Tuesday 28 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நினைவாய் சில சந்தோஷம்

கவியேடு பிறந்ததால் கவியான

உன்னேடு  பலகாலம்  

உறவாக வாழவே தந்தான்

இறைவன் எனக்கே எனக்கு!!

தம்பியாய் நண்பனாய்

என்னை புரிந்திட்ட ஒரு 

அழகான இதயமும் நீயானாய்

என்றும் எனக்கு!

நிண்ட சுமை நீளும் தனிமை

என்னடா வாழ்க்கையென 

சி்ந்தித்த பொழுது 

உன்னேடு

சிலதினம்  சிந்திய மழைமேக

நாட்களைப்போல் மீண்டும்

அழகான தருனமாய் பூத்தது எனக்குள்

எதை எதையே

பேசிடும் நம் உரையாடல்

தேனீர்கோப்பையும் புன்னகைக்க 

மீண்டும் உயிர்கொடுத்தாய்

என்னக்கு !

உன்னைபோல் ஒரு

உறவு கூடவே இருந்தால் என்றுமே

மனசிற்க்கு தோல்வியில்லை

புரிந்ததாய் சொல்லும் சொல்லுக்கு

அர்த்தங்கள் என்றும் எனக்கு நீயே

உன்னை தந்து என்னை புன்னகைக்க

வைத்த விதி

என் வாழ்வில்  எழுதிய  ஓற்றை

நன்மைய  இதுவே!!!

Friday 24 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அன்பின் கைகளின் 

வட்டதிற்க்கைள் கொஞ்சும் கிளி

ஆகாய மேகத்தை கயிராக்கி

வானவில் வளைவில் 

ஊஞ்சல் கட்டி அச்சமின்றி

ஆடினாள் கொஞ்சம் கூட பயமற்று

தென்றல் கவியில் 

கண்கள் நனைய

கொஞ்சம் பார்த்தே 

வெண்ணிலா தேய

கொஞ்சம் கொஞ்சமாய. 

கொஞ்சுமொழி

கோவையிதழ் சுவையானது 

இவள் கொஞ்சிபேசுபோது

இவள் கற்பனை தோட்டமெங்கும்

எட்டி நின்ற எட்ட பார்த்த 

விழிகள்  ஏங்க 

இவள் கற்தரையின் கற்பனை 

கனவுக்குள் கைகள் தந்த 

நம்பிக்கையில் பூவாய் மலர்ந்தாள்

அச்சச்சோ!!யார் கண்பட்டதே

அச்சமில்ல கிளி ஊமையாக 

மிஞ்சமிதி  தெரியா அறியா கதை 

கற்பனையில் முடிந்திட 

நம்பிக்கையிழந்த கிளியே 

கூண்டுக்கிளியானது!!!

 



குட்டிக்குட்டிச் சாரல்

 அங்கிகாரம் இல்லாமலே பல

திறமைகள் அழிக்கபடுகின்றது

இங்கே! அறிமுகமே  அறிவினை

தேற்கடிப்பதால் 

கொஞ்சம் பணம் இல்லா திறமை 

கொஞ்சகூட மதிக்கபடுவதீல்லை 

உன்னை யாரென

அடையாளம் காட்ட 

பணத்தை தேடு 

இல்லை பணக்காரனின் முகவரியை தேடு

பின் திறமையை விற்பனை செய்

என்கின்றது உலகம்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 யாருமில்லில்லையென்னும் 

தருனத்தில் போராடி 

ஜெயிக்கும் போது 

கிடைக்கும் நம்பிக்கை

யாராலும் கொடுத்திட 

முடியா தைரியம்!!

அதுவே!!

சில சமயம்

 மற்றவர் கண்களுக்கு

திமிராய் தெரிகின்றது!!

