Monday 30 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகளிலே பெரியவலி
நீ தரும் மெளனத்தின் வலியானது
என் இயத்திற்கு!!
ஏன்னெ தெரியாத ஓர் தவிப்பு
நீயில்லாத பொழுகளில் ஏன் வருகின்றது
எனக்கு!!
 இது எதுவென தெரியாது
 வாழ்விற்கும் சாவிற்கும் இடையில்
தொலைகின்றேன்!!
 உன் நினைவுகளைஅணைத்தபடி
இது என்உயிர்வரை எனப் புரிந்தாலோ!!


Thursday 12 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிறக்கும் முன் உணரும்
அன்பு
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடை நிற்கும் அன்பு
இருப்பவருக்கு புரியாத
அன்பு
இறந்த பின் தேடியலையும்
அன்பு
இருந்தும் தொலைக்கும் அன்பு
இல்லாவிட்டாலும் தவிக்கும்
அன்பு
மரணம் வந்தே மதிகொண்டு
 மதிக்கம் அன்பு

Wednesday 11 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

விரக்திக் கதவுகள் திறந்திடும்
போது தனிமை பக்கங்கள்
எரிதீயுக்குள் ஏமாற்ற சுவாலையால்
எழுந்து எரிகின்றது !!துணைக்கு
கற்பனை நினைவுக்கதவை  மூடும்போது
முளையின் கதவு திறவாமேலோ
உணர்வுத்தீக்கு  ஏக்கதீயால் சாபமிடுகிறது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பிற்கு அழம்
தெரியவேண்டுமா! உன்
துன்பத்தை பகிர்ந்து பார்
மற்றவர்  உள்ளத்தின் உயரம்
புரிவதற்கு!!

Saturday 7 November 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏழ்மை என் சிறகுகளை
பிடிங்கிய போது வலிக்கவில்லை
பசி என் இளமையை
 பிடிங்கிய போது வலிக்கவில்லை
கருணையற்ற மனிதன்
கற்பனையில் கலங்கடிதபோது
வலிக்கவில்லை
எதிர்காலம் கற்பனையான போது
வலிக்கவில்லை
மகனே ! நீ என் நம்பிக்கையை
அறுத்தபோது மனசுவலிக்குதடா
அனாதையானதாய் துடிக்குதடா
யாருமற்ற வனமாகி
இந்த உயிர் தவிக்கு தடா
 இறுதி நம்பிக்கையும்   மண்ணில்
இறந்துவிட்டதாய் கண்ணீர் வடியுதடா
இருந்தும் உயிர் உனக்காய் இன்னும்
துடிக்குதடா!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொரு பெண்ணின்
பலவீணங்கள் ஒவ்வொரு
ஆண்னின் பலதின்
அந்திவாரமாகின்றது!
ஒவ்வொருபெண்ணின்
 முட்டாள் தனமே ஒவ்வொரு
ஆண்ணின் தவறுகளாகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு நேசத்தின் ஆழம்
ஒரு துன்பத்தின் கைக்குட்டை
ஒரு பொய்யின் ஆழம்
ஒரு கண்ணீர்துளியின் அளவுகோல்!!

Friday 6 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓராயிரம் வலிகண்டும்
இதயமட்டும் துடிக்கின்றது
இன்னும்!இதயவலி
வந்திருந்தால் ஓராயிரம்
வலியும் வந்திருக்காது!!!

Thursday 29 October 2015

அவளும் உயிர்ரானவள் தான்,,,,,,,

உன்னைத் தொலைத்தாய் நீ
 எண்ணிய காலம் என் கண்கள்
அழுதிட மறந்திட்ட காலம்
 உன்னை புரிந்திடாது நான் 
 பிரிந்திட்டதாய்  நீ வருந்திய
 காலம்  என் சோகங்கள்  
என்னை போர்வையாக்கிய காலம்
உன்னை நான்  மறந்தாய் நீ 
திட்டியகாலம்  என் காதலை
உன்னால் உணர்த்திட முடியக்காலம் 
என் காலதிற்குள் உன்னையன்றி
யாருமே வந்தில்லை  என் ஜென்மங்கள்
கடந்தும் என் இதயவாசல்
 திறப்பவன் நீயன்றி யாறுமில்லை!இருந்தும்
உன்னைத்தொலைதே 
நான் வாழும் காலம் 
இறைவன் எனக்காய் தந்த வரம்
கருணையேடு இறைவனுக்கு நன்றி
சொல்கின்றேன் !!உன் சந்தோஷத்தை
என் வாழ்கை பாலைவனத்தில் 
கருகிடாது காத்தற்காய்!!!!


