Sunday 24 May 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வனதில் நின்று கொண்டு
கற்பனை மலர்களை
 கையிரண்டிலும்அள்ளிக்கொண்டு
நீருக்குள் வர்ணகோலங்களை
போட்டுக்கொண்டு காத்திருந்தேன்
என்றாவது சந்தோச மழைத்துளிகள்
நந்தவனத்தை அமைத்திடுமென்று!
கொஞ்சம்கொஞ்சமாய் கற்பனைகள்
உதிர்ந்து கையிரண்டும் காயங்களாய்
போன பின்பு புரிந்தது
பாலைவனக் கோலம்போட்டு
காணல்நீருக்குள் நிற்பது!!

நிலவோடு ஓர் சாரல்,

ஒருநாள் என்னோடு
நிலாப்பொழுது தன்னோடு
ஊதக்காற்று பேசாத
கடக்கரை மண்ணோடு
எட்டியோடா  நிலவொளியில்
தாலாட்டும் அலையோடு
நீயும் நானும் அமர்ந்து
 கதைபேச வேண்டும்!!!

அப்படியும் இப்படியும்
புரியாது புலம்பும் மனிதனெல்லம்
தொலைத்திட்ட நாளுக்காய்
ஏங்கவேண்டும்!!!

கூடும் உறவு கூடிடஒர்நாள்
தேடவேண்டும்
கொள்கையில் பித்தனும்
கொள்கையின்றி அலைபவனும்
கொள்கையொடு ஓர்வாழ்வு
தேடவேண்டும்!!

புரிந்திட தேடுபவரும் புரியாது
தவிப்பவரும் இதுதான் வாழ்கையென்று
புரிந்து கொண்டு வாழவேண்டும் நம்மைப்போல்:

நட்பின் சாரல்.............,

என்னை வரவேற்ற
என் உறவிற்கு நன்றி
என்னை வரவேற்க்த் தவறிய
உறவிற்கும் நன்றி
பண்பாடு இங்கே
வாழ்வதற்கு நன்றி
என்கவியைச்சுட்டு
வரிகளை மாற்றி
சின்னதாய் கடித்த
நண்பனுக்கும் நன்றி
எச்சரிக்கை தந்த
நண்பனுக்கும் நன்றி
கவிக்கு கவிதந்த
நண்பனுக்கும் நன்றி
பெண்னிற்குபெண்
எதிரிஇல்லை என்று
சொன்ன தோழிகளுக்கும் நன்றி
என்னைப்பற்றிக்கேட்ட
நண்பிக்கும் நன்றி
கறுப்பு எனக்கு
ரெம்பப்பிடிக்கு நண்பி
வரமுதல் தந்த அன்பிற்கும்
நன்றி!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிரை விட
உன்னை
அதிகம் நேசித்தேன்!
ஆதலால் தான்!
நீ வாழ என்னையே
அழித்தேன்!
உனக்கே தெரியாமல்

Saturday 23 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதன் தன் அறிவிற்கு
எதிரானதால் தனக்கு தான்
எதிரியானான்!!தனக்கு தான்
எதிரியானதால் அழிவிடம்
பலதைக்கற்றுகொண்டு
 பழிதீர்கின்றான் தன்னை தானே  பலவாரு!

Friday 22 May 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


ஏந்திக்கொள்க இன்பதைால்
தாங்கிகொள்க !
காத்துக்கொள்க கருணையால்
அணைத்துக்கொள்க
பார்த்துகொள்க பாிதாபத்தால்
சோத்துக்கொள்க
நேசம்கொள்க நேர்மையால்
 நெருங்கிக்கொள்க
பாசம்கொள்க பாவத்தின்
கண்கள்கொள்க
உண்மைகொள்க உயர்ரெண்ணத்தால்
தாங்கிகொள்க!!

Wednesday 20 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறுதி ஆசை இறுதிக் கனவு
இறுதி நம்பிகை உடைவதோடு
அனைத்தும் உடைந்து விடுகின்றது
வாழ்வில்......

தேப்பக்குளத்துத் தாமரை…..

