Tuesday 31 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இவள் என்ன கல்லறையின்

மேல் பூத்தபூவா  மீண்டும் மீண்டும்

மரணமே மன்னிக்கமறுக்கின்றது

இவளை என் தேவதையென்றவன்

இப்போ சொல்லாதே சென்றுவிட்டான்

பிறவிகளில் சில உறவுகள் 

நம்மை தாங்கியே தன்னை தரும்

அப்படி  என் வாழ்வில் 

வந்த  அண்ணன் அவள் சின்னவயதில்

பொறமையால் பூத்த நேசம் அவன்

தங்கையே விட்டத்தந்த பந்தம்

அண்ணியஙள் பொறமைகொள்ளும்

்அன்பு  இப்போ  என்னிடம்

சொல்லாமல் சென்றே விட்டது 

நம்ப மறுக்குது  உணர்வு

நம்பித்துடிக்கு மனசு  விதியே என்

சந்தோஷங்களை மட்டும் பறிக்கின்றாய்

என்னை பறித்திட சொல்லியும் கேளாமலே

கண்களில் இல்லையண்ணா

கண்ணீர்  உன்னை நினைத்தே

அழுது துடிக்க இதயம் மட்டும் அழுகின்றது 

உனக்காய்!! அங்கே நான் வரும்போது

எனக்காய் காத்திருக்கும் உயிர்களில் நீயும்

இருப்பாய் !எனக்காய் !

என்றும்  உன் சொல்லத்தங்கை 

 நான் தான் எப்போதும்!


Sunday 29 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இங்கே இல்லைமாமா  நான் 

எங்கே எடுத்துச்சென்றாய் என்னை

எங்கையும் காணேமாமே  நம்மை

யார்யாரே தேடிப்பார்த்தும்  

இல்லையென்று  சொல்லியழைக்க 

நாம் மட்டும்  என்னவானோம்  என

ஒற்றை உயிரெடுத்து

எந்தன்  இதயம் சுமந்து  

ஓருமுறை கனவேடு பேசிட வா மாமா

கற்பனைக்குள் நம்மை விடையாக

கண்டுவந்த கண்களுக்கு  ஒற்றை

உயிர்வாசம் பேசும் நாமே  வாழ்வின்

தேடலாவோம்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 கோடிமின்னல் தாக்கிய

இருள் சூழ்ந்த வனத்திற்க்குள்

ஒற்றைக்குயில் வாழுது தனியாய்

வனத்தை தொலை்த்த  ஒளிக்கு

 ஒற்றை விளக்கு கூட கூடயில்லா

பரிதாவம்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையெனும்  உறவுகள்

இருக்கும் உறவுஎள் 

இருப்பதை மறைக்கும்  இதயத்திற்க்குள்

இல்லாமல் இருக்கும் இதயம்

இருக்கும் வாழ்வே 

உயிருக்கு இறை  தந்த வரம் !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 முற்களின் உதிரத்த்தில்  

பாதம் மருதாணிச்சிகப்பில்

 நடந்திட கண்கள்  சொன்ன 

பொய்யுக்கு கற்பனை உயிர்கொடுத்தான்

 வறுமையை அறியா சொல்வந்தன்!!!

வஞ்சியவள் கஞ்சியில்லா

கொடுமையை கண்டுகொள்ளா 

மனம்படைத்த கற்பனைகள் 

தனக்கு தேவையென்றால்  வைரத்தைகூட

அள்ளிக்கொடுக்கும் உடல்தேவைக்காய் !!!

உண்டு உறங்க  கூரையில்லாப்

பெண்ணிற்க்கும்

தெருவேர வாழ்க்கையிலும்

வறுமையை போக்க போராடும் 

போராட்டத்தை விட 

தன் உடல்காக்க போராடும் போராட்டமே

வலிகூடியது!!!இருப்பதையெடுத்து

இல்லா கதைபடிக்கும் உலகானது!!!

Thursday 26 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 மொழிதடுக்க  இனம் தடுக்க

நிறம் தடுக்க   இதயம் மட்டும்

இதயத்திடம்  பேசிதோற்கின்றது

காதல்மொழி!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இதயங்கள் மோதிகொண்டே

ரணங்களில்  தூங்கிக்கொள்ளும்

இயல்பினேடே  வாழ்வதா காதல்!!!

