Wednesday 26 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னேடு  விதைத்த 

உயிரில் விழுந்த துளியே

என்னேட மூச்சிக்குள்

எழுதபட்ட மரணம்

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தண்டிக்க தெரிந்தால்

மன்னிக்கவும் கற்றுக்கொள்

போட்ட விதைகள்

உயிர்கொண்ட வேரை 

பிடிங்கிய வலியை

கற்றுக்கொண்டு துடிக்கும்

இதயத்தின் வலியை விட

பெரிதல்ல  

உற்ற பந்தம்

உயிரேடு இருக்க  

மற்றதெரு பந்தம்

உன்னில் பெரிதற்ற  

உன்னால்உருவான 

வாழ்க்கை  பெரிதாகும்


குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னேடு பேசிய வார்த்தைகள்

மழையேடு பேசிய  மலரின்

தன்னம்பிக்கை பறித்துபோன

துளிகளின் மரணம்!!!


Tuesday 25 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓன்றாய் கூடி நன்றாய்

வாழ ஓன்றை கொண்டாடினால்

நாம் இறைவரைந்த மனிதன்!

ஓன்றையெடு நாலாய் உடைத்து

ஐந்தாய் நின்று  எதையும்

கொண்டாடமல் இருக்கும் நிமிடத்தை

கறுப்புத்துணியால்  கட்டி வைத்ததாய்

நினைத்தால் நாம்

மனிதன் வரைந்த இறைவன்!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 முதுமையின்  ஏக்கத்திற்குள்

சிறைபட்ட தேடலாய்

கைவிட்ட கரங்களின் தூரம்!

கண்தேடா பதையேர

 காத்திருப்பால்

ஏக்கம் கொண்ட இதயம்

காத்திடாமலே காதுகளேடே

விசாரிப்பு!

பூட்டபட்ட அறையைபோல்

தூரமான உறவுகள்

பணத்தேடு குதுகலம் !

தேவயின்றிய ஆடம்பர

தேவையால்

தேடிபேசும் சுகவிசாரிப்பு!

முன்னே பின்னே சித்திக்கா

முடிவெடுப்பால்

முதுமைக்கு  வயது போதாதே

போகின்றது தீயேடு!




குட்டிக்குட்டிச் சாரல்

 ஒய்விற்காய் ஏங்கும்

மனதினை அலைச்சியம்

செய்யும் போதே 

போராடும்வாழ்வு

ஓய்விற்காய் தூரமாய்

ஒடுகின்றது

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நாம் நமக்கான

 முடிவுகளை

தாமதமாக சிந்திப்பதால்

கற்றுக்கொள்ளும்

 வயதைத்தாண்டி

கற்றுக்கொடுக்கும் வயதில் 

நம் வாழ்வியலை சரிசெய்ய

முடிவை எடுக்கின்றோம்!!

இன்றைய வாழ்வியலில்

நாம் எடுக்கும் முடிவு

மற்றவரின் தவறான 

முன் உதாரணமாகின்றதால்

நம்மை மதிக்க நம்மிடம்

எந்த காரணமும் இல்லாமல்

போய்விடுகின்றது!!!

Sunday 23 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விடியலே  இல்லையென

இருளேடு கடந்தவை கற்று

தந்தையே  விதியென

கடந்திட்ட  உயிரில்!

ஒளியாய் தேயும் 

உணர்வில்  

புதைக்கபட்ட உடல்

சிதையும் காலம்

வரை 

மறாதே  தொடரும்

நியங்களின் வலிகளால்

நிழலுக்குள்  வரைந்த 

ஒவியமும்  அழுதிடும்

இவள் விதி  கண்டு!!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இன்மைகள் கொண்டே

நன்மைகளை சொல்லியே

போகும் பாதையேரம்

கனவுகளை போல்  சில

நிமிடங்கள் நம்மையேன் சந்தித்தே

கடக்கின்றது என தெரியமாலே

நின்று ரசிந்து தேடுவதே  நம்

வாழ்வின் புரியா கேள்விகள்

அந்த நிமிடம் வரமலே

இருந்திருக்க கூடாதாயென

பல நெடிகள் புலம்பினாலும்

தடுத்திட முடியா நியதியே வாழ்க்கை


Friday 21 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கிண்டலும் கேலியாய்