வைகரைக்கதிரவன் 
வந்தெழுப்பா பொழுதெழும்பி
வையத்து பூவெல்லாம் 
மலர்ந்திடா பொழுதினில் 
மலர்ந்திடும் வோரில்லா தாமரையின்
ஒளியில்லா வாழ்வை 
தழுவிடா தென்றல் கூடி
தண்டோடு பிடிந்தொடுத்து
தாமரையின் வாழ்வகற்றப் போராட!!
தழுவியோடும் அருவிநீர் தரித்து நின்று
தழுவியே வாட்டாது இதழ்விரிக்கச் சிரிக்க!
அழகாய் இதழ்விரித்த தாமரை அழகை
ரசித்திடா வெண்மேகம் தன்னை இழந்து
மழைமேகமாகி சட்டென பொழிந்து 
பூமியெங்கும் வெள்ளமாகி பூவோடு மோதி
தன்னோடு உள்ளிழுக்க 
பிடிப்பில்லா சேற்றோடு புதையாது
அழிந்தாடும் நீரோடு ஓடாது
தண்ணீரின் மேல் பூவும் உயர்ந்து 
இதழ்விரிக்கும் அழகு
தண்ணீரோடு பிறந்து தண்ணீரோடு
அழியாத விதியின் அழகாகின்றது!!

Tuesday 19 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

வதைபட்டு வதைபட்டு
வாடிய மலர்
செடி நின்று உதிர்ந்து
மிதிபட்டு மிதிபட்டு
கருகிட!! மழைத்துளி
இதழ் நனைந்து
மலர செய்திட்டது
சில நொடிகள்

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லைகள் தேடி
எதுவரைப் போனாலும்
யுத்தம் சொன்ன எல்லை
மனிதன் மறையும் வரை
தொடரும்.....

குட்டிக்குட்டிச் சாரல்......,

புரியாத புதிருக்குள்
தெரியாத உறவாய்
அறியாத் தவிப்பின்
வேடிக்கை வேதனைகள்
சொல்லாக் கதையில்
சேராக் கருவாய் தேடுது
ஒரு கதையைச் சொல்லிவிட.........

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பே!
நமக்கு ஆசைகள்
சுமையானதால் தான்
உ னக்கு நானு எனக்கு நீயும்
சுமையானோம் !

உணர்வு தந்த சில கிறுக்கல்கள்..3

அலையென வந்து  உயிர்மூச்சினை

அள்ளியெடுத்து  உடல்தனை
மணலென வீசி சென்ற அலையிர்களின்
பாதசுடுகளுக்கு !!ஓர் மலர்வணக்கம்!



??????????????????????????????????????


நட்சத்திர வான்நிலா முற்றத்து

தமிழின் உயிர்யொடுத்து
உடலினை உரமாக்கி
உதிரத்தை அள்ளிகுடித்து
மரணதேசத்தில் விதைக்கபட்ட
உறவுகளின் உயிரின்அழுகுரல்
ஆன்மாவிற்கு !இதயகாயத்தால்
மலர்வணக்கம்!!


???????????????????????????????????????
உதிரத்தை சந்தணமாய் பூசி

அக்கினியில் குளித்து
அனல் காற்றாய் கலந்து
எம் இருள் வாழ்விற்கு
நட்சத்திரப் பூவாய் ஒளிர்கின்ற
எம் மாவீரத் தியாங்களுக்கு!
மலர்தூவி !மனம்வாடி! பணிகின்றோம்
உங்கள் மலர்பாதம் தனை!

Saturday 16 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் கனவுகள் பொய்யில்லை
உன் நினைவுகளில் எழுதா என்
யென்மங்களே பொய்!
அந்த யென்மங்களை எனக்குள்
தந்த இறைவனும்பொய்!
அந்த பொய்களை நம்பி இழந்த
என் வாழ்கையும்  பொய்யே!!


Friday 15 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் மரணத்தை உனக்காய்
யாசிக்கின்றேன்! என் இயத்தை
பரிசளிக்க! நீ  தொலைத்த நேசத்தை
என் இதயம் தரும் என்பதால்!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் இன்பங்களில் நானில்லை
என் துன்பங்களில் நீயிலை
எதைத்தான் எனக்காய்  தரபோகின்றாய்
இன்றைய கண்ணீரையா !நாளைய
மரணத்தின் பின் தேடலையா?