Wednesday 22 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

  ஓற்றை மனிதனுக்கு ஒற்றைமனிதன்

கொடுக்கும் அன்பில்

கட்டிய தாலிக்கு கட்டுப்பட்டவர்

கொடுப்பது காதல்

கட்டிபோடும் காதலுக்குள் 

கைகள் கட்டுபட்டு பூத்தால்

கொடுப்பது நம்பிக்கை 

இழுத்து சொல்லும் இருண்ட

காலத்தில் கூட  இரூந்தே

மீண்டும் இழுது வந்தே

மாறிடாதே வாழ்ந்திட செய்யும்

உறுதியே  காதல்  வாழ்க்கை!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 உயிரிழையேடு உணர்விழை

பிணைப்பிற்க்குள் ஒருவாகின்ற

பந்தமே  உறவு அன்பின்

கட்டுப்பாட்டிற்க்குள்

பண்பாடு கோர்த்தே 

கட்டியாளும் பக்குவமே

இல்லம்

சிறந்த  சிந்தனையறிவுடைய

அன்பின் ஆளுமையாளனாய்

இருப்பவளே  தன்னை உயர்ந்தி

மற்றவரையும் உயர்த்தியே வாழ்ந்து

காட்டுபவான்

சிறந்த இல்லத்தின் 

அழகு!சிறந்த சிந்தனையின் அழகு


Saturday 18 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நான் மூடி வைத்த

புத்தகத்திற்க்குள் எந்த

மயிலிறகையும் வைத்து 

காத்திருக்கவில்லை  !!!

என் கனவிற்க்குள் எந்த

உணர்வையும்  பூட்டி வைத்து

காத்திருக்கவில்லை !!!

என் கற்பனைகள் வரையபட்டால்

அங்கே சிலையாய்  நான்

நிற்பதுமில்லை!!!!

என்னுடன் நடக்க இதுவரை யாரும்

கால்களாய் மாறி  என்னேட

நம்பிக்கையாய்  தடந்ததுமில்லை!!!

என் தூரத்தின்  விடுதலைக்கு

மரணத்தின் முடிவை மட்டுமே

இறைவள் மகிழ்ச்சியின் 

தொடக்கமென்றான்!!!

காத்திருக்கின்றேன் பூக்களை மட்டுமே

சொந்தமாய் வைத்துக்கொண்டு

இறுதியில் எனக்காய் எடுத்துசொன்றிட…,


Friday 17 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 எப்பவும் நாம் மற்றவர்

வாழ்வில் தூரத்து வானவில்லாய்

தோன்றிடுவதால்  கண்கள் கானும்

சாட்சியே கதையாகின்றது!!!

எப்பவும் அருகே  சென்று பாருங்கள்

உங்கள் கற்பனை கூட பொய்யாகலாம்


குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு முறை நம்பிக்கை

பொய்யானால் மீட்டெடுப்பது

கடிணம்  அப்படியே மீட்டெடுத்தால்

அதுவே சிறந்த வாழ்க்கை!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நீண்ட தனிமை 

மீண்டிடா வாழ்க்கை

நம்பிக்கையை இழக்க 

செய்யும் வாழ்க்கை சாரல்

முன்னே பின்னே யார் சென்றாலும்

நம்பிடா மனம்! எழுப்பிய முள்வேலி

தன்னையே குத்தினாலும்

தரையேடே உறங்கினாலும் 

நம்பிடாமலே நடக்கும்

சொல்லோடு கற்பனை தீர்ந்து விடும்

வாழ்வேடு வலிகள் தொடரும்

இதனாலே  பாதைகள்

தடுமாறும் படைத்தவன்

மீதே கோவம் வரும்  இருந்தும்

ந்திமேல் விழுந்த இலைபோல்

கிடக்கும் மனசு  !!!



Thursday 16 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 உலகமே  அச்சப்பட வைத்தே

உச்சம் தொட்ட தமிழ் 

இன்று !

 அஞ்சி  ஓடியே வாழ்வதாய்

அரசியல் கதிரையின் ஒற்றைகால்

பேசு  மற்றக்கால்  நின்றாடிட!

