Friday 29 June 2007

தேடலால் வந்தசாரல்.....,

ஆணிடமிருந்து பெண்ணிற்கும்
விடுதலை !பெண்ணிடமிருத்த
ஆணிற்கும் விடுதலை

காதலில் இருந்து கற்பிற்கும்
விடுதலை!கற்பிற்குள்ளிருந்த
காதலுக்கும் விடுதலை

பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கும்
விடுதலை!பிள்ளையிடமிருந்த
பெற்றோருக்கும் விடுதலை

உறவில் இருக்கும் பாசத்திற்கும்
விடுதலை!பாசத்திற்குள்ளிருந்த
உறவிற்கும் விடுதலை

பணத்திலிருக்கும் சொந்ததிற்கும்
விடுதலை!சொந்ததிற்குள்ளிருந்த
பணத்திற்கும் விடுதலை

நட்பிலிருந்து தூய்மைக்கும்
விடுதலை! தூய்மைக்குள்ளிருந்த
நட்பிற்கும் விடுதலை

இறுதியில்
பூமியிடமிருந்து மனிதனுக்கு
விடுதலை!மனிதனிடமிருந்த
பூமிக்கும் விடுதலை!!!

என் உயிர்ச் சாரல்............,

கவிதையே!என்னை
உனக்குள் வைத்து
உன்னை மட்டுமே
சுவாசிக்கின்றேன்

உன்னை நேசிப்பதால்
என் வாழ்வை மறந்து
உன்னோடு மட்டுமே_ நான்
மெளனமாகப் பேசிக் கொள்கின்றேன்


என் உணர்வுகளை நீ
ஏந்திக் கொள்வதால்
என் சோகங்களை உன்னோடு
பகிர்ந்து  கொள்கின்றேன்!1

என்னுடன் பேசிக்கொள்ள
நீ யே எனக்காய்  இருப்பதால்
உன் சிறைச்சாலையில்
நானெரு கைதியாய் வாழ்கிறேன்

கவிதையே!நீ
என்னை விடுதலை செய்யாதே
எப்போதும் !!நான் மகிழ்ச்சியாய்
உன்னேடுமட்டுமே வாழ்கின்றேன் ........

Thursday 28 June 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஈழத் தமிழ் நாட்டில்
இனக்கொலை வெள்ளத்தில்
ஏங்குகின்ற உயிர்களே!
ஒருகணம் நில்லுங்கள்!
வாழத் தேதியில்லாமல்
வாட்டுகின்ற கொடுமையிலே
வதைபடும் வரலாறு
என்றைக்கு நிற்குமோ?

மாலத்தான் முன்னின்று
மரணத்தை துச்சமென்றென்னி
ஈழத்து மைந்தர் செய்யும்
ஈகம் தான் கொஞ்சமா?
மீளத்தான் வழிசொல்லார்
மேலும் வசைபாடுவதை
காலந்தான் நிறுத்துமா?
கண்ணீர்க் கதை மாறுமா?

Wednesday 27 June 2007

தேடலால் வந்தசாரல்.....,

எனக்கும் அவனுக்கும்!
வாழ்கையென்னும் விடுதலையில்லா
சிறைச்சாலைக்குள் புரிந்து கொள்ளா
முரண்பாடு..

விரக்தியான நாட்களை
கண்ணீர் சிந்தும் கோலம்
முகமூடியால் மறைத்துக் கொண்ட
முரண்பாடு

போலியான வாழ்விற்குள்
மலர்ந்த சின்ன மலர்கள்
உறவைத் தேடி சிக்கி தவித்து
பாசம் தேடும் முரண்பாடு

யாரோடும் சொல்லச் சோகங்கள்
எம் முரண்பாட்டால் முரண்பட
விரிசல்கள் விடை காண
நாளைய முதியோர் இல்லத்தை
முரண்படாமல் தயாராக்குது்........

Sunday 24 June 2007

நட்பின் சாரல்.............,

என் காதல்
தலைவானுமில்லை
என் தாய்க்கு
மகனுமில்லை

என் கனவுகளைப்
January 2016 – vedhakavitaigalபுரிந்தவன்
என் ஆசைகளைத்
தெரிந்தவன்


என் அன்பில் தாயைக்
காண்பவன்
என் கல்லறை நாட்களை
கவிதையாக்கியவன்

என் வளர்ச்சியில் ஏணியனவன்
 என் மகிழ்ச்சியில்
அகம்மலர்பவன்
 என் உணர்ச்சிகளை
 புரித்து நடப்பவன்


தன் காதலியை எனனக்கு
உறவாக்கியவன்
என் நரகத்தை
மகிழ்ச்சியாக்கியவன்
இருவரும்  ரசிக்க ..நான் சிரிந்தேன் அவனால்......

என் உயிர்ச் சாரல்............,

அதிகாலை நேரத்து
பறவையின் இசை கேட்டு
நான் எழுந்திட ஆசை

சூரியன் தீண்டப்  பனித்துளியை
நான் தீண்டி விளையாடி
மகிழ்ந்திட ஆசை

தென்றல் பட்டு அசைந்தாடும்
மொட்டு, சூரியன் தொட்டு
மலர்ந்திடும் அழகால்சிந்தும்
பனித்துளியில் நான் நனைந்திட
ஆசை

பூவின் இதழுக்குள் என்
முகம் புதைத்து  என்னை
மறந்து ஓர் நாள் உறங்கிட ஆசை

இளங் காற்று அசைய!!  ஆடிடும்
மரங்களின் ஓசை தன்னை
ரசித்தபடி  நதிக்கரை ஓரமாய்!
நான் நடந்திட ஆசை!!

கார்மேகம் வான் மறைக்க
இருள் வந்து எனை மறைக்க
பசும் புல்தரையில் நிலவெறிக்க
உறவே இல்லா தனிமையோடு
ஓர் நாள் நான் பாடிட ஆசை,....
.....

Friday 22 June 2007

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


தேவதை

விழிகளால்ஆயிரம் கதைபேசி
தலை சாய்து எனைப் பார்த்தாள்
கண்ணக்குழிவிழும் சிரிப்பொலியாள்

என் கரம் தொட்டு மடியமர்ந்து என்னை
முத்தமிட்ட உணர்வில் அவள் பலகாலம்
இளையபாரதி: 2012
என்னோடு வாழ்ந்தாய் ஒர் ஞாபகம்!!



என் இதயம் வலியெடுக்க

 என் எண்ணங்கள் நீர் சுரக்க
என் கரங்கள் கட்டியணைக்க
என் வலிகள் நெஞ்சோடு வெடிக்க
அவள் எனக்குள் அடைக்கலமானால்!!
சின்னப்பாதம்பதித்து
கெஞ்சிகேட்க்கும் கொஞ்சுமொழியால்
சின்ன சின்ன குறும்புகளை
சிங்காரமாய் செய்து
என்னோடு வந்தவள்!!
என்னை ரசிகையாக்கி
என்னை மறந்து , என்னில் நின்று
பிரிந்து, செல்லுகின்றாள்
என் விழி நீரைப்போல்................