இயற்கையேடே சண்டையிடும்

மரணத்தைபோல் தெரியமலே

வந்தே  மறைகின்றதே காதலாய்!!!

கண்ணீரை கைதுடைத்து  

மண்மீதேயுள்ளவரை நம்பிக்கையில் 

பூப்பதில்லையா காதல்!!

இருள்பற்றிய  வாழ்வினுடே  

ஒற்றை விரல் தொட்டு  ஓளிபற்றும்

பாதைவரை கூட்டிபோகதா காதல்!!

இருக்கும்  வரை சேர்ந்தே சுவாசித்து

இனிமையான நாட்களைப்போல்

இணைந்து போக எதைகொண்டு

எது தடுக்குது இதயதிற்க்குள் காதலை!!!

உணவுர்வு எழும் கிறுக்களைபோல்

இதபமொழிகள் களவுபோக இதயம்

பேசா வார்த்தையில்  புதைத்திடவே காதலா!!!

 



Tuesday 24 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஊருமெச்ச. உறவுஉச்சுக்கொட்ட

ஊருக்குள்ள மாமான் கைபிடித்தே

நடக்கதான் ஆசை !!!

உள்ளூர் பெருமைகொள்

பெருமை போல்  மாமான்  

உயிராய் வாழ 

அக்கம் பக்கம் பொறாமைபடும்

ஒருத்தி நானாய் 

ஊருக்குள் வாழத்தான் ஆசை!!!

அச்சதேடு வந்து  அஞ்சிபேசும்

மனிதனெல்லாம் எக்கரைக்கு சென்றாலும்

மாமான் ஒற்றைபெயரை கேட்டால் பயம்வர

மாமான் கொஞ்சும் கிளியாக ஆசை!!!

ஊருக்குள்ள உள்ள ஜோடியெல்லாம்

கண்ணுபட்டு கண்ணுகதற  மாமன்

கண்ணுக்கு  ஒருத்தி 

நானாக தானாக  ஆசை!!

இஸ்ரதெய்வம் இருக்கும் வரமாக

மாமான்  பெற்றதெய்வம்  

கொடுத்தவரமான மாலைக்கு 

மல்ராக  பூத்திடத்தான் ஆசை!!!

கண்பட்டு கண்ணீசொட்டும்

  கண்கள் தேடும் ஜோடி 

நாங்களாய்  கண்களுக்குள்

வாழத்தான் ஆசை !!!

மாமன் கைபட்டு சொழித்திடம் 

நிலம்போல்   எம் வாழ்க்கை

மண்ணின்பெருமைகொள் 

வளம்போல் காலம்மோறும் 

வாய்பேசும் மொழியின்  சிறபாக 

வாழ்ந்திடத்தான் ஆசை!!!


குட்டிக்குட்டிச் சாரல்

அன்பானவர்கள் கூடவே இருந்தால்

எதிர்மறை எண்ணங்களால் கூட

தோற்கடிக்க முடியாது யாரையும்!!!

நம்மை நாமே சிந்திக்காதவரை

நம் எதிர்வுனையே  மற்ளவர்களை

உயரத்திற்க்கு எடுத்து சொல்லும்

நம்மையும்  முந்திக்கொண்டு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நீண்ட வான் தொடாதூரம்

நான் தொடா நீயும்  நானும்

கார்கால மயில்தோகைபோல்

காத்திருக்கும் கனவிற்குள்

மழைவந்தது!!!



Sunday 22 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 கண்மூடிய நம்பிக்கையில்

தன்னைத்தொலைத்த பூவென்று

நம்பிக்கையை மறந்து

புன்னைக்க கற்றுக்கொள்கின்றது


Friday 20 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 எட்டிப்பிடித்திடத்தான் ஆசை

ஆனால்  எட்டவில்லை உன் கனவுகள்

விட்டு நடந்திடத்தான் ஆசை

ஆனால் முடியவில்லையெனக்கு

தள்ளித்தனியே நின்றிடத்தான் ஆசை

ஆனால் அசையவில்லை இதயம்

எட்டாதே என தெரிந்தும்

எட்டிபிடித்திடா வானவிலின் 

வண்ணங்களாய் வண்ணம் தொலைத்து

வண்த்தோட்டத்தில் தனியாய்

சும்மா நிக்கின்றேன் சுமையின் வலியாய்

சொன்னால் புரியா சொல்லின் 

மௌனத்தின் புன்னகை போல்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 என்னில் என்னை காணாத்தருனம்