 மூன்று கால்  நிலைத்திட

நாலாவது காதல் ஆடும் ஆட்டமே

இங்கே! அரசியல் 

வார்த்தைகளில் வித்தைகார்களே

சிறந்த ஆளுமைக்கார்களாய்

மக்கள் தீர்ப்பு!!


குட்டிக்குட்டிச் சாரல்

 நினைவேடு நிழலெழுதிய

நியம்  கற்பனையானதில்

உயிருக்குல்  ஒரு வலி முகமின்றி

அழுகின்றது !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................


 உன்னை புரிந்தும் புரியாமலும்

ஓரு பாதை 

உன்னை அறிந்தும் அறியாமலும்

ஒரு பயணம்

உன்னை தேடியும் தேடாமலும்

ஒரு வாழ்க்கை !    இருந்தும்

யாரே வட்டத்திற்க்குள்

இட்டு  ஒடச்சொன்னதைப்போல்

திரும்பும் திசையெங்கும் நீயாகின்றாய்

பூட்டிய கதவினை திறக்கவில்லை

அணைந்த தீபத்தை ஏற்றவில்லை

இருந்தும்  என்  இருளுக்குள்  

ஓரு நிலவாக என்னேடு

நீயே நிழலாய் உணர்கின்றேன்!!!

எப்பவும் போல் புரியாக்குழந்தையாய்

அறியா நீயாய் தனியாய  நானாய்

தொடர்பிற்கு அப்பாலே  தோடர்கின்றது

வாழ்க்கை!!!!


Wednesday 15 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 பெண்ணின் தன்நம்பிக்கையே

ஆண்மை வெறுக்கின்றது

 தன்னை  சார்த்தே 

வாழவேண்டும் என்பதால்

தன் தவறை  சிந்திக்காமலே

பெண்மையை  குற்றவாளியாக்கின்றது

பெண்மை  !!

 அடைக்கபட்ட கூண்டே

பெண்மை சிந்திக்கா 

சாவியானதால்!

பெண்மைக்கு இன்னும்  பெண்மையை 

 நேசிக்க தெரியவில்லை  

இழந்தவள் பலர் முன் 

பரிதாவ  கண்ணீராய்

மட்டும் பார்க்கும்  பெண்மைக்கு  

புரிவதில்லை !

வலிகளை  சுமக்கும்  பெண்மைக்கு 

தானே காப்புயென்பதை

புரிந்தாலே போதும்

ஆண்மையின் தாய்மை

மரணிக்காமல் வாழும்!!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 வறுமையும் தனிமையும்

கற்றுதரும் வாழ்க்கையில்

வெற்றிகள் இருப்பதில்லை

வெற்றிபெற்றால் தனிமையே

கிடையாது!! பெய்யான

நம்பிக்கைகளை விட

  வெற்றிபெற்றிடா வாழ்க்கை 

ஓன்றும்  கோவலம் இல்லை!!!


Tuesday 14 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 மரணிக்கும் வரை 

மரணிக்காமல் கூடவே

கூடியே நடந்தால் கூட்டி

சொல்லும் உணர்வு காதல்

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 என் கனவுகளில் கைதொட்டு

என் சகற்பனையின் 

வடிவத்தில் பூத்த பூ. 

அவள்

என் ஆசைகளின்  

கற்பனையை தோற்கடித்த 

கவிதையவள் 

என் கைபட்டுக்கருகிபோன 

மலர் வாசம் செய்யும்

கல்லறை  அவள் 

நான்

பேசும் மொழியின்

காதல் மொழியவள்



என் 

தனிமைக்குள்

வாழும் துணையவள்

என்

மௌனத்தை உடைக்கும்  

இசையின் வடிவம் 

அவள்

என் துயரங்களில் 

கண்ணீர் துடைக்கும் 

கைக்குட்டையவள்

என் 

உயிரின் சுவாசத்தை

சுவாசிக்கும்  மூச்சின் 

கருணையும்  அவள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 என் எழுகோல் சிந்திய 

மைத்துளியில்  ஓர்

மயில் தோகை விரிக்கின்றது

கார்மேகத் துறலில் நனைய!!

