Tuesday 15 September 2009

இல்லாள்

ஏந்தியவன் எதுகை மோனையாய்
ஏந்தியவளைக் கவி பாட!!
இல்லா உலகத்தின் இல்லா
பொய்யாய் கொண்டவன்
கை பற்றினாள் காதலால்!!

சுமையோடு கசப்பு
சுகமான சுவையானதால்,
பொறுமையும் சகிப்பும்
பெண்மையென்று மாற!!

நிலையான கனவில்
நிலைபெற ஆசைகள்
வந்து வந்து போக
பிள்ளையோடு கனவன்
புகழ்மாலையும் சூட!!

இருபதும் ஆறுபதும்
இல்லாது தொலைய
இருந்தும் வாழும்
தொலையா கனவு
கண்ணீரில் கரைய!!
மறுமறுஜென்மத்தை தேடுகின்றாள்
மறுபடி பிறந்து ஜெயிந்திட.......

Friday 4 September 2009

என்விழிகளுக்குள் சிக்கிக் கொண்ட அகமும் புறமும்




அகம்
உயரத்தையடைத்தால்
இருளோடு தனிமையாகி
என்வாழ்வை தொலைத்து
புகழின் கைகளுக்குள்
பாராட்டின் கைதட்டலாய்முமை வந்தும் ஓடிஒடி அலைகின்றேன்

நால்வரின் நல்லதும் கெட்டதும்
முதுகில் சுமந்து கொண்டு
மனைவிடம் நாலுவர்தையின்றி
குழத்தை தன்னை  தூக்கதில் கொஞ்சிய படி
 உலகிற்கு அறிமுகமான நான் வீட்டிற்கள்
அறிமுகமின்றி...................


புறம்
இறை கொடுத்தால்  அவன் சாதித்தால்
இன்று போகுமிடமெங்கும்
சிறப்பு பிறந்திட்டால் இப்படி
பிறந்திட வேண்டும் உலகில்
இறந்தாலும் வாழ்ந்தாலும்
சிறப்பாக வாழ்வதற்கு இவனல்வா
 முதல் உதாரணம்!!!


                                                               அகம்
இழந்த கனவை
நெற்றி வியர்வையாக்கி
வந்த கவலையை கூடைக்குள்ளிட்டு
 ஓடி ஓடி உழைந்து
ஓடெனத்தேய்ந்து
ஒவ்வொரு குழந்தையாய்
 கரையேற்றிய கூலிக்காரி நான்
 இப்போது யாருமில்லா தனிமரமாய்போனேனே!!

புறம்

உடல்சுருங்கி !கண்மயங்கி
பல்விழுந்து! காலம் கடந்தும்
கிழவி இன்னும் இருக்குது பார்
பூமிக்கு பாரபாய் !!
எடுத்ததை எடுத்தயிடத்தில் போட்டு!
அடிக்கடி லீவு போட்டு
வந்து வந்து போக எவ்வளவு கஸ்ரம்!
கிழம் போய்விட்டால்!! அப்பா எவ்வளவு நின்மதி!!

************************


அகம்


என் காதலை நீ
எரிந்துக் கவியாமாக்கியதால்!!
உன் வலியை தாங்காது
என் விழிகள் எப்போதும்
அருவி நீரையே கொண்டுது !!



புறம்

அழகு தேடி அடைக்கப்பட்ட
கருவிழி வழியின்றி
வலிதாங்காது வடிக்கின்றது
கண்ணீரை அருவியாய்!!

Wednesday 2 September 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

முகவரி அழிந்து முகம் மறைந்து
மூடிய கதவிற்குள் !
முகவரியில்லா முகங்கள்
இரும்புக்கம்பிகளுக்குள் ஓடிப் பிடிந்து
விளையாடும் விளையாட்டில்
உடல் சிதைந்து உயிர் இழக்கும்
மனிதனுக்காய்!! பாதுகாப்பு சட்டதிற்கு
அடிபனிந்த ஓலைக்கீற்று
முற்கம்பிக்குள் மறைந்து அந்த
ஒடுக்கப்பட்ட மனிதனின்
விடுதலைக்காய் பாடுது கண்மூடி!!
உண்மை பேசிய உயிரில்லா
உடலின் ஆந்மாவின் பாடலாய்!!!