Wednesday 28 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கனவிற்குள் நிழலான ஓர்
ஓவியம் என்முன்னே 
உயிராகி நிற்ககண்டு அடடா
தொலைத்திட்ட மகிழ்வெல்லாம்
எனி எனக்கே எனக்கா வந்தென்று
கற்பனையில் சில காலம் 
கண்னோடு மறைத்ததுண்டு
தன்னை தான் மறந்திட்டபாவியிவள்
உண்மைக்கு நிழலாகி பொய்யிற்குள்
தான்விழுந்து  ஏமாற்றம் தனைக்கண்டு
துன்பத்தை அணிந்தபோது 
காலத்தின் கண்ணீர் சொன்னது
பாலைவனத்திற்குள்
 தாகத்தின் தண்ணீர்
என்றுமே ஊற்றாகாதென!!

Monday 26 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நியவுலகத்தை தொலைத்து
விட்டே கனவுலகத்த்தில்
துயில் கொள்கின்றோம்! தட்டி
திறப்பது மதியென்றால்
வறுமையும்  வறட்சியும் வாழ்வை
ஜெயிந்திட பயந்திருக்கும்!!
எழுதியவரும் சொன்னவரும்
தோற்றபின்னே  புதியவர்
அனுபமாகின்றார்!!!
வாசிக்க பயந்தவன் வாழ்வை
 தொலைத்து புத்தகதை  காக்க
வாசித்து புரியதவன்  புத்தகதிற்குள் வாழ்வைத்தேட
தேடத்தெரிந்தவன்  தன்னைத் தொலைத்து
புத்தகமாய் வாழ !வாழ்கை
 நம்பிதொலைகின்றது  கையிருந்தும்
முடமானவன் போல!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நாணயத்தின் இருபக்கங்கள்
ஆண்னும்பெண்னும் ஒன்றை
விட்டு ஒன்று பிரிந்திட முடியாதது நியதி
எப்பக்கம் விழுந்தாலும் 
வென்றிட துடிப்பது வாழ்கை!!
இதில் எவர்பக்கம் பிழைக்கின்றதே
அவர் பக்கம் மறைந்து
மற்றவர் பக்கம்
ஒளிர்வதே நியதி  ஒளியில் தெரிபவர்
இருளில் நிற்பவர் தன்னை
மிதிக்கின்றபோதே நாணயம்
உடைகின்றது !உன்னைபோல்
உன்பின்னால் நிற்பவரைின் தியகத்தை
நேசத்தேடு மதித்துபார்
ஆண்மையும் பெண்மையும் 
வேறாகதோன்றிடாது 
மண்ணில்! படைக்கபட்ட நியதி 
உண்மையற்ற உள்ளத்தாலே விபச்சாரமாகின்றது!!

Saturday 24 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புதைகுழிக்குள் விழுந்த நான்
எழுந்திட முயன்றேன் 
சற்றும் எதிர்பாராதபோது எங்கே
சுழன்ற காற்று மண்ணையள்ளி
முடியது என்னை !
சற்றே தொலைவில்
பொழிந்த மழை கொஞ்சமிரக்கம் கொண்டு
என்னைத்திறக்க  
அலறியடித்த தீ என்னைபற்றி
எரிய அழுதகுரல் கேட்க யாருமற்ற நானோ
மண்ணின் அடியில் புதைய !
 இரடிவிழுந்த விதையே
என்மேல் விருட்சமாய் உயர 
கனவும் ஆசையும் 
ஏக்கமும் கற்பனையும்
சாம்பலாய்  வோரின் அடியில் கிடக்கின்றது
தனியாய்!!!