குட்டிக்குட்டிச் சாரல்

 அதிகாலை தேனீர்ச்சுவையேடு

தேடல்  சுவை தரும்

கவிதைச்சுவையின்

தமிழ்சுவையே  காதல் !!!


Saturday 11 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அர்ச்சனைத்தட்டுக்குள்

அவள் மங்களத்தை  ஏந்தி

கோயில் சென்றால்  அமங்களமாய்

அர்ச்சகர் அர்ச்சனை  செய்தபின் 

சுமங்கலியாய் வாழ

வாழ்த்தி குங்கும்ம் பூகொடுத்தார்

கையில் 

 கையில் வந்த மங்களத்தின்

வார்த்தை கேட்டு 

இறைவனேடு புன்னகைத்தாள்

யாரும் அறிந்தாடா கண்ணீர்த்துளியை

மறைத்தபடி  இதை 

பார்த்த அர்ச்சகர்  

ஆச்சரியத்தேடு அவளை பார்க்க 

அதனை இறைவன் சன்நியிலே

வைத்து விட்டு  திரும்பி நடந்தாள்

எப்பவும் போல் இயல்பாய்

கொடுத்தவர் புரிந்தது போல்

இக்காலத்தில்  இதையெல்லாம்

நினைத்து நடக்காதே  

உனக்கு பிடித்தால்

வைத்துகொள் என்றார்

 அவரையும் பார்த்து புன்னகைத்திட்டு

என் உணர்வுகள் இழந்ததை

 பொய்யாக  வைத்தே 

நடித்திட முடியாமலேயே

உண்மையாய்  

இறைவன் தந்தை ஏற்றேன்

என்றால் 

எனக்கான வாழ்வில்

 பெய்யான முகங்களில் 

உண்மையான என்னை

தேடிவாழ்க்கின்றேன்

 என்று சொல்லிபடி

புன்னகையேடு  இன்னும்

மாற்றம் உடலில் தான் மனித

மனதிற்குள் இல்லையென

 எண்ணியபடி  நடந்நாள் !!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 காலங்கள் உருண்டேடின

போராட்டங்களில் நினைவுகள்

மறைந்தேடின

இளமை விலகியேடிட

முதுமை தவழ ஒய்வுகாய் சும்மாய்

இருந்த  பெரிசுக்கு முதியேர்

இல்லம் சென்றதால் தனிமை

சிறைக்குள் வந்தது 

ஓரு காதல்!!

அன்று தொலைத்த மங்கையவள்

இன்று முதியோர்  இல்லம் 

வந்து சோர எட்டி நின்ற நினைவேடு

எட்ட நின்று பார்த்த பெருசுக்கு

கிட்டவந்தது  ஒரு காதல்

 காதலாய் கனிந்த நிமிடமாய்

பயணித்த காலம் பூக்கின்றது 

மின்னியல் வழியேரம் பார்வைகள் 

பட்டாடுவதைப்போல் !!!

தேடியே ஓடித்துடிக்கின்றநு

ஓரு ஏக்கம்  

தளர்ந்த நாடிக்குள்ளும்

சும்மா இருப்பாதல்  வந்ததே

இல்லை நம்பியர் தந்த 

தனிமை கொண்டதால் வந்ததே

மங்கையவள் கண்டதால் வந்ததே

அறியாமல் தவிக்கின்றது பெரிசு

காதலால்!!

சொல்லியழைத்திடமால்

சொல்லாமலே  மறைந்தே

மணமுடித்த பெருசுக்கு

மீண்டும் அவள் தனியானதால்

மெல்லபூக்கின்றது உணர்விற்க்குள்

ஓரு காதல்!!

தேடியழைய விழியெண்டும் கோடி

சுகம் கொண்டதாய் நாடியே ஓடுதே

பின்னே இருந்தும் தயக்கம்

காதலாய்!!

