Friday 17 August 2007

தருவாயா?

பூவின் மென்மை தனை
பேச்சிலும் செயலிலும்
கொண்டவளை பலர் ரசிக்க...
கல்லைப் போன்ற
உறதி தனை மனதில்
கொண்டு தோல்வியிலும்
வெற்றி கண்டவள்
சுகந்திர காற்றை சுவாசிந்து
பிரிவை தாங்கா இதயம்
கொண்டதால்
வெற்றியிலும் தோல்வி
கொண்டாள் இறைவா
இவளுக்காய் தருவாயா?
உறுதியான இதயத்தை...

Thursday 16 August 2007

கிறுக்கல்கள்,

உண்மைக் காதல்
ஏட்டில் வடிக்க
பொய்மைக் காதல்
வாழ்வைச் சிதைக்க
புரியா உணர்வில
தெரியா உறவாய்
சேர்ந்த காதல்
கல்லறைக்குள் வாழ
இறப்பின் சிறப்பு
காதலில் தெரிய
கண்ணீரால் நனைந்த
காதல்
கல்லில் செதுக்கிய
காவியமானது...

*******************
பத்து மாத கருவை
சுமந்து பட்டினியும்
வலியுமாய் ரசித்திடும்
பெண்ணவளின் நளிங்கள்
மீது எனக்கு
ஒர் காதல்

சிந்தும் சிரிப்பில்
சிதறும் அழகில்
மென்பஞ்சு மொட்டு
அசைந்திடும் அசைவில்
தொலைந்து நிற்குது
என் காதல்

வறுமைத் துயர்
தான் தாங்கி
பிரியா உறவாய்
சேர்த்தே நிற்கும்
உறவின் மீது
எனக்கும் ஒர் காதல்

முதுமை வந்தும்
மாறக் காதல்
தாம் கொண்டு
சேர்ந்தே ரசிக்கும்
ஜோடி மீதும்
எனக்கும் ஒர் காதல்
*****************
அழகின் கவர்ச்சியின்றி
பார்வையின் மோதலின்றி
எனக்கும் அவனுக்கம்
ஏற்பட்ட காதல்
சொல்ல முடியா கதைசொல்ல
என் உணர்வில் கலந்திட்
அவன் வசம் என்னை
காலமுழுக்க சுவாசிக்க
சொன்னது
*****************
நான் மழையைக்
காதல் செய்ய
மழை பூமியைக்
காதல் செய்ய
பூமி அழகைக்
காதல் செய்தால்
மனிதன் அழிவைக்
காதல் செய்கின்றான்

Saturday 4 August 2007

பத்தி

ஏழை பசித்திருக்க
படைத்தவன் பத்தி ரசித்திருக்க
துடிக்கும் ஏழை
துயர் துடைக்கா மனிதன்
மூடநம்பிகை பயத்தால்
சுயநலபத்தி கொண்டு
கற்பனை சிலைக்கு உயிர் கொடுத்தான்
தான் வாழ!!
புராணம் சொல்லா
அன்பைச் சொல்லி
ஆடரம்பர வாழ்வை
கடவுளுக்கு காட்டி
படைத்தவன் சொல்லா
பத்தியொன்றை!
சமூகத்திற்கு கொடுத்து
ஏழைச்சிரிப்பில் கடவுளை
காணா மனிதன் தொட்டுணரா
கற்பனைச்சிலையின் உயிர்த்துடிப்பால்
தொட்டுணரும் ஏழையின் கண்ணீர்
துடைக்க மறந்தான் பத்தியால்!!!

Thursday 2 August 2007

மனிதன்

உலக மென்னும்
அற்புத படைப்பின்
அழகிய பொய்கள்
நாங்கள்
அறிவு கொண்டு
அழிவை நேசித்து
போலி கொண்டு
நிம்மதியழித்து
இன்பம் தேடி
துன்பம் நேசித்து
காலம் தனை
காகிதக் குப்பையாக்கி
மரணம் கொண்ட
மாய வாழ்வின்
உதிர்ந்த இதழின்
கற்பனை கொண்டு
வாழ்வின் சரித்திரத்தை
இறந்த உயிரின்
இரத்தத்தில் எழுதுகின்றோம்