Wednesday 23 July 2014

ஹைக்கூ... கவிதைகள்,

இல்லத்து மகிழ்ச்சிக்காய்
 மகிழ்ச்சிதேடலானான் தலைவன்
பக்கத்துப்பாட்டியை வைப்பாட்டியாக்கி!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏமாளிபெண்ணிவளை
ஏமாற்றி ஏமாற்றம்
தந்தவனே!!
சோகத்தின் பள்ளதில்
ஓடிடமுடிய குழிக்குள்
மரணத்தின இருக்கையில்
இலையுதீர் காலமானேன் உன்னால்!!

பென்னுமில்லை பொருளுமில்லை
அள்ளிக்கொடுத்திட உனக்கு
அறிவுமில்லை அழகுமில்லை
ஏமாற்றியெடுத்திட எனக்கு!!
வசத்தின் வாழ்கை தனை
பற்றிய பின் நானிருந்தால்
அப்போது பார்ப்போம் அன்பே!



Tuesday 22 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆனந்தத் திருநாளாம்
அர்தமற்ற பெருநாளாம்
ஆளுமையற்றவர்
கூடிபேசி கொண்டாடும் நன்நாளாம்
ஆண்டைத்தொலைத்து
ஆளுமையானது இதயமதில்

Wednesday 16 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

தமிழ் வார்தை
நீயானதால்

அதையெடுத்து

நான் படைத்தேன்
கவிதை! தமிழுக்காய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதய சாந்திதொலைத்து
தொலைத்த சாந்தி
தேடி
கோவில் சென்றான்
சாந்தி வேண்டி..
அங்கு வந்த தேவதை கண்டு
தன்னை தொலைத்து
சாந்தம் கொண்டான்  தனக்குள் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் முதல் கவிதை நீ
என் முதல் ரசனை நீ
என் முதல் உறவு நீ
என் முதல் மகிழ்ச்சி நீ
என் முதல் காதல் நீ
என் இறுதி காதலும் நீயோ!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் உள்ளத்தின் மென்மை அழகு
உன் உட்டில் சிரிப்பழகு
உன் பொய்யில்ல சொல்லழகு
உன் கோபத்தில் கண்ணமழகு
உன் பொறுமைக்கு நீயழகு
உனக்கென்றும் நான் தான் அழகு!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கூடத்தான் ஆசை
என் அன்பே!!

உன் நெஞ்சமென்னும்
கூட்டில் உன்னோடு
கூடத்தான் ஆசை
ஆனாலும் கூடத்தான்
ஆசை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

விழியுறங்கா வீழ்கரை விடியலின்
விழியுறக்கம் நீயேயானாய்!
மொழியில்லா தழிழுரை ஊமைக்கு
முகத்திரை  நீயேயானாய்!
விதிகுழிவீழ்கரை
வழித்துணையில்லா இருள்கரைக்கு
வழியோரக்கயிறு நீயேயானாய்!!
கருவிதை சிதை தாமரை
வெண்கரை வீழ்தரை மணலேரக்கரை
தென்றலும் நீயேயானாய்!!
பெருத்துயர் பாவக்கரைத்துளிக்கண்ணீர்
வழியகம் சிதையறம் சிதையா
திருமுகமேனாய் நீ.........

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

திங்கள் முகம் கோவையிதழ்
செம்மொழிப்பாவை
செந்தமிழ்மொழிபேச்சு!!
அச்சுவெல்லப்பார்வை
அனிச்சமலர் நாணம்
கொஞ்சும்குரலோசை
முல்லை மலர்மனசு!!
 தங்கம்வென்ற வெண்பாவை
இல்லம் வந்து சொர்கம்
தந்து  உள்ளம்வென்று
உயிராய்யானாள்மாமான்
நெஞ்சுக்குள்!!
 கொஞ்சுமொழிகேட்டதில்லை
கூடிபேசிப் பார்ததில்லை
அச்சியோடும் புள்ளிமானாய்
 உள்ளத்து ராகத்தை இல்லதின்
ஓசையாக்கிளால்!!
வையகத்து புதுமைப்பெண்ணும்
கொஞ்சம் கற்றிடிட வேணுமடி
இல்லத்து தத்துவதையிவளிடம்!!
வெட்டிவிட்டு கொட்டிவிட்டு
என்னவின்று தெரிய சின்ன வாழ்விற்குள்
 இல்லத்துஒளியின் தொடர்கதையானவள்
இவளோ!!




Tuesday 15 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எங்கே விழுந்தேன்
எதைதொலைத்தேன்
எதற்காய் இந்தனை வேலிகள்
எதையிழந்தேன்
எதையெடுத்தேன்
ஏன் இந்தனை சோங்கள்
மாறுமா மாற்றுமா
கூடுமா கூடோடு போகுமா
இல்லை  கனவே வாழ்வாய்
மறையுமா?...





விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

காத்திருந்தேன் இசையாய்
மலர்ந்திருந்தேன் உனக்காய்
ஏனோ!! நீ
இல்லாததை புரியாமலே!!
வாழ்கை நாடகம்
 என புரிந்திட்ட போதே
 மற்றவர் பொய்கள்
என்னை தட்டியெழுப்பி
உன் கல்லறைக்குள் தள்ளியது
இப்போது பொய்யான என் நடிப்பிற்கே
ஆயிரம் ரசிகர்கள்!!!