இளமை தொலைத்த முமைக்கு ஏனோ

தயங்கள் கொஞ்சம் 

காதலும். கொஞ்சம் 

கட்டிபோட்ட மனசை

தூசு தட்டியே எழுப்புது 

மீண்டும் மீண்டும் மங்கையவள்

முகமே. காதலாய் !!!

பயணித்த தூரத்து  நிலவாய்  

இன்னும் கைபிடிக்கா

தூரத்தே நடந்த கனவாய்

பேசிடா மௌனத்தில்

தூரங்கள் இல்லாமலே

மனசேடு மனசு பேசித்தவிக்கின்றது

முதியேர் இல்லத்து அனாதையைப் போல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தூரமும் 

அதிகமாக அதிகமாக

தொடரும் 

வலிகளும் அதிகமாகும்

வழியில் 

நிதனமாய்  ஒய்வாய்  

சிந்திக்க வைக்கும் 

ஓர் நிமிடம் சுகமானதும்

சந்தோஷமானதும்!!!

நின்று சிந்திக்கும்

தருணத்தை இழந்து விடாதீர்கள்

வாழ்வின் அற்புதமான தரும் அதுவே!!!


Friday 10 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 உதித்தது உதையம்  குளிருக்குள் 

எங்கும் ஒளி

கண்கள் பார்த்தே புன்னகைக்க

மெல்ல கால்கள் நடக்க ஆசைகொள்ள

எடுத்தடி வைத்தேன் பாதையில்

குளிரால் உடல்நடுங்க  உணர்வும்

கண்களும் வேறாய் 

தோற்றது  எனக்குள்

பார்வைகள் தேற்கும் இடத்தில்

உணர்வுகள் பேசும் பொழுது

அறிவு சிந்திக்காமலே வாழ்க்கை

இடர்பட்டு  இடரிவிடுகின்றது நம்

வாழ்விற்க்குள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 யாரும் திரும்பி தர முடியா

மரணத்தின் கோலம் வலியாகி

உள்ளே அழும் பெண்மையை

ஓரமாய் சாடையாய் விலக்கியே

வைத்திடும்  வாழ்க்கைக்குள்

ஓற்றை இதயம் துணிவாய் மீண்டும்

கொடுக்கும் கோலம் பெண்மைக்கு

யாரும் கொடுத்திட முடியா விலைமதிபற்ற

பொக்கிஷம் !!!நேசம் உண்மையெனில்

இங்கே துணி தடையுடைக்கும்!!

Thursday 9 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 விளையாடும் பொம்மையாயில்லை

பெண்மை 

இன்மையிலும் இயல்பாய்

தன்னையே செதுக்கிடும்

உளியவள் 

நட்ச்சத்திர வானத்தூரமென

நினைத்தாலும்

 உள்ளங்கள்  நினைத்தால்

உள்ளங்கை சுமக்கும் சின்ன

பூவென மலர்வாள்

 இல்லையெனும் போதும்

இருப்பதாய் வாழ்வாள்

தொலையெனும் போது

 தூரமாய் வாழ்வாள்

இருந்தும் தன் சுமைகளை தூரமாய்

போட்டதில்லை எப்பவும் 

கண்கள் கற்பனையானாலும்

உயிரில்  தோற்பதில்லை பெண்மை 

பொய்கள் சூழ்ந்தே

தன்னையே அழித்தாலும்  

போராடியே  தன்னை ஜெயித்திட

இன்றுவரை மறந்ததில்லை 

அங்கிகரித்திட இதயத்தில் முள்லென்று

சொன்னாலும் தன்வலியேடு

தனிவழி போகும் பெண்மைக்கு இங்கே

இறைவனே காப்பு!!!



