Showing posts with label சிந்தும்நீரால் சிதறும் சாரல்.......... Show all posts
Showing posts with label சிந்தும்நீரால் சிதறும் சாரல்.......... Show all posts

Friday, 24 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

நம் சிந்தனை தடமாறி
மூன்றேபொம்மைகளாய்


நல்லதை மட்டும்
 கேட்கா பேசா பார்க்கா  
பொம்மைபோல்
தீயவைகளின் தீயில் 
குளிர்காய்கின்றோம்!!!

Wednesday, 27 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

நல்லவை தேடி தீயவை
வருகின்றதே தன்னால்
பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன ...
என்னாலும் பொன்னாலாகாதேயென
இன்னால் போகுதே வீணாய்



Sunday, 19 May 2019

சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........,

அத்தையவள் பெற்றெடுத்த முத்தாராம்
தன்னம் தனியே  வந்தது அயல்நாடு
பொத்திகாத்திட்ட  பொக்கிசம்
ஆயிரம் ஆசைகளை சுமந்து வாழ்ந்தான்
Bildergebnis für கல்லறை ரோஜாதனியே!!படித்தான் வாழ்கையும்

தோன்றது இன்று தெரியாமல் போனது
எமக்கும்!சிறந்தன் மென்மையானவன்
தனக்குள் தானே சிறைப்பட்டு
போராடிய  வாழ்கை தூரமும்   துயரமாய்
 நின்றது இப்போ
அத்தனையும் தாங்கி காத்து உன்னதாமாகவே
வளர்த்திட்ட அத்தையும் தவிக்கின்றாள்
இழந்தமகனை எண்ணி விதியதன் முன்னே
அந்தனை உயிரும் பொம்மையே!!!

Tuesday, 9 April 2019

சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........

இதயத்தில் முற்கள் தைக்க
Bildergebnis für மரணம் மனதில் வலிகள் கூட உன்னைத்தேடுது
கண்கள் நீ இல்லையென்ற பின்பும்

இருந்த போது வெறுத்த இதயம்
இறந்த பின்பு ஏன்தேடுது உன்னை

முட்டாள்!! என்னை நானே திட்டிக்கொண்டேன்
இருந்தும் அழுகின்றது இதயம் 

உயிரைக்கொடுத்து எதை வென்று சென்றாயடா
இந்த மண்ணில் நீ 
இருந்த போதுவெறுத்து இல்லையென்றதும் அழும்
எம் பொய்யையா !!
Bildergebnis für மரணம்கண்கள் !மூட உன் உருவம்
கேலியாய் புன்னகை சிந்திபோகுது தனியே

என்ன நினைத்து சென்றாயே 
எம்மை வெறுத்து சென்றாய் என நினைத்தே அழுகின்றது
விழி கள் !!!
நீண்ட  தூரப்பயணம்
கற்று தருகிறது மரணம் மன்னித்திட முடியா முடிவு 
மரணத்தால் கிடைக்கும் தண்டனை
நேசிப்பவரை தண்டிக்து உயிர்!!!
நேசத்தை மறந்து  பேசு அறிவு!!!

Thursday, 7 February 2019

சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........,

உயிரின் ஆர்ப்பாட்டம்

சத்தமின்றி போனது!
 உறவின் கண்கள் 
உயிரை தேடுது
எங்கும் !
வலிகள் மெல்ல வரிசைப்படுத்தி
வஞ்சனை செய்யுது 
உணர்வை!
தலை சாய்தத தணையனை
குடிக்குது கண்ணீரை 
சுகமாய்!!
விலைகள் கொடுத்து வாங்கிய 
பொருட்கள் மதியற்று
 கிடக்கிறதெங்கும்!!
விலையே இல்லாத உடல் 
 கட்டியழுதிட முடியாமல்  
பார்வைக்காய் காத்திருக்கு!!
நெடிகளோடு நெடிகள் சேர்ந்து
நினைவுகளை கொன்று தின்றது
மெல்ல!!
 நியங்கள் தொலைந்து நிழலாய்  
போனது நியம !
இதயம் பேசிட துடிக்க  
அறிவு எழுந்து
 உணர்வை தடுத்து 
அடுத்ததை 
சிந்திக்க தொடங்குது 
மனம் மெல்ல!!!!

Friday, 28 December 2018

சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........,

ஒடின ஒழிந்தன மறைந்தன
தேடின வாடின நினைவில் உறைந்தன
தோல்வி 
மகிழ்ந்தன இயம்பின செதுக்கின
 விரும்பின விடியலைத் தேடின
 நிழலாய் நின்றது
 இருள்
Bildergebnis für காதல்
வியம்பின வியந்தன வீழ்ந்திட
எழுந்தன அழிந்திட பின்னால்
நடந்தன முன்னே நடந்திட
முடியாதது  தேய்ந்தது
வாழ்கை
கரைந்தன காய்ந்தன காயத்தை
கரைந்திட கறைகளை அடைந்தன
துடித்தன  அழுதன மறைந்து
உயிர்!!!!


Wednesday, 18 July 2007

மூன்றாம் ஆண்டு நினைவு [19-07-2007]



மூன்றாம் ஆண்டு நினைவு - கவிதைகளால் ஒரு அஞ்சலி
மூன்றாம் ஆண்டு நினைவில் என்ன செய்வது என்று புரியாமல் கவிதைகளால் அஞ்சலி செய்கிறார்கள் இவர்கள்...

யார் இவர்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வியை விடுங்கள்... ஏதோ ஒரு வகையில் இந்தக் குட்டிப் பெண்ணின் நினைவை இதயங்களில் ஏந்தியவர்கள் இவர்கள்...