ஓரு கூட்டம்  

அறிவேயில்லையென

அறிவுகள் கூற 

ஓரு கூட்டம்

தவறுகளை தேடி 

திருத்தியே வாழவைக்க 

ஒரு கூட்டம்

இப்படி 

கூட்டமாய் சுற்றும்

கூட்டத்தில் ஓருவர்

நேய்யில் விழுந்தாலும்

துன்பத்தில்

விழுந்தாலும் காணவில்லை

ஓருத்தரையும் அன்பின் உருவத்தில்

உண்மையில் மற்றவர் வாழ்க்கை

இன்னெருவரின் பொழுதுபோக்கே


Wednesday 19 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 கொஞ்சநேரம்

தோல்சாய்ந்தே கவலை மறக்க

தோழன்  வந்தான் என்னோடு 

 விம்மலுக்குள் கரைந்தே

காணாமல்  போன காலத்தின்

 விக்கலைப்போல்!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 எழுந்தின் வடிவமாய் கவியின 

உண்ர்வாய் கற்பனையின்

உருவமாய்  என்னை கொடுத்த கனவில்

விழிகள் குருடானதால்

ஊமையானது மொழியில் காதல்


குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டுகொடுத்தவர் 

ஆர்பாட்டமின்றியே நகர்கின்றார்  

எடுத்துகொண்டவரே

ஆர்ப்பாட்டமாய்வாழ்கின்றார்

விட்டு கொடுத்தவருக்கு

மட்டுமே மனசின்  உணர்வு

புரிவதால்

 தன்னை விட்டுக்கொடுத்தே

தனியே  விட்டு 

வந்துவிடுகின்றார்

இதை புரிந்தவரே வாழ்வில்

மன்னிக்கவும் தெரிந்ததவர்


Tuesday 18 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 கனவுகள் அழகாய்

தோன்றிமறைகின்றது

கையில் கிடைக்காமலே

வாழ்க்கை தோல்வியேடு 

புன்னகைக்கின்றது

கனவை நேசித்தும் மறந்தும்

காலங்கள் ஒடி மறைகின்றது

கனவுகளாய்!!!

Monday 17 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என் மரணத்தின் பாதையேரம்

பல மரணத்தை கடக்கின்றேன்

எந்த மரணமும் மனிதனுக்கு

வலியை கொடும்பதாய் தெரியவில்லை

அன்று மரணத்தின் இழப்பிற்க்குள்

இருள் சுழ்ந்தது   இன்று

பணம் கொண்ட வெளிச்சங்கள்

பாதையை தெளிவாக்கியே போக

வலிகள  கூட ரணங்களாகதே

கடந்து போகின்றது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 சின்ன சின்ன விடையங்களில்

கூட குட்டிக்குட்டி சந்தோஷம்

இருப்பதை புரிந்த இதயமே

மகிழ்ச்சியாய் வாழ்கின்றது

Saturday 15 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

நம் வாழ்க்கை

இன்னெருவரிடமிருந்தே

நமக்கு யாசகமாக

கிடைத்தது என  எப்போது

நமக்கு புரிகின்றதோ!!!

அப்போதே  சஅந்த வாழ்க்கையில் 

தோற்றுவிடுகின்றேன்

எனக்கு தாணாமாக

கிடைப்பதே

பிடிப்பதில்லை  அதலால்

யாருடைய வாழ்க்கையையும்

யாசிக்கவில்லை 

நானே தனியாக  வாழ்வை

வாழத்தொடங்கினேன்

சிலநேரம்

வெறுப்பும் வரும் சிலநேரம்

கண்ணீரும் வரும் ஆனாலும் யாரும்

என்னால் அழுவதில்லை!!!

Friday 14 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டுக்கொடுத்ததன் வலி

விட்டுக்கொடுத்தவர்  மட்டுமே

உணரும் போது விட்டு பிரிந்தவர்

எப்படி பிரிவின் வலிகளை

உணர முடியும்  பிரித்தவர்

புரிவதில் பிரிவுமில்லை பிரிவுகள்

பேசிட காதலும் காத்திருப்பதில்லை

காத்திருந்தால்

தொலைபது காதலுமில்லை!!

