Monday, 30 December 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

கைகாட்டி சென்ற வருடமே
 என்னில்கொண்டகோபத்தால்
நீ தந்திட்டு சென்ற ஏமாற்றங்கள்
என்னுள் ஆழமாய் இருந்தாலும்
வரபோகும் வருடமே
 நீ கொண்டுவரும்ஏமாற்றங்களை
 எதிர்த்து போரிடக்காத்திருக்கின்றேன்
 உன்னை வரவேற்று!!

Thursday, 26 December 2013

குட்டிக்குட்டிச்சாரல்............



என்னிடத்தில் கண்டதெல்லாம்
உன்னிடத்தில் தோன்றியதே
இன்று உன்னிடத்தில் அழிந்தால்
எனக்குள்ளும் அழித்திட்டது
என்னிடத்தில் தேடாது உன்னிடதில்
தேடிப்பார் திரும்பக்கிடைக்கின்றதாஎன்று!!!!

Wednesday, 25 December 2013

குட்டிக்குட்டிச்சாரல்........

என்னை அறுத்து
உன்னை எடுத்து
உரியவரிடம் கொடுத்து
விட்டேன்
 என்னை வெறுத்து
தனியே  சென்ற
உன்  இதயதிற்கும்
நன்றி சொல்லி விட்டேன்
நம்பிக்கையின்றி இட்ட முடிச்சை
சிக்கலாக்கி என்னை
நானே மூடிக்கொண்க்கொண்டேன்
புன்னகைத்துப் பிரிந்து என்
 கண்கள் வடித்த நீரை
வழமைபோல்!! கைகள் தொட்டு
மறைத்துக்கொண்டேன்
உன்னை பொறுத்தவரை எனி
ஆயுள்வரை நான் துரோகியாவன்.........................

Tuesday, 24 December 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனைகளிலும் கனவுகளிலும்
தொலைத்து வீதியில் எறித்திட்ட
பெண்னை !!
ஆண்மையோ!!
நீ விடுதலையில் தேடியதால்
நான் தலை வணங்கினேன்
உன்னை !!ஆனால்
உன் பொண்மையை நீ கண்ணீரில்
தொலைத்திட்டு கற்பனையில்
வடித்திட்டதைக் கண்டு
மீண்டும் தலை குணிந்தேன்
உன்னால்!!!

Monday, 16 December 2013

கற்பனை...................

குழந்தையின் சிந்தனையானவள்
 குறும்பில் சிறந்தவள்
அன்பை யாசிப்பவள்
நல்லோரை வணங்குபவள்
தீயவரை பரிதாபமாய் பார்ப்பாள்
அனைவரையும் உறவாய்நினைப்பாள்
உண்மைக்கு தலைசாய்ப்பாள்
பொய்யுக்கு முகம் சிவப்பாள்
எதிரியாய் யாரையும் எண்ணாதவள்
பெண்மையை இகழ்வோரை
 மன்னிக்காதவள்
கோழைகளை காளைகளாய்
காண்பாள்
குட்டி ஆசைகளை ஆசைகளாய்
சுப்பாவள்
பணத்திற்காய் விலையாகதவள்
வறுமையின் உணர்வை மதிப்பவள்
 இயற்கையிடமேவாழ்வைகற்று
கொண்டாள்
ஆண்மையின் ஒழுக்கத்தையே
உயர்வாய் காண்பவள்
கோபதின் வார்த்தைக்கு ஆழம் தெரியதவள்
மலரின்  மென்மை போன்றவள்
நேசிப்பவர் திட்டினால் மட்டுமே
உதிர்ந்திடுவாள் வாழ்வில்!!!


Thursday, 12 December 2013

குட்டிக்குட்டிச்சாரல்....

என்இதயசுவர்களில்
வரையப்பட்ட
 உன் ஞாபங்கள்  என்
உதிரத்தின் உணர்வுகளில்
ஓடுவதால்
என்மரணதில்கூட
அழியாது அன்பே!!


குட்டிக்குட்டிச்சாரல்....



 என் எல்லாவானும்
அடைக்கபட்டது போல்
எனக்குள் உன் நினைவுகள்
அடைக்கபட்டு காற்றைக்கூட
செல்லாது வைத்துக்கொண்டது
சாவியயின்றி திறக்கதெரிந்திட்ட
திருடன்  என மறந்து!


குட்டிக்குட்டிச்சாரல்......

கலாச்சாரதின் மேல்
ஆடையாய் படர்ந்திருத்த
ஒழுக்கதையும்மூடநம்பிக்கையென
 எடுத்தாடினோம்!!!
அதை நம்பிய போதும்
 காப்பாற்றமறந்து விட்டு
அதைஎடுத்தபோதும்
காப்பாற்றமறத்து விட்டு
நாம் மனிதனெனபொருமை
பேசுகின்றோம்!!

Thursday, 5 December 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னைக் கண்டு என்னை
மறந்தேன் காதல் என்றாய்
இன்றுவரை தேடுகின்றேன்
உன்னில் காதலை!!
எது காதலெனப்புரியாத
கண்ணீர்த்துளியாய்!!
!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல் எதுவரை
நான்னறியேன்
காமம் எதுவரை
நான்னறியேன்
வாழ்வு எதுவரை
நான்னறியேன்!!

துரோகம் இருக்கும்வரை
மனிதவாழ்வு வலியிடமே!!
உண்மை உணராதவரை
ஆணின் அழிவு பெண்ணிடமும்
பெண்ணின் அழிவு ஆணிடமும்
முடிவுரையெழுதும் வரை!!