Tuesday 20 January 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பலர் சொல்லத்தெரிவதுவாழ்கை
சொல்லாது உணர்வது காதல்
                                                 
உணர்வதை உண்மையாக்குவது   ஆன்மா
உண்மையானதை காப்பது நம்பிக்கை
உடைவதால் தொலைவது  மகிழ்ச்சி
தொலைந்த பின்ர் தேடுவது  இயலாமை!!

, விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வார்தைகள்தேடி வாழைநார்ரெடுத்து
மாலைதொடுத்தேன் காதல்சாரல்
துறல்போட !!
பாலைவனம்  காதல்வனமாகி
இதயவனத்து மாயவுலகதிற்கள்
பைதியமானோன் பாவையிவள்
 பாதை தொலைத்து!!
பார்வையற்றவன்  போல் பாராது
அழித்தவன்  வரைந்த கனவுலகின்
உச்சத்து பள்ளம் என்னை மூட
மரணப்புதைகுழிக்குள் புதைந்தேன்
இறப்பின் வலியால்!
எழுந்திடுயென பல குரல்
கூப்பாடுயிட்டும் எழவில்லை
ஏமாற்றம்  பல மனிதராய்  தொடர்வதால்!!

Friday 16 January 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனையில் வாழ்பவர்
கைகளை பிடிபதெனில் !
நீயும்
கற்பனையில் வாழ அறிந்துகொள்
அடுப்பினில் ஏறப் பாத்திரம்
உன் ஓட்டக்கூரை வழி
 மழைத்துளியினையாவது  காத்திடும்!

Sunday 4 January 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நீயே  உணர்வைத் தந்தாய்
நீயே உறவைத் தந்தாய்
நீயே கொஞ்சமும் நினைவற்று நின்றாய்
நீயே கொஞ்சியவள்வார்தை
பொள்ருதேடி யாரிடமே அழைந்தாய்
நீயே தள்ளியும்வைத்து தனித்தும் நின்றாய்

நீயே அணைப்பும் தந்தாய்
நீயேஅனைத்தையும் அழித்தாய்
நீயே தவறானாய்
நீயே தவறென்றாய்
நீயே விட்டு விலகினாய்
நீயே உரிமையெடுத்தாய்
நீயே உரிமையும் அழித்தாய்
நீயே உதறியும் சென்றாய்
நீயே பொருள்புரியாவாழ்வானாய்
அன்றும் இன்றும் காதல் மட்டுமே
உண்டு என்னிடம்
அன்று உன்னோடு   இன்று  கானலுக்குள்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்............

கானல்நீர் கண்ணீர்துளியால்
வானவில் வர்ணம்தொட்டு
ஓவியமானேன்  சோதனையில்
ஓர்சுகமானநினைவாய் நான்வாழ!

வாசனையற்றமலராய் வாசமலர்வளர்தேன்
வசந்தமற்ற வசந்தங்களான
வாழ்வின் வசந்தை ரசிக்க!
அப்படியா என்றவர்அள்ளியெறிந்தசேற்றால்
அழிந்திட்டது  ஒவியம்!
எல்லை கேட்டை தீயால் வரைந்து எரிகின்றேன் எதிரியும் வேண்டாமென!
இப்படியே
விட்டுவிடு பொய்யான மனிதா!
 ஊர்க்கதைசொல்லி உறவுக்கதைசொல்லி
 உதவாக்கரையாய் சந்தேகக்கதை கட்டி
  புதுக்கதைதேடிஎரித்திடாதே  என்னை!

பொறுமையிழந்தவர் அக்கினியானால்
சாம்பலேமிச்சும்!!சத்தியதின்வழி இதுவோ!