Friday 21 August 2009

சந்தோகம்

பட்டதால் தொட்டு
தொட்டதால் கெட்டு
கெட்டதால் விட்டது ஒரு உறவு!

விட்டதால் தொலைந்து
தொலைத்தாய் தேடி
கோவிலில் அழையுது ஓர் உறவு!

மெந்தையிட்டு வீட்டில்
நின்மதியை உறங்க விட்டு
வீதியில் தேடுது ஒரு உறவு!

உயிரோடு தன்னைத் தொலைத்து
உறவிற்கு உயிலெழுதி
ஒழுங்காய் வாழ  உறவு தேடுது
ஒரு உறவு!

ஒரு உறவை கூட்டில் ஏற்றி
புதிதாய் ஒரு இதயம் வேண்டி
வாழ்வை வாழ ஆசைபடுது ஒரு உறவு.........

Wednesday 19 August 2009

மருதானி சிகப்பு

நட்ட நடுவானில்
விட்டு போன மேகம்
தொட்டு மறைந்த
தேய் பிறைநிலவு!!

விட்டு போக கனவை
கட்டியணைந்த படி
சுட்டித்தமாய் கட்டிபோட்ட
 சுட்டி சேட்டைகளோடு
சுமையான சுமைகளை
சுகமாய் சுமந்து கொண்டு!!

வெட்ட வெளி காற்றிடையில்
இருளின் நிழலுக்கு
தீபமின்றி விளக்கேந்தி
நெட்ட நெடும் பாதையில்
தொலை தூரத்து நினைவோடு
தென்றல் உதிர்ந்த பூவில்
பாதம் வைத்து போகின்றாள்
முற்தரை மேல்...

Tuesday 14 July 2009

உயிர்த்துடிப்பு............

சொல்லித் திட்டி
திட்டி அடித்து
சொல்லாது வாழ்ந்தாலும்
மனிதர்கள் தேடும் சொந்தம்
இது தான்!!

தூக்கி நிறுத்தி
தூண்டாது போனாலும்
உணர்ச்சி விளையாட
ஒன்றானா இதயங்களால்
உருகும் உடலில் தொலையாய
உணர்வாய் தேடும் சொந்தம்
இது தான்!!

தேடிக்கிடைத்தாலும்
தேடாது வந்தாலும்
சோராது போனாலும்
சேர துடிக்க தேடி தவிக்கும்
சொந்தம் இது தான்!!

காயங்கள் கொடுத்து
காயங்கள் பட்டு
காலங்கள் கடந்தாலும்
தொலைந்த கனவோடு
பேசும் சொந்தம் இது தான்!!

மறக்க நினைந்து
மறந்தே வாழ்ந்தும்!!
மறக்க முடியா மறதியின்
உரிமை செய்தியின் இறுதி
சொந்தம் இது தான்!!

பொய்யான மகிழ்ச்சியில்
மெய்யான நிமிடத்தை
பொய்யாய் தந்தாலும்
மெய்யான உறவின்
பொய்யில்லா பந்தம் இது தான்!!

Wednesday 1 July 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

அவையங்கள் அவையிழந்து
அவையில்லா அவையங்களின்
வலியோடு சிதைகின்ற உடலில்
வடிகின்ற உதிரமாய் உதிர்கின்ற
உணர்வை தொட்டெழுப்பும்
ஈயும் எறும்பும் விட்டிடாதா என
ஏங்கும் ஏக்கத்தை தட்டி விட
முடியா தவிப்பாய் தொட்டவலியும்
விட்டிட சோகமும் கொட்டக் கொட்ட
கொட்டிய வாழ்வை
தட்டிய தர்மம் சத்தமில்லாது
சொல்லுது சூது கவ்வியதாய்..