Wednesday 8 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 இழந்த பெண்மைக்கு

கொடுத்திடும் இழப்பின் வெற்றிட

சொற்களை போல்  ஓன்றை 

இந்த பூமி  சுமக்கும் எந்த

உயிருக்கும் கொடுப்பதில்லை

கருணைமனம்  இருந்தாலும்

தடுத்திட பெண்மையே வேணும்

உண்மையாய்!!!பெண்மைக்கு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 உயிரற்ற ஒவியம்

உணர்வற்றுபேசும் வார்த்தைபோல்

உயிர்கொண்ட ஒவியம் மொளனத்தில்

பேசுவதை உணர்வுகள் புரிவதில்லை

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒரு ரசனையின் தொடக்கத்தில்

ஓரு ரசிகையின் இதயம்

ஒரு மெளனத்தில் தன்னை படிக்கின்றது!

Monday 6 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 எப்போதும்  என்    எதிர்பார்ப்புகள்

ஏமாற்றங்களாக இருக்கும்

எப்போதும் என் ஆசைகள்

கானல்நீராகவே இருக்கும்

எப்போதும் என் கனவுகள்

நிறைவேறமலே  இருக்கும்

எப்போதும் என் முயற்ச்சிகள்


தோல்விகளாகவே  இருக்கும்


எப்போதும் என் தனிமை

அழுதுகொண்டே இருக்கும்

இருந்தும் கேட்பவர்கள் கேள்விகள்

விசித்திரமானதால் புன்னகை

சிந்துகின்றேன் !

 ஒரு பெண்மையின் வாழ்வை 

இடைபோடும்  இதயங்கள்

எப்போதும்  எம்மை சும்ப்பதாய்

நடிப்பதால் வாழ்க்கை 

தோல்விகளகவே மனிதனிடம் 

மறைந்தே விடுகின்றது

ஊமையான மெளனத்தின் மொழிபோல்

ஆனது  சிலர் வாழ்க்கை

இருந்தாலும்  இல்லாமல்!




Sunday 5 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தேடியேடும் நீர் போல்

விழியிரண்டும் உன்னைத்தேடியே

காணத் தவம் செய்ததுமுண்டு

கால்கள் வலியறியமலே  சிலையாய்

திசைபார்த்தே நின்றதுமுண்டு

கேலிசெய்தவர்  செவிகள் கேளாதே

மனம் சூழண்டதும் உண்டு

காலம் தேய தேய 



வலியும் உன்னால்  கூட க்கூட  

பொய்யாய் போன கனவினைப்போல்

மெய்யாய் சிலர்  கூறக்கூற 

ஐயைய்யையே!!

முட்டாள் பெண்னே

இல்லையென்பதை  இருப்பதாய்

தொலையாய்  மறாமல்

இறந்து விடுயென்றது இதயம்

மரணம் புன்னகையேடு

விடைதந்தது அவளுக்கு கற்சிலை

மனசுக்குள் மெச்சிலை கல்லாக 

கற்பனை கதையின்  முடிவானாள்!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 இசைக்குள் ஓரு கூயில்

கவிதையாய் கூவ

மொழிகள் மறந்து கிளி

குட்டிக்குட்டிச் சாரல்

 எரிந்த புத்தகத்தில்

உள்ளே இருந்து சாம்பலான

ஓற்றை ரோஜாவின் 



ஆசைகுடிசைக்குள்  

ஓரு காதல்  ஜேடி 

கொஞ்சி பேசும் அழகினை

ரசிக்கின்றது ஆன்மா!!!


Saturday 4 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 எதை எதையே கிறுக்கும்

கிறுக்கல்களில் நீ வரும்

நினைவு மட்டுமே என்னை

அழகாய் பூக்க செய்கின்றது

விதியே சதியே  பிரிவே தொலைவே

அறியா இதயம் உன்னை மட்டுமே

அழகாய் வைத்துள்ளது

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தேடலில் பூக்கும் கவிதையின்

அழகில் தாலாட்டும் இசையின் மடியே

என் உயிரின்  துடிப்பு

அந்த துடிப்பின் சத்ததிற்க்குள்

உறங்கவே என் விழிகள் ஏங்கும்

அந்த விழியின் தூக்கத்திற்க்குள்

ஒரு மூச்சுக்காற்று எனக்காக மட்டுமே

 விழித்திருக்கும் அந்த மூச்சுகாற்றின்

வெப்பத்திலே ஒரு தாய்மடி 

    எனக்க மட்டுமே  பூ பூக்க

அந்த பூவின் மென்மையில் ஒரு

தொட்டில் குழந்தையாகின்றேன்!!!

