Monday 26 July 2010

ஞாபக அலைகள்


என்னிடத்தில் வந்து போகும் 
என் நினைவுகள்
என்னைத் தொலைத்து
என்னைத் தேடி உன்னிடத்தில்
வந்து மோதி நிற்பது   உண்மையடா

என்னை மீட்கா என் நினைவுகள்
உன்னிடத்தில் என்னைச்  சிறையிட்டு 
மீண்டும் மீண்டும் என்னைத் தேடுவது
 ஏனடா?

உன்னோடு நான் தொலைத்த
அந்த இருள்குடித்த நாட்களை    
என் கரம் பிடித்து
கதைபேசி என்னை மீட்டு 
உன்னிடத்தில் என்னை ச் சேர்க்கஒரு தரம்
எனக்காய்   வாயேன்டா?
உன்னோடு நானும்என்னோடு நீயும் வாழ…..

Friday 23 July 2010

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

நினைவுகள் எடுத்து
நியாயம் தேடி
ஆண்டு தோறும்
கண்ணீர் மாலை

கண்கள தொலைத்து
காவியம் தேடும்
கல்லறை மாலை


அன்பைத் தொலைத்த
மறத்தமிழன் தேடிடும்
காணமல் தொலைந்த ஒற்றுமைமாலை


வந்து வந்து போகும்
நாட்களின் கொடுமையை
கிழித்தெறித்து வாழ்வைத்தேடும்
புதிய சிந்தனையின் கண்ணீர் மாலை


தொலைந்த தமிழனுக்காய்
தொலையும் தமிழன்
ஆண்டுக்கு ஆண்டுக்கு
தேடிடும் கண்ணீர் மாலை


விடுதலைத்தீயில் விடுதலைதேடும்
உண்மை தமிழனின்
உண்மைக் கண்ணீர் மாலை


தொட்டெடுத்து கட்டிய உயிர்களின்
வெற்றி மாலையின் கண்ணீர் பூவிற்குள்!
இன்று கண்ணீர் மாலையாகின்றது
நாளைய உதயம்..............

Monday 5 July 2010

கனவில் பிடித்த கைகள்....

ஏந்தியவன் எதுகை மோனைக்காய் 
ஏந்தியவளைக் கவிபாட 
இல்லா உலகத்தின் 
இல்லாப் பொய்யாய்
கற்பனையில் தோற்க்காப் பெண் 
கொண்டவன் கரங்களில் 
கவியானாள்!


காதலின் உயிர்த்துடிப்பால்
காலமெல்லாம் காதலாய்
வாழக் கை கோர்த்தவள்
காதலின் ஏதுகை மோனை போல்
உண்மை வாழ்வின்
கற்பனையில் தோற்றாள் 
காதல் பெண்!

சொன்னவன் வார்த்தைகள் 
அத்தனையும் நட்சத்திரமாய் மின்ன 
சுகமிழந்த வாழ்வு 
சுமையோடு கசக்க 
பொறுமையின் சகிப்பு 
பெண்மை என்று மாற 
நிலையான கனவில் 
நிலையற்ற ஆசைகள் 
வந்து வந்து போக 
பிள்ளையோடு கணவன்
புகழ் மாலை சூட 
இருபதும் அறுபதும் 
இல்லாது தொலைய 
இருந்தும் வாழும் கனவைக் 
கண்ணீரில் கரைத்து 
மறு ஜென்மத்துப் பாட்டியாய் 
வாழ்கிறாள் கற்பனைப் பெண்!