Wednesday 14 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறைவிதியை மாற்றிடத்
தெரிந்தால் 
என் பாதங்கள்
முற்களை தாங்கிடாது 
நின்றிருக்கும்
இறைவிதியை
 அழித்திடத் தெரிந்தால்
என் இதயம் 
வலிகளற்று துடித்திருக்கும்
இறைவியையை 
தோற்கடிக்கத்தெரிந்தால்
என் கருகியமலர்த்தோட்டம் 
செழித்திருக்கும்!!!
எதையும் மாற்றிட முடியாது ^
என்னையும்   உன்னையும்
நம்முட்டாள் தனத்தையும் தவிர!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒன்றைத் தொலைத்தபின்
அதன் மேல் அக்கரைகொள்பவன்
மூடன் தொலைத்திடது பாதுகாக்க
தெரிந்தவனே  வாழத்தெரிந்த
மனிதன்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யார் யாருக்கு எது
எது
அதிகம் வலிக்கின்றதே
அதுவோ அவர் அவர்
உள்ளதின் சிதறல்களாகின்றது
எதைஎதை செய்தால் வாழ்கை
கசத்திடுமே அதைஅதையே
திரும்ப திரும்ப செய்து முட்டளாய்
வாழ்கின்றோம் !!!

Thursday 8 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லாம் கிடைத்தவர்களுக்கு
எல்லாம் இழந்தவர்கள்
கேலியாகின்றார்கள் !இருந்தும்
வாழத்தெரியாதவர்களுக்கு
இல்லாதாதிருந்தும் வாழ்பவர்கள்
கேலியாகின்றார்கள்

Wednesday 7 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்கு கிடைத்ததை
நீ காப்பாத்திட தவரும் போதே
உன்  இயலாமை  உன்னிடம்
இருந்து மற்றறவரைப் பிரிக்கின்றது
!உனக்கு கிடைத்தை
 நீ தவரவிடும் போதே  உன்
இயலாமை உன்னை மற்றவரிடம்
சேராது தடுத்து  வைக்கின்றது
 உனக்கு கிடைத்ததை
நீ அனுபவிக்காத போதே
உன்  இயலாமை உன்னை  மற்றவர் துன்பதை
 ரசிக்க வைக்கின்றது!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

அவர் அவர் தேவை
அவர் அவருக்கு தேவை
எது எது தேவை
எவ்வளவு தேவை என
அவர் அவர் நினைத்திட முடித்தால்
அவர் அவருக்கு தேவையாதை
அளந்திட முடியும்

Tuesday 6 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அப்பனே நாயகனே 
முப்பொருள் உணர்ந்தவனே 
உன்னையன்றி இவ்வுலகில்
 எவ்வுறவும் எனக்கில்லை இருந்தும்
ஏன்சோதனை செய்கின்றாய்!!
கஸ்ரங்கள் வந்தபோது 
கண்முன்னே மனிதனி்ல்லை
வழியற்றவள் முன் காக்கவழியமைத்து
காத்திடாது நீயே தடுத்தாய்!!
 நம்பியவன் கைவிட நிற்கதியாய்
நான்நிற்க  ஏமாந்தவள் 
கைபிடிக்க  நீயேதான் ஆனாய்!
இருந்தும் ஏன் சோதனைசெய்கின்றாய்!!
 கல்வியை  கற்றிட செல்வத்தை தரவில்லை 
மேன்மையாய் வாழ்ந்திட தகுந்தறிவு பெறவில்லை 
கீழ்மையில் வாழ்ந்தாலும் எவர்
வாழ்வும் அழிக்கவில்லை  இருந்தும்
 ஏன்சோதனை செய்கின்றாய்!!
இருந்தும் இருந்தும் போராடுகின்றேன்
உயிர்வெறுத்து உன்னையே நம்பியே!!
நாளைய விடியல் வேண்டாம் வாழ்வும் வேண்டாம்
நித்திய உறக்கமே எனக்கு எனிபோதும்!!
கடமைகளை முடித்துவிட்டேன் 
காத்த உயிரை சேர்தெடுத்து 
கூட்டிப்போ இறைவா!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஓடியோடி உழைக்கின்றேன்
எதுகுமில்லை கையில்
வலிகள் சுமந்து வாழ்கின்றேன்
யாருமில்லை காத்திட
கதறி அழுது புலம்புகின்றேன்
கருணையில்லை இறைவனுக்கும்
எரிந்த வீட்டு சாம்பலுக்குள்
பூத்த மலராய் நானேன் ஆனோன்
விடையுமில்லை கேள்வியுமில்லை
எனக்கு வாழ்வும் புரியவில்லை
கருணையற்ற உயிரோ பாவக்கணக்ககாய்
எனக்குள் ஓட
வலுவற்ற உடலோ சுமந்திடாது தவிக்க
சுமந்திட நால்வரற்ற வாழ்விலும்
சுமையாய் நானோன் இறைவா !!1