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்தனை உறவுகள் என்னை
சுற்றி நின்றாலும்
எந்தனை குரல்கள் எனனை
சுற்றி ஓலித்தாலும்  அந்தனையும்
ஆறுதலின்றி தவிக்கின்றது  உன்னால்!

பாவம்!!!

தன்னத்தனியே இருளோடும்
வெளியோடும்  ஒளியோடும் நடைபோடு
 அவள்களால் காந்தியும்  பாவம்!!

இன்பத்தை பெண்ணாய் கொடுத்து
 காமாத்தை துன்பமாக்கியமண்ணின்
கயவர்களால் இறைவனும்பாவம்!

கண்மணிகள் வளரந்து கண்ணுக்குள்
ஓவியமானதால் காளைகள் கண்களில்
விழும் கண்மணிகளின் காதலும் பாவம்!!

சுற்றிநட்டகாவல் சுவர்கள்
பட்டுப்போனதால் கட்டுப்பாடற்று எட்டியேடும்
மனிதமிருகத்தால் குழந்தைப் பருவமும் பாவம்!!

பட்டுவண்ண மலர்களின் சுட்டிசெயலால்
காவலற்ற மண்ணில் குறியற்று
பக்கம் நடக்கும்கிழவனின் கருணையும் பாவம்!

எட்டிபிடிக்க ஓடாக் கிழவியின்
பக்குவமடைய வயதால் பத்துவயது குழந்தையின்
அப்பாவால் படலையும் கதவும் பாவம்!!

உறவும் பாசமும் உணர்சிகளின் சிறையானதால்
இரக்கமற்ற இதயஉருவத்தால்
அரக்கிகளும் பாவம் தொலைந்தமனிதர்களால்!

Monday 11 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னைச்சுமந்ததால் பெண்
தெய்வமானாள்! தன்
பிள்ளையை சுமந்தால் பெண்
தாசியானாள் நீதிககளில்
இருபக்கம் ஒருவுருவம் சமனற்ற முள்ளாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சில்லறையை அள்ளியதால்
சிறைசாலை கைதியானன்
ஆசைக்குத் தண்டனையாக!
கட்டுக்களை அள்ளியதால்
கோடைக்குத் தலைவரானர்
பேராசைக்குத் தண்டனையாக!!
நீதியே குடைபிடிக்குது பணம்
 என்பதால்!!!

Saturday 9 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

நாற்சுவருக்குள் சமூதாயத்தை
சாக்கடையாக்கிவிட்டு
முற்ச்சந்தியில் உமிழும்
உணர்சிகளின் நாற்றதால்
சாக்கடையையோடுவது யார்தவறு
உன் தவறா?  என் தவறா
நம் தவறா?நீ  நிந்திப்பாயா? இல்லை சிந்திப்பாயா?

செந்தமானவள்.......

உன் நினைவுகளில்
இதயம் தவிக்க!
உறக்கங்களில்நெஞ்சம்
தவிக்க!
அள்ளிய வைத்த மடி
நீயின்றித்தவிக்க!
  தாலாடிய பாடல்
ஊமையாய் தவிக்க!
சங்கமித்த கனவற்று
வாழ்வு தவிக்க!
கவிதைகள் கருவிற்று
கண்ணீராய் தவிக்க!
எண்ணிரண்டு ஆண்டுகள்
இருபவள்  நினைவுகளில்
சொந்தமில்லா சொந்தமொன்றை
தந்தவிட்டு சென்றவளே!
வாழ்வும் வீழ்வும் நீயே  தானடி!

Tuesday 5 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் பாவக்கணக்கு
என் சிலுவையின் பாரத்தை
சுமக்கின்றது தனியாக!

Saturday 2 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

நேசமற்றவரை நேசித்து
நேசமின்றி
ஏக்கம் சுமப்பதைவிட
தன்னையே நேசிக்கற்றுக்கொண்டால்
கண்ணாடியாவது உறவாகும்!