Thursday 29 October 2015

அவளும் உயிர்ரானவள் தான்,,,,,,,

உன்னைத் தொலைத்தாய் நீ
 எண்ணிய காலம் என் கண்கள்
அழுதிட மறந்திட்ட காலம்
 உன்னை புரிந்திடாது நான் 
 பிரிந்திட்டதாய்  நீ வருந்திய
 காலம்  என் சோகங்கள்  
என்னை போர்வையாக்கிய காலம்
உன்னை நான்  மறந்தாய் நீ 
திட்டியகாலம்  என் காதலை
உன்னால் உணர்த்திட முடியக்காலம் 
என் காலதிற்குள் உன்னையன்றி
யாருமே வந்தில்லை  என் ஜென்மங்கள்
கடந்தும் என் இதயவாசல்
 திறப்பவன் நீயன்றி யாறுமில்லை!இருந்தும்
உன்னைத்தொலைதே 
நான் வாழும் காலம் 
இறைவன் எனக்காய் தந்த வரம்
கருணையேடு இறைவனுக்கு நன்றி
சொல்கின்றேன் !!உன் சந்தோஷத்தை
என் வாழ்கை பாலைவனத்தில் 
கருகிடாது காத்தற்காய்!!!!


Wednesday 28 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கனவிற்குள் நிழலான ஓர்
ஓவியம் என்முன்னே 
உயிராகி நிற்ககண்டு அடடா
தொலைத்திட்ட மகிழ்வெல்லாம்
எனி எனக்கே எனக்கா வந்தென்று
கற்பனையில் சில காலம் 
கண்னோடு மறைத்ததுண்டு
தன்னை தான் மறந்திட்டபாவியிவள்
உண்மைக்கு நிழலாகி பொய்யிற்குள்
தான்விழுந்து  ஏமாற்றம் தனைக்கண்டு
துன்பத்தை அணிந்தபோது 
காலத்தின் கண்ணீர் சொன்னது
பாலைவனத்திற்குள்
 தாகத்தின் தண்ணீர்
என்றுமே ஊற்றாகாதென!!

Monday 26 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நியவுலகத்தை தொலைத்து
விட்டே கனவுலகத்த்தில்
துயில் கொள்கின்றோம்! தட்டி
திறப்பது மதியென்றால்
வறுமையும்  வறட்சியும் வாழ்வை
ஜெயிந்திட பயந்திருக்கும்!!
எழுதியவரும் சொன்னவரும்
தோற்றபின்னே  புதியவர்
அனுபமாகின்றார்!!!
வாசிக்க பயந்தவன் வாழ்வை
 தொலைத்து புத்தகதை  காக்க
வாசித்து புரியதவன்  புத்தகதிற்குள் வாழ்வைத்தேட
தேடத்தெரிந்தவன்  தன்னைத் தொலைத்து
புத்தகமாய் வாழ !வாழ்கை
 நம்பிதொலைகின்றது  கையிருந்தும்
முடமானவன் போல!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நாணயத்தின் இருபக்கங்கள்
ஆண்னும்பெண்னும் ஒன்றை
விட்டு ஒன்று பிரிந்திட முடியாதது நியதி
எப்பக்கம் விழுந்தாலும் 
வென்றிட துடிப்பது வாழ்கை!!
இதில் எவர்பக்கம் பிழைக்கின்றதே
அவர் பக்கம் மறைந்து
மற்றவர் பக்கம்
ஒளிர்வதே நியதி  ஒளியில் தெரிபவர்
இருளில் நிற்பவர் தன்னை
மிதிக்கின்றபோதே நாணயம்
உடைகின்றது !உன்னைபோல்
உன்பின்னால் நிற்பவரைின் தியகத்தை
நேசத்தேடு மதித்துபார்
ஆண்மையும் பெண்மையும் 
வேறாகதோன்றிடாது 
மண்ணில்! படைக்கபட்ட நியதி 
உண்மையற்ற உள்ளத்தாலே விபச்சாரமாகின்றது!!

Saturday 24 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புதைகுழிக்குள் விழுந்த நான்
எழுந்திட முயன்றேன் 
சற்றும் எதிர்பாராதபோது எங்கே
சுழன்ற காற்று மண்ணையள்ளி
முடியது என்னை !
சற்றே தொலைவில்
பொழிந்த மழை கொஞ்சமிரக்கம் கொண்டு
என்னைத்திறக்க  
அலறியடித்த தீ என்னைபற்றி
எரிய அழுதகுரல் கேட்க யாருமற்ற நானோ
மண்ணின் அடியில் புதைய !
 இரடிவிழுந்த விதையே
என்மேல் விருட்சமாய் உயர 
கனவும் ஆசையும் 
ஏக்கமும் கற்பனையும்
சாம்பலாய்  வோரின் அடியில் கிடக்கின்றது
தனியாய்!!!

Wednesday 14 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறைவிதியை மாற்றிடத்
தெரிந்தால் 
என் பாதங்கள்
முற்களை தாங்கிடாது 
நின்றிருக்கும்
இறைவிதியை
 அழித்திடத் தெரிந்தால்
என் இதயம் 
வலிகளற்று துடித்திருக்கும்
இறைவியையை 
தோற்கடிக்கத்தெரிந்தால்
என் கருகியமலர்த்தோட்டம் 
செழித்திருக்கும்!!!
எதையும் மாற்றிட முடியாது ^
என்னையும்   உன்னையும்
நம்முட்டாள் தனத்தையும் தவிர!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒன்றைத் தொலைத்தபின்
அதன் மேல் அக்கரைகொள்பவன்
மூடன் தொலைத்திடது பாதுகாக்க
தெரிந்தவனே  வாழத்தெரிந்த
மனிதன்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யார் யாருக்கு எது
எது
அதிகம் வலிக்கின்றதே
அதுவோ அவர் அவர்
உள்ளதின் சிதறல்களாகின்றது
எதைஎதை செய்தால் வாழ்கை
கசத்திடுமே அதைஅதையே
திரும்ப திரும்ப செய்து முட்டளாய்
வாழ்கின்றோம் !!!