Wednesday 17 June 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

புதைகுழி மண்ணிற்குள்
உடல் மறைய !
முகமிருந்தும் முகமின்றி
முகவிரி தேடும் உடலையும்
உயிரையும் பாதுகாக்கின்றது
உடைந்து எரிந்த உயிரில்லா
மரங்கள் தமக்கு எருவாய் போன
மனிதனை எண்ணி..
எஞ்சியது மிஞ்சியது
மனிதனென எண்ணியதால்!
சிறையில்லா சிறைச்சாலையில்
சுகந்திர காற்று ,சுவாசிக்க கடன்
கேட்பது போல் ,மறுக்கப்பட்ட
காற்று விடுதலை செய்ய
அடிமை உயிரைத் தேடுது மெல்ல!
இட்ட கட்டளையால்
வென்ற கொடுமை
ஏங்கும் மனிதனிடமிருந்து
இன்னெர் விடுதலையை தேட!
தெரிந்தும் தெரியா உலகம்
உதிரும் உயிரின் எண்ணிகை
கொண்டு தேடுது உண்மையின்
உண்மையை! உறங்கும் உயிர் போல்....

Sunday 8 March 2009

பிறகட்டும் விடுங்கள்......

பழங்கதையின் உயிரென
சிலையெடுத்து
பத்தினியென வடிவமைத்து
உணர்வு கொடுத்து உணர்வு
மறுப்போரோ!! ஒரு முறை
அவளையும் பிறக்கவிடுங்கள்
குழந்தை முதல் கிழவி வரை
சரித்திரம் தேடி சரித்திரம்
படைத்து சரித்திரம் கொடுப்போரே
ஒரு முறைவிடுங்களேன்!! அவளும்
பிறந்து அறிந்து அறியாமை அறிவை
அரவோ அகற்றி பிறக்கட்டும்
ஒரு முறை........
திசைகள் பல கடந்து
திசையின்றி வாழ்வதாய்
திசைகள் காட்டடி நிற்பவரோ!!
ஒரு முறை திறக்காத உங்கள்
கதவை திறந்திடுங்கள் தவரான
கதவையும் சரியாக திறந்து
ஒரு முறை அவளும் பிறக்கட்டும்
இருளுக்கு ஒளியாய்
குடும்பத்து விளக்காய்
ஒளியின் ஒளியாய் பிறந்தவளை
ஒளியின் நிழலென எண்ணி
நிஜம் மறந்து கதைப்பவரோ!!
ஒரு முறை தீபமாய்
எண்ணி எரியவிடுங்களேன்
அவளும் இவ்வுலகில் ஒளிரட்டும்

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன் நெஞ்சத்து காதலாய்
மண்ணை நேசித்து
தன் நெற்றி திலகமாய்
குருதியை நேசித்து
தன் வேலியின் தாலியாய்
விசத்தை நேசித்து
தன் அழகுடலின் உடையாய்
வெடி மருந்தை நேசித்து
தன் கைகளின் வர்ணப் பூசைப்போல்
ஆயுதங்களை நேசிந்து
தன் கருவின் உயிராய்
தன் மக்களை நேசிந்து
பெண்மை புயலாகி
மென்னை கல்லாகி !
ஒவியமாய்
தன் உணர்வை விடுதலையாக்கி
எல்லையில் நிற்கின்றாள்
எல்லாம் தன் உறவென எண்ணிக்கொடு
தன் உயிரைக் கொடுத்து
மண்ணுயிரைக் காக்க..........

Thursday 5 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தாயகத்தின் தென்றல்
காற்றோடு காற்றாய்
காற்றின் திசையெல்லாம்
காற்றாய் கலந்திட்ட என்
உறவின் உயிர்க் காற்றே!!
உங்கள் மூச்சின் வீசை புயலாக்கி
ஒரு தரம் எழுந்து வீசி
மண்ணிலிருந்து எதிரியை
அள்ளி வீசி எங்கள் தேசம்
காத்திட !! ஒரு தரம்
எழுந்து வாருங்கள் எங்கள்
தேசத்திற்காய் நீங்கள்

எங்கும் தீயாய் எரிந்திடும் தீயணைந்து
தீமையின் கொடுமை நிறுத்தி
மண்ணில் இரத்தம் துடைத்து
யுத்தத்தின் தாக்கம் மாற்றி
உறவிற்கு சற்றோ ஒய்வு
கொடுத்து இளைப்பார செய்திட
நீங்கள் மீண்டும் புயலாகி
எங்களுக்காய் எழுந்து வாருங்கள்
இந்த தேசம் காத்திட.......எங்கள்
உறவை காத்திட..............


Monday 2 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

யுத்தத்தின் கையில் உறவு
பரிதவிக்க காட்ச்சிகள்
கண்களைக் குளமாக்க!

