Thursday 25 December 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

உன்னை நினைக்கின்றேன்.........

இதழ் விரியும் பூக்களை
நான் பார்க்கும் பொழுதெல்லாம்
என் அன்பே!!   உன்னை தான்
நினைக்கின்றேன்

சங்கடத்தால்தந்தை தோல்
சாய்திடும் போதெல்லாம் ,என்
அன்பே சங்கடத்தோடு
உன்னையே நினைக்கின்றேன்

துன்பத்தால்  தாய் மடியில் சோயாய் முகம்
புதைத்திடும் போதெல்லாம்
என் அன்பே!!
என் வலிகள் போக்க உன்னைத்தான்
நினைக்கின்றேன்!!

குழந்தையின் தாலாட்டைக் கேட்டிடும்
 போதெல்லாம் என் அன்பே!
என்  தாயின் நெஞ்சாய்
உன்னைத்தான் நினைக்கிறேன்!

பசி மறந்து   உண்ணாது
இருந்த போதெல்லாம் என்
அன்பே!
விழிகள் தவிந்திடும் மணித்துளிகளில்
 உன்னைத்தான் நினைக்கின்றேன்
 என் அன்போ... சுற்றி நின்ற உறவின்
நடுவிலும்


உன்னை நினைத்து நினைத்து
நான் நொந்து சலித்து வெறுத்தாலும்
என் மனசின் உணர்வுகள் உன்னையே
நினைக்கின்றது அன்போ!!

பலகனாய் பிறந்திடு இறைவா....

பாவத்தின் உச்சியில் மனிதன்
நின்று கொண்டு
அணுகுண்டு கொண்டு
உயிரெடுத்து உயிரெடுத்து
மெல்ல மெல்ல அறில்லா
மிருகத்தை வெல்லுகின்றான்
உன்னை நேசித்துத் நேசித்து!

புனிம் சொல்லிப் போன இறைவனை
மாட்டுத் தொழுவம் தோறும்
ஆண்டுக்கு ஆண்டு
மீண்டும் மீண்டும் தேடுகின்றேன்
உண்மையாய் இந்த நாளில்.....

ஆட்டு மந்தை மேய்ந்தவனே
புதுச்சட்டை வேண்டாம்
ஆடம்பரம் வேண்டாம்
நீ பிறந்த ஓலைக் குடில் போதும்
நாம் நின்மதியாய் வாழ
மனித மந்தை அழிவதை நிறுந்திட
பாலகனாய் பிறந்திடு மீண்டும்

அழகிய பூமி தனைப் படைத்து
அதனை ஆள எம்மை படைத்த
இறைவா! இப்போதாவது எம்மால்
அழியும் பூமி தனைக் காத்திட!
யாரையும் படைக்காது  நீ
போனதால்
பாலகனாய் பிறந்திடு மீண்டும்

Thursday 11 December 2008

எழுந்திரு மாமா எழுந்திரு....

அதிகாலை வந்து போக
அந்தி சாயும் நேரம் வரை
அசையாத் தூக்கத்தில்
எப்போதும் வாழ்ந்திடும்
என் மாமாவே எழுந்திரு!

வட்டிக்கு வட்டி வேண்டி
காசுடன் காசு சேர்த்து
மற்றவர் கஸ்ரத்தில் வாழ்ந்திடும்
என் மாமாவே எழுந்திரு!

அடுத்தவர் வயிற்றில் அடித்து
உன் வயிற்றை வளர்ந்து
குட்டி யானை போல்
வீட்டை சுற்றிச் சுற்றி வந்து
என்னை அதிகாரம் பண்ணும்
என் மாமாவே எழுந்திரு!

கொட்டிக் கொட்டி காசை
ஊரில் கட்டிய வீட்டை
ஆமி அடித்து மண்ணாய் ஆக்க
கவலையின்றி சிரித்து
பெருமை பேசியது போதும்!
என் மாமாவே எழுந்திரு!

அடுத்தவர் வேர்வையில் வந்த
பணத்தை! பறிந்த பாவத்தால்
அழிந்து போனதை எண்ணி வாழ
எழுந்திரு என் மாமாவே எழுந்திரு

லட்சம் லட்சமாய் பாவத்தை நீ
சேர்க்க! கோவில் கோவிலாய்
அதை நான் போக்க வேண்டாத
கவலை வேண்டாத வாதம்!
வேண்டாமே என் மாமா எழுந்திரு
பவத்தை போக்கிட எழுந்திரு

Wednesday 10 December 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

கொட்டும் மழையின் நடுவோ
கூரையில்ல மனித வாழ்வு
கொடி மரங்களைப் போல்
நட்ட நடு வெளியில் நனைகின்றது!
இன்று மனிதவுரிமையால் !!!


