Sunday 8 November 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  •  கண்ணீீர்துளிகளில்
  •  சுரங்கள் துள்ளியதுதானாய் 
  • இவள் மூச்சுகாற்றை தென்றலும்
  • தொட்டது தானாய்  


  •  தண்ணீர்துளிக்குள் 
  •  விழுந்தெழுந்த இசையால் 
  • கவலைகள்  மறந்தது தானாய்  
  •  அந்தமீராவின் இசைக் கருவிக்குள் 
  •  இந்த அவளையும்
  •  உயிர்பெற்றது தானாய்!!
  • இசையின் லயத்தில் முற்களும்
  • தன்னையிழந்தது தானாய்!!
  • கவலைகள் ஒடியே! 
  • நீரில்  கலந்தது தானாய்  
  •  உண்மையும் புரிந்தது இவளுக்கு 
  •  தானாய் 

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  அறிந்தவர் அறிவுரை கேட்டு கேட்டு
  • அறிந்ததும் மறந்து போச்சு வாழ்வில்
  • இருந்ததை தொலைத்தால் புதிதாய்
  • வைத்தியமாதே  மிச்சம்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  திசையின்றி திசைப்பறவை
  • திசைக்காற்றில் திசையறிமலே


  • திக்கை கடந்திட  துடித்தால் தானே
  • திசைகள்  அம்பானது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  அரைகுறையாய்   அரைகிறுக்காய்
  • அரைமனிதனாய் அரைக்குள் அரையதனை
  • காண  அரைவாசியதனை அடைந்தவனையே
  • மனிதன் திரும்பி பார்க்கின்றான்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

  • கடந்ததே போனது தானாய்காலங்கள்
  • கடந்தாய் எண்ணியே பல கண்ணீர்கள்

  • எழுதப்படாமலே! திரும்பிபார்த்தேன்
  • சிந்திக்க வைத்த முகங்கள் நிழலாய்!!!
  • தண்டித்த முகங்கள் புன்னகைஓவியமாய்
  •  நியாங்களை சொல்லியபடி
  • பின்னாலே தொடர்கின்றது எதுவரை
  • இதுவரை என்கின்றது மனசு!!!

Saturday 7 November 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  தித்திக்கும் சோகத்தில் திக்குமுக்காடிய
  • காதலே சிக்கிகொள்கின்றதே சக்கரைநோயுக்குள்

  • அக்கரையுமில்லாதே இக்கரையுமில்லாதே
  • இடுகாட்டில் இழுபடோ சும்மா காதல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கார்த்திமலர்களுக்குள் ஆத்மாக்களின்
இலட்சியங்கள் தவம் புரிகின்றது


இலக்குகளின் கனவினை தொட்டேமலர்ந்திட
மூடிய இதழுக்குள் முகம் தேடியே  பல முகங்களின்
முகவரிகள் தொலைந்துகொண:டே போகின்றது
புதிதாய் புதிதை சொல்லும் புதிதால்!!1