Monday 31 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இதயத்தை கொன்று 

உயிரைகுடிக்கு பணம்  

இருப்பன் வாழ 

இல்லதவன்அடிமையாக 

உதவியாய்  நிக்கின்றது இயலாமை  

வட்டியை காட்டி 

ஆசையை ஊட்டி 

உயிரை பறிக்கு பணம் 

கடனையெடுத்து

கடனில்  மடிவதே

வறுமை

குட்டிக்குட்டிச் சாரல்

 வரமாய் பூக்கின்றது 

இயற்கையின் கையில்  காதல்

சாபமாய் பூக்கின்றது

மனிதனின் கையில் 

 காதல்  !!காதலை

விற்று கடனாலியாய் மனிதன்

மரணத்தை  பெற்றுக்கொள்கின்றான்!!!



Saturday 29 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விழிதுடிக்க மூச்சுக்காற்று 

வாசமாக தோட்டபூவிற்க்குள்ளும்

கண்ணன் ராதை வாசம் கண்டான் 



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முதுமையில்தனிமையுணரும்

முதுமைக்கு துணையதன் விம்பம்

தூரமாய் போகின்றதோ

 கூடவேயுருந்தாலும்

ஒரு அன்பின் ஏக்கம்  அலைபாயுதே 

பிடித்திட அழகற்ற கரமென்றா

 ரசித்திட அழகற்ற முகமென்றா  

மண்தொட்டு மரணம் வரை 

கூட்டிச்சொல்லும் காதல்

ஏன் முதுமைக்கு தடையானது

அழகையும் காமத்தையும் 

கட்டிக்கொண்டதாலா   முமையில்

   காதல்      தடுமாறுகின்றது 

 ரசனையின்அழகு 

 துணையதன் மூச்சுவரை சுவசமானல்

கடசிவரை  பூக்கும்  காதலும் அழகே!!!


Friday 28 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உள்ளே  உண்மையின்

பயம் வெளியே சொல்லா நடிப்பே

பல மனங்களின் முகம் 

Thursday 27 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஐயம் கொண்ட ஐந்தும்

அச்சம் கொண்ட ஆறும் 

ஓன்றை ஓன்று இழக்கும்

இடத்தில் தோற்க்கின்றது

அன்பு


குட்டிக்குட்டிச் சாரல்

 கைக்குள் கையை வைத்து

கற்பனையில் பேசு காதல் 

அறிவுக்குள் அறிவை தேடி 

கையை இழுத்து 

போகின்றது ஆசை 

சொல்லுக்கும்செயலுக்கும் 

தூரமாய் அலைகின்றது

 வாழ்க்கை  

கைக்கும் கண்ணீருக்கு

சொந்தமாய்  நிற்கின்றது மனசு

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனிமை சில  காலம்

 துயரத்தின்தவமாய் 

 வீணையின் நரம்புகள் அறுந்த

மெளனத்தின் ஓசையாய் போச்சு!!!

தனிமை பல காலம் 

வறுமைக்கு உரமாய் கைகள் 

உடைத்தே கட்டுண்ட  காயத்தின்

வலியாய் போச்சு!!தனிமை சிலகாலம்

தனிமைக்கு என்னை துணையாய்

கொடுத்து போகும் பாதையில்

கடமைக்கு   என்னை உறவாய் 

கொண்டுத்தே! கடந்தே போக

தனிமையை தந்தத உறவிற்கு 

என்னையே அர்த்தங்களாக்கியே

என்னையே அர்த்தங்கள் 

கேட்டது!! தனிமை பலகாலம்

வலியின் துடிப்பை நடிப்பாய்

கண்டவர்கள் 

வாழ்க்கையின்சந்தோஷத்தை 

தேடியேடியவர்கள் என்மீது

மீட்டிடா கோவத்தை 

காட்டியே வெறுத்தவர்கள்

கூடவே இருந்திடா

  தூரமாய் நடந்தே 

வேடிக்கை பார்த்தவர்கள்

பரிசாய் கொடுத்தது!!