எல்லாம் நான் இழந்த தருனம்

ஒற்றை இதயம் என்னை தாங்கியே

எல்லா உறவின் தூணாய் நின்றவர்

இற்றைபொழுது  ஏனே இறைவன்  

கஸ்ரத்தை கொடையாய்  கொடுத்தே 

 கஸ்ரங்களை  சுமக்க சொல்கின்றான்

இதையும் தாங்கி மலையாய் எழுந்து

தவிக்கும் மனையாளின் கணீர்துடைக்க

வரவே வேண்டும் இறையே  என்னில்

கண்ட துயரம் எல்லாம் எனியும்  கானா

நன்மைகொண்ட நாட்கள்  வேண்டும்

எந்தன் உயிரே முதலாய் போகும் வரமே

வரமாய் வேண்டும்  வதைப்பதும்

சிதைவதும் நானாகவே முடியவேண்டும்

கண்ணீர் கண்கள் புன்னகைக்கும்

பொழுதாய்  நாளைய பொழுது வேண்டும்

இறையின் தீபமே  இல்லமாய் மாறிட நீயே 

எழுந்தே நடத்திட வா!!!




Thursday 19 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 தாத்தாவிற்க்கு  

இரண்டு மனைவியென

பாட்டியழும்போது  கூட வளர்த்த

 அப்பாவிற்க்கு இன்னெருத்தி வந்தால்

அம்மா உயிருடன் இருக்க!!

அம்மா சண்டைபோட கூட

இருந்த அண்ணனுக்கு

மனைவி கூடவாழ்கையில் 

அண்ணன் மனைவியறியாமல்

அண்ணனுக்கு இன்னெருத்தி

இயல்பாய்  கைகோர்த்தால்  

அண்ணியழுவதை பார்த்து பார்த்தே

அண்ணன்  மகன் கூடவளர்கின்றான்

நாளை அவனுக்கு  இரு பெண் காத்திருப்பதாய்

கற்பனைகள் நாளைய வாழ்க்கைக்கு 

ஒருவழிதேடிகொடுக்க

பெண்ணின் கோழைவாழ்க்கைக்கு

புதிய அந்தியாயம் எழுதிகின்றத்து

கற்பனைகதைபோல் !

!திருட்டுதனங்களின்

அங்கிகாரப்பணத்தோட்டம்

புதியபாதையாய் பூக்கின்றது பழமையில

புதுமையாய்!!!

கவலைவிடுபெண்னே

அங்கிகாரம் இல்லாகோடிகளுக்குள்

கோடிவாழ்க்கை கஸ்ரமில்லாமல் 

எதிர்காலத்திட்டதில் சில்லறைகளைபோல்

சிதறி புன்னைக்க கைபிடித்தபடி

நீயே எப்பவும்போல் கற்பனையுலக்தோடு

சண்டைபோட்டே உயிர்வாழ தயராயிரு!!



குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னைதொலைக்கும் வரை

என்னையாரும் திரும்பிபார்க்கவில்லை 

மாமா 

உன்னைத்தொலைத்தபின்னர்

ஐந்துவயதிற்க்கு கூட 

அன்ரிமேல்  ஆசைவருதுமாமா  

நீயல்ல உலகில்

வாழ்க்கையே கறுப்பாச்சிமாமா

நான் நடக்கபாதையும் வெறுப்பாச்சிமாமா

என் உறக்கமும் கனவாச்சி மாமா

கனவேடும் கற்பனையேடும் காலமும்

முடிந்தது மாமா!!!

விழி மொழி பேசும் சாரல்

 தனித்தபெண்னின் இடருக்குள்

சிக்கிகொள்ளும் குழந்தைகள்

எப்போதும் பாதிப்புக்குள்ளயே

நடக்கின்றனர் 

தானாய் நடக்கமுடியாமல்

தொலையும் குழந்தைகளே அதிகம்

ஒடிவிளையாடும் வயதில் 

போராடும்காலில் உறுதியுண்டு  

ஆனாலும் வலிகின் வழிகள்

கொஞ்சம் தடுமாறும் இயல்பாய்

இது கூடநடக்கும் 

உறவுக்கே புரியாதபோது

வேடிக்கை பேசும் மனிதம் அறியாமுடியாதே

தோற்றுபார்தெரியும் உலகு

படித்தவர்  மற்றவர் மனசை 

படித்தால் போதும் 

பலபடிகள் தாண்டும் குழந்தையும்!!!!



