது....





************************
வலி கொண்ட இதயம்

வடித்த கண்ணீரை
வானம் ஏத்தியதோ!!
பூமியும் வெள்ளையாடை
அணித்துள்ளதே.....




********************




பூட்டப்படாத கதவுக்குள்!
சுகந்திரக் காற்றை
மட்டும் சுவாசிக்கு சிந்தனை

வானம்பாடி இவள் வாழ்கை
இவள் மனதிற்கு
மட்டுமே
சிறைக்கதவுகளை இட்டுக்கொண்டாள்!!




*********************
கவிதை என்னுள்

வந்தபோது
வாழ்வை மறந்தேன்
ஏட்டில் வடித்த போது
சோகம் அறிந்தேன்





*****************

நான் பார்க்கும்
இடமெங்கும்
நீயானாய்
உனைப் பார்க்கும்
வரை.....





**************************

உயிர் ஒன்று வாடுதம்மா

பிரிவால்! பிரிந்து நின்ற
நினைவு வந்து சிரிக்குதம்மா!
இவளோடு சேர்நதே நின்று




****************************
உன்னால் என் உயிரைத் தர

முடிந்தால் உன்னால்
என் இதயத்தையும் பெற
முடியும்...




************************

என்னைத் தொலைத்து

உன்னைக் கண்டு
நீயென நான் மாறியதால்!!
இப்போ நீயும் நானும்
ஒன்றானோம்!!!


*************************

தன்னிடம் தொலைத்து
பிறரிடம் தேடி
காலத்தை கரைத்து
காவியம் வரைத்தது
ஒர் கனவு.........




*********************


என்னால் முடியாது உன்னை

மறந்து  வாழ !ஆனால்
முடியும் உன்னை
மறந்தும்  வாழ என்னாலும்
என் பலகினத்தை நான் பாதையின்
படியாக்கும் போது1!!







***************************


என்னை அவன்

புரிந்து கொள்ள
அவனுக்கு தேவைப்பட்டது
இன்னுமோர் உறவு.....




***************************


துயரத்தில் என் உருவம்

பல கோணத்தைக் காட்ட
அதைப் பார்த்த விம்பம்
அழுகின்றது தனியே..



**********************
உறவே உன்மொழி மெளனம்

என் மொழி வேதனை
நம் மொழி என்ன?









************************

உன்னேடும் என்னேடும்

வாழும் சில கால சொந்தம்
உன்னையும் என்னையும்
எல்லையின்றி தொட்டு
சொல்லுது காலத்தின் பாதை





*******************************

என்ன பதில் நான் சொல்ல

வாழ வழியின்றி வாழ்ந்த
இடம் தானின்றி அகதியாய்
அயல் நாட்டில் வேலையே
 வாழ்கையாய்
சின்ன சின்ன ஆசைகளை
பகிர்ந்து கொள்ள நேரமின்றி
வேக வேகமாய் தொலைந்த
வாழ்வை தேடும் முதுமையின்
கேள்விக்கு...............

*********************************

தொலைந்த வாழ்வின்

தொலையா நினைவே
ஏன் என்னை தொடராய்
தொடர்கின்றாய்?
யார் தந்தார் என்னை
உன்னிடம்! ஒரு தரம்
சொல்லி விட்டு தொடறேன்!
என் காயத்தின் வலிதெரியவர்
வார்தைக்குள் கைதியானவள் எழுந்து
காலத்தை வென்று காயத்தையாற்றிட
காரணத்தை தேடுகின்றேன் !சொல்லிவிட்டு
தொடறேன்!!!


**********************


தமிழ் என்னும் அமுதினை

திகட்டாது நான் உண்டு!
கரைந்திட்ட காலமதை
கவியென நான் வரைந்து!
வாழ்ந்திடும் நிமிடங்களை
உனக்காய் தந்து! உன்னோடு
வாழும் நிமிடங்களை நான்
ரசித்து! இருப்பேன் என்றும்
உன் தமிழாய்......

****************************

சரியென சரியென

சரிந்தது ஓர் சரி
சரியாய் வந்து போக!
இது சரியானதால்
சரியில்லா சரியை
சரிசெய்து சரிசெய்து
சரியாகுது இங்கே!
ஓர் சரி சரியோடு சரி சேர்ந்து!
இது சரியில்லை சரியில்லை
எனச் சொல்லி சாய்ந்தது தோல்களில்
*******************

கல்லறை மலரென்று

கன்னிப் பருவத்தில்
தொலைத்திட்ட நாளை
காயங்களால் கரைந்து
கற்பனையோடு கனவைத் தேடி
மெளனத்தின் நினைவோடு
கரைக்கின்றது! காயங்கள்
தந்தவர் காயமின்றி சிரிந்திடும்
இன்ப நாளை பார்த்திட.........
தன் இதயத்தின் வலியை
தன்னுள் அடக்கிக்யபடி !!

**********************
தமிழ் அழகு கவியழகு

கற்பனைக்குள் வாழ்வதும் அழகு!
எல்லா அழகிலும்
உங்களுடன்
சேர்ந்திடும் அழகை
தந்திடும்அழகு
எப்போதும் அழகு...

********************

என்னுள் ஏதே வேதனை
தெரியா வலி தர

தனிமை தேடினேன்
ஏனெனத் தெரியாமல்
ஆனால்.....
இசையின் அணைப்பில்
இசைக்கொரு கைதியாகி
இன்னும் நான் உயிரோடு....

***************************

மெளனங்களோடு

வாழும் நாட்கள்
ஞாபங்களோடு கழிந்திடும்
நிமிடங்கள்
ஏக்கம் கொண்டு தேடிடும்
வாழ்கை வழிதெரியப் பாதையில்
வழிதேடுது கண்ணீர்துளிஎன்றும்.......


*********************************

கண்களை மூடினேன்

கனவில் நீ வந்தாய்
விழிகளைத் திறந்தேன்
வேதனைகள் எனைமூட..







**************************

பெரும் பாவம் சுமக்கும

என் அன்பே! உன் பாவம்
சுமக்க நான் வந்தேன்
தேய்பிறையாய் தேயாது
வளர்பிறையாய் வந்து விடு
இனிய உதயம் காண்போம்
என் நாளும்.....


*****************************

ஒழிந்திருப்பதை நீ கண்டு

ஒழித்தேன் போனாய்
ஒழிந்தவள் தெரியாது
ஒழித்து போனவனே
ஒழிந்தவள் உள்ளம்
கண்டுவா? ஒருவழிப் பாதை
கனவுகள் சுமக்கும் பெண்ணென்றால்......