தனிமை சிலகாலம்

எனக்கு  கண்ணாடியாகி

எனக்காக நானே 

என்னை கைபிடித்துக்கொண்டே

நடந்தே பழகிட கற்றும் தந்தது!! 



Monday 24 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 கைகள் பிடித்திட கரங்கள்

கையை நீட்டுகின்றது கறைகளை

மனதில்  சுமந்துகொண்டு. கறைகளை

துடைக்கமுடியாமல்   தடுமாறுகின்றது

நேசத்தால் இதயம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 விக்கலுக்கும்  தண்ணீருக்கும்

நடுவே ஒடுகின்றது உன் நினைவுகள்

தலையில் யாரேனும் தட்டாதவரை

ஓற்றையாய்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 உறவுகள் நிலைக்குமென்ற 

கனவுகளே நிலைத்திடுகின்றது 

கனவேடு உறவுகள்

தடமாறுகின்றதால்தானே 

இரு மனங்களை 

கட்டமுடியாமல்முன்னோர்கள்

அடையாளத்தை கண்டுபிடித்து 

கட்டினரோ உறவாய்  

விலகிட விக்கியவரையும்

 ஓழுக்கத்தால் கட்டியதால் தான் குடும்பம்

விலகாமல் நின்றதுவோ

நன்றாய்!!!


Sunday 23 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தெரிந்தே செய்யும் தவரை

தெரியாது என்னும் புத்திசாலிகளே

தன்னை உயர்த்தி கொள்கின்றனர்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உன்னுல் என்னை 

தொலைக்கும்வரை 

என் காதல் 

நியமென தோன்றவில்லை

எனக்கும் !!

என்னை நீ 

கைவிட்டு போன நிமிடமே

உனக்குள்தொலைந்த 

நிமிடம்   உண்மையென 

சொன்னது    எனக்கும்   என்

இதயம்  

என்றும்  நினைவுகள்

 பேசும் உண்மை மொழி நீ

இருந்தும் நாம் தொலைத்த

காதல்  

நமக்குள்புரியாமல்

 கடத்தியே நம்மை  தொலைத்த

கற்பனையின்  உண்மை காலத்தின் 

நியம் 

குட்டிக்குட்டிச் சாரல்

 என் தோல்விகளை 

எனக்கே சொல்லி 

சிரித்திடும் இதயங்களே

உங்கள் வெற்றியும் 

நிரந்திரமில்லை

உங்களுக்கு  கிடைத்தில் 

ஓரு பகுதில்கூட 

என் வெற்றியை 

நான் தேடிடவில்லை

என்  தோல்வி 

இறைவன் போட்ட கணக்கு

உங்கள் வெற்றி 

இறைவன் எழுதி வைத்த

 வரம்

போராட்டாமே இருவருக்கும் பொது

Saturday 22 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்  கைகளேடு

அள்ளிச்சொல்லமுடியா 

என்பூக்களை

என்பாதையெங்கும் தூவிசென்றேன்

என் பாதைபட்டு கடப்பவர் 

என் பூக்களை

எடுத்துசொல்லட்டுமென 

புரியாதவர்  புரியாமல்  பார்த்த 

பார்வையால்பூக்கள் உதிர்ந்திட

என் பாதையெங்கும் முற்கள் 

சிதறியதில் காயங்கள் 

காலத்தின் சூழற்ச்சிக்குள்

காத்திருக்க காலத்தினை கடந்திட 

கொஞ்சம் மெளனித்தபடி முற்களேடு  

நான் காத்திருந்தேன்

இதயத்தின் உதிரம்  முற்கள்

பட்டும் உதிரா ஒவியமாய்

காத்திருக்க காலத்தின்

கற்பனையும்  கனவும் தேற்க

காலத்தை கேலியாய் பேசியே

என்னை கடந்தே சென்றனர் பலர்

‘ஆனால்.  இப்போ!!

மீண்டும் பூக்களை கைகள் நிறைய 

அள்ளிவருகின்றேன் 

தடையென விழுந்தகாலதிற்கும்

சோர்த்தே!!