Tuesday 17 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 புத்திசாலியை பார்த்து 

கற்றுக்கொள்ளாத  முட்டாளே 

புத்திசாலியின்  அடிமையாகின்றான்

கற்றவன் தன்வழி நடக்கின்றான்!!

Friday 13 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னில் துறல்போட்ட

மழைதுளி  சொன்னது 

உந்தன்  ஆசை 

 எந்தன் ஆசையென்று  

எப்பவும் தோற்றிடும்

எந்தன் தோல்விகளுக்கு 

எந்தன் மனசு சொன்னது. 

எந்தன் வெற்றி 

இயற்கையின் காதலால்

பூக்கும்  நம்பிக்கையின்  

கையென்று!!!


Thursday 12 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 அழகான வாழ்க்கை 

எதுவென தேடிபார்த்தேன் 

உண்மையற்ற இதயத்தின் 

பொய்களில் மயங்கிக்கிடந்தது!!!

அன்பான வாழ்க்கை 

எதுவென  தேடிப்பார்த்தேன்

வறுமையின் குடிலுக்குள்

 மழைவெள்ளத்தி்ல் மிதந்து கிடந்தது

அறிவான வாழ்க்கை எதுவென

தேடிப்பார்த்தேன் 

கையில் சிக்கிடா முத்தைபோல்

கடலிலுக்குள் கிடந்தது

கற்பான வாழ்க்கை

எதுவென தேடிபார்த்தேன்

தனியான பெண்மையின் கையின 

ஆயுதமாய் இருந்தது!!!

பண்பாடான வாழ்க்கை

எதுவென தேடிப்பார்த்தேன்

ஆண்மையின் உருவத்தில்

விலங்கைப்போல் காட்டிற்க்குள்

 கிடந்தது!!

மனிதனின் பிறப்பென்னயென

தேடிப்பார்த்தேன் 

தவறுகளின் வடிவில் தன்னையே

தொலைத்து தேடும் உயிராய் கிடந்தது!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 நம் வாழ்க்கையை 

எதுவும் தீர்மாணிக்கலாம்

நாம்

நம்நற்பண்பை இழக்காதவரை  

நம் வாழ்க்கை

எப்போதும்  மற்றவரிடமிருந்து

வேறுபடும் !!!


Wednesday 11 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அவள் தோல்விகளில் 

மகிழ்ச்சியை ரசித்தபடி பல

உருவம் நிழலாய்  நடைபோட

அவள் நிழலின் விம்பத்தில் கால்வைத்தே

நடக்க தனகென தனிவழியமைத்தால்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 கற்பனை கண்ணாடிக்குள்

கற்பனை உருவம். 

கற்பனை உயிர்பொய்யில்

கருவாகி வடிக்கின்றது  கண்ணீர் கதை!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 வாக்கப்பட்டு  இஸ்ரப்பட்டு

கஸ்ரப்பட்டு  வதைபட்டு

காயப்பட்டு  கண்ணீர்பட்டு

பூவென்று பூக்கின்றது  தீக்குளிக்க!!



குட்டிக்குட்டிச் சாரல்

 கொஞ்சநேரம்  ஓய்வாய்

கொஞ்சிபேசிய காலம்

கொஞ்சம் கொஞ்சமாய் 

ஓய்ந்தே போக

கொஞ்சமும் ஒய்வற்ற தேவையேயற்ற

தேவைகளை  சுமந்தபடி

வாழும் வாழ்க்கை ஏங்கு தேடுது

கொஞ்நேரம் கொஞ்சிப்பேச…..

Thursday 5 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 மங்கையவளை விதவையாக்கிய

மரணத்தோடு  ஓற்றைக்காதல்!!

வெள்ளைமலரைக்கொய்தே  

மாலையாக்கி  மரணக்காதலுக்கு  

காணிக்கையாக்கியே

மங்கை சூடினால் வெள்ளையாடை!

வெள்ளை மாலைக்குள் மாலரைப்போல்

அவளுக்கு மட்டும்

 பூக்கும்  கனவுவாழ்க்கை!!

கல்லினுள் கவிதையாய்

ஒற்றைவாசல் இல்லாவீட்டில் 

மங்கையிவள் ஏற்றிய ஆத்மதீபம்

அழகாய்  எரியும் 

 மனிதனின் மறுபக்கத்தில்!!