Friday 3 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மண்ணேடு ஒரு காதல்

 வந்து பெண்னோடு கதை பேசியே ஏங்க

மறையா நிலவாய் தேய்ந்து  

வளர்ந்து  ஓரு காதல்  மோதியே

காலம் கனிந்திட மனச்சிறக்குள்

மெல்ல  ஒரு காதல்  பெய்கின்றது

முதல் மழையாய்!!

சில்லென்ற சிலர்ப்பிற்குள் பூத்த

காதல்  வெட்கத்தில் வெப்பத்தை 

விழுங்கிட !நில்லென்ற  குரல்  கேட்டு

சிட்டுக்குருவியாய் மறைந்திட 

சொன்ன நாணம் தொட்டு  பூத்த காதல் 

வில்லென்று குடை பிடிக்க

மழையேடு பேசியே விளையாடி

தன்னை மறந்து பூ!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஆண்மையென்னும் பொம்மை

வாங்க பெண்மைக்கு

பணம்மட்டுமே 

எக்காலத்திலும் தேவையாகின்றது

இங்கே சூழ்ல்நிலை  கைதியாய் 

ஆண்மை சுயமற்று  கிடக்கின்றது

சுயம்பரம் முடியும் வரை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 எல்லாம் இழந்து 

தன் நம்பிக்கையும்இழந்து

பட்ட மரமாய் நிக்கின்ற

பெண்ணிற்க்கு  

நானிருக்கின்றேன் என்று

நம்பிக்கை கொடுத்து

கனவினைக் கொடுத்து

கடசியில் ஏமாற்றி விட்டு சொல்லும்

ஓரு ஆண்மை  கொடுக்கும்

தண்டனை  இறைவன்

கொடுத்ததை விட

பெரிய தண்டனை பெண்ணிற்க்கு!!!


Thursday 2 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓன்று நமக்கானதென்றால்

யார் பிரிந்தாலும் பிரியாது

அந்த ஒன்றை  நாம் தொலைத்தாலும்

தேடியனா்லும் நம்மை விட்டு

தோலைவானாலும் மீண்டும்

 காதலாய் வந்து சோரும்  இங்கே

உண்மைக்கும் பொய்யுக்குமே

யுத்தம்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 உறைபனிகாலம் போல்

சில நினைவுகள் உருகிடமலே

உருக்கிவிடும் இதயத்தை  

அப்போது தான் தோன்றும் 

புரிந்த  இதயம்  கூட இல்லையே என

சில பிரிவு புரிதலுக்கனதாய்

இருந்தால்  அப்பே

இதயத்தில் பூத்திடும்

எண்ணங்களின் வண்ணங்களே

அழகிய காதலின் வண்ணமாகும்!!!

Wednesday 1 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ஏழ்மை நிறையப் பெயரின்

சந்தோஷத்தை விலைமேபேசி

விற்க்கின்றது அன்பு எப்பவும்

போல் தேற்றே ஊமையாகின்றது

தைரியம் எப்பவும்  போல்

தாமதமாகவே பிறக்கின்றது!!!

வாழ்க்கை  இதற்குள்

தன்னை தொலைத்து விடுகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நமக்கு பிடிக்கும்  என்பதால்

இன்னெருவர் சந்தோஷத்தை

அழித்து நமது சந்தோஷத்தை

அடைத்திட துடிக்கின்றோம்

ஓட்டை படகில் பயணம் செய்வதை

அறியா திமிரே  நமக்கு நமே

தேடிடும் அழீவு!!!