குட்டிக்குட்டிச் சாரல்

 வெண்பனி உதயம்   மெல்ல தேடும்

வெப்பத்தை  கண்கள்

சாலரம் பார்த்தே 

ஏங்குது. உனக்காய் 

குட்டிக்குட்டிச் சாரல்

 என்தோல்விகளில்  ஒருவகை

வெற்றியை நான் தோற்றபின்

அறிந்துகொண்டேன் 

என்னை தேற்கடித்து அழவைத்த 

என் தோல்விகளுக்கு நன்றி

என்னை எனக்காய் தந்தது

 என் தோல்விகளே!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 சுமையதன் வெறுப்பில் கானல்

தீசுட்டெறிக்க  போராடும் வாழ்வில்

தனிமை இட்டதனை  சுவைக்க 

முதுமைக்கு  கண்ணீரே ஊற்றானது!!!




குட்டிக்குட்டிச் சாரல்

ஒன்றைமரம் பட்டிட 

பட்டிடும் மரத்தினை

ஒரக்கண்ணால்  பார்த்தும் 

பார்க்காமலும் போனவர்கள்

இப்போ !!!

பரிகாரசெய்திட  

பக்கத்தில் வருகின்றனர்

பட்டமரமே பக்கம் வந்த

அவர்களை 

இறந்த கண்ணால்பார்க்கின்றது 

இந்த மாயை புரிந்த 

இறைவன் புரியாமல் 

பார்க்கின்றான் மனிதனை!!!

ஆனால் !!

மனிதனே மரத்தை

பெருமை  படுத்துவதாய்

தன்னை பெருமை

படுத்தி மகிழ்கின்றான்!!!


Wednesday 19 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 திரும்பி பார்த்தேன்  என்

திருப்ப முடியாத நாட்களை

புன்னகையில் குளித்தது

என் நிலாமுற்றம்  அப்பாடி

இறைவன் 

 என்னிடம் வாங்கிக்கொண்ட

பரிசும் பெரிசு தான் 

பரவாயில்லை   தேற்றது

அவனிடம் என்பாதல் 

தேல்வியும் புன்னகையானது

இன்று!!!


Tuesday 18 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பெண்மைக்கு ஒரு துணிவு

பல பொம்மைகள்  தூக்கியெறிவு

வாங்கிட பணமும் கையளவு  

இதனால்

தலையாட்டிடும்பொம்மைகளும்!!

இங்கே அதிகம்

இருந்தாலும் இல்லையென்றாலும்

உறவு  அதனாலேயே

சிலநாள் காதல் பெரிது

அம்மைக்கு அப்பனுக்கும்

இல்லை  உரிமை இருந்தாலும் 

சொல்லமுடியா உறவுகளாய்

வாழ்க்கை!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வாழ்க்கையினை 

போன போக்கில்வாழ்ந்தவன் 

தமிழனா !!தமிழ்

தமிழனென தேடுகின்ற தமிழுக்கும்

சொல்லுக்கும் செயலுக்கும்

தடுமாற்றங்கள் பிறக்கின்றதே

பல  தேடலில் இன்று

   ப.ல   வரலாறுகளை

தேடி தேடி சொல்லும்

 தமிழுக்கு!!

என்ன வரலாறு தமிழே

எதுகும்  தமிழுக்கு

சொந்தமாய்தோன்றவில்லையென்றால் 

தோன்றலின்அடையாலம்  என்ன

தமிழே!!இல்லை 

 மனிதன்மனிதனாய்

பிறந்ததுவே உண்மையே

கடனாய் !!கடன் வேண்டி

தன்னைதொலைத்தவன்

காட்டுக்குள் எதுவாய் வாழ்ந்தான் 

இறைவனும் 

 கடனெனில் இறைவனை

எதனிடம் கண்டான் 

 இவனிடம் தேற்ற  அறிவும்

இப்போ  பலதாய்  சிதைத்து

காலத்தின் மடியில்

பலவடிவில்  புதைக்கின்றதே !!