கவிவழியே  கரையும்

கனாக்காலத்தை  பறித்தே  

பதியமிட்டத்து  வாழ்கையை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 என் கற்பனைகளுக்கு முகங்கள்

தேடபட்டபோதெல்லாம் 

என் முகம் கருமையின் 

கனவிற்குள் முழுமதியற்றே

தொலைந்தேகிடந்தது

இருந்தும் ஓற்றை நிமிடத்தை

மரணம் கொடுத்திடவே கனாக்கண்டேன் 

கற்பனை முகம் புன்னகைக்க!!!


Tuesday 3 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 அப்பாதோற்றே விழுந்த நினைவு

கடனால் அம்மாவடித்த கண்ணீர்

அறிந்தும் அறியாபருவம் அறிவாய்

சிந்தனை செய்யென்றது!!தந்தைகற்று தந்த

பாடம் கணவர் எழுதிய தொடர்கதை

தீயின் சுவாலையாய் என்னை எரித்தே

சாம்பலாக்கியது !!

சாபலில் இழந்து விழுந்து எழுந்த

பெண்னாய் மீண்டும்  மீண்டேயெழுந்திட

விடாமல் கூடவே  கூடியே  நடித்தே

கூடவே நடத்தவரே அதிகம் 

ஆனாலும் மனிதம் அப்படியே

 அன்றிலிருந்து

இன்றுவரை எதை இழந்தாலும்

அதைவிட  அதிகமாய் 

சிந்தனை செய்திடச்சொன்னது!!!

அறிவும்தோல்விகள் 

வாழ்க்கையில் மலையென

உயர்ந்தாலும் முயற்சிகள் ந்தியென

ஒடுது வழியாய்  என்னுள்ளே !!

 பரதிகண்டகனவு

தோற்றதே வென்றதே அறியேன்

பரதிபெண்ணாய் உடைதாலும் எழுகின்றேன்

சுயமாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 சந்தர்ப்பங்கள் தோற்கடித்தாலும்

நம் சந்தோஷங்களை தோற்கடிக்கா

சந்தர்ப்பத்தை தரும் நம்பிக்கையே

நம் எதிர்காலம்!!!

Sunday 1 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 கொஞ்சம் கூட 

தெரிய மனிதர்களின் பொய்யே

கற்பனைபொழுதுபோக்காய்

இன்றைய மனிதர்களின் வாழ்க்கையின்

நியமாய்பேச்சு!!

உள்வீட்டு உண்மைகள் 

வறுமைகுடிக்க

உயரத்தின் ஒளியில் 

தெரியும் முகத்தின்பின்னே

ஆயிரம் கதைபடித்தோடுகின்றனர்

தன்னைமறந்தமனிதர் கூட்டம்!!

உயரதெட்டவன் படியில் 

பலவடிவம் படுத்துறங்கிப்டதை

அறிந்தவனே தானாய்  தான்னைக்கொடுத்தே

தன்னைசெதுக்க தன்னையே மித்தே

நல்லதலைவனாய் உயர்கின்றான்

பொய்களால் அல்ல!!

புரியாமனிதனே கடசிவரை தன்னை

மறந்து பெய்யேடு  வாழ்கின்றனர்

அடுத்தவர் வாழ்வின் வாழ்க்கை

கற்பனையாயில்!!!


விழி மொழி பேசும் சாரல்

 பொஞ்சம்  இரக்கம்கொள்

இறையே !!! 

கொஞ்சுமொழிச்சுவை

பெண்ணவள் கொஞ்சகாலம்

நின்மதி கொள்ள!!

கொஞ்சம் கருணைகொள் 

இறையே !!!

கருணைவடிவானவள்

கண்குளத்திற்க்குள்ளும்  கொஞ்சகாலம்

புன்னகைவழித்தோடிட!!!

கொஞ்சம் பாசம்  கொள்

இறையே !!!

பசமானபெண்னிவள் ஏமாந்தே 

இழந்த  இதயத்தின்வலிகளும்

கொஞ்சமறந்திடும் 

பாசகொடு இதயம்பெற!!!

கொஞ்சம் உயிரபெறு 

இறையே!!!

கல்லான பெண்னிவள் கற்பனையும்

தோற்றிட்ட நாட்களை கொஞ்சம்

கவிவடிவமாய் உயிர்பூவில் பூவாக!!!