Thursday 13 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சிதறியே வாழும் மனிதன்

ஓற்றைசொல்லால்   ஓற்றை

குடும்பத்தை ஓன்றாக்கி போனான்

குடும்பமாய்வாழும் மனிதன் 

தன்னை காணவில்லையென

ஒற்றை குடும்பத்தை கையில் வைத்தே

நித்தம் சண்டையிடுகின்றான்

இங்கே 

இறைவனையும் காணவுல்லை

இறைவண் படைத்த மனிதனையும்

காணவில்லை!!!மதம் மட்டும்

வாழ்கின்றது!!!!




Tuesday 11 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஆட்சியாளன்பேசும்மொழி

ஆட்ச்சிபுரியாயமல்  உயரும்மொழி

காலத்தின் மொழிகளேடு

காலத்தோடும்கவிதைமொழி

யுத்த்தில் காலத்தளமாடும்

உதிரத்தின் வீரமொழி

அழித்தாலும்அழிவின்றி 

வாழும்மொழி

வரலாறுகள் தேடிப்பேசும்

பண்பின்மொழி

வரலாற்றையே  தேற்கடித்த

வெற்றியாளன் மொழி

படித்திட படித்திட 

சுவை தரும் அன்பின்மொழி

பலமொழிகள்தேடிப்பேசும்

பழமைமொழி

திறமையாளனை படைத்தே

திறம்பட ஆண்டமொழி  

தேடியும் ஆடைத்திடா  

தேசமின்றி  தேசம் வாழும் 

 இனிய மொழி இருந்தும்

ஏனோ தனக்குள் தானே

சண்டையிட்டே தேற்குது வீனாய்!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 விழுந்தபோது உயர்ந்த 

கையின்  முன்னே 

வெட்டிக்கதை பேசிய

உருவங்கள் 

உடைத்தே  நெறுங்கிய

துகல்களில் 

கைவைத்தே எழுந்தவள்

இவள்!!!



Saturday 8 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தோல்விகளின் அச்சத்தில்

வீழ்ந்தே கிடப்பதே

சுகமென

கையில் எடுத்ததே 

தொலைத்தவர் 



காலத்தை  சிந்தித்தே கடந்தபோதே

நான் சந்ததித மனிதனில்  என்

இதயம் வெறுத்தவத்த மனிதனே

தன்னைமறக்க

கோப்பைக்குள் விழுந்தமனிதன்

கெட்டதை வெறுத்தே நல்லதை

சிந்தித்தால் கெட்டவள்

இருக்கும் நிமிடம் உண்மையற்றபோதும்

போதுமென்ற காலத்தேடு நான்

தேவையென ஏங்கும் மனிதனுக்கு

என்  மீதி காலம் சமர்ப்பணம்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 வாழ்க்கையெரு விற்பனை

பொருளானது.  கைக்குகை

மாறியேடத்துடிக்கின்றது!!

  நல்ல

விலையில் விழுந்துகிடக்கின்றது

சுகமாய் 

இருப்பதாய் நினைத்தது!!

நிரமில்லையென சரியும் போதே

அழுகின்றது!!!!

Monday 3 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தனித்தனி கூட்டிற்க்குள்

தனிதனியே அடைபட்ட

மிருகங்கள் ஓன்றாய்

ஓற்றை கூட்டிற்குள்  கட்டவிழ்த்தே

விட பட்டுகின்றது இங்கே!

அறிவேடு திறமையை அழித்தே

இழிவுபடுத்தும் உணர்வுகளை

தமக்குள் கொண்டு

தன்னை தானே

கட்டியாளத்தெரியாமலே

தன்னை காப்பத்திட போராடுது

சிறப்பாய்!!

உணர்வுக்கும் அறிவிற்கும் நடக்கும்

யுத்தமதிலே குணங்களே ஆயுதம்

பிழைகளும் சரிகளும்

மாறி மாறி காத்தாலும் இறுதியில்

தன்னை தனக்குள் அடைக்க முடிந்தவையே

காயபட்டாமல் வெற்றியடைகின்றது!!





விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அலையின்

சூராவளியேடு சுழண்டு

சுழட்டிய சுழலுக்குள்

சிக்கிடாமல்

சுழண்டாடியே

துடுப்பிட்டு  சுழண்டவள்

தன்னை வைத்தே

உயிரை மீட்டிட போராடியதன்

நம்பிக்கையே  வீரம்



பேசிப் புகழும் வீரத்தை

மறைக்குது

 பெண்மையின் அழகு அந்த

பெண்மைக்கு  கிடைத்த

சிறுமைகொள் 

பெருமையின் அழகு

ஊமைக்கு கிடைத்த மொழி

அந்த பெருமைகொள் 

அறிவை அழிக்க

 மறைக்கப்படுவதே பெண்மையின

  அழகின்  உண்மை !!!