மனிதனை மனிதன்

எதன்  அடையாளமாய்பார்த்தே  

கண்டே வாழ்ந்தான்

ஓன்றில் மட்டும் 

தோற்கவில்லை   மனிதன் இன்றும்

மிருகத்தோடு  மிருகமாய் 

வாழ்வதில் மட்டும்

மனிதன் மனிதனாய் தெரிகின்றான்

இதில் மட்டும் 

எந்த அடையாளமும்

அவனில்  பிறக்கவில்லையே என்றும்!!!



Monday 17 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 காயத்தின் வலிகளை 

அறிந்திடாதவருக்கு

கதை 

அறிந்தவருக்கே     இதயத்தில்வலி 

அது எப்படி வந்தது என்பதை  

ஆராயாமல்காத்திடமுனைபனே 

அன்பின்சிகரம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நடந்திடும் பாதைகளே நம்

எண்ணங்கள்

நடக்கையில் நம்

பதங்களில்

முற்கள் பட்டாலும்

ஒன்றுதான்   கற்கள் பட்டாலும்

ஒன்றுதான்  வலிகள் என்னவோ

பாததிற்கே!!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 பிடி கையுறுதி நிளம்

குறைகின்றது

என் மனத்திலும் 

அச்சம் பிறக்கின்றது

என் கடமைகள் இன்னும் 

காத்திருப்பதால் 


Sunday 16 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வாழ்க்கை பயணத்தில்  நடுவே

இறைவன் ஆசைகாட்டி ஏமாற்றிபக்கத்தில்

வந்துபோன மனிதர்கள்

மட்டும் நிழலாய் காரணமின்றி

ஏமாற்ற பட்டவள் மட்டும் ஏமாற்றத்துடன்

நியமெது பொய்யெது என புரியாமல்

வாடிவிழுந்தாள்காரணங்களே தெரியாமல்

குட்டிக்குட்டிச் சாரல்

 இறக்கும் வரை  என்வாழ்க்கை

சிக்கலை எதைக்கொண்டும்

சரிசெய்ய முடிவில்லையே  என 

இறைவனை

தேடிச்சென்றேன் நின்மதிக்காய்

அவன்  விதியிலேயே  இல்லையென்றான்!!!



Saturday 15 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நாம்  தளரும் போது  

அணைத்து கொள்ள 

உண்மையாக  ஒரு உறவு

கிடைத்தால் 

அந்த கைகள் கூட 

நமக்கு மருந்தேயாகும்  

சோர்வுகளில் கூட  ஒரு

உற்சாகம்  பிறக்கும் தனாய்

கண்ணீரில் கூட

ஓரு நின்மதி கிடைக்கும் சுகமாய்

நம்மனதின் நம்பிக்கையில் தோல்வி கூட

ஏற்புடையதாய்  தோன்றும் நியமாய்!!!

Friday 14 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஐந்துமணி குளிர் கெஞ்ச 

அதிகாலை காற்று மிஞ்ச 

பக்கத்து வீட்டு  அம்புயம் 

 இது புரியாமல்பரபரக்க 

பக்கம் வந்து மாமன் காதுகடிக்க  

இன்னும் கொஞ்சமென

தூக்கம் போர்வையிழுக்க 

 தலைக்குமேல்வேலையிருக்கு என்னப்பா

செய்கின்றாய்யென அத்தை குரலெழுப்ப

அச்சச்சோயென சோம்பல்  

இருந்த இடம் தெரியாமலே ஒட

தலைகுளித்தேன் நானும்மெல்ல 

வாழைமரம் தோரணம் மாலையேடு

மாமன்  புன்னகையோடு 

எனை  நோக்க  உதவிடவாயென

விழிகள் கெஞ்ச அறிந்தும் அறியாமலும்

நானும் பார்க்க

சாணமிட்டு  அத்தை  முற்றத்தில்

 கோலமிட  மச்சாள் நிறைகுடவைத்து

விளக்கேற்ற

பக்கத்தில்  அடுப்பு வைத்து 

விறகேடு மாமா சண்டையிட  

எதையும் அறியதவள் போல் கொஞ்சம்

தேனீர் கிடைக்குமாயென கண்கள் ஏங்க

அருகே வந்த மச்சாள் அறிந்ததைமோல் 

கேலிபேச எதையே

புரிந்ததை போல்மாமன்

யஎன்னை பார்க்க  மெல்ல ஆனந்தம் 

கிண்டலும்கேலியுமாய்  தொடங்க  

  அத்தையேடு மாமா

பொங்களை பொங்க  

சுற்றி நாங்கள்  

இழந்ததை புதுப்பித்து மகிழ

அப்பப்ப  என்னையும

மாமனையும்    ஒன்றாய்

இணைத்தால் இன்று!!!