Saturday 3 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருங்கல் சிலையென்று
கண்னெதிரே நிற்கக்
கண்டேன்
கற்சிலைதானே என்று அடிக்கடி
தீண்டிப்பார்த்தேன் தீண்ட தீண்ட
உயிரான கற்சிலையோ! திக்குதெரியா காட்டுக்குள் திசையறியாது மறையக்கண்டு!!
கற்சிலையாய் நானேயானேன்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அடிக்கும் மணியெலிக்கு
துடிக்குது என் இதயம் உன்னைத்தேடி
மக்கு மாமா துடிக்கும் என்னை
 மறந்து துடிக்கா இதயத்தோடு
எங்கே சென்றாய் என் உணர்வைமறுத்து!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வெரு விடியலும்
உன்னைத்தேடுகின்றது
என் விடியாத பொழுதுக்குள்
உன் முகப்புன்னகையே என்
பாதையின் சந்தோஷங்களாய்
தாங்கிய நின்றதால்!! நித்தம்
உன்முகம் பார்த்தே என் விடியல்
மலர்ந்தே சிரித்ததை எப்படா
உன் நினைவுக்குள்  என் உணர்வுகள் பேசிட
நீ எனைதேடி வருவாய்!!

Tuesday 29 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்ஒவ்வொரு கற்பனைக்குள்ளும்
தொலைத்தவன் நீயே யென்பதால்
என்வாழ்வின் தொலைத்த வெள்ளை
காகிதங்கள் யார்கையிலும் வர்ணங்களாகாது
மடிக்கபட்டு கிடக்கின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொறு தியகத்திற்குள்ளும்
 சுமையின்வலி அழுதுகொண்டே
வாழ்கின்றது!யாரோ ஒருவரின்
நாளைய வெற்றிக்காய்
தன்வாழ்வை காணிக்கையாகிய படி!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிறக்கும்போதே இறப்பென்பது
நிச்சக்கபட்டாலும் ஏனோ
ஒவ்வொரு இறப்பும் ஒரு பாறையின்
சுமையாய் இதயத்தை அழுத்திக்கொண்டே
இருக்கின்றது !!மரணம் அணைக்கின்ற  போதே
வலியும்அணைகின்றது

Sunday 27 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,


உன் பிரிவு என்  இதயத்தின்
நோய்யானதால் என்உயிர்
துடிப்பின்றி தவிக்கின்றது
நான் உனக்குள் உணர்வாய் கலந்தது
நீ  பிரிந்த பின்னர்  எனக்குப் புரிகின்றது
என்னை விட்டு பிரிந்த உயிராய் எனக்குள்
நீயே வாழ்ந்தாயென்று!!

Sunday 20 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை பிடித்து விட்டாது
என்னோடே தொடரும் சனிபகவானே!
என்னையழித்து எடுத்து கெடுத்ததை
உன்னைப்பிடிக்கா என்னிடம்
கொடுக்கும் வரை
 என்னைக் கை விட்டிடாதே!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொரு தோல்விக்குள்
வரும்ஒவ்வொரு ஏமாற்றதிற்கும்
எதிரே கடத்திட முடியா மலையாய்
என்முன்னே நீயோ தான் நிற்கின்றாய்
எப்போ நீ ஓளியாய் மிளிர்வாயே
அப்போ! உன் ஒளின் வழி நானாய் இருப்பேன்
 இறையே!

Wednesday 16 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

எப்படித்தான் கோவம்கொண்டாலும்
எவ்வளவு காலம் பிரித்தாலும்
ஒரு நெடி நீ அருகிருந்தால் என்னை
உனக்கானவளாய் மாற்றிச்சிரிப்பது  எது!
நமக்கு மட்டும் ஏன் !இப்படியோர் விதி
புரியாக்குழப்பத்தில் காலமெழுதிய
காயம் நாம்தொலைத்த சந்தோஷமாய்
தொலைகின்றது!!!!


Friday 11 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

போனீர் தேனீர் நான் போட
வாரீர் காத்துக்கண்கள் அழுது
ஏமாத்து வடியும் போது!
இருந்தும் காத்துக்கொண்டே
இருக்கின்றேன் ஒருநாள் 
நமக்காக விடியுமென்று!!

