Thursday 30 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்தனையே கையெப்பமிட்டேன்
எமனின் பாசகயிரை பற்றிக்கொள்ள
அந்தனையும் பலனற்று போனது!!
அவனுக்கு கூட என்னை பிடிக்காமல்
போனதால்!!

Thursday 23 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மங்களம் கரைந்து
கூரைப்படெரிந்து  பலகாலம்
ஆனதையா!
பாவையிவள் வாழ்வில்!!
வாழ்த்தியோர் மறந்து
வாழ்த்தும் தொலைத்து பலகாலமானதையா
பாவையிவள் வாழ்வில்!
மழைவெள்ள மலராய்
திசையற்ற பாதையில்
 பதறியவரும் பதறிதாம்கொண்டவரும்
மறந்த காலம் காத்திராது கரைந்தே போனதையா
பாவையில் வாழ்வில்!!

Thursday 16 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

சொந்தம் என்றவன்
தெருவில் நிறுத்தி சென்றான்!!
பந்தம்கொள்ள வந்தவன்
பகையை பரிசளித்தான்!!
நட்பபையெழுதியவன்
நடுத்தெருவில் தொலைத்து சென்றான்!!
உரிமையென்றவன் உண்மை
விற்றுவிட்டான்!!இருப்பதுவும்
மறப்பதுவும் மரணதின் பொருளானது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிர்த் துடிப்பால்
துளிர்த்திட்ட ஓர் ஆசை
அரும்பிட முதல்
பட்டிட்டது காயத்தின்
அனுபமாய்!!!
பெண்ணாபாவத்தின்
கூலியை
இறைவன் எழுதினான்
ஆணின் அனுபத்தண்டனையாய்!!

Wednesday 15 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

முதுமை தொடும் வரை
வாழ்வின் சுமைகள் வலியற்ற
வழியாகின்றது!
தனிமை சுடும்வரை
முதுமை நிழல் தூக்கம்
கொள்கின்றது!
வறுமை ஆள்கின்றபோதே
 முதுமைவருந்தியழுகின்றது
காப்பவர்தேடி!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஊமையான உணர்விற்கு
ஒர்மொழியினை தேடுபவனே
அழித்திட்ட கனவிற்கு
அகராதிப் பொருள்ளானவனே
உடைந்த இயதிற்கு ஓர்
பொய்யான துடிப்பைத்
தந்தனவனே
உச்சி முதல் பாதவரை
உள்ளேவலியறியா  பொய்யில்
உண்மை காண்பவனே
இறுதியஞ்சலியையாவது
உண்மையாய்  செய்வாயா?

Thursday 9 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

குறைந்த என்மனதில்
நிறைந்த மாமான்
குறையாழகினை நிறைவாய்
தந்தான் என் நெற்றிக்கு !!

Friday 3 April 2015

கல்லைிலான ஓவியம்.....

சுமையற்ற ஓர் நாளை எனக்காய்
படைத்திடுவாயா சுமையானவனே!
கருணையற்ற வலிகளை
ஓர்நாளேனும் சுமைந்திடுவாயா
சுமையானவனே!!
இறந்திட முடியா இறக்கத்தை
இறங்கி எனக்காய் அனுப்பிடுவாயா
சுமையானவனே!
மண்ணில் உதிர்திட்ட மலருக்காய்
உன் கருணைபாதமடியருள்வாயா
சுமையானவனே !
ஓய்வற்ற ஏழைக்கு ஓர் நாள்
ஓய்வாய் மரணத்தை பரிசாக்குவாயா
சுமையானவனே !
இல்லையென்ற வாழ்விற்கு ஓர்
இறுதியாசையாய் இதையேனும் காணிக்கையாகிடு
என் சுமையானவனே!!

Wednesday 1 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

அறிவுடையோர் சபையில்
கல்லாப்பொருள் நானேயானேன்
பெருமைகொள் சபையில்
கலங்கடிக்கபட்டேன்
போற்றுவோர் அவையில்
பேதையும் நானேயானேன்
வாழ்வோர் மண்ணில் வாழவழியற்ற
வாழ்வும் நானேயானேன்
ஒரு நாளை படைத்தவர்
முன் முட்டாளாய்
ஒவ்வொரு நாளும் நானேயானேன்!!