குடிக்க தண்ணீர் வான் கொடுக்க
வயிற்று பசிக்கு வழியின்றி
சேற்றிலும் சகதியிலும்
சேர்ந்து துடிக்கின்றது ஓர் இனம்
இன்று மனிதவுரிமையால்

வார்தைகளை அடுக்கடுக்காய்
அள்ளி வீசினாலும்
அடிமை வாழ்வு தொடர
காத்திட யாருமின்றி வாடுது
ஓர் இனம் மண்ணில் இன்று
மனிதவுரிமையால்

ஆமி தேடிச் சுட்டது போக
கொட்டும் மழை அழித்தது போக
ஆற்று வெள்ளம் அள்ளியது போக
மேட்டு மண்ணில் தேடுது
ஒர் இனம் காச்சலோடு இன்று
மனிதவுரிமையால்


சொல்லிச்சொல்லி சொல்லும்களைக்க
சொல்ல வார்தையின்றி தமிழும் தவிக்க
சொல்லியும் கதைத்தும் கேட்டும்
நடக்க போவது எதுகுமின்றி!
ஓர் இனம் தவிந்து நிக்கின்றது!
இன்று மனிதவுரிமையால்......

கண்கள்

எதற்கும் அழதிடா
என் விழிகள் இன்று
அவனுக்காய் அழுதது!

ஏன் அழுகின்றாய்
என நான் கேட்க!
என் விழியே சொன்ன
பதில் கேட்டு! என் இதயமே
வலிக்கு தடா இன்று!

உன்னிடமிருந்து
அவனை ரசித்து மகிழ்ந்த
என்னை நீ மூடாது அவனை
ரசித்த  உன் தவிப்பை கண்டு தானே!
அவன் வரும் போதும்!
போகும் போதும்பேசும் போதும் !
நான் ரசித்தேன் அவனை

இன்று!
 உன்னால் அவனையின்றி
வேறு யாரையும் பார்க்கப் பிடிக்காது
தவிக்கின்றேன்!
அவனை மறக்க என்னால்
எப்படி முடியும் நீயே சொல்!

அதைவிட அவனை ரசித்த
என் விழிகளை குருடாக்கி விடு
உன்னை விட அவனை
காதலித்த நான் இருட்டுக்குள்
அவனை
பார்த பார்வையோடு
வாழ்கின்றேன்........

கறுப்புக் கனவுகள்

அடுத்தவர் வாழ்வு தனை
அடிக்கடி எட்டிப்பார்த்து
தன் வாழ்வை சுமையென
நினைக்கும் கட்டுக்கடாங்கா
மனசுகள் கட்டட்டு தவிக்க
விட்டுக் கொடுக்கா இதயங்கள்
மாற்றம் தேடுது இங்கே!!

தவருகளை சொல்லிச் சொல்லி
தவருகள் செய்து தவரும்
இதயங்கள் தவருகளை
நிலையென்று நினைந்து
தவறுது இங்கே!!

குற்றம் கண்டு குற்றம்சொல்லி
குற்றம் செய்து குற்றம் செய்து
சுகமாய் வாழ வெளியே
சுகந்திரம் தேடுது இங்கே!!

தனக்கான மாற்றத்தை
பிறரிடம் தேடி! அருகிருக்கும்
துன்பம் பெரிதென்று
தொலைதூரத்து துன்பத்தை
இன்பமாய் நினைத்து
தொலைகின்றது இதயங்கள் இங்கே

எங்கும் ஒரோ கனவு ஒரோ துன்பம்
ஒரோ வாழ்கையென
எப்போதோ புரியும் போது!
கரைகின்ற வாழ்வை
காப்பாற்ற முடியாமல்!!!
தொலைதூரத்து! கோடிக்
கோடி கனவுகளாய் போவார் அப்போது
!!

Sunday 7 December 2008

வற்றாத தேடல்

இதயம் காதலைத் தேடியதால்
காதல் உறவைத் தேட
உறவு வாழ்வைத் தேடியது

வாழ்வு மகிழ்ச்சித் தேடியதால்
மகிழ்ச்சி ஆடம்பரத்தை தேட
ஆடம்பரம் கடனை தேடியது

கடன் வட்டியத் தேடியதால்
வட்டி அவமானத்தை தேட
அவமானம் துன்பத்தை தேடியது

துன்பம் வெறுப்பைத் தேடியதால்
வெறுப்பு பிரிவைத் தேட
பிரிவு சோகம் தேடியது

சோகம் தனிமை தேடியதால்
தனிமை பாசம் தேட
பாசம் வயதைத் தேடி
யது

வயது நின்மதி தேடியதால்
நின்மதி முதுமை தேட
முதுமை இறைவனைத் தேடியது

Friday 5 December 2008

ஒர் துடிப்பின் சிரிப்பு

வானம் நிலவை
நிலையாக்க துடிக்க
சூரியன் வானத்தை
பொய்யாக்கி சிரித்தது!!

பகல் பூமியை
நிலையாக்க துடிக்க
இரவு பகலை
பொய்யாக்கி சிரித்தது!!

நந்தவனம் பூக்களை
நிலையாக்க துடிக்க
மழைச்சாரல் நந்தவனத்தை
பொய்யாக்கி சிரித்தது!!

பூ தேனை
நிலையாக்க துடிக்க
வண்டு பூவை
பொய்யாக்கி சிரித்தது!!

தென்றல் வாசத்தை
நிலையாக்க துடிக்க
மனிதன் தென்றலை
பொய்யாக்கி சிரித்தான்!!

நான் உன்னை
நிலையாக்க துடிக்க
மரணம் என்னை
பொய்யாக்கி சிரித்தது!!

மீண்டும் உன்னோடு
பொய்யாய் பொய் சிரிக்க
பூமியின் தொடராய் சிரிப்பும்
துடிப்பும் .................