என் மடியில்
பூத்திட்ட சின்ன
மலர் இவள்
என்னைத் தாயாக்கி
எனக்குத் தாயாகி
தன் சுவாசத்தை
எனக்காய் தந்து
இன்று என்
சுவாசத்தில் கலந்திட்டவள்
மீண்டும் பூவானாள்
இங்கே என்றும்
என்னோடு வாழும்
அவள் வாசம்
இந்த
கவிதைப் பூக்களில்
வாழ்வதால் என்
ஆத்மா சமர்ப்பணமானது
இங்கே...!






------கவி ரூபன் -----------------

சின்னப் பெண்ணே
நீ மறைந்து
மூன்றாண்டாம்
உன் நினைவு
மட்டும் எப்படி இன்னும்
எல்லோர் மனதிலும்
முரண்டு பிடித்து
முக்காலி போட்டு
உட்கார்ந்து இருக்கின்றது?
பக்கத்தில் இருந்து
பார்த்துப்
பழகியறியாதவன்
நான்...
இருந்தும் செவிவழி கேட்டு
நிழற்படத்தில் பார்த்துத்
தெரிந்த எனக்குள்ளும்
எப்படி நீ விஷ்வரூபமானாய்?
வாழ்க்கை
விசித்திரம் தான்
வந்து போகும்
உறவுகளும் அப்படியே...
யாரோ
கிழித்த கோட்டில்
நீயும் நானும்
எப்படிச் சொந்தங்களானோம்?
சாவு அருமையான
விஷயம்!
இறப்பது தெரிந்தும்
'நிரந்தர இருப்பு'
அனுமதி பெற்றது போல
செய்யும் செயல்களில்
தான் எத்தனை
முரண்பாடு?
குட்டிப் பெண்ணே
நினைவுச் செதில்கள்
குற்றி
கண்கள் குளமாகின்றது
உண்மை தான்
ஆனாலும்
வெறும் வார்த்தை
ஜாலங்களில்
பாசாங்கு செய்யப்
பிடிக்கவில்லை
மறுபிறவி
உண்டெனின்,
எனக்கு மகளாய்
வந்து பிறவேன்
மகிழ்ந்து விளையாடலாம்!
எவ்வளவு அழகாய்
முடிச்சுக்கள்
விழுகின்றது...
வாழ்க்கை அழகு தான்
அவரவர் புரிதல் படி!
பெண்ணே
நினைவுக் கவிதை
என்று நினைத்து தான்
தொடங்கினேன்
ஆனால்
வாழ்க்கையின்
வடிவான பக்கங்களைப்
புரட்டத் தொடங்கிவிட்டேன்
உதிருகின்ற
பூக்களைப் பார்த்து
அழுவதைவிட்டு
மலருகின்ற பூக்களைப் பார்த்து
மகிழ்வதே
உன் நினைவு
எனக்குச் சொல்லும்
பாடம்!
உன் நினைவை
ஏந்திக் கொண்டு
வாழ்வென்னும் பெருங்கடலில்
நீந்தப் போகின்றேன்
ஒரு சமயம்
இருவரும் சந்திக்கலாம்!

[http://kaviyarankam.blogspot.com/2007/07/blog-post.html]

-------சுபா (சித்தி) ----

பூவொன்று
உதிர்ந்ததென்று
தாயின்று அழுகையிலே
விழிநீர் துடைப்பதா
விம்மல் அடக்குவதா
அல்லல் துடைக்கும்
கையொன்று எப்போதும்
ஆறுதலாய் பற்றுமென்று
தோளினைப் பற்றுவதா?
எதுவும் தோன்றாமல்
மனசுக்குள் மானசீகமாய்
மங்களங்கள் தோன்றட்டும்
என்று
மகேசனை வேண்டுவதா?
நீ
சிரிக்கும் போது
சிரிக்கவும்
அழும்போது
விழிநீர் துடைக்கவும்
நல்ல உள்ளங்கள்
சுற்றி இருக்க
சோகமென்ன என்றுரைப்பது
தானே சரி?!

----அம்மம்மா அப்பப்பா.......

எங்கள் முதல் முத்து
நீயம்மா எங்கள்
முதல் சொத்தும்
நீயம்மா காலங்கள்
கடந்தும் மறந்திடா
உறவும் நீயம்மா
உன் அன்னையின்
ஆராக் காயமும்
நீதான்னம்மா

........சித்தப்பா சித்தி....
உனக்காய் தேடித்
தேடித் நான்
அனுப்பிய அத்தனை
வாழ்ந்துக்களும்
உன் அன்னையிடம்
ஆனால் நீயோ.....
இறைவனிடம்
..............மாமா........
வெண்பனியில்
உன்னை நனைத்து
நான் ரசிக்க
என்னோடு சண்டை
போட்டவளோ....
இப்போது பனிகாலத்து
நினைவு நீயம்மா
...........மாமா சித்தி.....
உன்னை பார்கவில்லை
அதனால் நாங்கள்
உன்னை மறக்காது
தவிக்கும் அன்னைக்காய்
அழுகின்றோம்
..................நட்பு ..உறவுகள்..
சின்ன வயதிலே
பாசத்தின் ஆழம்
சொன்னவள் நீ
அழகின் ரசனை
சொன்னவள் நீ
குறும்பால் கவர்ந்தவள் நீ
அந்ததனையும் நினைவாய்
இருக்க நீமட்டும்
நிழலாய் ஏன்
மறைந்தாய்
............................

கீர்த்தன அர்ச்சணா....

உன் நினைவுகளை
நாங்களும் மறக்காது
எங்கள் இதயபூர்வமான
கண்ணீர் அஞ்சலியை
மீண்டும் மீண்டும்
செய்கின்றோம்....