ஏன் இதுவென்று சற்றே
மனம் உடைய! உடைந்த
மனதை தட்டியெழுப்பி!!

எழுந்த உள்ளத்தை உறவாய்
இணைந்து !இணைந்த உறவின்
கரங்களை இறுகப் பற்றி!

பற்றிய கைகளுக்குள்
பதறிய நெஞ்சங்களை
சிதறாது அணைந்து!

அணைந்த உறவோடு
காயத்தால் தவிக்கும்
உயிரையும் தவிக்காது
அள்ளியெடுத்து!

எரிமலையாய் !!!!
தமிழ் எழுகின்றது!
மனதின் உறுதியால்
உயிரின் உறுதிவரை !

எதிரியின் எதிர்ப்பை
எதிர்த்தே நின்று உலகின் வெறுப்பை
உடைந்தே உரைத்து தமிழை
உதிராப் பூவாய் காக்க!!!

Friday 27 February 2009

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

  கல்லறையில் ஓர் பூ

கருவறையின் கருவோடு
கருவாகி கருவிடமே
கருவேண்டி கருத்தாகிய
கனிவான கண்மணியே
கண்னெதிரே தேன்றிய என்மணியே!

இந்த இதயம் உடைந்து
உறவு வெறுந்து
வர்ணப்பூவின் பனித்துளியாய்
வர்ணத்தோட்டத்தில்
சொந்தம் மறந்து சுகமும் மறந்து
கொஞ்சம் கொஞ்சம்
இறப்பவளின் கொஞ்சநேரத்து
கொஞ்சும் சுகம் தந்தாய்
கொஞ்ச நேரம் இந்த பூ மறக்க!!

நெஞ்சத்து கல்லறையில்
தலை சாய்ந்து துயில்கின்ற
என் கண்மணியே ஏனோ
வாசம் வீசாமலேயே துயில்கின்றாயே
எனக்குள்!!

உன்னாலே......

காலை உன் முகம் பார்த்து
 மாலை வரை மலர்ந்தேன்
உன் காத்தகண்ணால்
இதழ்விரித்து உன்னை ரசித்து
உன் திசையெங்கம் என்வாசம்
வீசிடசெய்தேன்  உன்வாசம் நானகயிருந்திட

உன்னைக் காணாதுபொழுது
 என் உயிர்  வாட
என் இதழ் மெல்ல புன்னகைக்க
 மறுந்திட சருகாய் கருகி
 இதழ்போல்லானது எனது தேகம்
 பார்த்தும் மறந்த கண்களின்
பாசத்தை பா்காது வந்த
பனிக்காற்றும் மழையும்
என்னைத் தொட்டெழுப்பிட

தொட்ட இடம் வலிக்க
மற்ற இடம் தவிக்க!
நீயின்றி   என் உயிர் உயிர் பெறாது
 தவிக்கின்றேன் உன்னால்!!

உன் உணர்வு என்னைத் தொட்டாமல்
என் உணர்வு என்னிலெழாமல்
உன் உணர்வுமற்று என் உணர்வுமற்று...
இன்று யாருக்கும் !
தெரியாக் கவிதையாகி
நான் மலரந்த வாசத்தை
உன்னால் இழக்கின்றேன்
என் சூரியனே .........

தளிர்களிகளுக்குள் இதழ்விரியா மொட்டுக்கள்


உலகை நாம் வென்று
உரிமை எமக்காய் எழுதி
கற்பனையில்லா
காவியம் படைத்தாலும்

புரிந்திடாத உணர்வுக்குள்
மறந்திட்ட மனித நேயங்கள்
கால காலமாய் கசப்பாய்
தொங்கி நிற்க!ஒற்றுமை
கேள்விக் குறித்தொடராய்
தொடர! மறுத்திடாத
மறந்திடாத காயங்கள்
வாழ்வின் தொடரானது
**************************


எனக்கு எனக்கு என
அடித்துக் கொள்ளா
மனசு வேண்டும்
தன்னைப் போல்
பிறரை மதிக்கும்
அழகு வேண்டும்


