Showing posts with label இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................. Show all posts
Showing posts with label இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................. Show all posts

Tuesday, 25 June 2019

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,

Bildergebnis für இசைக்கருவி


என் உயிரில்  
ஒரு அழகிய துடிப்பை 
மீண்டுகின்றாய் 
அழகாய் ! 
என் சோர்வின் நிமிடத்தை 
அழகிய துடிப்பாக்கின்றாய்
 மெல்ல!!
என் இதயத்தின்வலிகளை 
மயில்  இறகினைக் கொண்டு  
 அழகாய் வருடிச்சாய்க்கின்றாய் 
மெல்ல !
என்  தனிமையை 
உடைதெறிந்தே 
பேசி மகிழ்ந்திடநிமிடங்களை
பூச்சரமாய்  கோர்க்கின்றாய்
அழகாய் !
என் உள்ளிருக்கும் 
உணர்வினை
துள்ளியோடசெய்கின்றாய்
அழகாய் !
ஆனாதையாய் நின்றிடும் 
 பொழுதினைவென்றெழுந்திட 
அழகிய  துணையாகின்றாய் !!
கேலிகளின் வலிகள் 
 கண்ணீர்துளிகளில் நனைந்திடும் 
பொழுது  கண்மூடிதுடைத்திடும்  
தென்றலாய்  தவள்கின்றாய்!
பிரிதெடுக்க முடியாத 
இதயசத்ததில் காதலாய் 
 பூக்கின்றாய்!
 என் சுவசத்தை எழுப்பி
என்னோடு  அழகாய் 
விளையாடுகின்றாய் !
 இதுவரை  யாரும் 
தந்ததிலை உன்போல்  ஒரு 
பரவசத்தை எனக்கு!!! 

Friday, 7 October 2011

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,



 அசையும் காற்றின் அலையிடம்

மெல்ல கவியெழுதி கொடுத்தேன்


உறைந்த உணர்வின் நரம்பினை

மெல்லிய துளையிட்டு இசையொன்றை
இசைந்திட வேண்டி!!
அறுந்த உணர்வால் இறுகிய பாறை
 உன்னைக் கொஞ்சம்
அசைத்தசைத்து இழுத்திட!
எனக்காய்!! கொஞ்சம்
தென்றல் !
உதிர்த்த இசையில் அசைந்த
 உன் இதயத்தில் எழுந்த என்    சுவாசம்     
எங்கோ நான் தொலைத்ததாய்  
   உன்
 வார்தைகளாய் என் காதுகளில்
கடித்த நிமிடம் உறைந்தது என் உயிர்
அறுந்தது என் நரம்பு  இப்போ
இசையாய் நீயிருந்தும் கவியாய் நானிருந்தும்
ராகங்கள்    இசைத்திட முடியா     
வீணையாகின்றோம் நாம்!!!!!!


Thursday, 19 August 2010

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,

                                                                                                

நாதங்களில் அகம்
நளின  நடைபயில  
தடையின்றி  ஸ்ரங்கள் உன்னிடையே
  இசையாய் வந்தோட !

மெல்லினம் இடையினம்

மயிலினமாய்  நடைபோட !
துயிலினம் குயிலினத்தோடு
குழவிட !
கவியினம் கலையினத்தோடு இசைத்திட
 வானவீதியில் உலவும்  மனசு
மெல்லமாய் பாட! எந்தன்
 கால்கொலுசு  எந்தன்  உந்தன்
கானம் கேட்டு  அசைத்தாட
தனிமை கொன்று தவம் செய்து
இதயம் கண் மறந்து விழிதிறக்கு  உனக்காய்.............




யாழ்லெடுத்து நான் மீட்ட    
                                  அதில் சுரங்களாய் நீ மாற                                     
இசை கேட்டு   விண்மீன்கள்
எனை வாழ்த்த.....

அதைக் கேட்ட   உன் விழியோ  
உறங்காது  தவிக்க ...  தவிக்கும் 
விழியறியாது     என் விழியோ.. 
உன்னைத் தேட
விழி பார்த்து பிறை நிலா

உன் முகம் காட்ட.. பனிகால 

குளிர்காற்றின் வெப்பத்தீண்டலாய் 
                                  என் இசை  உனக்காய் அரங்கேற்றமாக !!                            

ஸ்வரங்களின் சுருதியில்

என் சுவாசம்   தாளத்தின்  மடியாய்   
உன் மடியில் கரைகின்றது
நின் மதியாய் !!
அலைமேல் மிதந்திடும்
பொம்மையின் அசைவாய்
என் உணர்வுகள்
உன் உணர்வில் 
இசையாய் கலையாய்  உணர்வாய்
அசைகின்றது
புது புது ராங்களாய்!!!



உலகத்து    உயிரை  
உனக்குள் மயக்கி
என்னையும் சிறையெடுத்து
எனக்குள் வாழும் அற்புத இசையோ!
என் இதயத்தின் ரணங்களை
மயிலிறகால் வருடி எனக்குள்
வாழும் அதிசய சுரமா நீ!
நான் கண்மூடி உன்னேடு
நடக்கையில் என் இதய
சுவரெங்கும் சுகமான உணர்வு
உயிராய் உயிர் பெற்று நிக்க
என் மனதில் தோன்றிய
ராகத்தின் தாலாட்டாய்
என் சுவாசக் காற்றில் கலந்திட்டு
என் கனவோடும் நினைவோடும்
நீயே தோன்றியதால்...
உனக்குள் நான் தொலைந்து
விழிமூடி கண்னுறங்கிட
உன்மடி தேடி நான் வந்தேன்
ஒர் குழந்தையாய்.....
********************************

என் இதயத்துடிப்பின்
ஓசை நிற்கும் வரை
உன் இசையின் ஓசை
என் இதய ஓசையாய்
மாறிட வேண்டும்

என் விழிகள் அதற்கு
அபிநயம் பிடிக்க
வேண்டும்

நான் சிந்தும் சிரிப்பு
என் இதழின் இசையாய்
மாறிட வேண்டும்

நான் வலி இல்ல இசையாய்
உன்மடியில்
உறங்கிட வேண்டும்

அந்த நிமிடத்து உறவாய்
நீயோ வர வேண்டும்

உன் இதயமே என்
கல்லறையாக வேண்டும்

அந்த நிமிடமே என் வாழ்வின்
கடசி நிமிடமாய் தோன்றிட
வேண்டும்