குட்டிக்குட்டிச் சாரல்

 வாழும்போது இழந்தே 

இழந்த பின்னே உயிரேடு

போராடும் உணர்வு

தேடியழைவதே காதல்!!!

Sunday 2 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தெளிவில்லா மனதையே

குழப்பிட முடியும்  தெளிவான

மனதை

குழப்பிட பலர் தோன்றியே

தேற்றே போக உறுதியான மனதின்

தெளிவே காரணம்!!!

 நாம்செய்வது 

நமக்கு புரிந்தாலே போதும்!!

குழப்பிட நினைப்பவரை நாம்

குழப்பியே கடந்தே போக!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 பயமற்று

குழதை தாய்மடியில்

சுகமாய்  உறங்குவது போல்

உன் மடியில் குழந்தை போல்

நான் உறங்க

நீயே ஏதோ வளர்த்தவளிடம்

கூறுவதை போல்  புலம்பிகொள்கிறாய்

நானே உன்னை

வேற்றுமொழியாளன்

என்னிடம் ஏதோ கூறிசொல்வதைபோல்

அர்த்தங்கள் புரியமலே.

உறங்கி விடுகின்றேன் !!!

இன்னும் குழந்தையாய் நானும்

வேற்றுமொழியாளனாய் நீயும்

ஒன்றை இசையின் தாலாட்டாய்

தொடர்கின்றது  உறக்கம்!!!!


Saturday 1 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நம்மை நம்பியே 

 நம்  உறவுகள 

நம் ஆசைகளை 

தாண்டிய நம்மை

நாம் வாழும் காலம் நம்மோடு 

கட்டிபோடும்  பலவிதமாய்

உறவேடு!!

ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்

அதிகம்  தான் நம்மோடு

அதையும் தாண்டிய தியகமே

நம் வாழ்க்கை !!

 இன்றைய  நாளை

ஆசைகளையே நம்பியே 

அறுத்தெறிந்தேயேடுது

உறவை!

அன்றைய தேடலில்  

கண்டுகொண்ட நம்மை

இன்றைய நாளை தொலைத்ததோ

பிரிவாகின்றது மதிப்பற்றே 

தந்தை தாய் கூட 

தூரமாய் போனதே  நியமென்ற

ஆசையின் மேகத்தால்

பயமற்ற மனிதன் வரமாய் 

இருந்தும்

தவறு அஞ்சா மனிதன்  

தலைநிமிர்கின்றான்

உயர்வாய்!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 என் பாதையை நான்

தெரிவு செய்தே. நடக்கவில்லை

என் பாதையின் தடைக்கல்லாய்

மாறியவர்களே என் பாதையின்

தொடக்கமானார்கள்

எனக்கான  எந்த இலட்சியமும்

என்னில்  நங்கூரமாய்  கிடக்கவில்லை

இருக்கும் நிமிடத்தை  எனக்கான

நிமிடமாய் மாற்றியே  வாழ்க்கை

அழகாய் நகர்ந்தது  இங்கே

எதிரியும் தண்பரும் 

ஒன்றாய் என்னேடே  எப்போதும்

நடந்தார்கள்  இருந்தும்

யாருடனும் ஒட்டி வெட்டி

புதிய பாதை  தேடவில்லை!!!






குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை சிறையெடுத்த

வலிகள் மட்டுமே. 

அழுதுகொண்டே  ஏதோ

ஓரு நம்பிக்கையில் என்னேடு

தொடர்கின்றது எதோ ஓரு

நம்பிகையேடு !!

குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைத்த இடத்தை விட்டு

தொலைதூரம் கடந்த பின்னர் தான் 

தொலைவான இடத்தின்

வெற்றிடம்   தெரிவிக்கின்றது

இடத்தின் நியத்தை!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 நேசத்தால் பூத்த 

நேசத்தின் வாழ்க்கை  

காதலின் வண்ணத்தில் 

அழகை ரசிக்கின்றது  

சின்ன சின்ன

விடையத்தையும்   அழகாய்