தொலைத்த வருடம் கூட  இனித்தது தித்திப்பாய்!!




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தைமகள் பிறந்ததால்

பிறக்குமே வழிகளென

  தையவள்வரவிற்காய்  

ஏங்கிய மனங்களுக்கு

தையவள்  விலங்குடைத்து 

 கொடுப்பாளே நம்பிக்கை  !!!

அங்கும் இங்குமாய் அழிவு 

வறுமைக்கு ஏனோ தண்டனை 

வழியதனை  தேடித் தேடி

மண்ணேடு  சண்டையிட்டு சண்டையிட்டு

தேடும் விடியலில் அழிவுகள்

 அரிசியை உயர்த்தியது ஆகாயவிலையாய்

 இருந்தாலும் உற்பத்தி செய்ய

இல்லையே வழிகள்

அதிகாலையெழுந்தாச்சி   குளிந்து

கோலமிட்டு  அடுப்பெடுத்து  கையோடு

பானையுமெடுத்தே  தண்ணீரு விட்டாச்சி

தீயேடு நீரும்  நம்பியே சூடாச்சி

தேடிடும் கைகளுக்கு 

அரிசியும்  கிடைக்குமே இன்றாவது

பால்தேடி கனிதேடி காய்கறியும்

தேடிய கண்கள் சூரியனைமட்டுமே கண்டது

இன்றும் ஆதலால்

ஓற்றை தீபத்தையெடுத்து ஏற்றுகின்றோம்

நாளைய விடிவுற்காய் 

தையவளே பாராபட்சமற்ற

உன் வரவில் எம் வயிறு நிறைந்திட

 வழிசெய்வாயென!!!





Thursday 13 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஏமாற்றும் மனதினை  ஏற்றே ஏமாறும்

நம் மனதிற்கு. ஒரு உண்மை புரியாமல்

போவதே  நம் நம்பிக்கையின் ஏமாற்றம்

குட்டிக்குட்டிச் சாரல்

 பழயதை அழித்தே புதியதை

வரவேற்று இட்டு எரித்திடும்

தீச்சவாலையில் புறப்படும்  புதிய நாளை

புதிதாய்  வரவேற்று  மகிழ்ச்சியை எழுதிடும்

கணம்!!மனதின்

அழுக்கினை அகற்றியே மனிதனாவோம்

Wednesday 12 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


உணவை கொட்டிவிட்டு  

நான் திரும்பி பார்த்தேன் 

அங்கே. ஒரு குழந்தை  என்னை

ஏக்கத்தேடு  பார்ப்பதாய். தேன்றியது

இல்லையென்பதை அனுபவித்தவள். 

செய்யும்முட்டாள்  தனத்தை நினைத்து. 

என்னை நானே கோவித்து கொண்டேன்  

இருபதால்கொட்டிவிடும்

உணவுகளின் காலவரையை ஓரு

குழந்தைக்கு. கொடுத்திடும் தண்டனையின்

பாவமாய்  எனக்கு ஏன் தேன்றவில்லை

 இந்த முட்டாள் தனமே 

நம்மால் பல உயிரில் மரணம்!!!