அன்பு கொண்டு
அனைவரையும்
நேசிக்கும் உள்ளம்
வேண்டும்

தாய்மை உணர்வு கொண்டு
மரணம் வரை வாழ எமக்கு
வழியும் வேண்டும்..
***************************

நாங்கள் மட்டுமே
வாழயிலாப் பூமியில்
நான் பிறந்து இருந்து
தவல்ந்து மெல்ல மெல்ல
வருகின்றேன் எழுந்து
நடந்து வாழ்வதற்கு!
ஆனாலும்
நெடிக்கு நெடி இறக்கும்
என் உறவின் நடுவோ
நான் மட்டும் இருப்பனா!
எனத் தெரியாமல் அழுவதும்
சிரிப்பதும் அறிந்த நான்
அறியாது வருகின்றேன்
வெளியோ நடப்பது தெரியாமல்
அம்மாவின் குரல் தேடி
அப்பாவின் ஆசை முகம் பார்க்க!
என்னை தூக்கி எடுத்து
தவறிபோட்டு அடி வாங்கி
அழுதிடும் அக்காவை கொஞ்சநாளாய்
காணத கதை தெரியாது தேடி
வருகின்றேன் அறிய வெளியில்
நடப்பது அறிந்திட நான்
இருப்பேனா உயிரோடு
எனத் தெரியாமல்..............
**************************

எந்தனையே கனவுகள்
சுமந்து
தாயின் வற்றிலிருந்து
வெளியில் வந்தோம்
நாளைய தலைவர்கள்
நாமென்று ஆனால்
இப்போ எப்போதும்
விமானத்தின் அலறலோடு
வெடிச்சத்தத்தின் சத்தம்
திரும்பும் திசையெல்லாம் கேட்க
கிட்டக்கிட்ட கேட்கும்
ஆமியின் காலடிச் சத்தம் போல்
எங்கள் இதயம் துடிக்க
வீடும் வேண்டாம்
மறைவும் வேண்டாம் என
வெளியில் இருந்தே
தேடுகின்றோம்! எம்
உயிர் பறிக்க வரும் எமனை!!!
**************************
மழலை மடிதனில் உதிர
வலியால் தாய் துடிக்க
நெஞ்சம் தனில் தாய்ப்பால் சுறக்க
சோயின்றி தாயும்
தாயின்றி சோயும்
உறவின்றி தவிக்க!

தவிந்திடும் உறவுகளை
யுத்தம் ஓட ஓட துரத்தி
ஓடும் இடமெல்லாம் குண்டு போட்டு
உயிர் குடித்திடத் தேட!

உதிரத்தால் உடல் சிவந்து
மண் சிவக்க மரணம்
மனிதனை தேடி வாழ்வெடுத்து
வறுமைக்குள் வாட்ட
ஊரிருந்து வீடிருந்து
உறங்க இடமின்றி உயிரோடு
வாழ வழி தேடுது மனிதம் அங்கே!
*************************

தன் நாட்டில் தன் மக்கள்
காக்க! வந்த அரசு
தன் மக்கள் காக்க! தன்
மக்களை எதிரியாக்கி
எல்லை பாதுகாப்பில் வைத்து
எல்லை இல்லா
எரி குண்டுகள் போட்டு
எல்லை இல்லா உயிர்களை
அழிக்கின்றது எல்லை இல்லாமல்
எல்லாம் என் மக்கள் என்று

எல்லை இல்லா உடல்கள்
அலங்கோல வீதியெங்கும்
அவலங்களாய் வீழ்ந்து கிடக்க
அதன் மேல் நின்று கொண்டு
மண்ணில்அழிவில்லையென்று
அரசு கூற 1 இதனையும்
நம்புது இந்த உயிருள்ள உலகு!!!
*********************************

சில்லு சில்லாய் எங்கும்
குண்டு சிதறி உயிர் குடிக்க
குண்டு குண்டாய் குண்டு
மண்ணின் மீது குழிகள் தோன்ட
குப்பை குப்பையாய் உடல்கள்
அதனை மூட
உறவின்றி உடலும்
உடலின்றி உறவும்
அங்கங்கோ அழிய இதனால்
மனிதனின்றி ஊரும்
ஊரின்றி மனிதனும்
மண்ணோடு மண்ணாய் மடிய
இதுகும் விதியென எண்ணியவர்
எண்ணி எண்ணி வருந்த
மதி கொண்டு விதி வெல்ல
மரணத்தோடு போராடி போராடி
காத்திட துடிக்கின்றனர்
துய்மையான துயவர்கள்............