Thursday 8 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லாம் கிடைத்தவர்களுக்கு
எல்லாம் இழந்தவர்கள்
கேலியாகின்றார்கள் !இருந்தும்
வாழத்தெரியாதவர்களுக்கு
இல்லாதாதிருந்தும் வாழ்பவர்கள்
கேலியாகின்றார்கள்

Wednesday 7 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்கு கிடைத்ததை
நீ காப்பாத்திட தவரும் போதே
உன்  இயலாமை  உன்னிடம்
இருந்து மற்றறவரைப் பிரிக்கின்றது
!உனக்கு கிடைத்தை
 நீ தவரவிடும் போதே  உன்
இயலாமை உன்னை மற்றவரிடம்
சேராது தடுத்து  வைக்கின்றது
 உனக்கு கிடைத்ததை
நீ அனுபவிக்காத போதே
உன்  இயலாமை உன்னை  மற்றவர் துன்பதை
 ரசிக்க வைக்கின்றது!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

அவர் அவர் தேவை
அவர் அவருக்கு தேவை
எது எது தேவை
எவ்வளவு தேவை என
அவர் அவர் நினைத்திட முடித்தால்
அவர் அவருக்கு தேவையாதை
அளந்திட முடியும்

Tuesday 6 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அப்பனே நாயகனே 
முப்பொருள் உணர்ந்தவனே 
உன்னையன்றி இவ்வுலகில்
 எவ்வுறவும் எனக்கில்லை இருந்தும்
ஏன்சோதனை செய்கின்றாய்!!
கஸ்ரங்கள் வந்தபோது 
கண்முன்னே மனிதனி்ல்லை
வழியற்றவள் முன் காக்கவழியமைத்து
காத்திடாது நீயே தடுத்தாய்!!
 நம்பியவன் கைவிட நிற்கதியாய்
நான்நிற்க  ஏமாந்தவள் 
கைபிடிக்க  நீயேதான் ஆனாய்!
இருந்தும் ஏன் சோதனைசெய்கின்றாய்!!
 கல்வியை  கற்றிட செல்வத்தை தரவில்லை 
மேன்மையாய் வாழ்ந்திட தகுந்தறிவு பெறவில்லை 
கீழ்மையில் வாழ்ந்தாலும் எவர்
வாழ்வும் அழிக்கவில்லை  இருந்தும்
 ஏன்சோதனை செய்கின்றாய்!!
இருந்தும் இருந்தும் போராடுகின்றேன்
உயிர்வெறுத்து உன்னையே நம்பியே!!
நாளைய விடியல் வேண்டாம் வாழ்வும் வேண்டாம்
நித்திய உறக்கமே எனக்கு எனிபோதும்!!
கடமைகளை முடித்துவிட்டேன் 
காத்த உயிரை சேர்தெடுத்து 
கூட்டிப்போ இறைவா!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஓடியோடி உழைக்கின்றேன்
எதுகுமில்லை கையில்
வலிகள் சுமந்து வாழ்கின்றேன்
யாருமில்லை காத்திட
கதறி அழுது புலம்புகின்றேன்
கருணையில்லை இறைவனுக்கும்
எரிந்த வீட்டு சாம்பலுக்குள்
பூத்த மலராய் நானேன் ஆனோன்
விடையுமில்லை கேள்வியுமில்லை
எனக்கு வாழ்வும் புரியவில்லை
கருணையற்ற உயிரோ பாவக்கணக்ககாய்
எனக்குள் ஓட
வலுவற்ற உடலோ சுமந்திடாது தவிக்க
சுமந்திட நால்வரற்ற வாழ்விலும்
சுமையாய் நானோன் இறைவா !!1

Saturday 3 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருங்கல் சிலையென்று
கண்னெதிரே நிற்கக்
கண்டேன்
கற்சிலைதானே என்று அடிக்கடி
தீண்டிப்பார்த்தேன் தீண்ட தீண்ட
உயிரான கற்சிலையோ! திக்குதெரியா காட்டுக்குள் திசையறியாது மறையக்கண்டு!!
கற்சிலையாய் நானேயானேன்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அடிக்கும் மணியெலிக்கு
துடிக்குது என் இதயம் உன்னைத்தேடி
மக்கு மாமா துடிக்கும் என்னை
 மறந்து துடிக்கா இதயத்தோடு
எங்கே சென்றாய் என் உணர்வைமறுத்து!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வெரு விடியலும்
உன்னைத்தேடுகின்றது
என் விடியாத பொழுதுக்குள்
உன் முகப்புன்னகையே என்
பாதையின் சந்தோஷங்களாய்
தாங்கிய நின்றதால்!! நித்தம்
உன்முகம் பார்த்தே என் விடியல்
மலர்ந்தே சிரித்ததை எப்படா
உன் நினைவுக்குள்  என் உணர்வுகள் பேசிட
நீ எனைதேடி வருவாய்!!