Monday 10 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓருமுறை என் நிழலின் நியமாய்

தேன்றிடு  என் அழுகுரலின் வலி

உன்னையும் எனக்காய் சிந்திக்க சொல்லும்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வனுமைக்கு பிறந்து 

பசிக்கு  பாத்திரமாகி

பாலுக்கு்அழுது  

நேயினை  உண்டு 

வாழ்விற்குள்  வாழ 

வாழ்க்கையினை 

வாழ்வாய் உடுத்தி  

மறந்த மனிதனின்

மறவா தெருவிளக்காய்

 ஓளியினை  காண

கண்ணீரும்வெள்ளமுமாய் 

 மிதந்திடும்  பிறப்பினின்

சாபத்தின் வரங்களாய்  

 கைகளின்அழுக்காகி  

பாசத்தை  தேடுகின்றோம்

ஒரு நாள் விடியலும் 

நமக்காய் மறிடுமென

நம்பியே!!!



Sunday 9 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என் பாதையேரம்  நான்

ஒன்றை ரசித்தால்

அந்த அழகினை 

கூறாமல் சென்றதில்லை

என் வாழ்வோடு பயணிப்பவரை  

என்றும்

கண்ணீரேடு வாழ்ந்தியதுமில்லை  

என்  கண்ணீரை

யார்மீதும் பாரமாய் ஏற்றியதுமில்லை

என் கண்ணீருக்காய்

ச யார் கனவையும் அழித்ததுமில்லை


குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மால் தேற்றகனவை  யாரே 

யெந்திட செய்யும். போது 

நமக்கே நம்மீது நம்பிக்கை தோன்றும்



Friday 7 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மிவரை நாம் ஏமாற்றும் போது

அச்சமின்றி  மகிழ்ந்தால் 

 நம்ம. னசு  

நமக்குள்இறந்து விடுகின்றது

நம்பியவரை   நம்மால்

 ஏமாற்ற முடியவில்லையென்றால்

நமக்குள் நம்

 மனசு உயிரேடு  வாழ்கின்றது

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மால் மற்றவர் வாழ்க்கை

காப்பாற்றபட்டால் நாம் மனிதம்

நம்மால் மற்றவர் வாழ்க்கை அழிக்கபட்டால்

நாம் மிருகம் 

நமக்கு எந்தனை அறிவு என்பதை

நாமே முடிவு செய்கின்றோம்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பல நேரங்களில்   நம்நிலமையை

நாமே மறந்தேவிடுகின்றேம் 

நிலையில்லா மகிழ்சிகளை 

நிலையென நினைத்தே

நிலைதடுமாறி விழ்கின்றோம்

 வீழ்த்த இடத்தின் கற்களே

நம்மை   நமக்கே 

சொற்களாய்கோர்த்து 

தருகின்றது   அப்போது 

நம்மை உணர்ந்தால்  

நாம் நம்மை  புரிந்திடலாம்

இல்லையெனில் 

காலமுழுவதும்  ஏமாற்களே

துணையாய் நிற்க்கும்!!

பொய்யின் சந்தோஷத்தில்

அடகுப்பொருளாய் நாம்!!

நமக்கே தெரியாமல்

 உறவுமின்றி உரிமையுமின்றி

உலகத்தின் கண்களின் தூசாய் …

நம் விம்பம் விழுந்தே கிடக்காமல்

நிமிர்வோம்!!!

Wednesday 5 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பெண்ணை  மட்டும்   

பந்தாடாடும்வீர்ர்கள் 

அதிகம் தான்  ஆனால் 

 பெண் தன்னைக்கோழையாய்

 நினைக்கும்  வனரத்தான்

பழியின் மைதானத்தின்

விளையாட்டில் ஆண்கள்

வெற்றியாளர்கள்!!

பெண் நின்று அடித்தால்

நின்றாட  இடமற்ற கோழையாகி

கடசியில் நின்மதியுமற்றே அழைவார்!!!

Monday 3 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்முடன் கூட  வாழும் உறவிற்க்கு

எப்போது

நம் திறமை புரியவில்லையோ

அப்பவே 

நாம் தோற்றுவிடுகின்றோம்

நம்மை 

நேசிக்கும் உறவே 

நம்மை 

தேற்கடிக்கவும் செய்கின்றது!!!

Saturday 1 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 மற்றவர் சொல்லும் பொய்களை

நமக்கான உண்மையென நம்பும்

உறவிடதான் நம் முதல் தோல்வி ஆரம்பம்