Sunday 30 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாசகமிட்டவள் யாசகமிட்டவனிடம்
யாசகம் கேட்டாள் யாசிப்பான்னென்று
யாசிக்காதவன் முன் யாசகம் கேட்டதன்
முட்டாள் தனத்தை  ஒரு சிக்கலின் அனுபம்
சொல்லிசென்றது அவளுக்கு!!

Wednesday 12 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமான் உயிருக்குள் உணர்வாகிய 
ஓர் உயிர் !என் உணர்வுக்குள்
 உயிராகி !என் விழிகளின் 
கனவிற்குள்  பேசு  காதலின் மொழியினை !
மாமா! நீ!  கருணையற்று
 தொலைத்தநேசம்!  என்னை 
கண்ணீராய் கரைக்கிது உனக்காய் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தீயகாயத்தால் தீந்தவள்
வலிகளை யாரோ கூறுகையில்
உள்ளங்கை சாம்பலில் 
ஒருபிடியற்று ஊமையானால் 
வார்தைகளில் அடங்காவலியானதால்!!
வேர்வையது துளிகளில் 
வீழ்ந்ததுளிகண்ணீரானதால் பூத்தமலர்வாட
 பூவைவிழிநோக பார்வையது உறைய
மனசின்வலி பனிதுளியானது பார்வைக்கும்
தெரியமலே!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் எண்ணங்களே 
உன் வாழ்கை
உன் மௌனங்களே
 உன் சிதைவுகள்
உன் புரிதல்களே 
உன் அழிவுகள்

Monday 10 August 2015

குருதிப் புனல்

நாம் தழிழரொன எழுந்திட்ட
 சிங்களே! 
ஆறுசுவை  உண்டு   அடுத்தவருக்காய் 
பேசி!நாட்காட்டிகள் கிழிக்கும்
 நாதியற்ற கொள்கைகளை வைத்து 
நாலுகால் கதிரையில் அமர்த்து 
ஐயா !நீங்கள் சிறையான
தேசத்தில்  எந்தகொடியேற்றபோகின்றீர்கள்!!
அபயமான தழிழாகி தேசத்ரோகியாகி
சட்டவிரோதக்கும்பலாகி  தீவிரவாதியாகி
தெருவில் விடபட்ட தழிழை நேசித்த
தமிழனாய்யிருந்தால் ஓன்றுமை
ஒன்றே வேதமெனயெடுத்து
ஒன்றையாவது அகற்றியிருபோமே!!
ஆளுமை கட்சியிடம் போராடி!!
நாளைய முத்துகள் இன்றைசொத்தையாகி
போதையில் விழுந்து காமத்தேன் குடித்து
சகதியில் சருகுகின்றதை  பார்த்தும்
தமிழா !நீ தழிழனாய் இருந்தும் 
குருடனாய் வாழும்போது
கட்சியமதைத்து  சட்டசபைபோய்
வெட்டியாய் கத்தியெதைசாதிக்க போகிறாய்!!
தன்னை தானே இழிவுபடுத்தி எதிராலியை
உத்தமனாய்  உயர்தி  தமிழை பதவிக்காய் 
பேசுவதை விட 
தழிழா  நீ அரசியல் ஊமையாகிவிடு!!
சாதிக்க முடியா தேசத்தில் தொலைத்திட
எம்மை  ஓர் தலைவன் தேடியெடுக்கம் வரையாவது
அடிமைமண்ணின் ஆடம்பரமாளிகைக்காக
நம் மாவீரகள் சாம்பலை அத்திவரமாக்காதிருப்போம்!!!




Thursday 6 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உண்மையன்றி என்னிடம்
உன்னையன்றி என்னிடம்
உள்ளயேயும் இல்லை மாமா
வெளியேயும் இல்லை மாமா
கனவும் நீயே  உறகாவிழியும்
நீயே !உறக்கம்கெடுத்து உளறவிட்டு
உன்னை விட்டுப்பிரிவை!
பிரிக்காகாலமும் நீயே தான்மாமா!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோவத்தில்  கொஞ்சமறந்து
கொஞ்சும் கிளிதனை மறந்து
கொம்புத்  தேன்கூட்டில் சிக்கிக்கிட்டு
எட்ட முடியா மலையுச்சியில்
தவம் புரியும்  என் மாமா 
வேப்பிலைக் கறுப்பாயி
வேப்பம்பூதேனாகி நீ வேண்டா
வரமாகி வாராவே உனைத்தேடி!!
ஓடாதே எனைக்கண்டு
 தவசிக்கோலம் தனைக்காக்க
காளையே உன்னைக் கட்டியாழ!!
சரியான யோடி எனிநான் தான் தாடி!!!