Monday 14 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வியாதிக்கு மருந்து தேவை

தீர்வு கண்டால்  தேவையற்றது
ஆனால்!!
மருந்தாய்  நீ இருந்தால்
வியாதிக்கு  புரியாது
அதன் தன்மை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெற்று வானத்தில்
ஓடும் கார்மேகம்
கண்ணீர் மழையாய் பொழிய
தென்றல் பட்டு
களைந்த இன்பக்கனவுகள்
எங்கே சந்தோஷமழையாய்
பொழிய!
கலையிழந்த வானத்தின்
வர்ணஒளி 
நீயேயாய் தோன்றி
அன்பின் மேகமாய்
 மேதியதில் நம் 
இதயச்சத்தில் உருவான
இடியும் மின்னலும் என்
வானத்தில் நட்சத்திரங்களை கூட
சிதைத்திட்டது
வெறுமையான வானத்தில்
அங்கும் இங்கும்
கண்ணீர் மழையே
நிற்காது ஓடுகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உடைந்து சிதறிய
என் மனசின் சிதறகளிலும்
உன் விம்பங்களோ
உடைந்தும் தெரிகின்றது!
அதிகம் நேசிந்த என் இதயதிற்கு
கண்ணீர் மட்டும் செந்தமானதால்
என் வலிகள் உனக்கு கதையானது
எனக்கு காயமானது!!


Saturday 12 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,



நாளை சிலையாய்  நிற்பதற்கு
இன்றைய சந்தோஷங்களை
இழக்காதே
முன்னோர் சொன்னதெல்லாம்
முற்றும் கற்றவனும்
பித்தனாய் போகின்றான்
பிறப்பின் காரணபுரியாமலோ!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

ஆற்று மேட்டு 

மலைக்காட்டுவாச நேசம்
மாலை நேரத்து மலர் வாசம்
தொட்டு  ஓடும்  நீர்வீழ்ச்சி
வீசும்தென்றல் காற்றினுடே
மலைபாம்பு வழிப்பாதையோடு
ஆதிவாசி பெண்ணிவள்
நேசம் கேட்டு கூவும் கூயில்
 பாட்டு கேட்டு  சேதிசொன்னால் மானுக்கு துள்ளியோடும்  நீரைப்போல்
  அள்ளிவைத்த
கனவு களை கொட்டிவிட்டாள்  நீரின் மேலே
மேதியோடி மாமானைத் தொட்டுப்பாய
ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு நின்றால்
 கனவால்!


கந்தக்காற்று

மன்மதக்காற்று
மதியெங்கும் வீசும்
கலியுககாலத்தில்
அனைந்தும் விழுகின்றது
மன்மதபானதில்!

தலைநிமிர்  பெண்ணின்
தலைசிறக்கற்பின் உருவாக
கருவறை  சிதைவானது  ஐந்திற்கும்!

இறைவடி மணிமுத்துகள்
காமுக உயிரிலும் உருவாக
கருவறையை உண்டாக்கிடத
 இறையால் !தவிக்கு மண்ணில்
பெண்மை!!

காந்தின் துனுக்கைகளை
நாசிதுவரத்தினுடே மனிதன்
உள்ளெடுத்து வெளியனுப்பா
வெப்பத்தை வென்றுண்டு வேர்ரறுகும்
வேதியல் !மாற்றமாது!!

செய்திக்கு தலைப்பாகி
சேதிக்கு பெண்ணாகி உறவிற்குள் தனியாகி
ஊருக்கு பொருள்ளாக்கி  தலையின்றி
தவிக்கு மண்ணில்!!


மலருக்கு முள்வைத்து
தேனுக்கு வண்டுவைத்து
உதிர்வுக்காய்  காமத்தை உள்வைத்து
தாய்மைக்கு மரணகொடுத்ததுவும்
படைத்ததுவும் புரியவில்லையெனக்கும்!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகிய விலை மாதுவின்
ஓர் நாள் சிறைக்காய்
துடிப்பதை நிறுத்திடா
மனிதன்  பெண்மையின்
கருவறைக்குள் தானா தோன்றினான்!!

Tuesday 8 July 2014

காத்திருக்கின்றேன்.. உனக்காய்.

என் விழிகளுக்கு
 புரியவில்லை நீ
 எனக்கு சொந்தமின்றி  போனது!!

என் இதயதிற்கு
புரியவில்லை நீ
நிழலாய் மாறியது

என் உணர்விற்கு
புரியவில்லை நீ
இணைய முடியா காதலென்று

என் இசைக்கு
 புரியவில்லை நீ
ஊமையான ராகமென்று

என் கனவிற்கு
புரியவில்லை நீ
வெறும் கானல்நீரென்று

என் உயிருக்கு
புரியவில்லை நீ
உயிரற்ற ஓவியமென்று

என் கற்பனைக்கு
புரியவில்லை நீ
கவிதையாய் கரைவது

எனக்குப்புரியவில்லை
உன்னை மறந்து வாழ்ந்திட
முடியாதிருப்பது ஏனென்று!

 காதலுக்கு புரியவில்லை
காதல்தான் யாதென்று!!


Wednesday 2 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

குன்று  குழி பாதையில்
எலும்புத்தோல் மனிதன்
சொத்து சொத்து போன்றான்
பசியில்!!


பஞ்சுமொத்தை படுக்கையில்
கற்பனையில் மனிதன்
சொர்கம் நரகம் காணுகின்றான்
ஊத்தியடித்த மப்பில் !!
கடவுள் உண்டு கற்பனைஉண்டு
அறிவும் உண்டு  ஆச்சரியம்
கண்கள் மட்டும் குருடாய் போனதால்
 நேசமட்டும் காணோமடா !!இங்கே