Wednesday 21 January 2009

உறவு

உறவால் நாம் சேர்ந்து
உரிமை பல கொண்டு
உறவோடு உறவானோம்
உறவாய் வாழ்வதற்கு
உறவாய் வந்த விதி
உறவாய் என்னைத் தொட்டு
உறவென எடுத்தால்
உறவே நீயில்லாது
உயிரோடு உலவுகின்றேன்
உறவாய் உனை நினைத்து

Wednesday 14 January 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

கார்மேகம் வெள்ளமாய்
மண்ணில் கொட்டி தீர்ந்தாலும்
சூரியன் வானிடம் சிறைபட்டு
போனாலும்
தித்திக்கும் தமிழெடுத்து
பிறந்த இடம் பறிந்த
எதிரியின் முகம் பார்த்து
வாழுமிடமெங்கும் பொங்குக
தமிழே பொங்களாய்......

தோல்விதான் வெற்றியென்று
தெருவெல்லாம் மாவிலைத்
தோரணம் கட்டி!
சிகப்பு வர்ண மாவெடுத்து
வாசலெங்கும் தேசியக் கொடி
கோலமிட்டு!
பானைக்கு கல்லாய் மனதின்
உறுதியை வைத்து
எரிக்கும் தீயாய் எம் உறவை வைத்து
எரிந்த தீப் பொறி கொண்டு!
முத்தமிழலை அரிசியாய்
உலையிலிட்டு! செந்தமிழன்
செங்குருதியை பாலாக்கி
அச்சமும் பயமும் எம்மிடம்
வேண்டாமென பொங்குக
தமிழே பொங்களாய் என்றும்
நாளைய விடியலை நேசித்து

Monday 12 January 2009

காலமே பதில்.....

கொண்டவன் வென்றவன்
கொள்கை கொள்பவன்
எம்மை அழிப்பவன்
ஆள்பவன் 
எல்லாம் காலத்தின்
விடையாய் தேடுது மனசு இன்று!!!

யாரிடம் யாரை கேட்க்க
உயிரின் உறவுகள் எங்கோ
அடுக்கடுக்காய் அழிய
ஆற்றிட துயரம் தேடியழையுது
மண்ணில் விடை தனை
பாவியர் மண்ணில் உயர்ந்திட
பாவியாய் ஆன எம்மவர் வாழ்கை
தினசரி செய்திதாளாய் பக்கத்துக்கு
பக்கமாகய் ஆராட்சி கட்டுரையில்
அவியுற்று அடுக்கடுக்காய் இறக்குது
எமக்காய்
உலகத்தின் நாடகம்
எதிரியின் வெற்றியாய் தெரிய
ஏமாற்றதால் ஏமாந்த எங்கள் இதயம்
கேட்குது காலத்திடம்!
உண்மையின் விலைக்கு நாங்கள்
ஆண்டுக்கு ஆண்டு கொடுத்த
உயிர்த் தியாகத்திற்கு பதில்
என்னவென்று ............

Thursday 1 January 2009

வந்தது ஓர் வருடம் புதிதாய்.....

கோடி மக்கள் கனவை
சுமந்து வந்தது ஓர்
வருடம் மீண்டும் புதிதாய்
இன்று!!
தொட்டதை விட்டதை
கண்டதை தொலைத்ததை
கொண்டதை மறந்ததை
மீண்டும் தேடிட வந்தது
ஓர் வருடம் புதிதாய் இன்று!!

அக்கம் பக்கம் இருப்பவர்
குற்றம் குறை மறந்து
சாதி மதம் கடந்து
கைகள் கோர்த்து
கூடி மகிழ்ந்து கொண்டாடிட
மீண்டும் வந்தது ஓர் வருடம்
புதிதாய் இன்று!!

பகை மறந்து சிரிந்து
நாளை உயிர் குடிக்க
மனிதனை மனிதன் வென்று
காலத்தைக் கொள்ள
மீண்டும் புதிதாய் தேடிட
வந்தது ஓர் வருடம் இன்று
மட்டு் மனிதனாய் வாழ............