Wednesday 30 January 2008

யுத்தம்

ஆட்சி செய்து
ஆட்சி செய்து
செய்யும் யுத்தம்
தன்னினம் தான்
அழிக்க செய்யும்
யுத்தம்

எல்லைபோட்டு
எல்லை போட்டு
செய்யும் யுத்தம்
எல்லையில்லா மனித
வாழ்வை சிதைக்கும்
யுத்தம்

வல்லரசு நாட்டின்
வல்லமை காட்டி
அடக்கு முறையால்
செய்யத யுத்தம்
வறுமை நாட்டின்
வயிற்றுப்பசி கண்ட
யுத்தம்


தீவிரவாதிகள் திவிரமாய்
செய்தும் யுத்தம்
மனிதவுயிர்கள்
சுக்கு நூறாய் சிதறும்
யுத்தம்

பேசிப் பேசி
கரைந்த யுத்தம்
கரைபட்டு போன
சமதான யுத்தம்

யுத்தம் யுத்தம்
என மனிதவுயிர்
செய்யும் யுத்தம்
எல்லைக்குள் நிற்காத
உயிர், காத்திடா யுத்தம்

பூமியின் சொந்தமென
வந்தவர்கள் செய்த யுத்தம்
மகிழ்ச்சிகளின் மரண
யுத்தம்

Monday 28 January 2008

செவ்வாய்க் கிரகம்

கண்ட உருவம்
கடவுளோ கற்சிலையோ
பொன்ணோ மண்ணோ
கற்பனையோ சித்திரமோ
தந்திரமோ மந்திரமோ
எனக் குழம்ப

செவ்வாய் பெண்ணே
செவ்விதழே நீ செவ்வாயில்
ஏன் தோன்றி சாத்திரதத்தில்
வந்தமர்ந்தாய்..

உன்னால்
எண்ணி எண்ணிக்
கட்டம் பார்த்து
வந்து வந்து வரன்கள் போக
திருமணபந்தங்கள் குழம்பிக் குழம்பி
குழப்பம் கண்டதால்

இஙங்கே உன்னை
கற்சிலையாய் வடித்து
பாலும் தேனும் உனக்கழித்து
வருந்தி வருந்தி மனிதன் வாடி
வயது தாண்டி வாழ்கை தாண்டி
தேடித் தேடி ஓய்ந்தவர்
உன்னை வெறுக்க

நீ மட்டும் எப்போதும்
குழப்பவாதியாய் இருப்பது
ஏன் செவ்வாயே...?

சிலை

அழகிய கடல் பயணம்
பாதி நீரில் தான் முழ்க

தப்பித்த சிலையொன்று
அலைமோதி அலைமோதி
உப்பு நீரில் அது தவிக்க

அந்த வழி வந்த அலை
அதையெடுத்து
கரையில் வீச

இதைக் காணாது
வந்தவர் போனவர்
கால் பட்டு கால் பட்டு
மண்ணுக்குள் அது புதைய

அந்த வழி வந்த இதயம்
அதன் அழகில் தான் மயங்கி
மார்போடு அணைத்துக்
கொள்ள...

தன் நிலை மறந்த சிலை
இழப்புக்கள் தான் மறந்து
தவிப்புக்கள் தனை மறந்து
அதன் அணைப்பில் சிரித்து
நிற்க...

இது தெரியா அந்த மனிதன்
அழகுப்பொருளோடு அழகுப்பொருளாய்
அடைத்தான் தன் வீட்டில்...

சோகம் தொடர சிரித்தது சிலை
தன் நிலையை தான் நினைத்து...

Monday 21 January 2008

அழகு

மழைக் காலம்
உதித்திடும் நிலா
என்றும் இருளுக்கு
அழகு

சூரியன் தோற்றுவித்த
வர்ணத்தில்
என்றும் ஏழு வர்ணம்
வானவில்லுக்கு
அழகு

பூக்கும் பூக்களில்
மணம் கொடுத்து
மனம் கவர்ந்த
மல்லிகைப் பூ என்றும்
பூவிற்குள் அழகு


நீரில் பிறந்து
நீரில் வளர்ந்து
நீரில் சேரா
தாமரை என்றும்
பொய்கைக்கு அழகு

முற்களோடு பிறந்து
அழகால் கவர்ந்து
காதலைப் பாடும்
ரோஜா என்றும் இதயதிற்கு
அழகு

எத்தனை அழகு
இந்த பூமியில்
பிறந்தாலும் எனக்கு
மட்டும் எதையும்
சிதைத்திடா இதயங்கள்
தான் என்றுமே
அழகு..........

Wednesday 9 January 2008

மெளனம்

அவன் சொன்ன மெளனத்தை
அவள் கேட்டு மெளனமானாள்

அவன் ரசித்த மெளனத்தை
அவள் சூடி மெளனமானாள்

அவன் தவித்த மெளனத்தை
அவள் புரிந்து மெளனமானாள்

அவன் சிரித்த மெளனத்தை
அவள் ஏந்தி மெளனமானாள்

அவன் கொடுத்த மெளனத்தை
அவள் தாங்கி மெளனமானாள்

அவன் நேசித்த மெளனத்தை
அவள் வளர்த்து மெளனமானாள்

அவன் வெறுத்த மெளனத்தை
அவள் அணைத்து மெளனமானாள்
.... ..... ...... ...... ....... ...... ...... ..... ....... ....

Monday 7 January 2008

தீயென நீ இரு

தீயென நீ இரு
மூடநம்பிக்கை தீ
தீயில் எரியும் வரை

தீயென நீ இரு
முக மூடியால் முகத்தை
மறைப்பவர் முகத்திரை
கிழித்திட

தீயென நீ இரு
சமூதாய சீரழிவை
வேரோடு தீயிட்டு
கொழுத்திட

தீயென நீ இரு
தீண்டுபவர்கள் தீயில்
எரிந்து சாம்பல் ஆகும்
வரை

தீயென நீ இரு
தீண்டாமை தீயை
தீயால் எரிந்து
உலகை காத்திடும்
வரை....