Tuesday 4 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் மல்லுவேட்டி
மடிப்பை பார்த்து விழுந்த
 என் இதயம் எட்டெடுத்து
நடக்கும்  மாாமன் நடையழகாய்
அங்கும்  இங்கும்
அலையுது தவிக்கு  மாாமன்
நிழலோடு !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

படடினியேடு
பிணியும்
சத்தமின்றி உயிர்குடிக்க எதிரியாய்
சிலர் எதிரோ இருநந்து ரசிக்க
இல்லையென்றவர் இல்லமும்
கானல்நீராய்மறைச்சி போச்சு
பலர்கண்களின்  முன்!!!

Wednesday 29 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னால் முடியாதவற்றை
முடிவாக்கி முகவுரையெழுதாதே
முடிவுரைகள் தவறானால்
மொத்ததில் முத்ததில்  கூட
உப்புக்கரிபே நித்தமாகும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்தனையாண்டு கடந்தாலும்
முதுமையே வந்ததாலும்
பேரன் பேத்தி கூட கண்டாலும்
துணையின் பாசம் கொஞ்சம் மாறினால்
உணர்வின் ஆழத்தில் பொறாமையாய்
அசைவதே அழகியகாதலாகின்றது!!

Tuesday 28 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல் எதுவென  காணாது தேடி
ஏடுகளைப் புரட்டினோன்
காகிதக்கிறுகள்கள்
காலத்தைக் காட்டியது !!
நித்தம் ஒளியற்று கரைந்த வாழ்வின்
முற்கள் சுற்றிய கடிகாரயெலிக்குள்
இளமையுடைத்த  முதுமையில்
சிதறும் கண்ணீர் துளியில் சிரிப்பதுதான்
காதலென்று!!!

Wednesday 22 July 2015

நான் கேட்டேனா உன்னை!!!!

தாலாட்டுத் தழிழ் தந்தாய்
தாயாய் சிறுநாள் உறவுதந்தாய்
பொறுமையே பெண்மையாக

பொருமையாக்கி சிறப்பு தந்தாய்

சிறுமையிலும் புன்னகைக்கும்
இதழ்கள் தந்தாய்

வலிகளை அடக்கிடும் மனதால்
கல்லான உணர்வை காக்கதந்தாய் 

நிழலற்ற பாதைகளே பயணமாக்கி
நடக்கத் தந்தாய்!
 நிஐங்கள் இதுவெ சிந்தனை
மதிதந்தாய்!!

பொறாமைகொள் சபையில் 
அடையாளமாய் என்னைத்தந்தாய்!

பொய்யான மனிதனின் நடுவே
தனிமையான வாழ்வுதந்தாய்!

பொறுந்தா உறவை கண்ணீராய்
கரையத்தந்தாய்

வாழா வாழ்வை விடிவெள்ளியாய்
துரே துயரமாக்கி ஏக்கதை இளமையாய்தந்தாய்

முதுமையில் சோகம் தந்தாய்
முகவரி அழியதந்தா தாய்!! 
எனிமண்ணில் புதையும் உடலுக்கு 
ஆயிரம் முகவுரையை  எதற்காய் தருகிறாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ ஒருவன் !!
கற்பனையாய் ஆண்மையை
வைத்து இது காதலாயென கருவை
தேடுகின்றான்!இதுவோ காதலானால்
உலகின்  மொழிகளில்லா காதலால்
மனிதன்  வாழ்வான்!!!இல்லையெனில்
மிருகங்களோ காதல்மொழிபேசும்!!

Monday 20 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒர்பெண்ணைக்கலங்கபடுத்தும்
வரை பலர் பேசுகின்றனர்
அவள் கலங்கித்துடிதால் அவளுக்காய்
பேசிட யாருமற்று போகின்றனர்!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்

கருணையற்ற காலமதை
வென்றிட உன் நினைவுகள்
தானடி உயிர்கொடுத்தது!!
 என்னைத் வாட்டிடும் நிழலின்
உயிர் நீயாய் மாறி
எந்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும் கடந்துவிட்டேன்
உன் நினைவில் ஓர் துளியினையும்
உதிர்திட முடியாது !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில் சிலகால
பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!